திருமுறைகள்
!!! சிவசிவ !!! அன்பே சிவம் !!! சிவசிவ !!!
சிவபெருமானை மூல முதல்வனாகக் கொண்டு செந்தமிழில் பாடப்பெற்ற பக்திப் பாடல்களின் தொகுப்பே திருமுறைகள்.
சைவ சமயத்தவர்கள் நாள்தோறும் காதலாகிக் கசிந்துருகி வேதம்போல ஓதத் தக்கவை திருமுறைகள்.
இவை எண்ணிக்கையால் பன்னிரண்டு.
இவற்றைப் பாடியவர்கள் 27 ஆசிரியர்கள்.
63 நாயன்மார்கள்
- அதிபத்தர்
- அப்பூதியடிகள்
- அமர்நீதி நாயனார்
- அரிவட்டாயர்
- ஆனாய நாயனார்
- இசைஞானியார்
- இடங்கழி நாயனார்
- இயற்பகை நாயனார்
- இளையான்குடிமாறார்
- உருத்திர பசுபதி நாயனார்
- எறிபத்த நாயனார்
- ஏயர்கோன் கலிகாமர்
- ஏனாதி நாதர்
- ஐயடிகள் காடவர்கோன்
- கணநாதர்
- கணம்புல்லர்
- கண்ணப்பர்
- கலிய நாயனார்
- கழறிற்ற்றிவார்
- கழற்சிங்கர்
- காரி நாயனார்
- காரைக்கால் அம்மையார்
- குங்கிலியகலையனார்
- குலச்சிறையார்
- கூற்றுவர்
- கலிக்கம்ப நாயனார்
- கோச் செங்கட் சோழன்
- கோட்புலி நாயனார்
- சடைய நாயனார்
- சண்டேஸ்வர நாயனார்
- சத்தி நாயனார்
- சாக்கியர்
- சிறப்புலி நாயனார்
- சிறுதொண்டர்
- சுந்தரமூர்த்தி நாயனார்
- செருத்துணை நாயனார்
- சோமசிமாறர்
- தண்டியடிகள்
- திருக்குறிப்புத் தொண்டர்
- திருஞானசம்பந்தமூர்த்தி
- திருநாவுக்கரசர்
- திருநாளை போவார்
- திருநீலகண்டர் குயவர்
- திருநீலகண்ட யாழ்ப்பாணர்
- திருநீலநக்க நாயனார்
- திருமூலர்
- நமிநந்தியடிகள்
- நரசிங்க முனையர்
- நின்றசீர் நெடுமாறன்
- நேச நாயனார்
- புகழ்சோழன்
- புகழ்த்துணை நாயனார்
- பூசலார்
- பெருமிழலைக்
- மங்கையர்க்கரசியார்
- மானக்கஞ்சாற நாயனார்
- முருக நாயனார்
- முனையடுவார் நாயனார்
- மூர்க்க நாயனார்
- மூர்த்தி நாயனார்
- மெய்ப்பொருள் நாயனார்
- வாயிலார் நாயனார்
- விறன்மிண்ட நாயனார்
முதல் ஏழு திருமுறை:
திருஞான சம்பந்தர்,
திருநாவுக்கரசர்.
சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரப்பாடல்கள்
எட்டாம் திருமுறை:
மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக்கோவையார்
ஒன்பதாம் திருமுறை:
திருமாளிகைத்தேவர், சேந்தனார் முதலிய 9 ஆசிரியர்களால்
இயற்றப்பட்ட திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
பத்தாம் திருமுறை:
திருமூலர் பாடிய திருமந்திரம்
பதினோராம் திருமுறை.
காரைக்கால் அம்மையார், பட்டினத்தார், சேரமான் பெருமாள் நாயனார் முதலிய 11 பேர் பாடிய பாடல்கள் தொகுப்பு
பன்னிரண்டாம் திருமுறை
சேக்கிழார் பாடிய பெரியபுராணம்.
இந்தத் திருமுறைகளிலுள்ள மொத்தப் பாடல்கள் 18402.
திருமுறை ஆசிரியர்கள் இறைவன் திருவருளைப் பெற்றுப் பேரின்பம் அடைந்தார்கள். இவர்கள் தாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் என்னும் பெரு நோக்கத்துடன் மற்றவர்களும் இறைவன் திருவருளைப் பெற வழிகாட்டினார்கள். அவர்கள் காட்டிய வழிமுறைகளே திருமுறைப்பாடல்கள்.
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைம¢ன் நமனில்லை” என்று கூறினார் திருமூலர்.
எனவே இறைவன் ஒருவனே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவன் ஓருருவம், ஒரு நாமம் இல்லாதவன். அவன் ஆணல்லன், பெண்ணல்லன், அலியுமல்லன். எனினும் அவனை அம்மையாகவும் அப்பன¡கவும் கருதி வழிபடுதல் நம் சைவ மரபாகும்.
“அம்மை நீ அப்பன் நீ” என்றும் “ஈன்றாளுமாய் எந்தையுமாய்” என்றும் நாவுக்கரசர் பெருமான் தம் தேவாரத்தில் இறைவனை வர்ணிக்கிறார். திருவாசகமும் ” அம்மையே அப்பா ஒப்பிலா மணியே” என்று இறைவனை அழைக்கிறது.
இறைவனாகிய சிவபெருமான் அன்பின் மறுவடிவம். “அன்பே சிவம்” “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்” என்பன திருமந்திர மொழிகள்.
திருமுறையாசிரியர்கள்
1 திருஞான சம்பந்தர் |திருமுறை: 1,2,3 பாடல்கள்: 4147
2 திருநாவுக்கரசர் | திருமுறை:4,5,6 பாடல்கள்: 4066
3 சுந்தரர் |திருமுறை:7 பாடல்கள்: 1026
4 மாணிக்கவாசகர் |திருமுறை:8 பாடல்கள்: 1058
5 திருமாளிகை தேவர் |திருமுறை:9 பாடல்கள்: 44
6 கண்டராதித்தர் |திருமுறை:9 பாடல்கள்: 10
7 வேணாட்டடிகள் |திருமுறை:9 பாடல்கள்: 10
8 சேதிராசர் |திருமுறை:9 பாடல்கள்: 10
9 பூந்துருத்திநம்பி காடநம்பி |திருமுறை:9 பாடல்கள்: 12
10 புருடோத்தமநம்பி |திருமுறை:9 பாடல்கள்: 22
11 திருவாலியமுதனார் |திருமுறை:9 பாடல்கள்: 42
12 சேந்தனார் |திருமுறை:9 பாடல்கள்: 47
13 கருவூர்த்தேவர் |திருமுறை:9 பாடல்கள்: 105
14 திருமூலர் |திருமுறை:10 பாடல்கள்: 3000
15 திருவாலவாயுடையார் |திருமுறை:11 பாடல்கள்: 1
16 கல்லாட தேவ நாயனார் |திருமுறை:11 பாடல்கள்: 1
17 அதிரா அடிகள் |திருமுறை:11 பாடல்கள்: 23
18 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் |திருமுறை:11 பாடல்கள்: 24
19 இளம் பெருமான் அடிகள் |திருமுறை:11 பாடல்கள்: 30
20 பரணதேவ நாயனார் |திருமுறை:11 பாடல்கள்: 101
21 சேரமான் பெருமான் நாயனார் |திருமுறை:11 பாடல்கள்: 11
22 கபிலதேவ நாயனார் |திருமுறை:11 பாடல்கள்: 157
23 காரைக்கால் அம்மையார் |திருமுறை:11 பாடல்கள்: 143
24 பட்டினத்துப் பிள்ளையார் |திருமுறை:11 பாடல்கள்: 192
25 நக்கீர தேவ நாயனார் |திருமுறை:11 பாடல்கள்: 199
26 நம்பியாண்டார் நம்பி |திருமுறை:11 பாடல்கள்: 382
27 சேக்கிழார் |திருமுறை:12 பாடல்கள்: 4286