You cannot copy content of this page

சைவ அனுஷ்டானங்கள்

சிவபெருமான் 25 விதமான வடிவங்களைக் கொண்டவர்

01 உமா மகேஸ்வரர்,
02 ரிஷபாரூடர்,
03 நடராஜர்,
04 கல்யாண சுந்தரர்,
05 பிட்சாடனர்,
06 காமாந்தகர்,
07 காலஸம்ஹாரர்,
08 சலந்தரஹரர்,
09 நீலகண்டர்,
10 அர்த்தநாரீஸ்வரர்,
11 கஜஸம்ஹாரர்,
12 திரிபுராந்தகர்,
13 வீரபத்திரர்,
14 அரியார்த்தர்,
15 கிராதர்,
16 கங்காளர்,
17 சண்டேச அனுகிரகர்,
18 சக்ரதானர்,
19 கணேசானுகிரகமூர்த்தி,
20 சோமாஸ்கந்தர்,
21 ஏகபாதர்,
22 சுகாசனர்,
23 தட்சிணாமூர்த்தி,
24 லிங்கோத்பவர்,
25 சந்திரசேகரர்.

மூன்று வேளைகளிலும் சிவ தரிசனம் செய்வது இம்மையிலும் மறுமையிலும் வாழ்வு தரக்கூடியது.

பஞ்சபூத ஸ்தலங்கள் :

நீர் – திருவானைக்காவல்

நெருப்பு – திருவண்ணாமலை

நிலம் – காஞ்சிபுரம்

காற்று – காளஹஸ்தி

ஆகாயம் – சிதம்பரம்

உளியால் செதுக்கப்படாத ஸப்த விடங்க ஸ்தலங்கள் :

 1. திருநள்ளாறு
 2. திருநாகைக்காரோணம்
 3. திருவாரூர்
 4. திருக்காராவில்
 5. திருக்கோளிலி
 6. திருவாய்மூர்
 7. திருமறைக்காடு

அட்டவீரட்ட தலங்கள் :

 1. திருக்கண்டியூர்,
 2. திருக்கடவூர்,
 3. திருவதிகை,
 4. திருவழுவூர்,
 5. திருப்பறியலூர்,
 6. திருக்கோவலூர்,
 7. திருக்குறுக்கை,
 8. திருவிற்குடி

பூஜைக்கால சிவாலய தரிசன பலன் :

காலசந்தி – நோய்கள் நீங்கும்

மத்தியானம் – செல்வம் பெருகும்

ஸாயங்காலம் – பாபங்கள் நீக்கும்

அர்த்தசாமம் – முக்தி கிடைக்கும்.

ஒவ்வொரு கால பூஜையிலும் சாற்றப்படவேண்டிய மலர்கள் :

காலை : தாமரைப் பூ, பூவரசம்பூ, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, செண்பகம், புன்னை, தாழை

மதியம் : வெண்தாமரை, அரளி, பூவரசம்பூ, நெய்தல், வில்வம், சங்கு புஷ்பம், மருதாணிப்பூ, கோவிதாரம், ஓரிதழ்த் தாமரை.

மாலை : செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிப்பூ, முல்லை, மருக்கொழுந்து, வெட்டி வேர், கஜகர்ணிகை, வில்வம்.

நடராஜப் பெருமானுக்குரிய அஷ்ட புஷ்பங்கள் :

வெள்ளெருக்கம்பூ, செண்பகம், புன்னை, நந்தியாவட்டை, பாதிரி, நீலோத்பலம், அரளி மற்றும் தும்பை.

நடராஜப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலி செய்வதற்கு சிறப்பு வாய்ந்த புஷ்பங்கள் :

மந்தாரை, ஜாதிப்பூ, புன்னை, நந்தியாவட்டை, மல்லிகை, தும்பைப்பூ, முல்லைப்பூ, அலரி, கொக்கிறகு, வெள்ளெருக்கம்பூ, கொன்றை, ஆவாரம்பூ, கடம்பு, பாதிரி.

ஒவ்வொரு மாத சிவாலய அபிஷேகம் பற்றியும் அதற்கான பலன்களையும் அன்னாபிஷேகம் எனும் தலைப்பில் காணலாம்.

ஒவ்வொரு மாத பௌளர்ணமியிலும் சாற்ற வேண்டிய மலர்கள் :

சித்திரை : முல்லை, மருக்கொழுந்து

வைகாசி : அலரி, நெய்தல், செம்பருத்தி, செந்தாமரை, பாதிரி

ஆனி : தாமரை, செண்பகம்

ஆடி : ஊமத்தை, கருநெய்தல்

ஆவணி : விஷ்ணு கரந்தை, மல்லிகை, புன்னை

புரட்டாசி : வெள்ளருகு, தாமரை

ஐப்பசி : சங்குப்பூ, வில்வப்பூ, கொன்றை, மகிழம்பூ, மல்லிகை

கார்த்திகை : மல்லிகை, பாக்குப்பூ

மார்கழி : வெண்தாமரை, செந்தாமரை

தை : நந்தியாவட்டை, தாமரை

மாசி : மகிழம்பூ, மருதாணி, மல்லிகை

பங்குனி : கொக்கிறகு, தாமரை, காசித் தும்பை.

சிவாலய அபிஷேக திரவியங்களின் பலன்கள் :

சுத்தமான நீர் – சாந்தம்

தைலம் – இன்பம்

பஞ்சாமிருதம் – முக்தி

பால் – நீண்ட ஆயுள்

தயிர் – குழந்தைப் பேறு

அரிசி மாவு – கடன் நீங்கும்

மஞ்சள் – ராஜ வசியம்

கரும்புச் சாறு – ஆரோக்கியம்

எலுமிச்சை – எம பயம் நீக்கும்

அன்னாபிஷேகம் – விவசாயம் செழிக்கும்

தர்பை கலந்த தீர்த்தம் – ஞானம்

விபூதி – ஸகல ஐஸ்வர்யம்

சந்தனம் – பெரும் செல்வம்

சங்காபிஷேகம் – ஸகல பாபங்களும் நீங்கும்.

வில்வ அர்ச்சனையின் பலன் :

மூன்று ஜன்மங்களிலும் செய்த பாபங்கள் நீங்கும், சிவபதம் கிடைக்கச் செய்யும்.

வில்வம் பறிக்கக் கூடாத நாட்கள் :

மாதப்பிறப்பு, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌளர்ணமி, திங்கட்கிழமை.

சிவபூஜைக்கான – வார நாட்களுக்கான புஷ்பங்கள் :

ஞாயிறு : வில்வம்

திங்கள் : துளசிப்பூ

செவ்வாய் : விளா

புதன் : மாவிலங்கம் (மாம்பூ)

வியாழன் : மந்தாரை

வெள்ளி : நாவல் இலை

சனி : விஷ்ணு கரந்தை

தெய்வங்களுக்கு ஆகாத புஷ்பங்கள் :

சிவன் : தாழம்பூ,

பிரம்மா : தும்பை

துர்கை : அருகம்புல்

சூரியன் : வில்வம்

விநாயகர் : துளசி

விஷ்ணு : நந்தியாவட்டை (அக்ஷதை கொண்டு விஷ்ணுவை அர்ச்சிக்கக் கூடாது)

அம்பிகை : நெல்லி, பாதிரி

பைரவர் : மல்லிகைப் பூ (வாசனை புஷ்பங்கள்)

சிவபெருமானின் ஐந்து முகங்களுக்கான சிறப்பு நிவேதனங்கள் :

ஈசானம் : சுத்தான்னம்

தத்புருஷம் : சர்க்கரைப் பொங்கல்

அகோரம் : எள் சாதம்

வாமதேவம் : தயிர்சாதம்

ஸத்யோஜாதம் : பொங்கல்

(சிவலிங்கத்திற்கு மேற்கண்ட ஐந்து நிவேதனங்களையும் ஒருங்கே செய்தல் மிகவும் சிறப்பான பலன் தரக்கூடியது)

தீபாராதனை சமயத்தில் காட்டப்படும் சிறப்பு உபசார தீபங்களுக்கான தெய்வங்கள் :

தூபம் (ஊதுபத்தி) : அக்னி

நாக தீபம் : கேது

ரிஷப தீபம் : தர்ம தேவன்

மிருகதீபம் : விஷ்ணு

பூர்ணகும்பம் : ருத்திரன்

பஞ்சதீபம் (ஐந்து தீபங்கள்) : பஞ்ச ப்ரும்மாக்கள்

நக்ஷத்ர தீபம் : 27 நக்ஷத்திரங்கள்

மேரு தீபம் : 12 ஆதித்யர்கள்

விபூதி : சிவன்

கண்ணாடி : சூர்யன்

குடை : சந்திரன்

சாமரம் : மஹாலக்ஷ்மி

விசிறி : வாயு

சிவாலயங்களில் வாசிக்கப்படும் வாத்தியங்களுக்கான பலன்கள் :

மத்தளம் : சுகம்

தாளம் : துக்கம் நீங்கும்

படஹம் : பாபம் அகலும்

பேரி : சந்தோஷம்

டமருகம் : இன்பம்

சங்கு : விரோதம் நீங்கும்

நர்த்தனம் : தானிய அபிவிருத்தி

நாதஸ்வரம் : வம்ச அபிவிருத்தி

கடம் : மோக்ஷம்

தெய்வங்களை தரிசிக்கக் கூடாத தருணங்கள் :

கோயில் கதவு சார்த்தியிருக்கும் போதும், நிவேதன காலத்தில் திரையிட்டபோதும் தெய்வங்களை தரிசிக்கக் கூடாது.

பிரதக்ஷிண பலன் : (ஆலயம் வலம் வருதலின் பலன்)

காலை : நோய் நீங்கும்

மதியம் : வேண்டும் வரம் கிடைக்கும்

மாலை : பாபங்கள் அகலும்

இரவு : மோக்ஷம் கிடைக்கும்.

ஆலயத்தை வலம் வரக்கூடாத சமயங்கள் :

திருக்கோயிலின் கதவுகள் சார்த்தியுள்ளபோதும், அபிஷேக காலத்திலும், கால பூஜைகள் நடக்கும்போதும், சுவாமி வீதியுலா வரும்போதும் பிரதக்ஷிணம் செய்யக் கூடாது. இரு கைகளையும் தொங்கப் போட்டுக்கொண்டு பிரதக்ஷிணம் செய்வதும் கூடாது.

விநாயகரை ஒரு முறையும்,

சூரியனை இரு முறைகளும்,

சிவனை மூன்று முறைகளும்,

அம்பிகையையும், விஷ்ணுவையும் நான்கு முறைகளும்,

அரச மரத்தை ஏழு முறைகளும் வலம் வர வேண்டும்.

விபூதி தரிக்கும் காலம் :

புனித நதியில் நீராடிய பின்னும், ஜபம் புரிதலின் முன்னும், ஹோமங்கள் செய்யும் போதும், விரத காலங்களிலும், தானம் கொடுக்கும் முன்பும், உபதேசம் பெறும் முன்னரும், தீட்சை பெறும் சமயத்திலும் மிக நிச்சயமாக சிவச் சின்னமான விபூதியைத் தரிக்க வேண்டும்.

சூதகம் எனும் தீட்டுக் காலங்களில் விபூதியைத் தரிக்கக் கூடாது.

கட்டைவிரல், நடுவிரல், மோதிர விரல் – இந்த மூன்று விரல்களாலும் விபூதியைத் தரிப்பது சிவபெருமானின் பேரருளை விரைவில் கிடைக்கச் செய்யும்.

சிவபெருமானின் கண் போன்ற ருத்ராக்ஷம்

ருத்ராக்ஷம் சிவாம்சம் கொண்டது. சிவபதவியைத் தரக்கூடியது.

ஆலய அமைப்புக்கான விபரங்கள், அஷ்டபந்தன மருந்து தயாரிக்கும் முறை, பிரதிஷ்டை செய்ய வேண்டிய முறைகள் மற்றும் சரியை, கிரியை, ஞானம், யோகம் ஆகியவற்றை விளக்கும் சைவ சித்தாந்த நெறிகளை போற்றும் வண்ணமும் நடராஜர் சதகம் பாடல்கள் அமைந்துள்ளன.

Welcome to vidyaarthini.com, a Hindu Web Portal !
சைவ அனுஷ்டானங்கள்
Category
சைவ அனுஷ்டானங்கள்
Description
Shaivaite practices
Author
Publisher Name
vidyaarthini.com

Leave a Comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top