You cannot copy content of this page

கண்ணதாசனின் பாடல்களில் தத்துவமும், காதலும்

கண்ணதாசனின் பாடல்களில் தத்துவமும், காதலும்

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா ஆகும். இவா் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊாில் செட்டியாா் மரபில் பிறந்தார்.

இவர் சாத்தப்பன் செட்டியார், விசாலாட்சி ஆச்சி ஆகியோருக்கு 8வது மகனாக பிறந்தார்.

இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர். சிறு வயதில் இவரை சிகப்பி ஆச்சி என்பவர் தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார்.

ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார்.

1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன்

கண்ணதாசன் ஆத்திகராக இருந்து நாத்திகராக மாறி ஆத்திகராக மறைந்த கவியரசர்.

இலக்கியம், அரசியல், ஆன்மீகம், திரைப்படம் என்று எல்லாத் துறைகளிலும் முத்திரை பதித்தவர்.

தத்துவக் கருத்துக்களையும் நல்ல தமிழ் சொற்களையும் படிக்காத பாமரர்களிடமும் சென்று சேர்ந்தார்.

அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.

மறைவு

உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார்.

1981, அக்டோபர் 20ல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22ல் எரியூட்டப்பட்டது.

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக திகழ்ந்தவர். எளிமையும், இனிமையும், ஈர்ப்பும் மிக்க தித்திக்கும் கவிதைகளைத் திரையிசைப் பாடல்களாகத் தந்து திரையிசைப் பாடல்களுக்கு ஓர் தகுதியைத் தந்தவர்.

பலே பாண்டியா திரைப்படத்தில் வரும் ‘அத்திக்காய் காய்’ பாடலை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.

கண்ணதாசன் கவிதைப் பித்தேறி நின்ற தம் வாலிபப் பருவத்தில் அநாயசமாக எழுதிய பாடல் இது.

காய் என்னும் சொல்லைத் தாவர விளைவான காய் என்னும் பெயர்ச்சொல்லிலும் – காய் என்னும் வினைச்சொல்லிலும் (வெம்மையுற வீசு, கோபம் கொள், கடிந்து பேசு) ஆய் என்னும் வேற்றுமை உருபாகவும் பன்பொருள்படப் பயன்படுத்திக் கவிஞர் ஆடிய மொழியாட்டம் நம்மை இறுகப் பிணித்து இறும்பூது எய்தச் செய்கிறது.

அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே

அந்தத் திசையில் வெம்மையுற வீசு ஆலமரத்துக் காயைப் போன்று தூரத்தே இருந்து சிறிதாகத் தோன்றும் வெண்ணிலவே !

இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

இந்த்த் திசையில் வெம்மையுற வீசாதே… ஏனென்றால் என் உயிராக உன்னைக் கருதும் நான் நின்றுகொண்டிருக்கிறேன்.

கன்னிக்காய் ஆசைக்காய்
காதல்கொண்ட பாவைக்காய்

கன்னி எனக்காக… என்னுடைய ஆசைக்காக… காதல் கொண்டிருக்கும் பாவையாகிய எனக்காக….

அங்கே காய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்

அங்கே வெம்மையுற வீசு… அவர்மீது வெம்மையுற வீசு… மங்கையாகிய என்னுடைய அரசனை (கோவை) வெம்மையுற வை…!

மாதுளங்காய் ஆனாலும்
என்னுளம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே

பெண் அவ்வாறு கூறியதும் ஆண் சமாதானம் கூறுகிறான் :- மாதின் உள்ளம் என்னைக் காய் எனக் கட்டளையிடுவதன் மூலம் காய்போல் ஆனாலும் (மாது+உளம்+காய்) அவளை விரும்பியிருக்கும் என்னுள்ளம் காய் போலாகுமா என்ன ? அதனால் என்மீது வெம்மையுற வீசாதே வெண்ணிலா !

இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளைக்காய்

இரவுக்காகவும் அவ்வாறு இரவு வந்தால் ஏற்படும் உறவுக்காகவும் ஏங்குகின்ற இந்த ஏழைக்காக நீ வெம்மையுற வீசு. எந்நேரமும் வெம்மையுற வீசு. இதோ நேரில் என்னை அணைக்காமல் நிற்கிறாளே இவளைக் கடிந்துகொள் !

உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே

ஆண் அவ்வாறு சினந்து பேசுவதால் பெண் அவனுக்குத் தன் உள்ளக் கிடக்கையைக் குறிப்பால் உணர்த்துகிறாள் :- அட புரியாதவரே… நான் உருவத்தால் சின்னஞ்சிறியவளாய் இன்னும் பழுக்காதவளாய்த் தோன்றுகின்றேனேயன்றி பருவத்தால் எப்படிப்பட்டவள் தெரியுமா… காயைப் போன்றவள் இல்லை அன்பரே… பருவத்தால் நான் பழுத்துக் கனிந்தவள் அல்லவா ! அதனால், வெண்ணிலவே அவர் சொல்கிறார் என்று என்னைக் கடிந்து பேசாதே !

ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய்ப் பெட்டகம் போல்
தனிமை இன்பம் கனியக்காய்

ஏலக்காய் வாசனை எப்படித் தன் காலமுள்ளவரை மணம் பரப்பி நிற்குமோ அப்படி எங்கள் உள்ளத்தில் காதல் என்னும் நறுமணம் காலந்தோறும் மணந்து நிற்கட்டும் என்று நிலவே நீ வீசு…! ஜாதிக்காய்ப் பெட்டகத்தைப் போல இந்தத் தனிமை இன்பத்தால் நிறைந்து கனியும்படி காய்வாயாக !

சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

என்ன வெண்ணிலவே ! என் காதலி சொன்னதை விளங்கிக்கொண்டாயா ? இருவருக்கும் இடையே தூதாகவும் விளங்கி நிற்கும் வெண்ணிலவே !

உள்ளமெல்லாம் மிளகாயோ
ஒவ்வொரு தேன் சுரக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல
வெண்ணிலவே சிரிக்காயோ

உள்ளம் எல்லாம் இளக மாட்டாயோ ? உன்னிடமுள்ள ஒவ்வொரு தேன் துளியையும் சுரக்கமாட்டாயோ ? வெள்ளரிக்காய் பிளந்ததுபோல பற்கள் அனைத்தும் தெரிய சிரிக்க மாட்டாயோ ?

கோதையெனைக் காயாதே
கொற்றவரைக் காய் வெண்ணிலவே
இருவரையும் காயாதே
தனிமையிலே காய் வெண்ணிலா

கோதையென்னைக் காயாமல் என் மன்னவனைக் காய்வாய் வெண்ணிலவே ! சரி சரி ! எங்கள் இருவரையும் காயவேண்டாம் ! எங்கள் பாவிளையாடல் முடிந்துவிட்டது. இனி பருவவிளையாடல் ஆடப்போகிறோம். அதனால் இனி நீ தொலைவே போய் தனிமையில் வீசிக்கொண்டிரு வெண்ணிலவே !

இந்தப் பாடல் நல்கிய இன்பம். தமிழும் பொருளும் இசையும் மிடுக்காக நடந்து நடந்து தொட்ட உயரத்தை நாம் ஐம்பதாண்டுகள் கழித்தும் அண்ணாந்துதானே பார்க்கிறோம் !

காலமெல்லாம் கண்ணதாசன் :

* * *

`அத்திக்காய் காய் காய்’ பாடலில் தொடர்ந்து காய், காய் என்று வார்த்தைகளால் விளையாடியவர், `வான் நிலா நிலா அல்ல…’ என்று பாடல் முழுக்க நிலவொளியை சிதறவிட்டிருப்பார்.

அண்ணன், தங்கை, தம்பி, பெற்றோர், மனைவி என்று எல்லா உறவுகளின் தேவையையும், அதன் சிக்கல்களையும் பாடல்களில் கையாண்டவர் அவரளவுக்கு எவருமில்லை என்றே சொல்லலாம். அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட உறவு முறிவை `அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே… தாயும் பிள்ளையும் ஆன போதிலும் வாயும் வயிறும் வேறடா…’ என்று ஆழமாகவும்,`மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா…’ என்று மனித வாழ்வின் தத்துவத்தை இரண்டு இரண்டு வரிகளுக்குள் அவரைப்போல் பதியனிட்டவர் எவருமில்லை.
* * *

`உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்ற மகாகவி பாரதியின் இரண்டு வரிகளைப் பல்லவியில் பயன்படுத்திக்கொண்டு, அதனைத் தொடர்ந்து கவியரசர் செய்தது மிகப்பெரிய ரசவாத வித்தை. எல்லா உறவுகளையும் தாண்டி கணவன் மனைவிக்குள் உள்ள நெருக்கத்தை, அன்பை, முக்கியத்துவத்தை அவ்வளவு அழகாக சொல்லியிருப்பார். ஒரு தாம்பத்யம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இன்றளவும் எடுத்துக்காட்டு இந்தப்பாடல்தானே?

காலச் சுமைதாங்கி போலே மார்பில் எனைத் தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதுகள்போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்

என்று ஒவ்வொரு வார்த்தைகளிலும் அந்த உறவுக்குள் இருக்கும் நம்பிக்கையும் நேசமும் வெளிப்படும். சிவாஜிகணேசனும், பத்மினியும் தங்களுடைய அற்புதமான நடிப்பால் பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார்கள். பாடலின் இறுதிக்கட்டத்தில்… `என் தேவையை யாரறிவார்…’ என்று ஒரு சிறிய இடைவெளி வரும். பத்மினி இதுவரை வாழ்ந்த வாழ்க்கை அத்தனையும் அவ்வளவுதானா… என்பது போல் ஓர் ஏமாற்றப்பார்வையை வீசுவார்… அந்தப் பார்வையில் அவ்வளவு கேள்விகள் இருக்கும். `உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்’ என்று பாடலை நிறைவு செய்வார் கவியரசர். இந்த வரிக்குப் பொருத்தமாக வேறு எந்த வரியையும் நம்மால் கற்பனைகூட செய்துபார்க்கமுடியாது. சிவாஜி அந்தக் கடைசி வரியைப் பாடி முடித்ததும்… பத்மினியின் முகத்தில் தோன்றும் நிம்மதியும் பெருமிதமும் நிறைவும் நம்மையும் ஒட்டிக்கொள்ளும்.
* * *

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்…

என்ற `பாவமன்னிப்பு’ திரைப்படத்தில் வரும் பாடலில் காதலியைக் குறித்த வர்ணனையில் உச்சம் தொட்டவர். தன்னுடைய காதலியையோ / காதலனையோ தாண்டி சிறந்தது என்று வேறு எது இருக்கமுடியும். அவள் ஒவ்வொன்றிலும் எப்படி சிறப்பாக இருக்கிறாள் என்பதை எத்தனை நயமாகவும் இனிமையாகவும் எழுதியிருக்கிறார்.
* * *

வாழ்வின் கடினமான காலங்களைக் கடந்துவராத மனிதர்களே இருக்கமுடியாது. அப்போதெல்லாம் `நமக்குமட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம்’ என்று மனசு கிடந்து தவிக்கும். விரக்தியில் இதயம் விம்மும். அப்படி `சுமைதாங்கி’ படத்தில் ஜெமினிகணேசன் பாடுவதாக அமைந்த பாடல் இது. அவரைப் பார்த்து அவரது மனசாட்சி பாடும். நம்மைப் பார்த்து நம் மனசாட்சி கேள்விகேட்பதுபோல…

மயக்கமா கலக்கமா / மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா…
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்

துன்பங்கள் உனக்கு மட்டுமானதல்ல. இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இதற்கெல்லாம் கலங்கி நின்றுவிடக்கூடாது. ஏழை பணக்காரன் என்றெல்லாம் அது பார்ப்பதில்லை. அவரவர் நிலைக்குத் தகுந்தாற்போல் இன்பமும் துன்பமும் வரும். அப்படி வருகையில் கலங்கி நின்றுவிடக்கூடாது என்று அடுத்த வரிகளைத் தொடர்கிறார்.

வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை…
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

இதுவும் கடந்து போகும் என்றும், இன்னும் இன்னும் துன்பம் வரட்டும் தாங்குவேன் என்கிற நெஞ்சுறுதியும் இருந்தால் இறுதிவரைக்கும் அமைதி இருக்கும் என்கிறார். இதே கருத்தின் அடிப்படையில் `ஆட்டுவித்தால் யாரொருவர்’ பாடலில் இரண்டு வரிகளை சொல்லியிருப்பார். `நான் இருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்… என்றும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்…’ அதுதான் மிக உயர்ந்த நிலை.
* * *

மயக்கமா, கலக்கமா ..

மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?

வாழ்க்கை யென்றால் ஆயிரமிருக்கும்
வாசல் தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை!

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்! (மயக்)

ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக் களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு! (மயக்)

‘ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே’ – அப்பர் 6.95:3.

கொல்லை ஏற்றினர்
பதிக எண்: 5.33 சோற்றுத்துறை
பாடல் 5:

ஆட்டினாய் அடியேன் வினை ஆயின
ஓட்டினாய் ஒரு காதில் இலங்கு வெண்
தோட்டினாய் என்று சோற்றுத் துறையர்க்கே
நீட்டி நீ பணி செய் மட நெஞ்சமே

விளக்கம்:

நீள நினைந்து அடியேன் நித்தலும் கை தொழுவேன்
வாளன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே
கோளிலி எம் பெருமான் குண்டையூர்ச் சில நெல்லு
பெற்றேன்
ஆளிலை எம் பெருமான் அவை அட்டித் தரப் பணியே

ஆட்டினாய் என்று இறைவன் நம்மை ஆட்டுவிப்பதை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். அவன் ஆட்டுவித்தால் எவரால் ஆடாது இருக்க முடியும். நம்மை ஆட்டுவிப்பதும், அடக்குவதும், ஓட்டுவதும், உருகவைப்பதும், பாட வைப்பதும், அவனைப் பணிய வைப்பதும் செய்யும் அவன், தனது திருவருளை நமக்கு உணர்த்தவும் செய்கின்றான் மேலும் தனது திருவுருவக் காட்சியை நமக்கு காட்டவும் செய்கின்றான் என்று அப்பர் பெருமான் கூறும் பாடல் (6.95.3) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே உருகுவித்தால்
ஆரொருவர் உருகாதாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே பணிவித்தால்
ஆரொருவர் பணியாதாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே காண்பாரார்
கண்ணுதலாய் காட்டாக்காலே

பொழிப்புரை:

இறைவனின் விருப்பப்படியே அனைத்து செயல்களும் நடக்கின்றன என்பதை அறியாமல் இருக்கும் நெஞ்சமே, நம்மை பலவாறும் ஆட்டுவிக்கும் இறைவனை, காலவரையறை இன்றி எப்போதும் நினைந்ததும் புகழ்ந்தும் அவனுக்கு பணி செய்வயாக.

“உயிர்கள் தமது திறமையால் நடைபெறுகின்ற செயல்க ளென்று எண்ணுகின்றன என்பதை ஆய்ந்து நோக்கினால் முடிவில் அவை பரம்பொருள்களின் செயல்களே என்பதை, ‘அத்வைதவஸ்துவை (பரி பூரண – 3) என்ற பாடலில் அடிகள் மிக அழகாக வற்புறுத்துவதை அறியலாம். கருவியின் செயல் அக்கருவியுடையானது செயலே என்று ஆய்ந்தறிதல் போன்று, உலகில் திகழும் செயல்களை யெல்லாம் ஆராய்ந்து பார்ப்பின் அயன் முதலிய அமரர்களு டைய செயல்களும் சிவன் செயலேயாகும் என்பதைத் தெளி யலாம். அவர்களுக்குரிய செயலாக ஒன்றும் இல்லை

ஆட்டுவித்தால் யாரொருவர்: கண்ணதாசன்
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே

(ஆட்டுவித்தால் யாரொருவர்…)

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்ப்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்

(ஆட்டுவித்தால் யாரொருவர்…)

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விளகும் கண்ணா
உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விளகும் கண்ணா

(ஆட்டுவித்தால் யாரொருவர்…)

ஒருவன் மனது ஒன்பதடா ..

ஒருவன் மனது ஒன்பதடா – அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா – அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா (ஒரு)

ஏறும்போது எரிகின்றான்
இறங்கும்போது சிரிக்கின்றான்
வாழும் நேரத்தில் வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான் (ஒரு)

தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னலச் சேற்றில் விழுகின்றான்
பேய் போல் பணத்தைக் காக்கின்றான்
பெரியவர் தம்மைப் பகைக்கின்றான் (ஒரு)

பட்டம் பதவி பெற்றவர் மட்டும்
பண்புடையோராய் ஆவாரா?
பள்ளிப் படிப்பு இல்லாத மனிதர்
பகுத்தறிவின்றிப் போவாரா? (ஒரு)

மனிதன் மாறி விட்டான் ..

வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்

நிலை மாறினால் குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்
அது வேதன் விதி என்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

பறவையை கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனை கண்டான் பணம்தனை படைத்தான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்

மனித உடல் நிலையில்லாதது என்றும், அது எந்த நேரத்திலும் அழியக்கூடியது என்றும் கூறுவர்.

இதைத்தான் இந்து மதமும், சித்தர் பாடல்களும்
வலியுறுத்துகின்றன.

பட்டினத்தார்

மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ?

(12,பொது)
கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகிய அப்பால்
எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே (2, திருவேகம்பமாலை)

என் பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்துவிட்டார்
பொன் பெற்ற மாதரும் போ என்று சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார்
உன் பற்று ஒழிய ஒரு பற்றுமிலை உடையவனே (28,பொது)

என்ற பட்டினத்தார் பாடல்பரவலாக பலரால் அறியப்படவில்லை. ஆயினும் அச்செய்தியை,

கண்ணதாசன்

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன…?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)

என்ற கண்ணதாசனின் வரிகள் திரைப்பட பாடலாக அறியப்பட்டு பாமரனாலும் பேசப்படுகிறது.

மனித வாழ்வு எவ்வளவு நிலையற்றது

யாக்கை நிலையாமை குறித்து மற்றுமொரு பொன்னான தத்துவ வரிகள்.

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடி வரும் கூட்டம்
கொள்ளி வரை வருமா?
……………………………
விட்டு விடும் ஆவி
பட்டு விடும் மேனி
சுட்டு விடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு..
சூனியத்தில் நிலைப்பு.

மனையாளும் மக்களும் வாழ்வும்
தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றமும் மயானம்
மட்டே வழிக் கேது துணை (பட்டினத்தார் பாடல்கள் ப.308)

என்ற பட்டினத்தாரின் பாடல் கருத்தினை கவிஞர்,

வீடுவரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ என்கிறார்.

மனிதன் நினைப்பதுண்டு… வாழ்வு நிலைக்குமென்று…
இறைவன் நினைப்பதுண்டு… பாவம் மனிதனென்று…

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும்
பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கிறது மயக்கம் வருகின்றது
அழுது லாபமென்ன அவன் ஆட்சி நடக்கின்றது

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும்
கூட்டை திறந்து விட்டால் அந்த
குருவி பறந்து விடும்
காலில் விலங்கும் இட்டோம்
கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம்
நாட்டியம் ஆடுகின்றோம்

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

விதியின் ரதங்களிலே நாம்
விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு
மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என்
குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன்
ஒரு கவலை முடிந்ததடா

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே பெத்தபுள்ளே சொந்தமில்லே
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்குவெச்சா சொந்தமில்லே பங்குமில்லே

என்ற பாடலில் தெளிவுபட பொருள் உள்ளோர்க்குதான் உறவும் நட்பும் உண்டு என்கிறார். செல்வம் நிலையாமையையும் அது சேர்ந்தால்
உறவுகள் அனைத்தும,; கனிகள் இருக்கும் மரத்தைத் தேடி வரும் பறவைகள் போல நாடி வருவர் என்பதை எடுத்துரைக்கிறார்.

நெஞ்சில் ஓர்
ஆலயம் எனும் படத்திற்காகக் கவிஞர் எழுதிய நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் எனும் பாடலில் இடம்பெறும்,

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது

என்ற வரிகள் எத்தனை உண்மையானவை!

ஆண்டவன் எங்கே இருக்கிறான்.

ஆறு மனமே ஆறு – அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி

சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்

உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்

உண்மை என்பது அன்பாகும்
பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆசை கோபம் களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்

இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

ஆசை, கோபம், களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம் – இதில்
மிருகம் என்பது கள்ள மனம் – உயர்
தெய்வம் என்பது பிள்ளை மனம் – இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்..

ஆசை, கோபம், களவு என்ற விலக்க வேண்டிய மூன்று கட்டளைகளையும் அன்பு, நன்றி மற்றும் கருணை என்ற கொள்ள வேண்டிய மூன்று கட்டளைகளையும் அறிந்து அவற்றைப் பின்பற்றும் மனங்களே ஆண்டவன் குடியிருக்கும் இல்லங்களென்கிறார் கவியரசு.

எல்லாம் இயற்கையாய் நடக்கையில் நாம் சாதித்து விட்டது போல நடந்து கொள்ளும் மனித இனத்தின் அறியாமையை

பெட்டைக் கோழிக்குக் கட்டுச் சேவலைக்
கட்டி வைத்தவன் யாரடா?
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்
சோறு போட்டவன் யாரடா?
சோறு போட்டவன் யாரடா?

வளர்த்த குஞ்சுகள் பிரிந்த போதிலும்
வருந்தவில்லையே தாயடா..
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா….
மனதினால் வந்த நோயடா….

யாக்கை நிலையாமை

எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி?
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே ஓ
இறைவன் கொடியவனே

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே ஓ
உறங்குவேன் தாயே

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

பாசத்திலும் தத்துவம்

மலர்களைப் போல….

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான் (கலை)

மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கல மேடையில் பொன்வண்ணம் கண்டான்
மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்
மணமகள் வந்து நின்று மாலை சூடக் கண்டான் (கலை)

ஆசையின் பாதையில் ஓடிய பெண் மயில்
அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான் (கலை)

பூ மணம் கொணடவள் பால் மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டான் (மலர்)

காதலிலும் தத்துவம்

எந்த ஊர் என்றவனே ..

எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா! (எந்த)

உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்!
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்! (எந்த)

வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா! (எந்த)

காதல் கனி ரசம்

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
நீ காணும் உலகங்கள் நானாக வேண்டும்

மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்
நானாக வேண்டும்.
மடிமீது விளையாடும் சேயாக வேண்டும்
நீயாக வேண்டும்.

கடலானால் நதியாவேன்;
கணையானால் வில்லாவேன்;
உடலானால் உயிராவேன்;
ஒலியானால் இசையாவேன்.
மொழியானால் பொருளாவேன்;
கிளியானால் கனியாவேன்;
கேள்வியென்றால் பதிலாவேன்;

உன்னை நான் பார்க்கும்போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது
என்னை நீ பார்க்கின்றாயே.
நேரிலே பார்த்தால் என்ன?
நிலவென்ன தேய்ந்தா போகும்?
புன்னகைப் புரிந்தால் என்ன?
பூமுகம் சிவந்தா போகும்? (நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ)

முனிவன் மனமும் மயங்கும் பூமி
மோக வாசல் தானே
மனம் மூடி மூடிப் பார்க்கும்போதும்
தேடும் பாதை தானே (பெண்)

காதல் மோகத்தில் பாடும் காதலிக்கு அவர் கூறும் பதில்

பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால்
காதல் கானல் நீரே!
இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்
போகும் ஞானத்தேரே! (ஆண்)

(இது மாலை நேரத்து மயக்கம், இதைக் காதல் என்பது வழக்கம்)

சிட்டுக் குருவி ..

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திடக் கண்டேனே

மொட்டு விரித்த மலரினிலே
வண்டு மூழ்கிடக் கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து
மோதிடக் கண்டேனே! (சிட்டு)

பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே! (சிட்டு)

ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா (சிட்டு)

ஆசையே அலைபோல ..

ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!

நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை)

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா முதுமையே சுகமா!

காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை)

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!

காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை)

கட்டோடு குழலாட ..

கட்டோடு குழலாட ஆட-ஆட
கண்ணென்ற மீனாட ஆட-ஆட
கொத்தோடு நகையாட ஆட-ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு! (கட்டோடு)

பாவாடை காற்றோடு ஆட-ஆட
பருவங்கள் பந்தாட ஆட-ஆட
காலோடு கால்பின்னி ஆட-ஆட
கள்ளுண்ட வண்டாக நீ ஆடு! (கட்டோடு)

முதிராத நெல்லாட ஆட-ஆட
முளைக்காத சொல்லாட ஆட-ஆட
உதிராத மலராட ஆட-ஆட
சதிராடு தமிழே நீ ஆடு! (கட்டோடு)

தென்னை மரத் தோப்பாகத் தேவாரப் பாட்டாகப்
புன்னை மரம் பூச்சொரிய சின்னவளே நீ ஆடு!
கண்டாங்கி முன்னாட கன்னி மனம் பின்னாட
கண்டு கண்டு நானாட செண்டாக நீ ஆடு! (கட்டோடு)

பச்சரிசிப் பல்லாட பம்பரத்து நாவாட
மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு!
வள்ளி மனம் நீராடத் தில்லை மனம் போராட
ரெண்டு பக்கம் நானாட சொந்தமே நீ ஆடு! (கட்டோடு)

பார்த்த ஞாபகம் இல்லையோ ..

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே என்ன நெஞ்சமோ? (பார்த்த)

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்திநேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சிலகாலம்! (பார்)

இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்! (பார்)

அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை (பார்)

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?

மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா?
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா?
அன்பே மறையத் தெரியாதா?

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?
உயிரே விலகத் தெரியாதா?

கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா?
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா?

பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா?
இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா?

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?
உயிரே விலகத் தெரியாதா?

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி

மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை
மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி

உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றமடி
ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதைத் தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே

ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே

கல்லூரிப் படிப்பை முடித்ததும் நடக்கும் பிரிவு உபசார நிகழ்வில் மாணவர்கள் பாடுவதாக கவியரசர் எழுதிய பாடல் நம் நெஞ்சைப் பிழிந்து உணர்ச்சிப் பிராவாகத்தில் நம் கண்களைக் கண்ணீர்க் குளமாக்குகிறது.

பசுமை நிறைந்த நினைவுகளே
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் களித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்!

பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகி களித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம் நாம்
பறந்து செல்கின்றோம் !

குரங்குகள் போலே மரங்களின் மேலே
தாவித் திரிந்தோமே

குயில்களைப் போலே இரவும் பகலும்
கூவித் திரிந்தோமே

வரவில்லாமல் செலவுகள் செய்து
மகிழ்திருந்தோமே

வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல்
வாழ்ந்து வந்தோமே நாமே
வாழ்ந்து வந்தோமே

எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு
செல்வோமோ

இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ

இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி
நிற்போமோ
என்றும் மயங்கி நிற்போமோ!

என்றும் கவியரசின் கவிதை வரிகளில் மயங்கி நிற்போமோ!

Scroll to Top