You cannot copy content of this page

முகவை

விநாயகர் வணக்கம்:

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

[This Website is a non commercial Website hosted for educational and informative purpose to enrich the values of our culture and traditions.]

வைணவம்: திருமகள் மணாளனை, விஷ்ணுவை முழுமுதற்கடவுளாக வணங்குவது வைஷ்ணவம் என்றும் சொல்லப்படும் வைணவம். வைணவ சமயம் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் ... Read More
முதலாம் திருமறை ... Read More
ஸ்மார்த்தம்: சைவம், சாக்தம், வைணவம் காணபத்யம், சௌரம், கௌமாரம் என ஆறு பிரிவுகளையும் உள்ளடக்கியது ஸ்மார்த்தம். சிவன், சக்தி, விஷ்ணு, கணேசர், சூரியன் மற்றும் முருகனை வணங்கும் ... Read More
காணாபத்தியம்
காணாபத்தியம்: விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு. எல்லாச் செயல்களையும் தொடங்குவதற்கு முன் வணங்கப்படும் ஆனைமுகன் கணபதியை எல்லாக் கடவுளர்களையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்று ... Read More
தேமலி சுவைக்கனி பலசெ றிந்துயர்காமரம் வளைதல்போற் கலையு ணர்ந்திடும்தூமன மாட்சியோர் தொழுவர் யாரையும்பாமர ரெவரையும் பணிந்தி டார்களே ... Read More
சௌரம்: உலகுக்கெல்லாம் ஒளி கொடுத்து உலகச் செயல்கள் எல்லாம் நடக்கச் சக்தியும் கொடுக்கும் கண்கண்ட தெய்வமான சூரியனை முழுமுதற்கடவுளாக, பரம்பொருளாக வணங்குவது சௌரம் ... Read More
கௌமாரம்: கௌ என்ற எழுத்துக்கு மயில் என்று பொருள். முருகன் மயில்வாகனன் என்பதால் இச்சமயம் கௌமாரம் எனப் பெயர் பெற்றது. ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ... Read More
சாக்தம்: பரம்பொருளை அன்னை வடிவில் சக்தி வடிவில் வணங்குவது சாக்தம். பெண்களைத் தெய்வமாக வழிபடும் முறை. இந்தியாவில் மட்டும் தான் உயிருள்ள ஒரு பெண்ணை சக்தியின் வடிவமாக ... Read More
தெய்வப் புலவர் திருவள்ளுவர் இயற்றிய நூல் திருக்குறள். திருக்குறளின் முதல் பெயர் முப்பால். இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் கருத்துக்களைப் பொருந்துவது போல் கூறி ... Read More

ஓம் சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது,
ஓம் சர்வேஷாம் ஷாந்திர் பவது
ஓம் சர்வேஷாம் பூர்ணம் பவது
ஓம் சர்வேஷாம் மங்களம் பவது!

Meaning:
1: May there be Well-Being in All,
2: May there be Peace in All,
3: May there be Fulfilment in All,
4: May there be Auspiciousness in All,
5: Om Peace, Peace, Peace.

“எங்கும் எல்லாவற்றிலும் நன்மை உண்டாகட்டும்
எங்கும் எல்லாவற்றிலும் அமைதி உண்டாகட்டும்
எங்கும் எல்லாவற்றிலும் முழுமை உண்டாகட்டும்
எங்கும் எல்லாவற்றிலும் வளம் உண்டாகட்டும்
ஷாந்தி ஷாந்தி ஷாந்தி”

ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி

இந்து சமயப் பிரிவுகள்:

இந்து மதத்தில் நான்கு வேதங்கள், 108 உபநிஷதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள், எண்ணற்ற மதக் கோட்பாடுகள், ஸ்தோத்திரங்கள், துணை நூல்கள், தெளிவுரை நூல்கள்,
நூற்றுக்கணக்கான மொழிகள் உள்ளன.

இந்து மதம் ஆறு பிரிவுகள்

காணாபத்தியம்:

விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு. எல்லாச் செயல்களையும் தொடங்குவதற்கு முன் வணங்கப்படும் ஆனைமுகன் கணபதியை எல்லாக் கடவுளர்களையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்று வணங்குவது காணபத்யம் என்னும் சமயம்.

சைவம்:

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியான சிவத்தை; தெய்வங்களின் தலைவனை, பெரியகடவுளாகிய மஹாதேவனை, சிவபெருமானைப் பரம்பொருளாக வணங்குவது சைவம்.

சைவம் சிவனைமுழுமுதலாகக் கொண்ட சமயமாகும். சிவ வழிபாடானது, பண்டுதொட்டே இந்திய உபகண்டத்தில் நிலவிவந்திருக்கிறது. சைவத்தின் காலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பப்டது.

சைவமதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்; 1. கடவுளை வழிபடல், 2. தாய், தந்தை, ஆசான் இவர்களைப் பேணுதல், 3. உயிர்க்கு இரங்குதல் (அன்பே சிவம்), 4. உண்மை பேசுதல், 5. செய்நன்றி அறிதல் 6. பெண்களைத் துன்பறுத்தாது அவர்களைத் தெய்வமாக வணங்குதல் போன்றன ஆகும். சைவ மதத்தில் சிவன் அர்த்தநாரி வடிவில் வணங்கப் படுகிறார்.

சைவ சித்தாந்த வாழ்வியல் திருமூலர் காலத்தில் அவரால் வகுக்கப் பட்டது. தமிழகத்தில் உள்ள சிவாலயங்களை நிர்வகிக்கும் ஆதீனங்கள் சைவ வேளாளர் மரபைச் சார்ந்தவர்களைக் குரு பீடமாகக் கொண்டு இயங்கி வருகின்றன.

சைவ அடியாளர்கள் உடலில் திருநீறு அணிய வேண்டும். சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே உறக்கம் நீங்கி எழ வேண்டும்.திருநீறு, உருத்திராக்க்ஷம் அணிந்து சிவபெருமானை நினைந்து திருப்பள்ளி எழுச்சி முதலிய திருமுறைப் பாடல்களை ஓத வேண்டும். தூய நீர் கொண்டு அனுட்டானம் செய்து திருவைந் தெழுத்தை எண்ணித் திருமறைகள், திருமுறைகள் ஓத வேண்டும்.

சாக்தம்:

பரம்பொருளை அன்னை வடிவில் சக்தி வடிவில் வணங்குவது சாக்தம். பெண்களைத் தெய்வமாக வழிபடும் முறை. இந்தியாவில் மட்டும் தான் உயிருள்ள ஒரு பெண்ணை சக்தியின் வடிவமாக கன்யா பூஜை அல்லது சுகாஸினி பூஜை என்று வணங்கி வழிபடுகின்றனர்.

சரித்திர பூர்வமாக கூறவேண்டும் என்றால், சிந்து சமவெளி நாகரீக காலம் தொட்டே பெண் தெய்வ வழிபாடு தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாகும்.

தொல்காப்பியம் மற்றும் பல சங்க இலக்கியங்களில் சக்தி வழிபாடு மிக சிறப்பாக சுட்டிக் காட்டப்படுகிறது. இந்த சக்தி வழிபாட்டோடு தாந்த்ரீகம் என்பது சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற காப்பியங்கள் உருவான காலத்தில் இணைந்ததாக அறிய முடிகிறது.

தனக்கு மேலே தன்னை படைத்ததாக தன்னை ஆட்சி செய்வதாக யாரும் இல்லாதவள் ஆதி பராசக்தி. அதனால் அவள் தத்துவ நாயகி என்றும் அறியப்படுகிறாள்.

வைணவம்:

திருமகள் மணாளனை, விஷ்ணுவை முழுமுதற்கடவுளாக வணங்குவது வைஷ்ணவம் என்றும் சொல்லப்படும் வைணவம்.

வைணவ சமயம் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப் படுகிறது.

உலகில் தீமைகள் ஓங்கும் போது விஷ்ணு அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ கோட்பாடு. திருமாலின் மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

வைணவ சமயத்தின் முக்கிய நூல்கள் வேதம், உபனிஷத்து, பகவத் கீதை, பஞ்சரந்தர ஆகமம், மகாபாரதம், இராமாயணம், பாகவத, விஷ்ணு, கருட , நாரதிய, பத்ம , வராஹ புராணங்கள் ஆகும்

கௌமாரம்:

கௌ என்ற எழுத்துக்கு மயில் என்று பொருள். முருகன் மயில்வாகனன் என்பதால் இச்சமயம் கௌமாரம் எனப் பெயர் பெற்றது.

ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்” – கந்தபுராணம்.

கந்தன்; கடம்பன்; கார்த்திகேயன்; அழகன்; முருகன்; அழகில் சிறந்தவன்; ஆறுமுகங்களைக் கொண்டவன்; குமரன்; குகன் என்று பலவாறாகப் போற்றப் படும் குமரக்கடவுளை முழுமுதற்கடவுளாகப் போற்றுவது கௌமாரம்.

சௌரம்:

உலகுக்கெல்லாம் ஒளி கொடுத்து உலகச் செயல்கள் எல்லாம் நடக்கச் சக்தியும் கொடுக்கும் கண்கண்ட தெய்வமான சூரியனை முழுமுதற்கடவுளாக, பரம்பொருளாக வணங்குவது சௌரம்.

ஸ்மார்த்தம்:

மேலுள்ளவற்றில் முதல் ஆறு பிரிவுகளையும் உள்ளடக்கியது ஸ்மார்த்தம். சிவன், சக்தி, விஷ்ணு, கணேசர், சூரியன் மற்றும் முருகனை வணங்கும் சமயப் பிரிவு.

ஆறு உட்பிரிவுகள் சிவன், திருமால், சக்தி, சூரியன், கணபதி, முருகன் ஆகிய ஆறு கடவுளர்களை அவ்வவ் பிரிவிற்குத் தலையாய முழுமுதற் கடவுளாகக் கொண்டவை. ஸ்மார்த்தம் என்பது ஆறு கடவுளரையும் வணங்கும் பிரிவு.

தற்காலத்தில் சைவம், காணபத்யம், கௌமாரம், சாக்தம், வைணவம், சௌரம் ஆறு வழிபாட்டு முறைகளும் இந்து மதமாக (ஸ்மார்த்தம்) ஒன்று பட்டு நிற்கின்றன.

திருமந்திரம்

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன்இல்லை நாளுமே
சென்றே புகுங்கதி இல்லேதும் சித்தத்து
கின்றே நிலைபெற நீர்நினைத் துய்மினே.

விளக்கம்: குலம் பல இல்லை; ஒன்றே! தெய்வங்களும் பல இல்லை! ஒன்றே ஆகும்! என்றும் நல்லனவற்றையே எண்ணுங்கள். யமன் அணுகான். உங்கள் பூத உடல் மறைந்தாலும் புகழ் உடல் என்றும் நிலைத்து இருக்க இறைவனை நினைந்து, நல்லனவற்றை நினைந்து ஈடேறுங்கள்.

ஒன்றே குலம் ! ஒருவனே தேவன் !

திருச்சிற்றம்பலம்

**************************************

There is one God. He is the Destroyer, Creator and Governor of the entire cosmos. He Grace’s all beings in the Universe.

**************************************

If you worship Him, in the name of Allah, He will come to us as Allah!

**************************************

If you worship Him, in the name of Jesus , He will come to us as Jesus!

**************************************

If you worship Him, in the name of Vinayaka, He will come to us as Vinayaka!

**************************************

If you worship Him, in the name of Vishnu , He will come to us as Vishnu!

**************************************

If you worship Him, in the name of Siva , He will come to us as Siva!

**************************************

Om Tat sat ! ! !

Scroll to Top