You cannot copy content of this page

உணவும் குணமும்!

உணவும் குணமும்!

பிராணா பிராணபிருத்தம்னாம் தடாயுக்தாய நிஹந்ந்த்யாசன்
விஷம் ப்ராணஹரம் தச்சா யுக்தி யுக்தம் ரசாயனம்

ஐம்புலன்களால் ஏற்றுக் கொள்ளப் படும் அனைத்தும் உணவாகும். வாயால் (உணவு, நீர்) மூக்கால்(சுவாசம் ) காதால் (உபதேசம் , இனிமையான இசை) தோல் மூலம் (சூரிய ஒளி, காற்று) கண்களால் ( காட்சிகள்).

மனிதன் உயிர்வாழ உணவு அவசியம். நாம் உட்கொள்ளும் உணவே நமது குணநலன்களை தீர்மானிக்கிறது. இந்த குணநலன்களே நம்முடைய எண்ணம், செயல், சிந்தனைகளை தீர்மானிக்கிறது. இவை எல்லாம் சேர்ந்தே ஒரு சமூகத்தின் வாழ்வியலையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கிறது.

சரியான அளவு உணவு எடுத்துக் கொள்ளும்போது அது நமக்கு நீண்ட ஆயுளையும் இளமையையும் தருகிறது. சரியற்ற அளவில் எடுத்துக் கொள்ளும்போது அது, நச்சுக்களை அதிகப் படுத்தி வாழ்க்கையையே கெடுக்கிறது.

சரியான உணவை எடுத்துக் கொண்டால் மட்டும் போதாது; சரியான விகிதாச்சாரத்தில் எடுத்துக் கொள்வதும் மிக முக்கியமானது ஆகும்.

உணவு வகைகளை சாத்வீக, ராஜசிக் மற்றும் தமஸிக் ஆகிய மூன்று வகைகளில் முறைப் படுத்தலாம்.

இந்த வகையான உணவுகள் உடல் மற்றும் மனதில் வேறுபட்ட விளைவுகளைக் கொண்டுள்ளன.

சாத்வீக வகை:

சத்வா என்பது மனதில் தெளிவு, நல்லிணக்கம் மற்றும் சமநிலை ஆகியவற்றை தூண்டுகிறது.

சத்துவ குணவியல்பு(தேவ குணம்):

அன்பு, அமைதி, அறநெறி, நன்மைகளையே நோக்கும் தன்மை, நெறி பிறழாமை, தனக்கென வாழாமை, உயரிய நோக்கம், உள்ளத்தூய்மை, நல்லோர் சேர்க்கை, பொது நிலையாமை தத்துவம் பற்றி உணர்ந்து உலக பந்தங்களில் பற்று, பயம், கவலை, எதிர்பார்த்தல் அற்ற நிலை, போன்ற உயர் குணங்கள் .

சாந்தம், அன்பு, அடக்கம், பொறுமை, கருணை போன்றவை சத்துவ குணத்தால் வருகின்றன

பின்வரும் உணவு சாத்வீகத்தை ஊக்குவிக்கிறது.

புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள், சாலடுகள், புதிய பழச் சாறுகள், தானியங்கள், அரிசி, மூலிகை தேநீர், புதிய பசும் பால், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், தேன், வெல்லம், புதிதாக சமைக்கப்பட்ட உணவு.

ரஜஸிக் வகை (மிருக குணம் ):

காமம், வெகுளி, மயக்கம், இச்சை, உலக பொருட்களிலும் சுகங்களிலும் தணியாத ஆசை கொண்டவர்கள்.

தன்னலம் ,பெருமை, பிறர் குற்றம் பேசல், யாவையும் தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் இறங்குபவர்கள் , தர்மம், நியாயம் , நீதி, உண்மை மற்றும் நல்லறங்களை நடத்தாது இவை யனைத்திற்கும் புறம்பாக எதிராகச் செயல் படுபவர்கள்.

ரஜோ குணவியல்பு :
ஆளுமைத் தன்மை, அடக்குதல், அடங்காமை, மேலாண்மை,சுகபோகம்நாடல், இரக்கமில்லா அரக்க குணம், தோல்விபயம், எளிமை விரும்பாமை, எளியோரை மதியாமை, படாடோப வாழ்க்கை , வஞ்சகம், நெஞ்சிலொன்றும் வாக்கிலொன்றுமாய் உரைப்பவர்கள், மிக உற்றவர்களிடம் கூட உண்மை உரைக்காதவர்கள். தற்புகழ்ச்சி விரும்பிகள், பிறர் தலைமை விரும்பாதவர்கள்.
காரம், புளி, முள்ளங்கி போன்ற உணவுகள் ராஜஸ குணத்தை வளர்க்கின்றன.

கோபம், டம்பம், வீண் பெருமை, அகங்காரம் போன்றவை இந்த ராஜஸ குணத்தால் வருகின்றன
முக்குணங்களும் அதன் இயல்புகளும் அதற்கேற்ற செயல்பாடுகளும் அனைத்து மனித ஜீவிகளிடம் கலந்தே காணப்படுகின்றன.

பின்வரும் உணவு ரஜஸிக்/ தமஸிக் குணங்களை ஊக்குவிக்கிறது.

புட்டிகளில் அடைக்கப் பட்ட உணவு வகைகள், ரெடி மேட் உணவு, ரசாயனம்( preservative added packed, bottled, tinned food) பாசுமதி அரிசி, புளிப்பு கிரீம், பன்னீர், ஐஸ் கிரீம், ஈஸ்ட், சர்க்கரை, ஊறுகாய், வினிகர், பூண்டு, வெங்காயம் மற்றும் உப்பில் ஊறிய உணவு வகைகள்

தமஸிக் வகை:

தமஸ் என்பது இருள், செயலற்ற நிலை , எதிர்ப்பு மற்றும் அடித்தளத்தை தூண்டும் மன இயல்புகள்.

பழையது, புண்ணக்கு, மாமிசம் போன்ற உணவுகள் தாமத குணத்தை வளர்க்கின்றன. தூக்கம், சோம்பல், மயக்கம் போன்றவை தாமத குணத்தால் வருகின்றன.

பின்வரும் உணவு தமஸ் குணங்களை ஊக்குவிக்கிறது.

மது வகைகள், மாட்டிறைச்சி, கோழிக்கறி, மீன், பன்றி இறைச்சி, முட்டை, உறைந்த உணவு, நுண்ணுயிர் உணவு, காளான், போதை மருந்துகள், வறுத்த உணவு, வறுத்த கொட்டைகள்ஆகியவை.

இந்த மூன்று வகை உணவுகளின் அடிப்படையில் மனிதர்களின் குண நலன்கள் மாறு படுகின்றன.

சாத்வீக வகை உணவுகள் அமைதியான குணநலனையும், ராஜோ வகை உணவுகள் ஆர்ப்பரிப்பான குண நலனையும், தாமச வகை உணவுகள் மந்தம் உண்டாக்கும் குண நலனையும் நல்கும்.

உணவும், வகையும் – சாத்வீக உணவு!

சாத்வீகமான உணவு எப்பொழுதுமே மலச்சிக்கலை உண்டுபண்ணுவதில்லை, எது சாத்வீகமான உணவு என்றால் கீரைகள், பருப்புகள், இட்லி போன்ற இதமான உணவுகள், அதே போல் கருவேப்பிலை, புதினா, மல்லி, இஞ்சி போன்ற சட்டினிகள் இவற்றையெல்லாம் சேர்க்கின்றபொழுது அது சாத்வீகமான உணவாக இருக்கும்.

சாத்வீக உணவில் முக்கியமாக உடல் நலத்தை அதிகரிக்கும் நோக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.

உடல் வலிமை, கவனிப்பு, ஆற்றல் சரியான நேரம், நீண்ட ஆயுளை, முதலியன கட்டியெழுப்ப சரியான உணவு இது.

சாத்வீக உணவுகளில் உயிர்ச்சத்து ஏராளமானவை. பிரபஞ்சத்தின் உயிர் சக்தி என்று அழைக்கப்படுகின்றன. இது உண்மையில் உயிர்நாடி உணவு .

சாப்பிடும் உணவுகள் மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும். ஊட்டச்சத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் முதலியன போன்ற உணவுகள் சாத்வீக உணவு என அழைக்கப்படுகின்றன.

பழங்கள் சாத்வீக உணவில் ஒரு பெரிய விகிதத்தை பகிர்ந்து கொள்கின்றன.

சாத்வீக உணவில் இயற்கை இனிப்பு வகைகள் உள்ளன. இதில் தேன், வெல்லம், கரும்பு சாறு, பழச்சாறு, பழச்சாறுகள், முதலியவை உள்ளன.

சாத்வீகம் என்ற சொல் அமைதி மற்றும் சமாதானத்தை குறிக்கிறது. இயற்கையாகவே, சாத்வீக உணவை தொடர்ந்து உண்டு வந்தால் சாந்தம், சமாதானம் மற்றும் தெளிவு மனதில் மற்றும் உடலில் பெரும் மற்றம் உண்டு செய்கிறது. இந்த உணவை சாப்பிடுவது செரிமான அமைப்பு முறைகளை சரி செய்யும். மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்க சாத்வீக உணவை பின்பற்றவும்!

உணவும், வகையும் – சாத்வீக உணவு!

சித்தர்கள், யோகிகள், துறவிகள், ஆத்ம சாதகர்கள் போன்றவர்கள் இத்தகைய உணவினையே நாம் உண்ண வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

சரி, எவையெல்லாம் சாத்வீக உணவுகள்……

விலங்கில் இருந்து பெறப்படும் உணவு..

 1. சுத்தமான பசும்பால்
 2. சுத்தமான பசுந்தயிர்
 3. பசு வெண்ணெய்
 4. பசுவின் நெய்

எண்ணை வகைகள்..

 1. நல்லெண்ணெய் (எள் எண்ணெய்)
 2. இலுப்பை எண்ணெய்
 3. தேங்காய் எண்ணெய்
 4. சுத்தமான தேன்

பயிர் வகைகள்..

 1. பேரீச்சங்காய்
 2. பேரீச்சம்பழம்
 3. பாதாம் பருப்பு
 4. கொப்பரை
 5. பச்சைக் கற்பூரம்
 6. குங்கமப் பூ (சுத்தமானது)
 7. ஜாதிக்காய்
 8. ஜாதிப் பத்திரி
 9. திராட்சை
 10. ஏலரிசி
 11. கற்கண்டு
 12. வெல்லச் சர்க்கரை
 13. வெல்லம்
 14. சுக்கு
 15. மிளகு
 16. திப்பிலி
 17. வெந்தயம்
 18. எள்
 19. உளுந்து
 20. அவல்
 21. பொரி
 22. பச்சைப் பயறு
 23. திணை
 24. இஞ்சி
 25. வால் மிளகு
 26. வெள்ளை மிளகு
 27. ஜீரகம்
 28. கோதுமை
 29. வாற்கோதுமை
 30. பச்சை அரிசி
 31. சீரகச் சம்பா
 32. மிளகுச் சம்பா
 33. கார் அரிசி
 34. குன்றிமணிச் சம்பா

காய்கறிகள், கனிகள்..

 1. வாழைப்பழம் (வாழைப்பழங்களில் பூவன் பழம் மட்டுமே அதிகம் உகந்ததாக குறிப்பிடப்படுகிறது)
 2. மொந்தன் வாழைப்பழம்
 3. பச்சை நாடன் வாழைப்பழம்
 4. பேயன் வாழைப்பழம்
 5. ரஸ்தாளி
 6. செவ்வாழை
 7. வெண் வாழை
 8. மலைவாழை
 9. நவரை வாழைப்பழம்
 10. அடுக்கு வாழைப்பழம்
 11. கருவாழைப்பழம்
 12. கற்பூர வல்லி
 13. இளநீர்
 14. பன்னீர்
 15. தாளம் நீர்
 16. மல்லிகை நீர்
 17. மாம்பழம் (மிகச் சத்துக் கொண்டது)
 18. கொய்யாப்பழம்
 19. ஜாதி நார்த்தைப் பழம்
 20. கொழிஞ்சி நார்த்தைப் பழம்
 21. கிச்சிலிப் பழம்
 22. நார்த்தம் பழம்
 23. நாவல் பழம்
 24. பலாப்பழம்
 25. முலைக்கீரை
 26. மணத்தக்காளி
 27. பொன்னாம் கண்ணிக் கீரை
 28. கொத்தமல்லிக் கீரை
 29. வெந்தயக்கீரை
 30. சக்ரவர்த்திக் கீரை
 31. அகத்திக்கீரை
 32. அகத்திப்பூ
 33. வேப்பம்பூ
 34. பசு முன்னை
 35. பொன் முசுட்டை
 36. முசுட்டை
 37. கருவேப்பிலை
 38. தூதுளை இலை
 39. வஜ்ரவல்லி (பிரண்டை)
 40. கீரைத் தண்டு
 41. வாழைத்தண்டு
 42. செங்கீரைத்தண்டு
 43. வெண்கீரைத் தண்டு
 44. சேப்பந்தண்டு
 45. சேப்பங்கிழங்கு
 46. தாமரைக் கிழங்கு
 47. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
 48. தேங்காய்
 49. அருநெல்லிக்காய்
 50. நெல்லிக்காய்
 51. சுண்டைக்காய்
 52. சுக்கங்காய்
 53. மாங்காய்
 54. கரைக்காய்
 55. இலந்தைக்காய் – பழம்
 56. வெள்ளரிக்காய்
 57. கொம்பு பாகல்
 58. மிதி பாகல்
 59. பலாக்காய்
 60. ம்முள்ளுக் கத்தரிக்காய்
 61. விளாம்பழம்
 62. நார்த்தங்காய்
 63. கடார நார்த்தை காய்
 64. கொழிஞ்சி நார்த்தங்காய்
 65. மணத்தக்காளிக் காய்
 66. மலைச் சுண்டைக்காய்

இவை எல்லாம் சாத்வீக உணவுகளாகும். இந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் மேலே சொன்ன பண்புகள் தழைத்தோங்கும்.

ரஜோ குணம் தரும் உணவு வகைகளைப் பற்றி பார்ப்போம்.

சுறுசுறுப்பு, விறுவிறுப்பு, உடல் வலிமை, தான் என்ற திணவு, அதீதமான துணிச்சல், வீரம், காமம், பேராசை, கோபம், மனவெழுச்சிகளின் திடீர் வெளிப்பாடு, மன மாறுதல்களின் திடீர்த் தோற்றம், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிதுடிப்பு, பரபரப்பு, எதையும் முடித்தே தீருவோம் என்ற வேகம் போன்ற குண இயல்புகள் ரஜோ வகை உணவுகளைத் தொடர்ந்து உண்டு வருவதால் ஏற்படுமாம்.

ராட்சச உணவு என்றால் நிறைய அசைவ பொருட்களான ஆடு, மாடு, கோழிகளிலிருந்து அத்தனையும் இதில் சேரும். தினசரி அசைவ உணவு இல்லாமல் ஒருவேளைகூட இருக்கமுடியாது என்று இருக்கின்ற மக்களுக்கு அதாவது இராட்சச உணவு எடுக்கக்கூடியவர்களுக்கு கண்டிப்பாக உடம்பில் காரச்சத்து அதிகமாகும்.

காரச்சத்து அதிகமாகி அதனடிப்படையில் உடம்பில் உஷ்ணநிலை உண்டாகி, அதனடிப்படையில் நரம்பு சார்ந்து சில உஷ்ணநிலை வரும் பொழுது அதற்கேற்ற சில பழக்க வழக்கங்களும் வரும்.

எவர் ஒருவர் ராட்சச உணவைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டு வருகிறாரோ அவருக்கு போதைப்பழக்கம், புகைப்பழக்கம், விடாத குடிப்பழக்கம் எல்லாம் வருவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு.

ராட்சச உணவுகளான அசைவ உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ராட்சச உணவுகளான மாவுப் பொருட்களில் செய்யக்கூடிய உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ராட்சச உணவுகளான எண்ணெய் பதார்த்தங்கள், உடனடியாக செய்யக்கூடிய உணவுகள், நான், தந்தூரி, புரோட்டா, பூரி போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

ராட்சச உணவுகளை அதிகமாக எடுக்கக் கூடியவர்களுக்கும், தண்ணீர் அதிகம் எடுக்காமல் வறண்ட உணவுகளாகவே சாப்பிடக்கூடிய மக்களுக்கும், தூக்கத்தைத் தொலைத்தவர்களுக்கும்
கண்டிப்பாக மலச்சிக்கல், மூலம், சிறுநீரகம், மற்றும் கழிவு மண்டலம் சார்ந்த நோய்கள் வரும்.

எவர் ஒருவருக்கு மலக்கழிவு ஒழுங்காக முறையாக வெளியேற்றப்படுகிறதோ அவருக்கு சிறுநீரகம் சார்ந்த எந்தப் பிரச்சனையும் வராது. சிறுநீரக கற்கள் எதுவும் வராது. ஒரு மண்டலம் மற்றொரு மண்டலத்தோடு இணைப்புடையது, பிணைப்புடையது.

கழிவு மண்டலம் ஒழுங்காக முறையாக செயல்படுகிற பொழுது நம் உடம்பில் எந்தக் கழிவும் இல்லாத தன்மை இருக்கும்.

ஒரு சில ஆண்கள், ஒரு சில பெண்களைப் பார்க்கின்ற பொழுது சுகந்த மணத்தை அவர்களிடமிருந்து நாம் சுவாசிக்க முடியும். நறுமணம் பூசி வரக்கூடிய மணம் வேறு, இயல்பாகவே இருக்கக்கூடிய மணம் வேறு. சிலர் மணமாகவே இருப்பார்கள்.

ஒரு சிலர் பேசும் பொழுது பார்த்தோம் என்றால் வாயெல்லாம் நாற்றம் அடிக்கக்கூடிய சூழல் இருக்கும். எதிரில் பேசுபவர் முகத்தைத் திருப்பிக்கொண்டு பேசுவதெல்லாம் இருக்கும்.

எனவே வயிறு சுத்தம்தான் வாய் சுத்தத்தைத் தரும். யார் ஒருவருக்கு வயிறு சுத்தமாக இருக்கிறதோ, யார் ஒருவருக்கு தேவையான அளவிற்கு அமில அளவு இருக்கிறதோ அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வராது.

ரஜோ குணப் பொருள்கள்

 1. பச்சை மிளகாய்
 2. ஊசி மிளகாய்
 3. எலுமிச்சங்காய்
 4. எலுமிச்சம்பழம்
 5. புளியங்காய்
 6. அத்திக்காய்
 7. ஆவாரம்பூ
 8. வாழைப்பூ
 9. அறுகீரை
 10. பறங்கி இலை
 11. புதீனா
 12. பார வெற்றிலை
 13. மாகாளிக் கிழங்கு
 14. காரக் கருணைக் கிழங்கு
 15. கொட்டிக் கிழங்கு
 16. கருணைக் கிழங்கு
 17. தாமரைக் கிழங்கு
 18. சிறு கிழங்கு
 19. களிப்பாக்கு
 20. கடுகு எண்ணெய்
 21. வெள்ளாட்டுப்பால்
 22. வெள்ளாட்டுத் தயிர்
 23. வெள்ளாட்டு எண்ணெய்
 24. வெள்ளாட்டு நெய்
 25. ஓமம்
 26. கசகசா
 27. கலப்பு நெய்
 28. கல்யாணப் பூசணிக்காய்
 29. கோடைப் பூசணி
 30. பன்றிப் புடலங்காய்
 31. வெண்டைக்காய்
 32. புடலங்காய்
 33. கருஞ்சீரகம்
 34. காட்டு சீரகம்
 35. பிறப்பு சீரகம்
 36. லவங்கம்
 37. லவங்கப்பட்டை
 38. அப்பளாக் காரம்
 39. வீட்டு உப்பு
 40. புளி
 41. மிளகாய்
 42. நாய்க்கடுகு
 43. செங்கடுகு
 44. சிறு கடுகு
 45. வெண்கடுகு
 46. தனியா
 47. கஸ்தூரி மஞ்சள்
 48. கஸ்தூரி
 49. மஞ்சள்
 50. முந்திரிப்பருப்பு
 51. மணிலா
 52. ஜவ்வரசி
 53. துவரம்பருப்பு
 54. அன்னாசி
 55. மாதுளை
 56. கொமட்டி மாதுளை
 57. நாக்கில் பட்டால் விறுவிறுவென்று எரிச்சல் தரும் பொருள்கள் எல்லாம் இவ்வகையில் சேரும்.

இப்பொருள்கள் எல்லாம் விறுவிறு, சுறுசுறு குணம் கொண்டவை. உலக வாழ்வில் உள்ளவர்களை, உணர்ச்சிகளத் தூண்டி ஆட்டிப்படைக்கும் குணம் கொண்டவை இவை.

தாமச குணம் தரும் உணவு வகைகளைப் பற்றி

உணவும், வகையும் – தாமச உணவு!

மிதமிஞ்சிய கோபம், அளவு கடந்த காமம், அதிக தூக்கம், மூர்க்கமான முட்டாள்தனம், நிலைத்த மனமின்மை போன்றவற்றையே தாமச குணம் என்கிறார்கள்.

இத்தகைய குண நலன்களை உடையவர்கள் முரடர்களாகவும், எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் முன்கோபிகளாகவும், சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்கும் திறமின்றி சூழ்நிலை மற்றும் உணர்வுகளுக்கு அடிமையாகி குற்றங்களைச் செய்பவர்களாக இருப்பார்களாம்.

தாமச குணத்தை தரும் உணவுப் பொருட்கள்..

 1. வெங்காயம்
 2. வெள்ளைப் பூண்டு
 3. முருங்கைக் கீரை
 4. பசலைக் கீரை
 5. கலவைக் கீரை
 6. ஆரைக் கீரை
 7. சிறு கீரை
 8. உருளைக் கிழங்கு
 9. பெருவல்லிக் கிழங்கு
 10. முள்ளங்கி
 11. சிறுவள்ளிக் கிழங்கு
 12. மரவள்ளிக் கிழங்கு
 13. முருங்கைக் காய்
 14. பீர்க்கை
 15. வாளவரைக்காய்
 16. மொச்சை
 17. சுரைக்காய்
 18. அவரை
 19. கொள்
 20. செஞ்சோளம்
 21. கருஞ்சோளம்
 22. பட்டாணி
 23. தட்டைப்பயறு
 24. கம்பு
 25. வரகு
 26. கேழ்வரகு
 27. புழுங்கல் அரிசி
 28. கத்திரிக்காய்
 29. முருங்கைப்பூ
 30. ஈச்ச வெள்ளம்
 31. பனைவெல்லம்
 32. பனங்கற்கண்டு
 33. கள் வகைகள்
 34. நுங்கு
 35. விளக்கெண்ணெய்
 36. பருப்புக் கீரை
 37. புளிச்சக்கீரை
 38. காசினிக்கீரை
 39. பனம்பழம்
 40. சீதாப்பழம்
 41. பண்ணைக் கீரை
 42. முந்திரிப்பழம்
 43. எருமைப்பால்
 44. எருமை தயிர்
 45. எருமை வெண்ணெய்
 46. எருமை நெய்
  இது வரை பழந் தமிழரின் வாழ்வில் உணவு என்பது எத்தகையதாக இருந்தது. உணவின் வகைப்பாடுகள்,அதனால் ஏற்பட்ட வாழ்வியல் கூறுகள் போன்றவற்றைப் பார்த்தோம்.

உணவு – எத்தனை சாப்பாடு?, எப்போது சாப்பிடுவது?

ஒரு நாளைக்கு எத்தனை தடவை உணவை உட்கொள்ளுதல் வேண்டும், எந்த சமயத்தில் உட்கொள்ள வேண்டும் என்கிற தகவலை இன்று பார்ப்போம்.

ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு போதுமானது என்கிறார் தேரையர். தனது “பதார்த்த குண சிந்தாமணி” என்னும் நூலில் இதனை பின் வருமாறு விளக்குகிறார்.

தன்மமி ரண்டேயூண் டப்பிமுக்காற் கொள்ளினினன்
சின்மதலை காளைகடல் சேர்பருவ-தன்மூகுர்த்த
மொன்றுக்கு ணானகுக்கு ளோதுமிரண் டுக்குளுண்பர்
நன்றுக்குத் தீயோர் நயந்து

ஒரு நாளில் இரண்டு வேளைகள் உண்பதே நன்மையளிக்கும். அதற்குமேல் மூன்றாவது காலம் உணவு உண்ன வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நாளின் முதலாவது உணவை சூரிய உதய நேரத்திலிருந்து சரியாக ஒன்றரை மணி நேரத்திற்குள்ளும், இரண்டாவது உணவை சூரிய உதயத்தில் இருந்து ஆறு மணி நேரத்திற்குள்ளும், மூன்றாவது உணவை சூரியன் மறைந்து ஒரு மணி நேரத்திற்குள்ளும் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இந்த கால முறை தவறி உண்டால் உடலுக்கு தீமை உண்டாகும் என்கிறார்.

என்ன தீமை விளையும்?

மூன்றுநான் காறெண்மு கூர்த்தங் களின்முறையே
ஞான்றுளுண்ணு மந்த நறுமுணவே-தோன்றுடலுக்
கொக்குமித நோயரமு ரோகமுயிர்க் கந்தரஞ்செய்
விக்குமித மாராய்ந்து விள்.

சூரியன் உதய நேரத்திலிருந்து நான்கு மணி நேரதில் உண்ணும் உணவினால் உடலுக்கு மிதமான நோய் ஏற்படுமாம். சூரியன் உதய நேரத்திலிருந்து ஆறு மணி நேரத்துக்கு மேல் உண்ணும் உணவினால் நோய்கள் உண்டாகுமாம், மாலையில் சூரியன் மறைந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் உண்ணும் உணவினால் உயிருக்கு தீங்கு விளையும் என்கிறார்.


தேரையரின் இந்த தெளிவுகளுக்கு பின்னே நமது முன்னோர்கள் இதனை கடைபிடித்து நோயற்ற வாழ்வு வாழ்ந்திருந்தனர் என்பது மட்டும் உண்மை.


எப்படி உணவை சாப்பிடுவது என்பது பற்றி பார்ப்போம். உணவு – எப்படி சாப்பிடுவது? எவ்வளவு சாப்பிடுவது?

நாள்தோறும் உணவில் அறுசுவையுடைய உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியவாழ்வு வாழ முடியும் என்கிறார் தேரையர்.

மேலும் இந்த உணவுகளை எந்த வரிசையில் உட்கொள்வது பற்றியும் தனது “பதார்த்த குண சிந்தாமணி” என்னும் நூலில் பின் வருமாறு விளக்குகிறார்.

ஆதி யினிப்புநாடு வாம்பிரநீ ருப்பொடுசா
காதி யுரைப்பப்பா லந்தத்திற்-கோதிறுவர்ப்
பாந்ததியுப் பூறியகா யாதிவகை சேருணவை
மாந்ததிக கத்தையுறு வாய்.


முதலில் இனிப்புச் சுவையுடைய உணவுப் பொருட்களையும், அடுத்து புளிப்புச் சுவையுடைய உணவுப் பொருட்களையும், அடுத்து நீருப்புச் சுவையுடைய உணவுப் பொருட்களையும், அடுத்து கீரை முதலானவைகளுடன் காரச் சுவையுடைய உணவுப் பொருட்களையும், உட்கொண்டு முடிவில் துவர்ப்பு, தயிர், என்ற வரிசையில் உணவை உட்கொண்டால் எப்போதும் சுகத்தையே கொடுக்கும் என்கிறார்.

சரி இந்த உணவுகளை எவ்வளவு எடுத்துக் கொள்வதாம்?, அதனையும் தேரையர் வரையறுத்துக் கூறியிருக்கிறார்.

முக்கா லுணவின்றி யெத்தேகி கட்கு முழுவுணலி
லக்கா ரணமன்ன சாகாதிகூடி யரையதிற்பால்
சிக்கா வமுதம்பு தக்கிரங் காலுண்டிச் சேடம்வெளி
வைக்கா விடிலுண்டி வேகா தனலும் வளியுமின்றே


சிறியவர், பெரியவர், ஆரோக்கியமானவர், நோயாளி என பாகுபாடில்லாமல் அனைவரும் முக்கால் வயிறு அளவுக்கே உணவு எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அதாவது சோறு, பலாகாரம் போன்ற பதார்த்தங்கள் அரை வயிறும், ஜூஸ், பால், மோர், நீர் போன்றவை கால்வயிறு அளவுக்கு எடுத்துக் கொள்ளக் கூறுகிறார்.

ஒரு போதும் முழுவயிறு உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறார். அப்படி முழு வயிறு உணவு உட்கொண்டால் சாப்பிட்ட உணவைச் சீரணிக்கத் தக்க அக்கினியும் வாயுவும் சஞ்சரிப்பதற்கு இடமிருக்காது போய்விடும் என்கிறார்.

மலச்சிக்கலை மிக எளிமையாக போக்குவதற்கு சித்தர்கள் சொன்ன சில மருந்துகளை தாராளமாக சாப்பிடலாம். அதில் நாம் விசேசமாக சொல்லக்கூடியது உலகமறிந்த மூலிகை நிலாவரை.

நிலாவரைப் பொடி -150 கிராம்
சுக்கு – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
ஓமம் -50 கிராம்
சர்க்கரை -300 கிராம்

இவை எல்லாவற்றையும் சேர்த்து பொடிசெய்து வைத்துக்கொண்டு இரவுநேரத்தில் மட்டும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டுவிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்.

இரவு நேரத்தில் பால் அருந்தக்கூடாது. இதைத் தொடர்ந்து சாப்பிடக்கூடியவர்களுக்கு மலச்சிக்கல் சார்ந்த எந்தப் பிரச்சனையும் வராது,கழிவு மண்டலம் சார்ந்த எந்தப் பிரச்சனையும் வராது.

இன்னும் ஒரு சிலருக்கு சிறுநீர் சரியாக இறங்காத சூழல் இருக்கும். அந்த மாதிரி சிறுநீர் இறங்காமல் இருப்பவர்கள் வாழைத்தண்டை அரைத்து சாறு எடுத்து சாப்பிடுபவர்களுக்கு கழிவுமண்டலத்தில் இருக்கக்கூடிய சிறுநீர் சார்ந்த பிரச்சனைகள் முழுமையாக சரியாகும்.

ஒரு சிலருக்கு சிறுநீர் கழிவு வெளியேறும்பொழுது நுரைநுரையாக நுரைத்துவருவது,சுன்னம் மாதிரி வருவது,சிறுநீர் கடுமையான வாசனை இருப்பது என்று அந்த மாதிரியெல்லாம் இருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. அப்படி இருப்பவர்கள் சுத்தமான சந்தனத்தை கல்லில் இழைத்து கொட்டைப்பாக்கு அளவு காலையில் சாப்பிட்டால் நன்றாக நீர் போகும். அப்படி இல்லையென்றால் சித்த மருத்துவ கடைகளில் சந்திரபிரபாவதி என்ற சந்தனம் கலந்து செய்யக்கூடிய அற்புதமான மாத்திரை கிடைக்கும். இதனை காலை மற்றும் இரவு வேளைகளிலும் இரண்டு இரண்டு மாத்திரைகள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வந்தார்கள் என்றால் சிறுநீர் சார்ந்த பிரச்சனைகள், நீர்சுருக்கு,நீர்க் கடுப்பு, நீர் எரிச்சல், கல்லடைப்பு போன்ற கழிவுமண்டலப் பிரச்சனைகளை முழுமையாக சரிசெய்யக்கூடிய தன்மை உண்டு.

இந்த கழிவுமண்டலத்தை ஒழுங்குபடுத்த நிறைய மருந்துகள் இருக்கிறது.

சாதாரணமாகக் கிடைக்கக் கூடிய சோற்றுக்கற்றாழையில் உள்ளே இருக்கக்கூடிய ஜெல்லை எடுத்து ஏழு முறை அரிசி கழுவிய நீரில் கழுவிவிட்டு அதில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது கழிவுமண்டலம் சார்ந்த பிரச்சனைகள் முழுமையாக சரியாகும்.

சாத்வீக உணவையே உண்ணுங்கள். மனம் சுத்தமாகும். புத்தி கூர்மையுடனும் தெளிவுடனும் மிகச் சிறந்த இலக்கு நோக்கி நாம் அனைவரும் நடை போடலாம்.

Scroll to Top