You cannot copy content of this page

உப்பு நீர் பரிகாரம்

உப்பு நீர் பரிகாரம்

கல் உப்பு பரிகாரம் (அ) உப்பு நீர் பரிகாரம் என்று கூறப்படும் உப்பு பரிகாரம்

உலகில் அனைத்திலும் நன்மை, தீமை கலந்தே இருக்கின்றன. நாம் எவ்வளவு தான் நல்லவர்களாக வாழ்ந்தாலும் சில தீமைகள் நம்மை பாதிக்கவே செய்கின்றன.

யாருமே தங்களை சுற்றியும், தாம் வசிக்கும் இடத்திலும் கெட்ட / எதிர்மறை சக்தி இருக்க விரும்ப மாட்டார்கள்.

கண்களால் காண முடியாத துர்சக்திகளை அழித்து, நமக்கு நன்மையை அளிக்கும் சக்தி நாம் உணவிற்கு பயன்படுத்தும் “உப்பு” பெற்றிருக்கிறது.

ஆன்மிகத்தில், உப்பின் மகத்துவம் அளப்பரியது. நீரிலே பிறந்து, நீரிலே கரையும் தன்மை கொண்டது உப்பு. இதுவே பரமாத்மாவின் தத்துவம் என்கிறது ஆன்மிகம்.

கடலில் இருந்துதான் உப்பு கிடைக்கிறது. கடலில் இருந்துதான் மகாலக்ஷ்மி தோன்றினாள். எனவே, உப்புக்குள், லக்ஷ்மி கடாக்ஷம் இருப்பதாகச் சொல்வர்.

உப்பை வைத்துக்கொண்டு, ஏராளமான பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

துர்சக்தியை விரட்டும் வல்லமையும் திருஷ்டியைப் போக்குகிற குணமும் உப்புக்கு உண்டு.

உப்பை பயன்படுத்தி கெட்ட சக்திகளை நீக்க முடியும் என கூறப்படுகிறது.

உப்பை கொண்டு நமக்கு செய்துகொள்ள கூடிய சில நன்மை அளிக்கும் பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.

சிவப்பு துணியில் உப்பு சேர்த்து கட்டி வைக்கவும். அதை வீட்டின் நுழைவாயில் பகுதியில் கட்டி தொங்கவிடவும்.இது வீட்டுக்குள் இருக்கும் கெட்ட சக்தி நீங்கவும், நல்ல அதிர்வுகள் நிறையவும் உதவும்.

சாப்பிடும் டேபிளில், சாப்பிடும் இடத்தில் உப்பு வைப்பது செல்வசெழிப்பு அதிகரிக்க உதவும்.

குளிக்கும் டப்பில் ஒரு கைப்பிடிகடல் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் குளிப்பதால், நீங்களே கெட்ட சக்திகள் நீங்குவதை உணர முடியுமாம்.

இது என்ன வேடிக்கை?! உப்பு எப்படி வேலை செய்யும்?

“இது ஒண்ணும் புதிதில்லை. காலம் காலமா நம் மக்கள் மத்தியில் புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான். மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம் மக்கள் கையில உப்பு வச்சு சுத்துவார்கள். சில கோயில்கள்ல உப்பு வாங்கிக் கொட்டுவான்கள். ‘பாவத்தைப் போக்கிகுறோம்’னு சொல்லி கடலில் குளிக்கிறது, கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது, கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, இப்படி உப்பு நீர் சம்மந்தப்பட்ட ஏராளமான சடங்குகள் உண்டு.

நெகட்டிவ் எனர்ஜி, பாசிட்டிவ் எனர்ஜி… இது ரெண்டும்தான் மனிதனோட குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது.

உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேத்துற சக்தி கொண்ட ஒரு பொருள். கைக்குள்ள உப்பை வச்சுக்கிட்டு பாசிட்டிவ்வா நினைத்தாலோ, பேசினாலோ உடம்புக்குள்ள இருக்கிற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிடும்.

இது மாயமோ, மந்திரமோ இல்லை. உடம்பில் நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்போது, அதுவே வைபரேஷனா வெளியில வந்து எதிராளியோட அணுகுமுறையையும் பாசிட்டிவ்வா மாற்றும். ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லும்போது நாம் அதுவாவே மாறிடுவோம்.

உப்பு பரிகாரம்

ஒரு சிறு கிண்ணத்தில்  சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை போட்டு நிரப்பி, உங்கள் வீட்டு குளியலறையில் ஒரு நீர் படாத மூலையில் வைத்து விடவும். இந்த உப்பை நீங்கள் மாற்ற தவறக் கூடாது.

உப்பு கரைய, கரைய மீண்டும் சீரான இடைவேளையில்  உப்பை நிறைத்து கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தி குறைந்து, துன்பம் நீங்க உதவுமாம்.

கழிவறை, குளியலறை சேர்த்து கட்டப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள், அந்த அறையின் குளிக்கும் இடம் பகுதியில் தண்ணீர் படாத இடத்தில் இந்த உப்பு கிண்ணத்தை வைக்க வேண்டும்.

வாரத்தில் ஒரு நாள் வீடுகளை கழுவி சுத்தப்படுத்தும் போது, தண்ணீரில் சிறிது கல்லுப்பை சேர்த்து கரைத்து வீட்டை சுத்தப்படுத்தி வந்தால்(
இந்த பரிகாரத்தை ஞாயிறுகளில் செய்யக் கூடாது)
வீட்டில் நிறைந்திருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி வீட்டில் நன்மைகள் பெருக தொடங்கும்.

உங்கள் பணம் வைக்கும் பர்ஸ், பண பை போன்றவற்றில் சில கல்லுப்பு தூள்களை போட்டு வைப்பதால் செல்வத்தை அதிகம் ஈர்க்கும்.

ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகையளவு உப்பு சேர்த்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்க. இது வீட்டில் இருந்து துன்பம்  விலக செய்யுமாம்.

இந்த பரிகாரம்  செய்யும் போது எப்போதெல்லாம் நீரின் வண்ணம் மாறுகிறதோ, அப்போதெல்லாம் நீங்கள் நீரை மாற்றி உப்பு சேர்த்து வைக்க வேண்டுமாம்.

கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள், மனவருத்தங்கள் ஏற்பட்டிருக்கும் போது, ஒரு கிண்ணத்தில் கல்லுப்பை நிறைத்து, தம்பதிகள் உறங்கும் படுக்கை அறையின் ஒரு ஓரத்தில் வைப்பதால் கணவன் மனைவிக்கிடையே இருக்கும் பிரச்சனை கூடிய விரைவில் தீர்ந்து ஒற்றுமையாக வாழ்வார்கள்.

நீங்கள் பயன்படுத்தும் வாகனங்களை கழுவும் போது, தண்ணீரில் சிறிது கல்லுப்பை போட்டு கரைத்து, அந்நீரைக் கொண்டு உங்களின் வானங்களை சுத்தப்படுத்துதினால், அதில் நிறைந்திருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கும். அடிக்கடி வாகனங்கள் பழுதடைவது குறையும்.

எதிர்பாரா விபத்துகள் ஏற்படாமல் காக்கும். வாரம் ஒருமுறையாவது குளிக்கும் நீரில் கல்லுப்பை போட்டு கரைத்து குளித்து வந்தால் உங்கள் உடல் மற்றும் மனதில் நிறைந்திருக்கும் எதிர்மறை அதிர்வுகள் நீங்கும்.

நன்றாகக் குளித்துவிட்டு, ஒரு தம்ளரில் நீர் எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தண்ணீரில் ஒரு சிட்டிகை அளவு கல் உப்பைப் போடுங்கள். பூஜை அறையில் வைத்து நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள்.

பிறகு, வீட்டில் உள்ள தென்மேற்கு மூலையில், வைத்துவிடுங்கள். மறுநாள் குளித்து, விளக்கேற்றிவிட்டு, அந்த தம்ளர் உப்பு நீரை, பாத்ரூம் வாஷ்பேஷின் தண்ணீரைத் திறந்து, இதையும் கொட்டிவிடுங்கள். அதாவது ஓடுகிற தண்ணீரில் இதையும் கலந்துவிடுங்கள். அடுத்து, தம்ளரில் புதிய தண்ணீர், ஒரு சிட்டிகை அளவு உப்பு என இப்படியாக தினமும் மாற்றி மாற்றி, தென்மேற்கு மூலையில் வைத்துக்கொண்டே வாருங்கள்.

இதுவரை உங்கள் வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் தலைதெறிக்க ஓடிவிடும். கடன்கள் நிவர்த்தியாகும். மனதில் சந்தோஷமும் நிம்மதியும் குடிகொள்ளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


கண் திருஷ்டி, தீய சக்திகளின் பாதிப்புக்கள் மனஅழுத்தம், தெளிவற்ற சிந்தனை அல்லது உடலுறுப்பு கோளாறு போன்ற பிரச்சினைகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், போதை பழக்கம், நிதி பிரச்சனைகள் அல்லது நெஞ்சுவலி போன்ற சிரமங்களுக்கும் முறையே வழிவகுக்கும்.

உப்பு நீர் நிவாரணம் என்பது, நமது உடலில் உள்ள கண்ணுக்குத் தெரியாத, தீய சக்தியை எதிர்த்து அதனை வெளியேற்றும் ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்த ஆன்மீக நிவாரணமாகும்.

தினசரி இந்த உப்பு நீர் நிவாரணத்தை செய்வதன் மூலம், இந்த தீய சக்தியை நமது உடலில் இருந்து அகற்றலாம்

தீயசக்திகள் நம் நமக்குள் எதிர்மறை எண்ணங்களைக் கொடுக்கின்றன. நமக்குள் இருக்கிற நேர்மறை சிந்தனைகளை மழுங்கடிக்கும் வல்லமை தீயசக்திகளுக்கு உண்டு. இவற்றையெல்லாம் போக்கும் சக்தி ஒரு துளி உப்புக்கு உண்டு என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

குறிப்பாக, கீழ்க்கண்ட சில அறிகுறிகளை நாம் உணரும் போது இந்த உப்பு நீர் நிவாரணத்தை செய்ய வேண்டும்:

சோம்பல்
எதையும் குறித்த நேரத்தில் செய்ய இயலாமை
சிந்திக்க இயலாமை
அதிகப்படியான எண்ணங்கள், குறிப்பாக எதிர்மறையான தன்மை உடையவை
கோபம் அல்லது வேறு தீவிரமான உணர்ச்சி
மன அழுத்தம்
எந்தவொரு உடல்ரீதியான வியாதி
மேலே குறிப்பிட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நாம் உணரும்போது, உடல்ரீதியாகவோ, உணர்வுரீதியாகவோ அல்லது ஆன்மீக ரீதியாகவோ பலவீனமாக உள்ளோம்.

இந்த உப்பு நீர் நிவாரணத்தை தினமும் 2-3 முறை, 2-3 மணி நேர இடைவேளைகளில் செய்வது சிறந்த பயனை தரும்.

ஒரு பெரிய அளவு வாளி
நமது கணுக்கால்கள் மூழ்குவதற்கு தேவையான அளவு நீர் வாளியில் நிரப்பப்பட (50% வரை) வேண்டும்.
கல் உப்பு

கல் உப்பு கிடைக்கவில்லையெனில் கடலுப்பு படிகங்கள்/மேசை உப்பு பயன்படுத்தலாம். எனினும் இதனால், நிவாரணத்தின் அளவு கல் உப்பை பயன்படுத்தும் போது கிடைக்கும் நிவாரணத்தின் அளவில் 30% -ஆக குறைந்து விடுகிறது.

கணுக்கால் மூழ்கும் அளவிற்கு வாளியில் (50% வரை) நீர் நிரப்பவும். இரண்டு மேசைக்கரண்டி கல் உப்பு அதில் சேர்க்கவும்.

உங்களிடம் உள்ள கருப்பு சக்தியை வெளியேற்ற, கடவுளிடம் ஆழ்ந்த நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்யவும்.

இந்த நிவாரணத்தின் திறனை மேம்படச் செய்வதில் பிரார்த்தனை ஒரு முக்கியமான காரணியாகும்.

நிவாரணம்:

கால்கள் உப்பு நீரில் மூழ்குமாறு நிமிர்ந்து உட்காரவும். இரண்டு பாதங்களுக்கும் இடையில் 2-3 செ.மீ இடைவேளையாவது இருக்க வேண்டும்.

இது தீய சக்தி அதிக அளவில் வெளியேறுவதற்கு உதவுகிறது. பாதங்கள் ஒன்றுக்கொன்று தொடுவதால், தீய சக்தி பாதங்களின் வழியே வெளியேறுவதில் தடங்கல் ஏற்படுகின்றது.

உப்பு நீரில் பாதங்களை 10-15 நிமிடங்கள் வரை வைக்கவும்.

பாதங்கள் மூழ்கியிருக்கும்போது, உங்களின் மதத்தின் படி கடவுளின்  நாமத்தை ஜபம் செய்யவும்.

முடிவில்:

நிவாரணம் முடிந்த பிறகு,  கடவுளுக்கு நன்றி செலுத்தவும் மற்றும் உங்களை சுற்றி பாதுகாப்பு வளையத்தை உருவாக்கக் கோரி பிரார்த்தனை செய்யவும்.

பிறகு, வாளியில் உள்ள நீரை கழிப்பறையில் ஊற்றிவிட்டு, சுத்தமான நீரைக்கொண்டு வாளியைக் கழுவவும்.

உங்களின் மதத்தின் படி கடவுளின் நாமத்தை 2-3 நிமிடங்கள் ஜபம் செய்யவும்.
நாமஜபம் மற்றும் பிரார்த்தனை, ஆவிகள் மூலம் நமது உடலில் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்ட தீய சக்தியை சிதைவடைய செய்து அவற்றை வெளியேற்றுகிறது.
உப்பு நீருக்கே (கல் உப்பு கரைந்த நீர்) தீய சக்தியை உறிஞ்சி வெளியேற்றும் தன்மை உள்ளது.

தீய சக்தி வெளியேறும்போது, கொட்டாவி விடுதல், ஏப்பம் விடுதல், கால்கள் மறத்துபோதல், கண்கள் மற்றும் காதுகளில் வெப்பத்தன்மையை  உணர்தல் போன்ற சில அறிகுறிகளுடன் வெளியேறலாம்.

உப்பு மந்திரம்

நல்வாழ்க்கை வாழ்வதற்கு, தீயசக்திகள் அனைத்தும் விலகி ஓடுவதற்கு கல் உப்புப் பிரார்த்தனையைச் செய்யச் சொல்லி வலியுறுத்துகின்றனர், ஆச்சார்யர்கள்.

இரண்டு கைகளில் உப்பை வைத்து கொண்டு கைகளை முடி கிழே உள்ள மந்திரத்தை 10 தடவை சொல்லவும்

நான் ஆரோக்கியமாக இருக்கின்றேன்

நான் ஆனந்தமாக இருக்கின்றேன்

நான் செல்வந்தனாக இருக்கின்றேன்

நான் அன்பானவனாக இருக்கின்றேன்

நான் சாதனையாளனாக இருக்கின்றேன்

என்னால் எனதயும் சாதிக்க முடியும்
என்னால் எனதயும் சாதிக்க முடியும்
என்னால் எனதயும் சாதிக்க முடியும்

வெற்றி நிச்சயம். வெற்றி நிச்சயம். வெற்றி நிச்சயம்.

எங்கும் நிறைந்த பிரபஞ்சமே எனது தேவைகளை அன்புடன் பூா்த்தி செய்வீா்களாக

இந்த செயல்கள் மூலமாக எனது அனனத்து குறைபாடுகளும் காணாமல் போகுமாக.
எனது ஆரோக்கியமும் அன்பும் ஆனந்தாமும் பெருகி கொண்டே இருக்கிறது

எனது ஆரோக்கியமும் அன்பும் ஆனந்தாமும் பெருகி கொண்டே இருக்கிறது

எனது ஆரோக்கியமும் அன்பும் ஆனந்தாமும் பெருகி கொண்டே இருக்கிறது

ஆனந்தம்! ஆனந்தம்! ஆனந்தம்! பேரானந்தம்! பரமானந்தம்!

பிறக அந்த உப்பை ஆற்றிலோ, கடலிலோ கரைத்து விடவும்.

Scroll to Top