You cannot copy content of this page

கர்ப்பக் கிரியை!

கர்ப்பக் கிரியை!

 1. இறப்பின் போது பிரிந்த இருபத்தைந்து தத்துவங்களை தோற்றுவித்து உயிர் தத்துவங்களுடன் சேர்க்கின்றான். அன்னையின் கருப்பையில் பொருந்தி உயிருக்கு உதவி செய்கின்றான். உடல் வளர்ச்சிக்குத் தேவையனவற்றை அறிந்தே யாவற்றையும் செய்தருள்கின்றான்.
 2. ஞானிகள் உணரும் மூலாதாரத்தில் மேல் நீரும் நெருப்பும் பொறிந்துள்ளன. ஞான பூமியில் திருவடி பதித்து பொறுமையுடன் இனிய உயிரை கருவில் புகும்படி செய்து கருவிலிருந்து வெளிவர பத்துமாத எல்லையை இறைவன் வகுத்து அருளினான்..
 3. ஆணும் பெண்ணும் இன்புற்றபோது ஜீவன் விட்டுச் சென்ற வினைதனை அனுபவிக்க துயரம் பொருந்திய உடலில் பக்குவம் அடைய வேண்டிய காலத்தையும் உலகத்தில் தங்க வேண்டிய காலத்தையும் இருவரும் கூடிய அந்த தருணத்திலே நியமித்தான்.
 4. ஞானியர் அறிந்த இருபத்தைந்து தத்துவங்களும் ஆண் உடலில் தங்கி உருப்பெற்றதை மற்றவர் அறியமாட்டார். அக்கரு பின்பு பெண்ணின் கருவை நாடி அடைந்த ஆணும் பெண்ணுமாகிய இரண்டு உருவமாய் ஓடி கருவில் விழும்.
 5. யோனி விரிந்து லிங்கத்திலிருந்து சுக்கிலம் விழும். புருடன் என்ற தத்துவத்தில் ஞானேந்திரம், கன்மேந்திரியம் பூதங்கள் ஆக பதினைந்து தத்துவங்களுடன் பொழிந்த சுக்கிலத்துடன் மற்ற தன்மாத்திரைகள் அந்தக் காரணங்க்கள் ஒன்பதும் புருவ நடுவிலும் உச்சியிலும் பொருந்தும்.
 6. மலரின் நறுமணாத்தை கொண்டிருக்கும் காற்று எங்கும் பரவியிருப்பதுபோல் கருப்பையில் உள்ள தனஞ்சயன் என்ற வாயு குறிபிட்ட காலத்திற்குள் ஜீவனின் விந்துவுடன் பெண் கருவில் நுழையும்.
 7. உருவம் அற்ற புரியட்ட உடலுலின் உள்ளே புகும் பத்து வாயுக்கள், காமம் முதலிய எட்டு விகாரங்கள், ஆகியவற்றில் மூழ்கும் புருடன் உடலின் ஒன்பது துளைகள், குண்டலியாகிய நாதம், பன்னிரண்டு விரற்கடை செல்லும் பிராணன் என்ற பிறவியும் இறைவன் என்ற பாகன் செலுத்தாவிட்டால் பன்றியைப் போன்ற இழிவான பிறப்பாகி விடும்.
 8. ஆண் பெண் இனைப்பில் வெளிப்படும் சுரோணிதக் கலப்பில் ஆணின் சுக்கிலமானது எதிர்த்துச் சென்றால் குழந்தை உருத்திரைப் போல் இருக்கும். பெண்ணின் சுரோணிதம் எதிர்த்துச் சென்றால் திருமால் போலிருக்கும். சுக்கிலம் சுரோணிதம் இரண்டும் சம்மாகப் பொருந்தினால் அது பிரம்மனைப் போல் இருக்கும். மூவரின் தன்மை ஒத்த குழந்தை பேரரசனாய் வாழ்வன்.
 9. பல உலகங்களில் பிறப்பெடுத்து வருந்திய ஆண் பெண் இருவரது வண்ணத்தில் கரு உருவாகும். பல பிறவிகளில் பல உடலில் பொருந்திய அக்கரு நன்றாகப் பதிந்த பின்பு மயக்கம் பொருந்திய இருவர் மனமும் ஒன்றாயின.
 10. அறியாத நிலையில் உள்ள சிசுவிற்கு மாயை தத்துவங்களைச் சேர்ப்பாள். அத்னால் அக்குழந்தை பேருறக்கத்திலிருந்து விழித்து நினைவு அடையும். வலிமை மிக்க மாயையின் எட்டு குணங்களும் சுத்த மாயையின்று தோன்றி நான்கு வகை வாக்கிலிருந்து சொல்லும் உண்டாகும்.
 11. எலும்புகளால் கூடுகட்டி நரம்புகளால் வரிந்து கட்டீ இரத்துடதுடன் கூடிய இறைச்சியால் திருத்தமாக உடல் என்ற வீட்டை அமைத்து இன்பம் பெற அருளினான் இறைவன். அவன் மேல் உள்ள நட்பால் அவனை நாடி நிற்கின்றேன்.
 12. பால் போன்ற நிறம்கொண்ட சூரியன் உடல்களைப் பக்குவம் செய்ய ஒளியின் மேனியனான சிவன் உடலில் நீக்கம் இல்லாது நிறைந்து நின்று நன்மை செய்வான். குதத்திலிருந்து செல்லும் அக்னியின் வேகத்தை தணிப்பதற்காக இன்பம் பெறும் முறைகளை வைத்தான்.
 13. பழி பொருந்திய பல வினைகளைச் செய்யும் பாசத்திற்கு கட்டுப்பட்ட கருவைப் பல வினைகளிலிருந்தும் அழியாமல் காப்பான். சிசுவைத் தூய்மை செய்து வினைகளை நீங்குமாறு செய்து துன்பம் அடையாமல் காப்பான்.
 14. சுக்கில நாடியில் தோன்றிய வெண்மையுடைய சுக்கிலமும் யோனியிலிருந்து தோன்றும் சிகப்பு நிற சுரோணிதமும் எட்டு விரல் அளவிற்கு நகர்ந்து நான்கு விரல் அளவிற்கு உள்ளே செல்லும். அப்போது பஞ்ச பூதங்களும் நாதமும் மாயையும் சேர்ந்து எட்டுசான் அளவு உடல் சிசுவுக்கு உண்டாகும்.
 15. ஆண் பெண் இன்பத்தில் பொருந்திய இறைவன் கருவில் உடலைத் தந்து அதனுடன் முப்பத்தொரு தத்துவங்களைச் சேர்த்து இருவரின் மய்க்க நிலையில் ஒரு கருவான முட்டையைத் தருவான்.
 16. பிண்டமான உடலில் அறியாமையான புலன்கள் ஐந்தும் தோன்றி உடல் அழிந்த போது அவை செயலற்றுப் போகும். அண்டத்தில் உடலைச் சுற்றியுள்ள அண்டகோசத்தின் உள்ளே இருக்கும் உயிரும் பக்குவம் பெற்றபோது செயலற்று நாத தத்துவத்தில் அடங்கும்.
 17. மாயையால் உண்டாக்கிய உடலை செலுத்தும் சிவ தத்துவமான அகர உகர மகர, விந்து, நாதம் ஆகிய பிராணவத்தால் கருவை இயக்குவான். உயிரை நிலைக்க வைக்கும் ஆன்ம தத்துவம் இருபத்திநான்கும் புருட தத்துவம் அல்லாத வித்யா தத்துவம் ஆறும் உயிரின் இயல்பிற்கு ஏற்றவாறு கூட்டி உடல் பொறியில் ஒன்பது துவாரங்களை வைப்பான்.
 18. இன்பத்தில் திளைத்திருந்த ஆணும் பெண்ணும் மனம் ஒன்றி வைத்த மண்ணால் ஆன குடத்துள் சேர்பவன் ஆன்மா ஒருவனே. அதனுடன் ஒன்பது வாயிலாகிய நீர்ச்சால் கலசங்களும் சூக்ம உடல் எட்டும் கன்மேந்திரியங்கள் ஞானேந்திரியம் ஆக பதினெட்டு குடங்களும் கருப்பையான சூளையிலே விளைந்து பக்குவம் ஆயின.
 19. உடம்பில் தோன்றும் ஆறு துன்பங்களை அறியாது இருக்கின்ற உயிர்கள். மனதில் பெருகிக் கொண்டிருக்கும் தாமச சாத்வீக ராசத குணங்களின்று பிரியாமல் இருக்கின்றது. சித்திகள் அமைவதை பொருந்தாவிட்டால் பத்து மாதங்களில் உருவாகிய இது பிண்டம் ஆகும்.
 20. மாயையினின்று உடலைத் தோன்றுவித்த விதமும் உடலில் உயிரை அமைத்த விதமும் உணர்ந்து தாழ்ப்பால்களுடன் கூடிய ஒன்பது வாயிலை அமைத்து ஆயிரம் இதழ்களை உடைய சிரசின் அக்னியில் இறுதி நிலை வைத்த இறைவனைச் சுழுமுனையில் சேர்ந்தேன்.
 21. நுட்பமான அறிவுடையாரை ஓதும் முறைபற்றி கேட்டு அறிந்தேன். பேரொளியாய் எங்கும் நிலைத்து நிற்கும் இறைவன் கேடில்லாத உயிர்களை வினைக்கீடாக உடல்களில் பொருந்தி வினைக்கு முதற் காரணமாகின்றான். குழம்பை போன்ற கருவைக் கூட்டி வைக்கின்றான். அதை உருவாக்கி வளர்க்கின்றான். அதனுடன் கலந்து நிற்கின்றான். இவ்வாறு சேர்ந்திருக்கும் தன்மைக்கு நேர்படல் என்றாகும்.
 22. மலரைப் போன்ற யோனியும் மொட்டைப் போன்ற இலிங்கமும் பொருந்தி மலரும், மலர்ந்தபின் சுக்கில சுரோணிதங்கள் கலக்கும். அதில் ஒளிமயமான ஜீவ அனுக்கள் உண்டாகும். நீரில் எங்கும் பறவி நின்ற குழிழியின் உடலில் உள்ள ஜீவ அனு உடலில் கலந்துவிடும்.
 23. நுண்ணுடலில் மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐம்பொறிகளும் அவற்றுடன் தொடர்புடைய மனம், புத்தி, அகங்காரம் என்?ற மூன்று அந்தகாரணங்களும் உண்டாகி அவற்றுடன் விருப்பு வெறுப்பிற்கு எற்றவாறு உண்டாகும் உடலை முதலில் நெற்றிக்கண்ணுடைய சிவனே சேர்த்து பின் பிரித்து அவிழ்த்து விடுவான்.
 24. சிவனின் திருப்பெயரான பிரணவத்தை கலந்து உடலில் நாதம் விளங்கும்படி செய்து பசுத்தன்மை பாசத்தனமை இரண்டும் நீங்கிடச் செய்வான். நான்கு இதழ் மூலாதாரச் சக்கரத்தின் பரப்பு முழுமையும் மண் முதலான தத்துவங்களிலிருந்து தொடங்கும் நியதியை வைத்திருக்கின்றான்.
 25. சக்தி இலாமல் சிவம் இல்லை. சிவம் இல்லாமல் சக்தி இல்லை. சிறப்பான உயிருக்கு உடலைத் தரும்போது இரு செவிலித் தாயார் தன்மேல் வைக்கும் அன்பை தந்தருளினான்.
 26. அவரவர் வினைக்கு ஏற்ப அமைத்து செய்யப்பட்ட உடலின் பிறவியில் நல்ல சக்தியும் சக்திக்கேற்ற முறையில் இருளைப் போக்கும் பேரொளியாய் இறைவனும் எல்லா வகையான உணர்வுமயமான பல உயிர்களுக்கும் வகை செய்யும் விதமாக அவைகளின் உயிர்க்கு உயிராய் நிற்கும் சிறந்த பொருளே சிவன்.
 27. பெருமைகண்டு வளர்கின்ற ஒளியான உயிரை ஆண் என்றோ பெண் என்றோ அலி என்றோ நினைப்பது கற்பனையாகும். அது தாய் தந்தையின் தன்மை கொண்டு விளங்கும். அந்த உய்ருக்கு ஏற்ற உடலைப் படைப்பது சிவனின் வல்லமை.
 28. ஆண் பண்பு மிகுந்திருந்தால் ஆண் ஆகும் பெண் பண்பு மிகுந்திருந்தால் பெண் ஆகும். ஆண் பெண் பன்பு இரண்டும் சமமானால் அவ்வுயிர் அலியாகும். முயற்சியில் கருத்து மிகுதியாய் இருந்தால் பிறக்கும் உயிர் சிறப்பானதாய் இருக்கும். தரணியை ஆளும். தாழ்ச்சி மனப்பான்மை கொண்டால் சுக்கிலம் பாய்வது நின்று விடும்.
 29. ஆணின் சுக்கிலம் ஆணிடமிருந்து பிரிந்து ஐந்து விரற்கடை ஓடி விழுமாயின் பிறக்கும் உயிரின் வாழ்வு நூறு ஆண்டுகள் ஆகும். அது நான்கு விரற்கடை ஓடி விழுந்தால் அந்த உயிரின் வாழ்வு எண்பது ஆண்டுகள் ஆகும். சுக்கிலத்த்ச் செலுத்தும் வாயுவை நன்றாய் உணர்ந்து பாய்ந்திடச் செய்யும் ஆற்றல் யோகிக்கு உண்டு.
 30. சுக்கிலத்தைச் செலுத்திய வாயு குறைந்தால் குழந்தை குட்டையாய் பிறக்கும். பாயும் வாயு மெலிந்திடின் குழந்தை முடமாகும். வாயு தடைப்பட்டால் கூனுடன் பிறக்கும். ஆராய்ந்தால் பாய்கின்ற வாயு பெண்களுக்கு இல்லை.
 31. மாதர் வயிற்றில் கருவாக அமைந்த குழந்தைக்கு தாயின் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் அக்குழந்தை மந்த புத்தியுடைதாய் விளங்கும். வயிற்றில் நீர் மிகுந்தால் அக்குழந்தை ஊமையாய்விடும்.. மலமும் நீரும் மிகுமானால் குழந்தை குருடாகிவிடும்.
 32. இன்ப நுகர்ச்சியில் ஆண்மகனிடம் உயிர்ப்பு வலது நாசியில் (சூரிய கலை) இருந்தால் ஆண் குழந்தையாகும். சந்திரக்கலை (இடதுநாசியில் உயிர்ப்பு விளங்கினால் அது பெண் குழந்தையாகும். பிராண வாயுவுடன் அபானன் என்ற மலக்காற்று எதிர்த்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும். சூரியகலை சந்திரக்கலை இரண்டும் ஒத்து இயங்கினால் குழந்தை அலியாகும்.
 33. ஆண் பெண் இருக்கும் உயிர்ப்பு ஒத்து இருந்தால் குழந்தை அழகாக இருக்கும். இருவருக்கும் உயிர்ப்பு தடுமாறினால் கரு உண்டாக வாய்ப்பே இல்லை.
 34. பெண் வயிற்றில் உருவான் குழந்தை அண்ணாக்கிலே விளங்கும் பேரொளி போன்றது. குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்து வளர்ந்து சூரியனின் பொன் வடிவைப் போன்று வளர்ந்து முழு வடிவைப் பெறும்.
 35. கருவானது பத்து மாதம் கருப்பையில் வளரும். தக்க பருவத்தில் அக்குழந்தை உலகில் பிறந்து வளரும்.. மாயையான வளர்ப்புத் தாயிடம் பொருந்தி வளரும். அந்த உடலில் பொருந்திய உயிர் வடிவம் அற்றது என்பதை எவரும் அறியார்.
 36. கருவிற்கு காரணமான தந்தை அக்குழந்தை என்ன குழந்தை என்பதை அறிய மாட்டான். அக்கருவை ஏற்றுக் கொண்ட தாயும் அறியமாட்டாள். நான்முகன் என்ற தட்டானும் அறிந்தாலும் யாருக்கும் சொல்லமாட்டான். அதை அமைத்துக் கொடுக்கும் சிவனும் அங்கே உள்ளான். மயையின் தன்மைதான் இது.
 37. இன்பத்தை அணுபவிக்கும் ஆண் பெண்ணின் புனர்ச்சியில் துன்பம் பொருந்தும் பாசத்தில் தோன்றும் உயிர் துன்பத்தில் வளர்ந்து மேன்மை பெற விருப்பி எல்லாவற்றிற்கும் முன்பு தோன்றிய பழமைக்கும் பழமையான இறைவனை பொருந்த துதிக்க வேண்டும்.
 38. குயில் முட்டையை காக்கைக் கூண்டிலே வைத்தால் காக்கை ஐயம் இன்றி அதை வளர்க்கும். அது போன்று இயக்கமில்லாமலும் போக்கில்லாமலும் ஏன் என்ற கேள்வி கேட்காமலும் ஒரு மயக்கத்தால் தாய் உடலை வளர்க்கும் முறை இதுவேயாகும்.
 39. தாவரம் முதலில் கிழங்காயிருந்து முளைவிட்டு வளர்ந்து புதராய் மாறிபின் பழமாய் பயன் அளிக்கும். அது தாவரத்தின் இன்பமாய் அமைவது போல் எல்லாவற்றையும் படைத்துக் காத்து பயன் அளிப்பதே ஆதி இறைவனுக்கு இன்பம் தரும்.
 40. மற்றத் தேவர்களைவிட பெருமை உடையவனாக இருப்பினும் என் இறைவன் ஊன் உடலில் உள்ள குற்றங்களிலும் கலந்து நிற்கின்றான் அந்த இறைவனைத் தேவராலும் உணர முடியவில்லை. உயிர்கள் தங்கள் தவத்தினால்தான் உணரமுடியும்.
 41. மேன்மை பொருந்திய இறைவனிடம் ஒடுங்கிய உடல் மீண்டும் பருவத்திற்கு ஏற்ப பயனை அடைய வேண்டி கடலில் உப்பு திரண்டு உருக்கொள்வதைப் போல் இறைவன் அருளால் மீண்டும் தூல உடம்பு கருவில் உருவாகும்.

#

Scroll to Top