You cannot copy content of this page

பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு

ஓம் நமசிவய சிவய நம ஓம்!

[படத்தைக் காண்க: ஸோம ஸூக்த பிரதக்ஷிணம்]

ஆதியும் அந்தமும் இல்லாத பெரும் பரம்பொருளாய் விளங்குபவர் சிவபெருமான். இவருக்குப் பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. சிவ வழிபாட்டினைத் தான் சைவம் என்று போற்றுகின்றோம்.

உலகத்தின் மிகப் பழமையான வழிபாடும் சிவ வழிபாடுதான். பண்டைய கால நாகரீகமாக விளங்கிய ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ காலகட்டங்களில் சிவ வழிபாடு நடந்திருப்பது அகழ்வாராய்ச்சிகளில் மூலம் அறியமுடிகின்றது.

வேதங்கள் போற்றும் வேதநாயகனாக விளங்குபவர் சிவன். சுப மங்கலத்தை அருளுபவர்.

பரம்பொருளாகிய பரமேஸ்வரரின் மூச்சுக்காற்றிலிருந்தும், உடுக்கை ஒலியிலிருந்தும் சப்தங்கள் தோன்றி, வேத மந்திரங்களாகச் சிதறியிருந்ததை வியாச பகவான் ஒருங்கிணைத்து சதுர் (4) வேதங்களாகத் தொகுத்தார் (ருக், யஜுர், சாமம் & அதர்வணம்).

சிவபெருமானுக்கு பிறப்பில்லாத காரணத்தினால், சிற்ப சாஸ்திரங்களின்படி, சிவபெருமான் அம்சமுள்ள எந்தவொரு வடிவத்திற்கும் (நடராஜர், ஸோமாஸ்கந்தர்) கொப்பூழ் எனும் தொப்புள் அமைப்பதில்லை.

சிவன் எங்கும் நிறைந்திருப்பவர். திசைகள் அனைத்திலும் விளங்கும் திகம்பரர். ஸர்வ லோகங்களிலும் திகழும் சதாசிவர்.

மஹாவிஷ்ணு உலக மக்களைக் காக்க வேண்டி எடுப்பது அவதாரம். இந்த அவதாரத்தில் பிறப்பும் உண்டு, இறப்பும் உண்டு. (பகவான் கிருஷ்ணர் ஒரு வேடுவனின் அம்பினால் இறந்தார்).

சிவபெருமான் பக்தர்களைக் காக்க எடுப்பது அவஸரம். தக்க சமயம் வரும்போது தோன்றி, ரட்சித்துவிட்டு, மறைந்துவிடுதல்.

வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை விரைவில் வழங்குவதில் வல்லமை மிக்கவர் சிவபெருமான்.

சிவ வழிபாட்டில் பல்வேறு முறைகள் காணப்படுகின்றன. (காஷ்மீர சைவம், காபாலிக சைவம், சிவாகமம், சைவ சித்தாந்தம்)

சைவ வழிபாட்டு முறைகளில் மிகவும் பிரபலமாகவும், பலனளிக்கக் கூடியதாகவும், பக்தர்களின் வழிபாட்டில் மிக எளிமையாக விளங்குவதும் அமைவது பிரதோஷம்.

ஒரு மாதத்தில் இருமுறை வருவது பிரதோஷ பூஜை. ஒன்று வளர்பிறை திரயோதசி (அமாவாசையிலிருந்து 13ம் நாள்) மற்றொன்று தேய்பிறை திரயோதசி (பெளர்ணமியிலிருந்து 13ம் நாள்) தினம்.

ஒரு சமயம் வீதஹவ்யர் எனும் சிவபக்தர், சித்ரவதி எனும் தமது பத்தினியுடன், தமக்கு சிவாம்சமாக விளங்கக் கூடிய வகையில் மகவு வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, வேறு எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல், சிறு சிறு கற்களையே உணவாக உண்டு கடும் தவம் செய்தார்.

கற்களை மட்டுமே உண்டதனால் அவர் சிலாதர் எனப் போற்றப்பட்டார். சிலாதர் பூஜை செய்த திருத்தலம், வட நாட்டுப் பாடல் பெற்றத் தலமாக விளங்குவதும், பன்னிரு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்றும் ஆகிய ஸ்ரீ சைலம் எனும் திருத்தலம். (இதுவே நந்தி தேவர் பிறந்த தலமும் ஆகும். நந்தி தேவர் தவம் செய்த தலம் நந்தியால்)

கற்களை மட்டுமே உண்டு தவமியற்றிய சிலாதருக்கு மனமிரங்கிய சிவன், அவர் முன் தோன்றி, தனது அம்சமாக ஒரு குழந்தை உனக்குக் கிடைப்பான் என திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.

சிலாதர் யாகம் செய்வதற்காக, நிலத்தை உழுத போது, மாணிக்க வைடூர்யங்கள் இழைத்த ஒரு பொற்பெட்டியில் ஒரு குழந்தை கிடைக்க, அக்குழந்தைக்கு வீரகன் எனப் பெயரிட்டு, பெருமகிழ்வுடன், கல்வி கலைகள் அனைத்தையும் கற்றுக்கொடுத்து வளர்த்து வந்தார்.

சில ஆண்டுகள் கழித்து, மித்ரன், வருணன் எனும் இரு தேவர்களும் வீதஹவ்யர் எனும் சிலாதர் முனிவரை பார்க்க வந்து, வீரகனுக்கு ஆயுள் சில காலம் தான் என்று கூறினர். இதைக் கேட்ட வீதஹவ்யர் மனமொடிந்து போக, வீரகன் தனது தந்தையைப் பார்த்து, நான் சிவபெருமானை நோக்கி தவமிருந்து வரம் பெற்று வருகின்றேன் என கிளம்பினார்.

வீரகன், ஏழு கோடி முறை ஸ்ரீ ருத்ரம் மந்திரத்தை நாத்தழும்பேற ஜபிக்க, சிவபெருமான் வீரகனின் பக்திக்கு மனமிரங்கி, தனது கணங்களுக் கெல்லாம் தலைமை தாங்க, நந்தி எனப் பெயரிட்டு, தனக்கு வாகனமாகவும் ஏற்று, சாகாவரமும், என்றும் தன்னுடன் இருக்கவும், தனது வாயில் காப்பாளனாகவும் ஏற்று அருளினார்.

நந்தியையே தனது பிரதம சீடராக ஏற்று கலைகள் அனைத்தையும் கற்றுணர்த்தினார்.

(நந்தி = தலைமை. ஐந்து கரத்தனை ஆனை…. நந்தி மகன் தனை – என்று திருமூலர் விநாயகரைக் குறிப்பிடும்போது – நந்தி மகன் – என்பது, உலகமனைத்திற்கும் தலைமை தாங்கும் சிவபெருமானையே நந்தி எனக் குறிப்பிட்டு – அவர்தம் மகன் விநாயகர் என்கிறார்.)

சிவனிடமே பாடங்கள் கற்றமையால் சைலாதி எனப் புகழப்படும் நந்தி தேவர் ஞான ஆச்சார்யராக விளங்குபவர். விஷ்ணுவுக்கு சிவஞானம் பெற வழிகாட்டியவர்.

சிவ வழிபாட்டில் மிக முக்கியத்துவம் பெறுபவர். இன்றைக்கு இருக்கும் தருமபுரம், திருவாவடுதுறை போன்ற ஆதீனங்களுக்கு தலைமை குருவாக விளங்குபவர் நந்தி தேவர்தான்.

ஒரு சமயம், சாகாவரத்திற்கான அமிர்தம் பெறவேண்டி, அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை, மேரு என்னும் மலையையே மத்தாகக் கொண்டு, வாசுகி எனும் பாம்பை கயிறாகக் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் ஒரு புறமும் கடைய, வேகமும் அழுத்தமும் தாங்காத வாசுகி எனும் பாம்பு தனது விஷத்தன்மை கொண்ட பெருமூச்சினை விட, பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் தோன்றியது.

அது, அகிலம் அனைத்தையும் அழிக்கவல்லதாக அச்சுறுத்தலாக இருந்தது. இதைக் கண்ட தேவர்கள் தலைதெறிக்க ஓட, எங்கெல்லாம் அவர்கள் செல்கின்றார்களோ அங்கெல்லாம் ஆலகால விஷமும் துரத்தியது.

இறுதியில், தேவர்கள் ஸர்வலோக வியாபியான சிவபெருமான் உறையும் கைலாயம் சென்றனர்.

சிவனை தரிசிக்க வேண்டி கைலாயத்தின் இடப்புறம் வழியாக சென்றால், வலப்புறமாக விஷம் வந்து வாட்டியது. வலப்புறம் வழியாக சென்றால் இடப்புறமாக வந்து இடைமறித்தது..

(ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் – இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. கீழே விபரம் உள்ளது.)

கைலாய நாதனை தேவர்கள் சரணடைய, சிவன் காட்சி தந்து அஞ்சேல் என்று அருளி, தனது மெய்க்காப்பாளனாகிய நந்தியை அழைத்து, அந்த விஷத்தை எடுத்து வரச் சொல்ல, அதன்படியே நந்தி எடுத்து வர, அந்த ஆலகால விஷத்தை, தனது வாயிலிட்டு விழுங்கும் போது, அந்த ஆலகால விஷத்தினால், தனது கணவருக்கு எந்த விதத்திலும் தீங்கு நேரக்கூடாது என்றெண்ணிய பார்வதி தேவி, அந்த விஷம் சிவனின் தொண்டைப் பகுதிக்கு வரும்போது, சிவனின் கண்டமாகிய கழுத்தைப் பிடிக்க, செம்பொன்னார் மேனியனாக விளங்கும் சிவனின் தொண்டையில் விஷம் கருநிறமாகத் தங்கியது.

அகிலம் ஆலகால விஷத்திலிருந்து தப்பியது. தேவர்கள் பயம் நீங்கினர். சிவபெருமானை நீலகண்டன் என போற்றினர்.

மறுபடியும் பாற்கடல் கடைய, அமிர்தம், லக்ஷ்மி தேவி, காமதேனு, உச்சைஸ்ரவம் எனும் குதிரை முதலான தோன்ற அனைவரும் மகிழ்வுற்றனர்.

(இந்தப் புராணத்திற்குள் அற்புதமான அறிவியல் தத்துவம் பொதிந்திருக்கின்றது. பிரபஞ்சம் தோன்றிய விதத்தை அறிவியல் விளக்கும் அம்சம் இந்தப் புராணத்தில் அடங்கியுள்ளது)

அச்சமயம், நந்தி தேவர் நாம் எடுத்து வந்த விஷம் அவ்வளவு வீரியம் வாய்ந்ததா என்று எண்ணி, உலகம் உய்ய ஒரு காரியத்தை, நான் செய்தேனே என்று செருக்குற்றார்.

அப்பொழுதுதான், அந்த விஷத்தின் வீரியம் நந்தி தேவரை வீழ்த்தியது.

மயக்கமுற்ற நந்தி தேவருக்கு, அகிலம் அனனத்திற்கும் படியளக்கும் அன்னபூரணியாக விளங்கும் பார்வதி தேவி, அரிசியும், வெல்லமும் கலந்த கலவையை நந்திக்கு மருந்தாகக் கொடுக்க, நந்தியின் தலைக்கு விஷத்தின் வீரியம் வராமலிருக்க சிவபெருமான் தனது பாதத்தை, நந்தியின் தலையில் இருத்தி, தாண்டவத்தை நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நிகழ்த்த பிரதோஷ தாண்டவம் நிகழ்ந்தேறியது.

மயக்கமும் விஷமும் நீங்கிய நந்தி, தனது செருக்கு நீங்கி, சிவபெருமானை வணங்கி வழிபட்டார்.

விண்ணோர்கள் அனைவரும் அந்த அற்புதத் தாண்டவத்தைக் கண்டு களித்தனர்.

பாற்கடல் கடையத் தொடங்கியது தசமி தினம் என்றும், ஏகாதசி தினம் முழுவதும் உறக்கமின்றி கடைந்தது என்றும், திரயோதசி தினத்தின், மாலை வேளையில் (4.30 pm – 6.00 pm) தான் நந்தியின் சிரசில் நடனமாடியதாகவும் சிவபுராணங்கள் பகர்கின்றன. இந்த நேரத்தை ரஜனி முக காலம் என்று போற்றுவார்கள்.

திரயோதசி திதியின் மாலை வேளையைத் தான் பிரதோஷ வேளையாகக் வழிபட்டு மகிழ்கின்றோம்.

பிரதோஷ வேளையில் படைக்கப்படும் காப்பரிசி எனும் பிரஸாதம் – அரிசி மற்றும் வெல்லத்தினால் செய்யப்படுவது. அந்த பிரஸாதத்தை உட்கொண்டால், அது நம் உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்கவல்லது.

அரிசி வெல்லக் கலவை ஒரு அற்புதமான மருந்து. வெல்லத்தில் இருக்கும் க்ளுக்கோஸும் (glucose), அரிசியில் உள்ள அமைலோஸ் (amylase) எனும் ஸ்டார்ச் வகையைச் சேர்ந்த உப்பும் சேர்வது – உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்க வல்லது.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு முதலுதவியாக ஜீனியும், உப்பும் கலந்த தண்ணீரைக் கொடுப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

அது போல, மாட்டிற்கு ஏதேனும் நோய் தாக்கியதாகத் தெரியவந்தால், முதலில் அரிசியும் வெல்லமும் கலந்த கலவையை உணவாகக் கொடுப்பார்கள்.

சூரியன் அஸ்தமித்து, சந்திரன் உதிக்கும் நேரமாக அந்தி மாலை நேரம் விஷத்தன்மை கொண்டது என்றும், அவ்வேளையில் தீபம் ஏற்றி, வழிபாடுகள் செய்ய, புனிதமான நேரம் என்றும் சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.

சாயங்கால வேளையில் சாப்பாடு கூடாது என்று பெரியோர்கள் கூறுவது இதன் அடிப்படையில் தான்.

மாலை வேளையில் தான், கர்வம் கொண்ட ஹிரண்யனை நரசிம்மர் வதம் செய்தார்.

பிரதோஷ வேளையில் சிவபெருமானை வணங்கினால் தலைக்கனம், கர்வம் போன்றவை நீங்கும் என்றும், ஆணவம், கண்மம், மாயை எனும் மும்மலங்களும் நீங்கி, சிவயோகம் கிடைக்கும் என்றும் சிவபுராணங்கள் வலியுறுத்துகின்றன.

ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் :

தேவர்கள் ஆலகால விஷத்திற்கு அஞ்சி, கைலாய மலையை இங்கும் அங்கும் ஓடி, இறைவனைச் சரணடைந்து நற்கதியைப் பெற்ற வழிமுறைதான் – ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் என்று கூறப்படுகின்றது.

நிலையாக இருக்கும் சிவனை, நாம் வழிபடும் வலம் வரும் முறை, செயல் சக்தியாகச் செய்யும் போது, சக்தி தேவிக்குரிய திரிசூல வடிவம் வருவதைக் காணலாம்.

சிவனையும், சக்தியையும் ஒருங்கே வழிபட்ட பலன் கிடைக்கக் கூடிய அற்புதமான வழிபாட்டு முறை ஸோம ஸூக்த பிரதக்ஷிணம்.

பிரதோஷ வேளையில் ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் அளவற்ற பலனைத் தரும். ஸத்புத்ர சந்தானம் எனும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வு வளமாகும்.

ஸோமஸூக்த பிரதக்ஷிணம் என்பதை மிக எளிய வகையில் செய்ய ஒரு உபாயம் உண்டு.

ந ச ந கோ

ந ச கோ

ந ச ந

மேற்கண்ட குறியீடுகளை ஞாபகம் கொண்டு எளிதில் வலம் வரலாம்.

ந – நந்தி

ச – சண்டிகேஸ்வரர்

கோ – கோமுகி எனும் ஆலயக் கருவறையிலிருந்து அபிஷேகத் தீர்த்தம் விழும் இடம்.

பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் :

செல்வங்கள் பெருகும்.
கடன் தொல்லைகள் நீங்கும்,
நோய்கள் அகலும்
எதிரிகளால் ஏற்படும் அனைத்து தீய செயல்களும் செயலற்றுப் போகும்.
குழந்தைகளின் கல்வி மேம்படும்.
வேண்டிய வரம் கிட்டும்.
குழந்தைகள் எவ்விதமான கஷ்டமும் இன்றி உணவு எடுத்துக்கொள்ளும்.
நீடித்த ஆயுள் கிட்டும்.
சிவ சக்தியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
விளக்குகள்:

பிரதோஷ நாளில் விளக்குகளால் சிவன் கோயில்களை அலங்கரிக்கத்தால் நாம் வீடு, பேறு, இன்பம் அடையலாம்

தினசரிப் பிரதோஷம்

ஒவ்வொரு நாளும் மாலை 4.30 முதல் 6.30 மணி வரை நித்ய பிரதோஷம். சிவபெருமானை வணங்க இது ஒரு நல்ல காலம். ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் இதை தவறாமல் செய்கிறவர்கள் மோக்ஷம் அடைவர்.

சுக்லப்பக்ஷப் பிரதோஷம்

இது அமாவாசை நாளுக்குப் பிறகு 13 வது நாளில், சுக்லப்பக்ஷம் என்று அழைக்கப்படும் வளர்பிறையில் வருகிறது. இந்த நாளில் பக்ஷிலிங்கத்தை வழிபடுவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது, குறிப்பாக மைலாப்பூரில் உள்ள கபாலி கோவிலில், பார்வதி தேவி சிவனை மயில் வடிவில் வணங்கினார்.

கிருஷ்ணபக்ஷப் பிரதோஷம்

கிருஷ்ணபக்ஷத்தில் 13 வது நாளில் பிரதோஷத் திதியில் வரும் அந்தி வேளையில் பானலிங்கம் வழிபடுபடல் சிறந்த பலனைத் தரும்.

நட்சத்திரப் பிரதோஷம்

வளர்பிறை மற்றும் தேய்பிறையில் 13 வது நாளில் பிரதோஷத் திதியில் வரும் நட்சத்திரத்தின் மீது ஆளும் தெய்வத்தை வணங்குவது நன்மை பயக்கும்.

பூர்ணப் பிரதோஷம்

வளர்பிறை மற்றும் தேய்பிறையில் 13 வது நாளில் முழுமையாகப் பிரதோஷத் திதி வரும் நாளில் சுயம்பு லிங்கத்தை வணங்குவது இருமடங்கு நன்மை பயக்கும்.
தெய்வீகப் பிரதோஷம் 12 ( துவாதசியும்) மற்றும் 13 (திரயோதசியும்) வது நாட்கள் சந்திக்கும் பிரதோஷம், அல்லது 13 (திரயோதசியும்) மற்றும் 14 நாட்கள் (சதுர்த்தசியும்) சந்திக்கும் பிரதோஷம், தெய்வீக பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மரகத லிங்கத்தை வழிபடுவது நன்மை பயக்கும்.

சப்தரிஷி அல்லது அபய பிரதோஷம்

வி வடிவ விண்மீன் சப்தரிஷி மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி (அக்டோபர் நடுப்பகுதியில்), கார்த்திகை, மார்காழி, தை, மாசி மற்றும் பங்குனி (ஏப்ரல் நடுப்பகுதியில்) தமிழ் மாதங்களில் இதைத் தெளிவாகக் காணலாம். பிரதோஷ பூஜையை விடாமுயற்சியுடன் செய்து இந்த நாளில் விண்மீன் கூட்டத்தைப் பார்த்தால், அவர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

மகாப் பிரடோஷம்

சிவன் கார்த்திகை மாதத்தில் சந்திரனின் கட்டத்தில் 13 வது திரையோதசி நாளில் சனிக்கிழமை விஷத்தை உட்கொண்டார். ஆகவே, இவை இரண்டும் ஒன்றாக நிகழும் போதெல்லாம், அது மகா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. மாசி மாதத்தில் சிவராத்திரிக்கு முன் நிகழும் பிரதோஷமும் மகா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.

உத்தமா மகாப் பிரதோஷம்

பிரதோஷம் சித்திரை, வைகாசி, ஐப்பசி அல்லது கார்த்திகை மாதங்களில், வளர்பிறை சனிக்கிழமையன்று வந்தால் அது உத்தமா மகா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது.

ஏகாட்சர பிரதோஷம்

மகாப் பிரதோஷம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே ஏற்பட்டால், அது ஏகக்ஷரா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அன்று ஒரு சிவன் கோயிலுக்குச் சென்று, விநாயகரை வணங்குவதன் மூலமும், உணவு நன்கொடை அளிப்பதன் மூலமும் மிகச்சிறந்த பலன்களைப் பெறலாம்.
அர்த்தநாரிப் பிரதோஷம் மஹா பிரதோஷம் ஒரு வருடத்தில் இரண்டு முறை ஏற்பட்டால், அது அர்த்தநாரி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அன்று சிவன் கோவிலுக்குச் சென்று வணங்குவதன் மூலம், தடைபெற்ற எந்த திருமணமும் வெற்றிகரமாக முடிவடையும். பிரிக்கப்பட்ட தம்பதிகள் மீண்டும் ஒன்றிணைவார்கள்.

திரிகரணப் பிரதோஷம்

மகா பிரதோஷம் ஒரு வருடத்தில் மூன்று முறை ஏற்பட்டால், அது திரிகரண பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இதை யார் விடாமுயற்சியுடன் கடைபிடிக்கிறாரோ அவர் எட்டு வகையான செல்வங்களால் ஆசீர்வதிக்கப்படுவார். பிரதோஷத்திற்கான சடங்குகளைச் செய்தபின், அஷ்டலட்சுமியை வணங்குவதும் நன்மை பயக்கும்.

பிரம்மா பிரதோஷம்

ஒரு ஆண்டில், நான்கு மகா பிரதோஷங்கள் இருந்தால், அது பிரம்மா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அந்த ஆண்டு சந்திரனின் கட்டத்தின் 13 நாளில் சனிக்கிழமை திருவண்ணா மலையில் பிரம்மா சிவனை வணங்கினார், நாமும் இதைக் கடைப்பிடித்தால், நம்முடைய கடந்தகால வாழ்க்கையின் பாவங்களிலிருந்து விடுபட்டு நன்மை அடையலாம்.

அக்ஷரா பிரதோஷம்

பிரதோஷம் ஒரு வருடத்தில் ஐந்து முறை நிகழும்போது, ​​அது அக்ஷரா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. தாருக்கா காடுகளின் முனிவர்கள் சிவனை எதிர்த்தனர். சிவன் தோன்றி அவர்களுக்கு பாடம் கற்பித்தார். தங்களது தவறை உணர்ந்து முனிவர்கள் இந்த பிரதோஷத்தில் இரட்சிப்பை அடைந்தனர்.

ஸ்கந்தப் பிரதோஷம்

சனிக்கிழமை, 13 வது நாள் மற்றும் கிருத்திகா நட்சத்திரம் ஒரே நாளில் விழும்போது, அது ஸ்கந்த பிரதோஷம் என்று கருதப்படுகிறது. முருகப் பெருமான் இந்த பிரதோஷத்தில் சூரசம்ஹாரத்திற்கு முன் சிறப்பு வழிபாடு செய்தார். இந்த நாளில் நாமும் சிவ வழிபாடு செய்தால் முருகனின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

ஷாட்ஜா பிரபா பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஏழு பிரதோஷங்கள் ஏற்பட்டால், அது ஷட்ஜா பிரபா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. கம்சன் தேவகி மற்றும் வாசுதேவரைச் சிறையில் அடைத்து, அவர்களில் ஏழு குழந்தைகளை கொன்றார். தேவகி மற்றும் வாசுதேவர் அந்த ஆண்டு நிகழ்ந்த ஏழு பிரதோஷங்களில் சிறப்பு வழிபாடு செய்ததால் அவர்கள் கிருஷ்ணரை தங்கள் குழந்தையாகப் பெற்றனர். இந்த நாளில் நாமும் சிவ வழிபாடு செய்தால் நம்முடைய கடந்தகால கர்மாவை வென்று விரைவாக மோக்ஷம் அடைய முடியும்.

அஷ்டதிக் பிரதோஷம்

ஒரு வருடத்தில், எட்டு மகா பிரதோஷங்கள் ஏற்பட்டால் அது அஷ்டதிக் பிரதோஷம் ஆகும்.இந்த நாளில் நாமும் சிவ வழிபாடு செய்தால் எட்டு திசைகளின் பாதுகாவலர்கள் நம்மை செல்வச் செழிப்பு, சமுதாய அந்தஸ்து மற்றும் புகழ் வழங்கி ஆசீர்வதிப்பார்கள்.

நவகிரக பிரதோஷம்

ஒரு ஆண்டில், ஒன்பது மகா பிரதோஷங்கள் வந்தால் , அது நவகிரகப் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் அரிதானது. இந்த நாளில் நாமும் சிவ வழிபாடு செய்தால் , சிவனின் ஆசீர்வாதங்களுடன், நவக் கிரகரங்களின் நற் பலன்களையும்
பெறலாம்

துத்தா பிரதோஷம்

ஒரு வருடத்தில் பத்து மகா பிரதோஷங்கள் நிகழ்வது அரிதானதை விட அரிதானது. இந்த நாளில் சிவ வழிபாடு செய்வதன் மூலம், பார்வையற்றவர்களுக்குக் கூடப் பார்வை கிடைக்கும், நொண்டி நடக்க முடியும், கொடிய நோயாளிகள் கூட குண மடைவார்கள். கண் தொடர்பான நோய்களும் குணமாகும்.

ஒவ்வொரு நாளும் மாலை 4.30 – 6.00 நேரம் நித்திய பிரதோஷம் எனவும்,

ஒவ்வொரு அமாவசைக்கு முன்னரும், பெளர்ணமிக்கு முன்னரும் வரும் திரயோதசி திதி பட்ச பிரதோஷம் எனவும்,

சனிக் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் அது சனி மஹா பிரதோஷம் எனவும்,

திங்கட் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் அது ஸோம பிரதோஷம் எனவும் போற்றப்பட்டு, சிறப்பான வகையில் வழிபாடு செய்யப்படும்.

பிரதோஷ காலத்தில், பூஜைகள் நடைபெறும் சமயத்தில், பன்னிரு திருமுறைகளில் உள்ள, அமிர்தம் கடைதல் தொடர்பான, பதிகங்களை படித்தலும் கேட்டலும் பற்பல பலன்களை வாரி வழங்கக்கூடியது.

குறிப்பாக, சிவபுராணத்தினை (நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க ..) வாசிப்பதும், கேட்பதும் நற்பலன்களை அளிக்கக் கூடியது.

பிரதோஷ காலத்தில் பாராயணம் செய்ய பிரதோஷ ஸ்தோத்திரம் மற்றும் பிரதோஷ அஷ்டகம் எனும் மிக அரிய – மிகப் பழமையான நூலாகிய ஸ்கந்த புராணத்திலிருந்து எடுக்கப்பட்ட – சிறப்பு வாய்ந்த இரு ஸ்லோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கீழ்க்கண்ட ஸ்லோகங்கள், பிரதோஷ காலத்தில் படிக்க அல்லது கேட்கப்பெறுவது, மேலே கூறியுள்ள அனைத்து பலன்களையும் வாரி வழங்க வல்லது.

பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானை வணங்கி நலங்களை நாளும் பெறுவோம் !

ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்திரம்

ஸ்ரீ கணேசாய நம:

ஜய தேவ ஜகன்னாத ஜய சங்கர சாச்வத |

ஜய ஸர்வ ஸுராத்யக்ஷ ஜய ஸர்வ ஸுரார்ச்சித ||

ஜய ஸர்வ குணாதீத ஜய ஸர்வ வரப்ரத |

ஜய நித்ய நிராதார ஜய விச்வம்பராக்ய ||

ஜய விச்வ ஏக வந்த்யேச ஜய நாகேந்த்ர பூஷண |

ஜய கெளரிபதே சம்போ ஜய சந்த்ர அர்த்த சேகர ||

ஜய கோட்யர்க ஸங்காச ஜய ஆனந்த குணாச்ரய |

ஜய பத்ர விரூபாக்ஷ ஜயாசிந்த்ய நிரஞ்சன ||

ஜய நாத க்ருபாஸிந்தோ ஜய பக்தார்த்தி பஞ்சன |

ஜய துஸ்தர ஸம்ஸார ஸாகர உத்தாரண ப்ரபோ ||

ப்ரஸீத மே மஹாதேவ ஸம்ஸாரார்தஸ்ய ஸ்வித்யத: |

ஸர்வ பாப க்ஷயம் க்ருத்வா ரக்ஷ மாம் பரமேஸ்வர ||

மஹா தாரித்ர்யமக்நஸ்ய மஹாபாப ஹதஸ்ய ச |

மஹா சோக நிவிஷ்டஸ்ய மஹா ரோகாதுரஸ்ய ச ||

ருணபாரபரிதஸ்ய தஹ்ய மாநஸ்ய கர்மபி : |

க்ரஹை: ப்ரபீஜமாநஸ்ய ப்ரஸீத மம சங்கர ||

தரித்ர: ப்ரார்த்தயேத்தவம் ப்ரதோஷே கிரிஜாபதிம் |

அர்த்தாடோ வாத ராஜா வா ப்ரார்த்தயேத்தேவம் ஈச்வரம் ||

தீர்க்கமாயு: ஸதாரோக்யம் கோசவ்ருத்திர் பலோன்னதி : |

மமாஸ்து நித்யம் ஆனந்த: ப்ரஸாதாத்தவ சங்கரம் ||

சத்ரவ: ஸம்க்ஷயம் யாந்து ப்ரஸீதந்து மம ப்ரஜாபத : |

துர்பிக்ஷமரி ஸந்தாபா: சமம் யாந்து மஹீதலே ||

ஸர்வ ஸஸ்ய ஸம்ருத்திஸ்ச பூயாத்ஸுகமயா திச: |

ஏவம் ஆராதயேத்தவம் பூஜாந்தே கிரிஜாபதிம் ||

ப்ராஹ்மணான் போஜயேத் பஸ்சாத் தக்ஷிணாபிஸ்ச பூஜயேத் |

ஸர்வ பாப க்ஷயகரி ஸர்வ ரோக நிவாரணி ||

சிவபூஜா மயாக்யாதா ஸர்வாபீஷ்ட பலப்ரதா ||

ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்ர அஷ்டகம்

ஸ்ரீ கணேசாய நம: |

ஸத்யம் ப்3ரவீமி பரலோக ஹிதம் ப்3ரவீமி

ஸாரம் ப்3ரவீம் உபநிஷத் த்4ருத3யம் ப்ரவீமி |

ஸம்ஸார முல்ப3ணம ஸாரமவாப்1ய ஜந்தோ:

ஸாரோSயம் ஈச்வர பதாம் ப்ருஹஸ்ய ஸேவா || 1 ||

யே நார்ச்சயந்தி கிரீசம் ஸமயே ப்ரதோஷே

யே நார்ச்சிதம் சிவமபி1 ப்ரணமந்தி சா1ன்யே |

ஏதத்கதா2ம் ச்ருதிபுடைர்ந பிப3ந்தி மூடா4ஸ்தே1

ஜன்மஜன்மஸ¤ ப4வந்தி நரா தரித்ரா : || 2 ||

யே வை ப்ரதோஷ ஸமயே பரமேஸ்வரஸ்ய

கர்விந்த்ய நந்ய மனஸோSங்கி4ரி ஸரோஜ பூஜாம் |

நித்யம் ப்ரவிருத்த4 தனதான்ய கலத்ரபுத்ர ஸெளபாக்ய

ஸம்பத3தி4 காஸ்த இஹைவ லோகே || 3 ||

கைலாஸசைல புவனே த்ரி ஜகஜ்ஜனித்ரிம் கௌரீம்

நிவேச்ய கனகா சிதரத்ன பீடே |

ந்ருத்யம் விதா4துமபி4 வாஞ்ச2தி சூலபாணௌ

தேவா: ப்ரதோஷ ஸமயே நு பஜந்தி ஸர்வே || 4 ||

வாக்3தேவீ த்4ருத வல்லகீ சதமகோ2 வேணும் த3த4த் பத்மஜ

ஸ்தாலோன்னித்3 கரோ ரமா ப4கவதீ கேய ப்ரயோகாந்விதா |

விஷ்ணு: ஸாந்த்ர ம்ருத3ங்க வாத3நபடுர்தே3வா: ஸமந்தாத்ஸ்தி2தா :

ஸேவந்தே தமநு ப்ரதோஷ ஸமயே தேவம் ம்ருடா3நிபதிம் || 5 ||

கந்தர்வ யக்ஷ பதகோரக ஸித்த3 ஸாத்4ய வித்யாதரா ரவராப்ஸரஸாம் க3ணாஞ்ச |

யேsன்யே த்ரிலோக நிலயா ஸஹபூ4தவர்கா: ப்ராப்தே பரதோஷ ஸமயே ஹரபார்ச்வ ஸம்ஸ்தா2 : || 6 ||

அத: ப்ரதோஷே சிவ ஏக ஏவ பூஜ்யோsத2 நான்யே ஹரி பத்மஜாத்தா4: |

தஸ்மிந் மஹேசே விதி4நேஜ்யமாநே ஸர்வே பரஸீதந்தி ஸ¤ராதி4நாதா2: || 7 ||

ஏஷ தே தநய: பூர்வஜன்மநி ப்ராஹ்மணோத்தம: |

ப்ரதி க்ரஹைர்வயோ நிந்யே ந தாநாத்தை: ஸ¤கர்மபி : || 8 ||

அதோ தாரித்3ரய மாபந்ந: புத்ரஸ்தே த்3விஜபா4மிநி |

தத்தோஷ பரிஹாரார்த்தம் சரணாம் யாது சங்கரம் ||

|| இதி ஸ்ரீ ஸ்காந்தோக்தம் ப்ரதோஷ ஸ்தோத்ராஷ்டகம் ஸம்பூர்ணம் ||

Welcome to vidyaarthini.com, a Hindu Web Portal !
பிரதோஷ வழிபாடு
Category
பிரதோஷ வழிபாடு
Description
Pradhosha Pooja
Author
Publisher Name
vidyaarthini.com

Leave a Comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top