You cannot copy content of this page

சித்தர்கள்

சித்தர்கள் “சித்தர்” என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.

எட்டு வகையான யோகாங்கம் அல்லது அட்டாங்க யோகம் தொகு
இயமம் – கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.
நியமம் – நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்.
ஆசனம் – உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.

பிராணாயாமம் -பிரணாயாமமாவது சுவாசத்தை கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவைத் தடுத்தல், :வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.

பிராத்தியாகாரம் – புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே :பிரத்தியாகாரமாம்.

தாரணை – தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.

தியானம் – தியானம் என்பது மனதை ஒருபடுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.

சமாதி -சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது ஆகும்.

எண் பெருஞ் சித்திகள் அல்லது அட்டமா சித்திகள்

அனி மாதி சித்திகளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே

திருமூலர்–திருமந்திரம்-

எண் பெருஞ் சித்திகளை விளக்கம் தொகு
அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.
இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
பிராப்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல்.

இத்தகைய எண் பெருஞ் சித்திகளைச் எட்டு வகையான யோகாங்க பயிற்சியினால் சித்தர்கள் பெற்றனர்.

சித்தர்கள் இயல்புகள்

சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவார்.

சித் – அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள்.

சித்தர்கள் மருத்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள்.

சித்தர்கள் இயற்கையை கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும்.

இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பௌதிகவாதிகள் (materialists) அல்ல. மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.

சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.

சித்தர்களை புலவர்கள், பண்டாரங்கள், பண்டிதர்கள், சன்னியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுவார்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அரசர்கள், மறவர்கள், ஆக்கர்கள், புலமையாளர்கள், அறிவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில் இருந்தும்,[சான்று தேவை] உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் “ஆத்மன்”, சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்கலாம். இன்று, சித்தர் மரபு அறிவியல் வழிமுறைகளுடன் ஒத்து ஆராயப்படுகின்றது. எனினும், சித்தர் மரபை தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்து குறுகிய ஆய்வுக்கு இட்டு செல்லும்.

தமிழ் வளர்த்த சித்த நூல்கள்:
சித்தர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த இலக்கியங்களை படைத்துள்ளனர். தமிழ் நாட்டிலே சித்தர்கள் இயற்றினவாக, இரசவாதம், வைத்தியம், மாந்திரிகம், சாமுத்திரிகாலட்சணம், கைரேகை சாத்திரம், வான சாத்திரம், புவியியல் நூல், தாவரயியல் நூல், சோதிட நூல், கணித நூல் முதலிய துறைகளைச் சார்ந்த நூல்கள் காணப்படுகின்றன.

சொல்லிலக்கணம்
சித்தர்களின் கொள்கை தொகு
பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.

உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான்
உருவம் இல்லா உண்மை அவன்.
இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை
தானும் அடைவார் அந்நிலை தன்னை.

தமிழ்ச் சித்தர்கள்

சித்தர் மரபை நோக்குங்கால், இதுவரை கண்டுள்ள எண்ணிக்கை கட்டுக்கடங்காதது.சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர்.

சித்தர்களின் பட்டியல்

பதினெண்சித்தர்கள்

தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர்.[1] அவர்கள் வருமாறு;-

திருமூலர்
இராமதேவ சித்தர்
கும்பமுனி
இடைக்காடர்
தன்வந்திரி
வால்மீகி
கமலமுனி
போகர்
மச்சமுனி
கொங்கணர்
பதஞ்சலி
நந்தி தேவர்
போதகுரு
பாம்பாட்டி சித்தர்
சட்டைமுனி
சுந்தரானந்தர்
குதம்பைச்சித்தர்
கோரக்கர்
இதர சித்தர்கள் தொகு
அக்கா சுவாமிகள்
அகத்தியர்
அகப்பேய் சித்தர்
அருணகிரிநாதர்
அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்
அழகண்ண சித்தர்
அழகர் சுவாமிகள்
அழுகண்ணச் சித்தர்
அறிவானந்தர்
ஆய்மூர் அய்யாறு சுவாமிகள்
இடைக்காட்டு சித்தர்
இரமண மகரிஷி
இராகவேந்திரர்
இராணி சென்னம்மாள்
இராம தேவர்
இராமகிருஷ்ணர்
இராமலிங்க சுவாமிகள்
இராமானுஜர்
உரோமரிசி
உரோமரிஷி
எனாதிச் சித்தர்
ஒடுக்கத்தூர் சுவாமிகள்
கடுவெளிச் சித்தர்
கடையிற் சுவாமிகள்
கண்ணப்ப நாயனார்
கணபதி தாசர்
கதிர்வேல் சுவாமிகள்
கம்பர்
கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
கருவூர்சித்தர்
கருவூரார்
கன்னிச் சித்தர்
காக புசுண்டர்
காசிபர்
காடுவெளி சித்தர்
காரைச் சித்தர்
காளங்கி நாதர்
காளைச் சித்தர்
குகை நாச்சியார் மகான்
குடைச் சித்தர்
குதம்பைச் சித்தர்
குமரகுருபரர்
குமாரசாமி சித்தர் சுவாமிகள்
குரு பாபா ராம்தேவ்
குழந்தையானந்த சுவாமிகள்
குழுமியானந்த சுவாமிகள்
கைலயக் கம்பளிச் சட்டை முனி
கொங்கண சித்தர்
கோட்டூர் சுவாமிகள்
கௌதமர்
சக்திவேல் பரமானந்த குரு
சண்டேசர்
சதாசிவப் பிரம்மேந்திரர்
சதுர்முக சுரேஸ்வர சித்தர்
சந்திரானந்தர்
சாந்த நந்த சுவாமிகள்
சித்தானந்த சுவாமிகள்
சித்தானைக்குட்டி சுவாமிகள்
சிவஞான பாலசித்தர்
சிவஞான பாலைய சுவாமிகள்
சிவப்பிரகாச அடிகள்
சிவயோக சுவாமி
சிவவாக்கியர்
சிவாச் சித்தர்
சிறுதொண்டை நாயனார்
சுந்தரர்
சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்
சுப்பிரமணிய சித்தர்
சூரியானந்தர்
செல்லப்பா சுவாமி்
சென்னிமலை சித்தர்
சேக்கிழார் பெருமான்
சேடயோகியார்
சோதி முனி
ஞானகுரு குள்ளச்சாமிகள்
ஞானானந்த சுவாமிகள்
டமரகர்
தகப்பன் மகன் சமாதி
தம்பிக்கலையான் சித்தர்
தயானந்த சுவாமிகள்
தஷிணாமூர்த்தி சுவாமிகள்
திரி மதுர நீற்று முனீஸ்வரர்
திரிபலாதர சுரேஸ்வர சித்தர்
திருமூலம் நோக்க சித்தர்
தேரையர்
நடன கோபால நாயகி சுவாமிகள்
நந்தி சித்தர்
நந்தீசர்
நாகலிங்க சுவாமிகள்
நாரதர்
நாராயண சாமி அய்யா
பகவந்த சுவாமிகள்
பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்
பட்டினத்தார்
பட்டினத்தார்
பத்திரகிரியார்
பரமகுரு சுவாமிகள்
பரமஹம்ச யோகானந்தர்
பரமாச்சாரியார்
பாடக்சேரி இராமலிங்க சுவாமிகள்
பாம்பன் சுவாமிகள்
பீரு முகமது
புண்ணாக்கீசர்
புலத்தியர்
புலிக் கையீசர்
புலிப்பாணி
பூகண்டம்
பூரணானந்தர்
பூனைக் கண்ணர்
பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி
பெரியாழ்வார் சுவாமிகள்
பெரியானைக்குட்டி சுவாமிகள்
போக நாதர்
போதேந்திர சுவாமிகள்
மகான் படே சுவாமிகள்
மண்ணுருட்டி சுவாமிகள்
மதுரை வாலைச் சாமி
மாயம்மா
மார்க்கண்டேயர்
முத்து வடுகநாதர்
மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்
மௌன சாமி சித்தர்
யாழ்ப்பாணத்துச் சுவாமி
யுக்தேஸ்வரர்
யோகி ராம்சுரத்குமார் (விசிறி சுவாமிகள்)
ரெட்டியபட்டி சாமிகள்
லஷ்மண சுவாமிகள்
வரதர்
வரரிஷி
வல்லநாட்டு மகாசித்தர்
வல்லப சித்தர்
வள்ளலார்
வன்மீக நாதர்
வாம தேவர்
வாலைகுருசுவாமி
வான்மீகர்
வான்மீகி
விசுவாமித்திரர்
வியாசர்
வேதாந்த சுவாமிகள்
ஜட்ஜ் சுவாமிகள்
ஜமதக்கினி
ஷீரடி சாயிபாபா
ஸ்கந்த பதுமபலாதி சித்தர்
ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்

Scroll to Top