You cannot copy content of this page

மூன்று குணங்கள்!

மூன்று குணங்கள்!

மனிதனுக்கு மனிதன் குணம் மாறுபடும். இவை அனைத்தும் சாத்வீகம், ரஜோ, தாமச குணங்கள் என்ற மூன்று வகைக்குள் அடங்கிவிடும்.

முக்குண இயல்புகள்

சத்துவ குணவியல்பு தேவ குணம்:

அன்பு, அமைதி, அறநெறி, நன்மைகளையே நோக்கும் தன்மை, நெறி பிறழாமை , தனக்கென வாழாமை , உயரிய நோக்கம், உள்ளத்தூய்மை, நல்லோர் சேர்க்கை, பொது நிலையாமை தத்துவம் பற்றி உணர்ந்து உலகபந்தங்களில் ஒட்டாது விலகியே நிற்றல், பற்று, பயம், கவலை, எதிர்பார்த்தல் எதுவும் அற்ற நிலை, போன்ற உயர் குணங்கள் .

அவல், பொரி, அப்பம், பழம், பால், தேன் போன்ற உணவுகள் சத்துவ குணத்தை வளர்க்கின்றன. சாந்தம், அன்பு, அடக்கம், பொறுமை, கருணை போன்றவை சத்துவ குணத்தால் வருகின்றன

தமோ குணவியல்பு

(மிருக குணம் )

காமம், வெகுளி, மயக்கம், இச்சை, உலக பொருட்களிலும் சுகங்களிலும் தணியாத ஆசை கொண்டவர்கள். தன்னலம் ,பெருமை,

பிறர் குற்றம் பேசல், யாவையும் தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் இறங்குபவர்கள் , தர்மம், நியாயம் , நீதி, உண்மை மற்றும் நல்லறங்களை நடத்தாது . இவையனைத்திற்கும் புறம்பாக எதிராகச் செயல்படுவார்கள்.

பழையது, புண்ணக்கு, மாமிசம் போன்ற உணவுகள் தாமத குணத்தை வளர்க்கின்றன. தூக்கம், சோம்பல், மயக்கம் போன்றவை தாமத குணத்தால் வருகின்றன

ரஜோ குணவியல்பு :


ஆளுமைத் தன்மை, அடக்குதல், அடங்காமை, மேலாண்மை,சுகபோகம்நாடல், இரக்கமில்லா அரக்க குணம், தோல்விபயம், எளிமை விரும்பாமை, எளியோரை மதியாமை, படாடோப வாழ்க்கை , வஞ்சகம், நெஞ்சிலொன்றும் வாக்கிலொன்றுமாய் உரைப்பவர்கள், மிக உற்றவர்களிடம் கூட உண்மை உரைக்காதவர்கள். தற்புகழ்ச்சி விரும்பிகள், பிறர் தலைமை விரும்பாதவர்கள்.


காரம், புளி, ஈருள்ளி வெங்காயம், முள்ளங்கி போன்ற உணவுகள் ராஜஸ குணத்தை வளர்க்கின்றன. கோபம், டம்பம், வீண் பெருமை, அகங்காரம் போன்றவை இந்த ராஜஸ குணத்தால் வருகின்றன
முக்குணங்களும் அதன் இயல்புகளும் அதற்கேற்ற செயல்பாடுகளும் அனைத்து மனித ஜீவிகளிடம் கலந்தே காணப்படுகின்றன.

சத்துவ , ரஜோ, தமோ, இம்மூன்றின் கலப்பின் விகிதத்தின் (விழுக்காடு) பொறுத்தே அவர்களுடைய குணாதிசயங்கள் அவர்களிடம் பதியப் பெறுகின்றன.

சாத்வீக குணம் மனிதனுக்கு ஞானஒளியையும், நன்மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கிறது.

ரஜோ குணம் ஆசை, பற்று முதலிய குணங்களை அளித்து, கர்மங்களில் ஈடுபடத் தூண்டுகிறது.

தாமசகுணம் மயக்கம், சோம்பல், உறக்கம் முதலியவற்றை ஏற்படச் செய்கிறது.

இம்மூன்று குணங்களும் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொன்று அதிகமாக இருக்கும், அவற்றிற்கேற்ப மனிதன் செயல்படுவான்.

மனிதன் சோம்பலாக இருப்பதைவிட ஏதாவது வேலையில் ஈடுபடுவது நல்லது. எனவே, சோம்பலைக் கொடுக்கும் தாமச குணத்தை அகற்றி, வேலையில் ஈடுபடும் ரஜோ குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இதன்பின் அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துகின்ற சத்துவ குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த மூன்று குணங்களின் தன்மைகளைச் சரியாகப் புரிந்துகொண்டுவிட்டால், ஒருவன் இந்தப் பிறவிப் பெருங்கடலை மகிழ்ச்சியாகத் தாண்டிவிட முடியும்.

‘த்ரிகுணங்கள்’ என்ற வார்த்தையில், ‘த்ரி’ என்பது மூன்றையும் ‘குணங்கள்’ என்பது சூட்சும கூறுகளையும் குறிக்கின்றன.அவை, ஸத்வ, ரஜ, தம என்னும் மூன்று சூட்சும கூறுகள் (த்ரிகுணங்கள்) ஆகும்.

இந்த மூன்று சூட்சும கூறுகளின் பண்புகளை பற்றி கீழே காண்போம்.

சத்வ
தூய்மை மற்றும் ஞானம் சாத்வீக சாத்வீக மனிதன். புகழ், வெகுமானம் அல்லது வேறு நோக்கம் என்று எந்த எதிர்பார்ப்புமின்றி சமூக நலனுக்காக வாழ்பவர்

ரஜ
செயல்பாடு மற்றும் ஆசை. ராஜஸீக மனிதன். சுய லாபத்திற்காகவும் லட்சியத்திற்காகவும் வாழ்பவன்.

தம
அறியாமை மற்றும் சோம்பல்

தாமசீக
தாமசீக மனிதன் மற்றவர்களை மிதித்து மேலே செல்ல தயங்காதவன், சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பவன்

இந்த மூன்று சூட்சும கூறுகளை சூட்சும ஐம்புலன்களால் அல்லது ஆறாவது அறிவால் மட்டுமே உணர முடியும்.

இந்த மூன்று சூட்சும கூறுகளிலும் ஸத்வ குணம் அதிகபட்ச சூட்சும தன்மை வாய்ந்தது; தெய்வீகமானது. எவரிடத்தில் இந்த குணம் அதிகமாக உள்ளதோ அவரிடம் பொறுமை, விடாமுயற்சி, மன்னிக்கும் தன்மை, போதும் என்ற மனம், மகிழ்ச்சி, ஆன்மீகத்தில் பற்றுதல் போன்றவை அதிகமாக இருக்கும்.

இந்த மூன்று சூட்சும கூறுகளிலும் தமோ குணம் மிக கீழ்த்தரமானது. எவரிடத்தில் இந்த குணம் அதிகமாக உள்ளதோ, அவரிடம் சோம்பேறித்தனம், உலக விஷயத்தில் பற்றுதல், பேராசை போன்றவை அதிகமாக இருக்கும்.

ரஜோ குணம் மற்ற இரண்டு குணங்களை செயல்கள் செய்ய தூண்டுகிறது.

ஸத்வ குணம் உள்ளவரிடத்தில் சாத்வீக செயல்களையும், தமோ குணம் உள்ளவரிடத்தில் தாமசீக செயல்களையும் செய்ய தூண்டுகிறது.

இந்த மூன்று கூறுகளில் எது நம்மிடம் அதிகமாக உள்ளதோ அதற்கேற்றபடி நம் மீது பாதிப்பு இவ்வாறு ஏற்படும்.

நிறம்: ஆறாவது அறிவைக் கொண்டு நோக்கும்போது, ஸத்வ கூறு மஞ்சள் நிறத்திலும், ரஜ கூறு சிகப்பு நிறத்திலும், தம கூறு கருப்பு நிறத்திலும் தெரிகிறது.

அலைகளின் அளவு: அதிக செயல்பாட்டிலுள்ள ரஜ கூறு குறுகிய அலைகளாகவும், அமைதியான ஸத்வ கூறு நீண்ட அலைகளாகவும், ஒழுங்கற்ற, சிதைந்துவிடும் தன்மையுள்ள தம கூறு ஒழுங்கற்ற அலைகளாகவும் தெரிகிறது.

இந்த ஐந்து அண்டங்களின் (பஞ்சமகாபூதங்கள்) தத்துவங்களும் மூன்று சூட்சும கூறுகளால் ஆக்கப்பட்டவை. பஞ்சமகாபூதங்கள் என்பவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.

இந்த தத்துவங்கள் உருவமற்றவை; நாம் கண்ணால் பார்க்கும், உணரும் பஞ்சபூதங்களின் அதி சூட்சும கூறுகளே இவை.

உதாரணத்திற்கு நீர் தத்துவம் என்பது நீரின் சூட்சும தன்மை கொண்டது. அதன் மூலமே ஆறு, கடல் போன்றவை உருவாகின்றன. சுருக்கமாக இந்த பிரபஞ்சம் இந்த பஞ்சமகாபூதங்களால் ஆனது. மேலும் இந்த பிரபஞ்சம் மூன்று சூட்சும அடிப்படை கூறுகளாலும் ஆக்கப்பட்டது.

நிலம் அதிக தம தன்மை உடையது; அதனால் அதிக கனமானதும் கூட. தம குணத்தின் தன்மை, இருப்பை கட்டுப்படுத்துகிறது. ஆனால் ஸத்வ குணம், இருப்பை பரவச் செய்கிறது.

அதேபோல் ஆகாயம் மிக சூட்சுமமானது, சாத்விகமானது அதனால் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதும் விளங்குகிறது.

பஞ்சபூதங்களில் தம குணம் குறைய குறைய அதன் ஸ்தூலத்தன்மை குறைகிறது. உதாரணதிற்கு நெருப்பு பூமியை விட குறைந்த ஸ்தூலத்தன்மை கொண்டது.

மனிதர்கள் பெரும்பாலும் நிலம் மற்றும் நீர் தத்துவத்தை கொண்டவர்கள். ஆன்மீக வளர்ச்சி அடையும்போது மனிதன் நெருப்பு தத்துவ நிலையில் செயல்பட ஆரம்பிக்கிறான்.

இதை நாம் அவர்களிடம் தோன்றும் பிரகாசத்திலிருந்து அறியலாம்.

இயற்கை அழிவுகள்.
ரஜ, தம குணங்கள் அதிகரிக்கும் போது யுத்தம், இயற்கை அழிவுகள், பயங்கரவாத செயல்கள் அதிகரிக்கின்றன. அவை பஞ்சபூதங்களின் உறுதியை குலைத்து இயற்கை அழிவுகளை ஏற்படுத்துகின்றன.

ரஜ குணம் நம் உடலின் செயல்பாட்டை சார்ந்தது. ஸத்வ குணமும் தம குணமும் தொடர்ந்து நீடித்த மகிழ்ச்சியை நம் உடல் நமக்கு அளிப்பதன் மேல் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

உதாரணத்திற்கு ஸத்வ குணகூறு, நமது உடலை விட புத்தியில் அதிகமாக உள்ளது. அதனால் புத்தியினால் ஏற்படும் மகிழ்ச்சி உடலால் ஏற்படும் மகிழ்ச்சியை விட உன்னதமானது, நீடித்திருப்பது.

ஒருவரிடமுள்ள சத்வ, ரஜ, தம கூறுகளைப் பொருத்து ஒருவரின் ஆன்மீக நிலை அமைகிறது எனக் கூறலாம். இன்னொரு விதத்தில் ஒருவரிடம் பிரதானமாக உள்ள சத்வ, ரஜ அல்லது தம கூறே அவரின் ஆன்மீக நிலையை நிர்ணயிக்கிறது எனலாம்.

நாம் ஆன்மீகப் பயிற்சி செய்து வரும்போது நம்மிடமுள்ள சாத்வீக தன்மையை அதிகரிக்கும் முயற்சியும் நடக்கிறது. அதாவது நம்மிடமுள்ள தம தன்மையை சத்வ தன்மையாக மாற்ற முயல்கிறோம்.

நம்மிடமுள்ள சத்வ தன்மையை அதிகரிக்கும்போது (மற்ற இரு கூறுகளோடு ஒப்பிடும்போது), அது நம்முடைய ஆன்மீக நிலை மற்றும் ஆளுமையின் மேல் நல்ல தாக்கத்தை உண்டாக்குகிறது.

ஆன்மீக நிலை அதிகரிக்கும்போது மூன்று சூட்சும கூறுகளின் தாக்கமும் குறைகின்றன.

நம்முள் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்போது நுணுக்கமாக என்ன நடக்கிறதென்றால் இருளான நம் ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி குறைந்து நம்முள் அந்தர்யாமியாய் உள்ள ஆத்மா ஒளிர்விட துவங்குகிறது.

இதையே ஐம்புலன்கள், மனம் புத்தி அடங்கி விட்டது என்கிறோம்.

நம்முள்ளே ஆத்மாவாக நிறைந்திருக்கும் பரம்பொருள், மூன்று சூட்சும அடிப்படை கூறுகளுக்கு அப்பாற்பட்டதால் ஆத்மாவும் இம்மூன்றால் ஆக்கப்பட்டது அல்ல.

அதனால் எந்த அளவிற்கு நம் ஆத்ம ஜோதியை நம்முள்ளே ஒளிர் விட செய்கிறோமோ அந்த அளவு இம்மூன்று சூட்சும கூறுகளும் நம் ஆளுமையை, விருப்பு வெறுப்புகளை, செயல்களை நிர்ணயிக்காது.

ஆன்மீக முன்னேற்றத்தின் இறுதிக் கட்டத்தில் ஆத்ம ஜோதி நம்மை நிறைக்கும்போது இறை சித்தத்தோடு ஒன்றிய வாழ்க்கையை நாம் வாழ ஆரம்பிக்கிறோம்; மூன்று சூட்சும கூறுகளும் கரைந்து போய் எந்தவித தாக்கத்தையும் நம்மீது ஏற்படுத்துவதில்லை.

ஒருவரின் விழிப்படைந்த ஆறாவது அறிவால் மட்டுமே மற்றொருவரின் பிரதானமான சூட்சும தன்மையை பற்றி சரியாக கணிக்க முடியும்.

பெரும்பாலும் ஒருவர் சத்வ-ரஜ அல்லது ரஜ-சத்வ அல்லது ரஜ-தம தன்மை கொண்டவராயிருப்பர். ஒரு சத்வ-ரஜ மனிதரிடம் சாத்வீக, ராஜஸீக கூறுகள் இருந்தாலும் அதிக அளவு சாத்வீக தன்மையே இருக்கும். ரஜ-சத்வ மனிதர் விஷயத்தில் இது அப்படியே மாறுபடுகிறது.

ஒருவரிடம் உள்ள அதிகபட்ச தன்மையைப் பொருத்தே அவரின் ஆளுமையின் வெளிப்பாடு அமையும். இருந்தாலும் எப்படி எல்லாம் ஒருவர் விலையுயர்ந்த ஆடைகள், அணிகலங்களாலும் நாகரீகமான பேச்சாலும் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டாலும் அவரிடமிருந்து வெளிப்படும் அதிர்வலைகள் அவரின் அடிப்படை குணத்தை பொருத்தே அமையும்.

அதிநுட்ப ஆறாவது அறிவு உடைய ஒருவரால் மட்டுமே இந்த வெளிப்புற அடையாளங்களை தாண்டி ஒருவரின் சூட்சும அதிர்வலைகளை உணர முடியும். அதன் மூலம் ஒருவர் அடிப்படையில் சாத்வீகமானவரா, ராஜசீகமானவரா அல்லது தாமசீகமானவரா என்பதை அவரால் கூற இயலும்.

ஒருவர் தனித்திருக்கும்போதே அவரின் உண்மையான சூட்சும வெளிப்பாடு நிகழும். ஒருவர் தன்னிச்சையாக செயல்படும்போதே அவரின் உண்மை ஸ்வரூபம் தெரியும்.

நம்மிடமுள்ள சத்வ, ரஜ, தம தன்மைகளுக்கு ஏற்ப நாம் சத்வ, ரஜ அல்லது தம வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வோம். அதேபோல் நாம் தொடர்ச்சியாக வாழும் வாழ்க்கை முறையும் அதற்குரிய சூட்சும கூறுகளை அதிகரிக்க செய்கின்றன.

நம்மிடமுள்ள அதிகபட்ச சூட்சும அடிப்படை கூற்றுக்கு ஏற்ப நம்மிடமிருந்து சத்வ, ரஜ அல்லது தம அதிர்வலைகள் வெளிப்படுகின்றன.

சத்வ தன்மை அதிகம் கொண்டவர்களிடம் அதிக நல்ல குணங்கள் காணப்படுகின்றன. அதோடு அவர்களுக்கு, அலுவலக வாழ்வில், உறவுகளில், உலக வாழ்க்கையில் நீடித்த வெற்றி மற்றும் திருப்தி கிடைக்கின்றன.

நாம் கொண்டுள்ள சகவாசம், நம் ஆன்மீக பயிற்சியின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நம்மிடமுள்ள ரஜ-தம குணங்களை குறைத்து ஆன்மீக பயிற்சி செய்வதன் மூலம் நம்முடைய சாத்வீக தன்மையை அதிகரிக்க முடியும்.

Scroll to Top