You cannot copy content of this page

முருகன் காயத்ரி மந்திரம்

வாழ்வை ஒளிரச்செய்யும் முருகன் மந்திரம்

முருகன் காயத்ரி மந்திரம்:


ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி
தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்

பொதுப் பொருள்:


தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாக விளங்கும் மகா சேனாதிபதியாகிய முருகப்பெருமானே உன்னை வணங்குகிறேன். அடியேனை ஆட்கொண்டு என்னையும் வழி நடத்த நினது திருவடியை வேண்டுகிறேன்.

முருகன் வழிபாடு:

தமிழர்களின் கடவுளாக பாவிக்கப்படுவர் முருகப்பெருமான். அனைவரும் வழிபடக் கூடிய ஒரு தெய்வமாகவும் முருகப்பெருமான் திகழ்கிறார்.

முருகன் தமிழகமெங்கும் பல்வேறு நிலைகளில் கோவில் கொண்டிருக்கிறார் என்றாலும் முருகனுக்குரிய சிறந்த தலங்களாக ஆறுபடை வீடுகள் எனப்படும் திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை, திருச்செந்தூர், திருத்தணி, பழனி ஆகிய ஆறு முருகன் கோயில்கள் சிறப்பு பெற்ற முருகன் தலங்களாக இருக்கின்றன.

முருகன் வழிபாட்டிற்குரிய தினங்கள்

தினந்தோறும் முருகப் பெருமானை வழிபடலாம் என்றாலும் அவரின் முழுமையான அருளைப் பெறுவதற்கு வழிபாடு செய்ய வாரத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வருகின்ற சஷ்டி தினங்கள் ஆகியவை சிறப்பான தினங்களாக இருக்கின்றன.

ஐப்பசி மாதத்தில் வருகின்ற சஷ்டி திதியில் கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் சிறப்பான பலன்கள் ஏற்படும். குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதாவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளும் விரதம் சஷ்டி விரதம். அதுபோல கார்த்திகை மாதம் முழுவதும் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தர வல்லதாகும்.

முருகன் காயத்ரி மந்திரங்கள்

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி
தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்

ஓம் ஸனத்குமாராய வித்மஹே ஷடானனாய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் மஹாஸேனாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் ஷண்முகாய வித்மஹே ஸ்வாமினாதாய தீமஹி
தன்ன: குருகுஹ ப்ரசோதயாத்

ஓம் சரவணபவாய வித்மஹே ஷடானனாய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் ஷண்முகாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி
தன்ன: ஷஷ்ட ப்ரசோதயாத்

ஓம் மஹாஸேனாய வித்மஹே வாக்விசுத்தாய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் மஹாஸேனாய வித்மஹே ஷடானனாய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் தத்குமாராய வித்மஹே கார்த்திகேயாய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் கார்த்திகேயாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்ன ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் காங்கேயாய வித்மஹே கார்த்திகேயாய தீமஹி
தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்

ஓம் ஞானஸ்கந்தாய வித்மஹே ஸ்வாமினாதாய தீமஹி
தன்ன: சிவகுரு ப்ரசோதயாத்

ஓம் ஸ்வாமிநாதாய வித்மஹே சிவகுருநாதாய தீமஹி
தன்ன:குருகுஹ ப்ரசோதயாத்

ஓம் சக்தி ஹஸ்தாய வித்மஹே குக்குடத்வஜாய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் ஸுப்ரமண்யாய வித்மஹே ஞானஸ்கந்தாய தீமஹி
தன்ன: குஹ ப்ரசோதயாத்.

ஓம் புஜங்கேசாய வித்மஹே உரகேசாய தீமஹி
தன்னோ நாகஹ் ப்ரசோதயாத்

ஓம் கார்திகேயாய வித்மஹே வள்ளீநாதாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் தத்புருஷாய வித்மஹே சிகித்வஜாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் ஷடாணனாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்

தேவசேனை

ஓம் அம்ருத வல்யை ச வித்மஹே தேவஸேனாயை ச தீமஹி
தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்

ஓம் இந்திர புத்ரியைச வித்மஹே தேவஸேனாயை ச தீமஹி
தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே க்ரியா சக்த்யை ச தீமஹி
தன்ன: தேவஸேனா ப்ரசோதயாத்.

வள்ளி

ஓம் ஸுந்தர வல்யை ச வித்மஹே மஹாவல்யை ச தீமஹி
தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்

ஓம் நம்பிராஜ தனயாயை ச வித்மஹே மஹாவல்யை ச தீமஹி
தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்

ஓம்மஹாதேவ்யை ச வித்மஹே இச்சாசக்த்யை ச தீமஹி
தன்ன: வல்லி ப்ரசோதயாத்.

வேல்

ஓம் அசிந்த்ய சக்த்யை ச வித்மஹே ஞான சக்த்யை ச தீமஹி
தன்ன: சக்த்யை ப்ரசோதயாத்.

மயில்

ஓம் சுக்ல பாங்காய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹி
தன்ன: மயூர ப்ரசோதயாத்

ஓம் வேதஸ்வரூபாய வித்மஹே இந்த்ரஸ்வரூபாய தீமஹி
தன்ன: மயூர ப்ரசோதயாத்

ஓம் நீலகண்டாய வித்மஹே ப்ரணவஸ்ரூபாய தீமஹி
தன்ன; மயூர ப்ரசோதயாத்

சேவல்

ஓம் அக்னிஸ்வரூபாய வித்மஹே ப்ரணவாகாராய தீமஹி
தன்ன: குக்குடத்வஜ ப்ரசோதயாத்

ஓம் குக்குடத்வாஜாய வித்மஹே ப்ரணவாகாரய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்.

இந்த மந்திரங்களைத் தினமும் 108 முறை என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜெபிப்பதன் பலனாக முருகப்பெருமானின் அருள் பறி பூரணமாக கிடைக்கும். அதோடு குரு பகவானின் அருளும் கிடைக்கும். இந்த மந்திரத்தை தினமும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் கிழமைகளில் ஜெபிக்கலாம்.

முருகன் வழிபாடு பலன்கள்

முருகப்பெருமானின் முறைப்படி வழிபடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கும்.

எதிரிகள் தொல்லைகளை நீக்கும். மேலும் எதிரிகள் உருவாகாமலும் தடுக்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து காக்கப்படுகிறார்கள். திடீர் ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும்.

நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.

சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்கி காதல் மலரும். குடும்ப பிரச்சனைகள் விரைவில் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும்.

நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். வேலை தேடி அலைபவர்களுக்கு தங்களுக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும். தொழில், வியாபாரங்கள் சிறக்கும். லாபங்கள் பெருகும்.

Scroll to Top