You cannot copy content of this page

வித விதமான பொரியல் !

வித விதமான பொரியல்

காய்கறியில் தான் எத்துணை வகை! கணக்கிலடங்கா கறிவகையும் அதன் சுவையும் அருமை. பிரட்டல், துவட்டல்,கூட்டு, பொரியல்

பச்சடி, மண்டி, கோலா இன்னும் பல. நம் நாக்கின் சுவை அரும்புகள் மலரும் வண்ணம் சமைத்து மகிழ்வோம்.


வாழைத்தண்டு பொரியல் :

வாழைத் தண்டு நார் சத்து மிகுந்தது. மேலும் அதிக நீர் சத்து உடையதாகவும் இருக்கிறது. சிறுநீரக கல்லை கரைக்கும் சக்தி கொண்டதாகும். உடல் பருமனை குறைக்கும் ஆற்றல் மிக்கது.


வாழைத்தண்டு பொரியல்
[வகை 1]

தேவையான பொருள்கள்:

வாழைத்தண்டு – 1
காய்ந்த மிளகாய் – 2
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
எண்ணை – 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

1.முதலில் வாழைத்தண்டை, மெல்லிய வில்லைகளாக நறுக்கி, அதிலுள்ள நார்களை நீக்கி விடவும்.

2.பின்பு ஒரு கடாயில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு , உளுத்தம் பருப்பையும், கறிவேப்பிலை, மிளகாயையும் போட்டு சிவக்க வறுக்கவும்.

3.அதில் வாழைத்தண்டைச் சேர்த்து, உப்பு போட்டு நீரைத் தெளித்துக் கிளறி விடவும்.மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

4.கடைசியாக வாழைத்தண்டு நன்றாக வெந்ததும், தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் இறக்கி வைக்கவும்.

வாழைத்தண்டு பொரியல்
[வகை 2]

தேவையான பொருள்கள்:


வாழைத்தண்டு – 1 துண்டு
பாசிப் பருப்பு – 4 மேஜைக்கரண்டி
மோர் – 100 மில்லி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

தாளிக்க –
எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை –
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாசிப் பருப்பை குழைய விடாமல் வேக வைத்துக் கொள்ளவும்.

வாழைத்தண்டை வட்ட வட்டமாக வெட்டி அதிலுள்ள நார்களை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி மோரில் போட்டு வைக்கவும். அப்போது தான் கறுத்து போகாமல் இருக்கும்.

வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் மோரில் ஊற வைத்திருக்கும் வாழைத்தண்டுகளை எடுத்து போட்டு கிளறவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கிளறி அதோடு ஒரு கை அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மூடி போட்டு வேகவிடவும்.

நன்றாக வெந்து நீரும் வற்றியதும் அவித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான வாழைத்தண்டு பொரியல் ரெடி.


வாழைத்தண்டு பொரியல்
[வகை 3]

தேவையான பொருட்கள் :

வாழைத்தண்டு – 1 பெரிய துண்டு
பாசிபருப்பு – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

கடுகு – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது )
உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்
கறிவேப்பில்லை -1 கொத்து

செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாழைத்தண்டை சுத்தம் செய்து, தோல் சீவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி களைந்த தண்ணீர் எடுத்து அதில் போடவும். (இப்படி செய்வதால் வாழைத்தண்டு கருக்காது (அ) தண்ணீரில் 1 ஸ்பூன் மோர் கலந்து அதில் போடலாம்)

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு சேர்த்து வெடித்ததும், உளுந்தம்பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வாழைத்தண்டை சேர்க்கவும்.

அதனுடன் பாசிபருப்பை கழுவி தண்ணீரை வடித்து அதையும் சேர்த்து கிளறரவும்.

பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கடாயை மூடி வேகவிடவும். நீர் சுண்டி வெந்ததும் இறக்கிவிடவும்.

சுவையான வாழைத்தண்டு பொரியல் தயார்.


வாழைத்தண்டு பொரியல்
[வகை 4]


வாழைத்தண்டு நறுகியது 1
கடலை எண்ணெய்
கடுகு
கருவேப்பிலை
வர மிளகாய் 4
சின்ன வெங்காயம் 10
மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
உப்பு
தேங்காய் துருவல்

காடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து கருவேப்பிலை சின்ன வெங்காயம் மிளகாய் சேர்க்கவும்
பின்னர் நறுகிய வாழை தண்டு ஐ சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைக்க வேண்டும்
வாழை தண்டு முழுமையாக ஆவியில் வேக வேண்டும்
வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும்


வாழைத்தண்டு பொரியல்
[வகை 5]

தேவையான பொருட்கள் :
20 cm நீளமான
வாழை தண்டு
சிறிய
வெங்காயம் 2
பொடியாக நறுக்கவும்
சிவப்பு மிளகாய் 2
உடைத்து வைக்கவும்

மஞ்சத்தூள் 2 சிட்டிகை
கருவேப்பிலை 6
கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது 2 டீஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
எண்ணெய் 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்

செய்முறை :
மேலே தண்டை மூடியிருக்கும் தோலை அகற்றவும்.
குறுக்காக வட்ட வட்டமாக நறுக்கி நாரை நீக்கவும்.

பிறகு ஒரே மாதிரி அளவுடன் கூடிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகை வெடிக்க விடவும். பின்னர் மிளகாய் துண்டுகளையும் உளுத்தம் பருப்பையும் சேர்க்கவும்.
அடுத்து மஞ்சத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிது மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
உப்பு மற்றும் அரிந்து வைத்துள்ள காயை சேர்த்து கிளறி மூடியிட்டு வேகவைக்கவும்.
எளிதில் வேகக் கூடியதாகையால் மிகுந்த நேரம் எடுக்காது.
வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

கொத்தமல்லி தழையால் அலங்கரிக்கவும்.

சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக் கொண்டு சாப்பிட ஏற்ற பொரியலாகும்.


கூட்டுக்காய் பிரட்டல்

தேவையான பொருட்கள்:

காய் வகை- 500 கிராம் காலிஃளார் , பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, பீட்ரூட்,குடைமிளகாய் மற்றும் காரட். வெங்காயம் -1 தக்காளி -1 இஞ்சிபூண்டு விழுது -2 தேக்கரண்டி மசாலா பொடி-1 தேக்கரண்டி மிளகாய் பொடி-2 தேக்கரண்டி உப்பு -1 தேக்கரண்டி

தாளிக்க:
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி சோம்பு -1/2 தேக்கரண்டி சீரகம் 1/2 தேக்கரண்டி

செய்முறை:
காய் வகையை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யவும்.

வெங்காயம் சேர்த்து வதக்கவும், இரண்டு நிமிடத்தில் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

வெட்டிய உருளைக்கிழங்கு,பீட்ரூட் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பின்னர் இதர காய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
அல்லது அனைத்து காய்களையும் பக்குவமாக வேகவைத்தும் சேர்க்கலாம்.

உப்பு, மசாலாபொடி, மிளகாய்ப்பொடி சேர்த்து கிளறவும், 1/2 கோப்பை தண்ணீர் சேர்த்து
மூடி இட்டு பூப்போன்று வேகவிடவும்.

தேவைக்கேற்ப தேங்காய்ப்பால் அல்லது 2 மேஜைக்கரண்டி தேங்காய், சீரகம் அரைத்த விழுது சேர்த்து சுருளவிடவும், இது சுவைகூட்டுவதோடு விருந்துக்கு அளவும் அதிகமாகும்.

சத்து நிறைந்த கூட்டுக்காய் பிரட்டல் தயார்

அசத்தும் ருசிச்சிறப்பு இந்த கூட்டுக்காய் பிரட்டலுக்கு உண்டு, சுவை மட்டுமன்றி அனைத்து காய் சேர்க்கையின் சத்தும் கலந்தது இதன் முக்கியச்சிறப்பு. சிறந்த சேர்க்கை ரொட்டி அல்லது சாதம், ரசம்.


பூக்கோசு(காலிபிளவர்) மிளகு வறுவல் :

தேவையான பொருட்கள்:

பூக்கோசு -500 கிராம் வெங்காயம்-1 பச்சை மிளகாய்-1 மிளகுத்தூள்-1 1/2 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் -1 மேஜைக்கரண்டி கடுகு-1/2 கறிவேப்பிலை-1 கொத்து மிளகுத்தூள்: மிளகு-1 தேக்கரண்டி சீரகம் -1/2 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு -1 1/2 தேக்கரண்டி
மேலேகூறிப்பிட்டுள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து, சூடு ஆறியது பொடித்துவைத்துக்கொள்ளவும்.

செய்முறை:
பூக்கோசை வெந்நீரில் உப்பு சேர்த்து அதில் போட்டு 3 நிமிடம் மூடி வைக்கவும்.

பின்னர் நீரை வடித்து தயாராக வைத்துக்கொள்ளவும்.

மேல்கூறியபடி மிளகுத்தூள் தயாரித்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்யவும்.

வெங்காயம், பச்சைமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், பிறகு பூக்கோசு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில், சிறிது நீர் தெளித்து, மூடிவைத்து வேகவிடவும்.

மிதமான தீயில், பொறுமையாக வேகவைத்தால் நிறம் வெண்மையாக இருக்கும்.

அல்லது பூக்கோசை ஆவியில் வேகவைத்தும் எடுத்துக்கொள்ளவும்.

பூக்கோசு நன்கு வெந்ததும் பொடித்துவைத்துள்ள மிளகு பொடியை சேர்த்து வறுத்து எடுக்கவும்.

பூக்கோசு மிளகு வறுவல் அனைவருக்கும் ஏற்றது, செய்முறையும் எளிமையானது. காரக்குழம்பு, சாம்பார் போன்றவற்றிற்கு இணையாகும். உடன் தயாரித்த மிளகுத்தூள் இதன் சுவைச்சிறப்பு.


வாழைக்காய் வறுவல் :

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் 2 சோம்பு-1 தே .க சீரகம் 1/2 தே .க தக்காளி-1 சிறிய பூண்டு-5 பல் மிளகாய்த்தூள்-1 தே .க மஞ்சள்தூள்-1/4 தே .க உப்பு-1/2 தே .க

செய்முறை:

வாழைக்காயை தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும். (தண்ணீரில் போட்டு வைக்கவும் நிறம் கருக்காமல் இருக்கும்.)

வாழைக்காய்த்தவிர அனைத்து பொருட்களையும் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

நறுக்கிய வழைக்கயுடம் அரைத்த விழுதை சேர்த்து பிசறவும்.

அடி கனமான பத்திரத்தில், 4 தேக்கரண்டி எண்ணெய் காய வைத்து கறிவேப்பிலை சேர்த்து பிசறிய வாழைக்காயை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். த ண்ணீர் சேர்க்காமல் வேகும் வரை வதக்கவும்.

வாழைக்காய் வறுவல் ரெடி.

பெருமை வாய்ந்த வாழை மரம் முழுமையான மகத்துவம் நிறைந்தது, அதன் அடி முதல் நுனி வரை பயன் தரக்கூடியது. முக்கியமாக நாம் சமையலில் பயன்படுத்தும். வாழைக்காய்,வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், முறையே சமைத்த இவை அனைத்தையும் வைத்து உட்கொள்ள உதவும் வாழை இலை. அற்புதம், இதன் மருத்துவ குணம் நிறைந்த படைப்பு.
வாழைக்காயின் மிக எளிய, ருசியான குறிப்பு வாழைக்காய் வறுவல், இது ரசம் சாதம், சாம்பார் சதம், தயிர் சாதம் என எல்லாவற்றுடனும் பொருந்தும்.


காளான் மிளகு வறுவல்

தேவையான பொருட்கள்:

காளான் -200 கிராம், சிறிதாக நறுக்கிக்கொள்ளவும் உப்பு-1/2 தேக்கரண்டி மிளகு போடி-1/2 தேக்கரண்டி எண்ணெய் -2 தேக்கரண்டி

செய்முறை:

கடாயைக்காய வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய காளான் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

உப்பு சேர்த்து கிளறவும்,இப்பது வேகத்தேவையான நீர் அதிலிருந்தே சுரக்கும் ஆகையால் தண்ணீர் சேர்க்கத்தேவையில்லை.

சில நொடிகளில் வெந்துவிடும் குணம் உடையது காளான். இப்போது முனுக்கிய மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.

இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது ப்ரெட்டுடன் சேர்த்தும் பரிமாறலாம்

குறிப்பு : இதனுடன் முட்டை சேர்த்து கிளறலாம் காலை உணவிற்க்கு ஏற்றது.

மருத்துவ குணம் நிறைந்த இந்தக்காளான் பற்றி அனைவரும் அறிந்ததே, சுவையும், மனமும், கூடவே சத்தும் நிறைந்த இந்த காளான் உடலுக்கு பலத்தையும், தெம்பையும் கொடுக்கவல்லது. இவ்வளவு அறிந்தும் ஏன் காளான் மாத்திரைகள்? நேரடியாக காளான் சமைத்து அதன் லாபத்தை பெறுவோமே!


ஸ்டஃப்டு கத்தரிக்காய்

தேவை: பிஞ்சு கத்தரிக்காய் அரை கிலோ, உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது.

அரைக்க: சின்ன வெங்காயம் 10, தக்காளி 2, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், தனியாத் தூள் 1 டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பூண்டு 6 பல், சோம்பு 1 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 1.

செய்முறை: கத்தரிக் காயை பாதி காம்பு வரை நறுக்கி நான்காக கீறி (முழுவதுமாக வெட்டக் கூடாது) வையுங்கள். அரைக்கக் கூறியுள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து அரைத்து, (தண்ணீர் சேர்க்க கூடாது) உப்பு சேர்த்து வையுங்கள். இந்தக் கலவையை கத்தரிக் காயினுள் சிறிது சிறிதாக அடைத்து வையுங்கள்.

எண்ணெயை சூடாக்கி, அதில் கத்தரிக் காய்களை போடுங்கள். அரைத்த பொடி மீதமிருந்தால் அதையும் காயோடு சேர்த்து, மிதமான தீயில், மூடி வைத்து, அடிக்கடி கிளறிவிட்டு வேக வையுங்கள். வெந்ததும் கறிவேப்பிலை தூவி கிளறி இறக்குங்கள்.

**************************************

சேனை ஸ்பெஷல் வறுவல்

தேவை: சேனைக்கிழங்கு அரை கிலோ, உப்பு, எண்ணெய் தேவைக்கு, மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், புளி சிறு நெல்லிக்காய் அளவு.

அரைக்க: மிளகு, சீரகம் தலா 2 டீஸ்பூன், சோம்பு, மிளகாய்த் தூள் தலா 1 டீஸ்பூன், பூண்டு 6 பல்.

செய்முறை: சேனைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, சற்று கனமான, அகலமான துண்டுகளாக நறுக்குங்கள். இதனை தண்ணீரில் போட்டு அதனுடன் புளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து முக்கால் பதத்துக்கு கிழங்கை வேகவைத்து இறக்குங்கள். பிறகு நீரை வடித்துவிட்டுக் கிழங்கை தனியே எடுத்து வையுங்கள்.

அரைக்கக் கூறியுள்ள பொருட்களைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுத்து, சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்குங்கள். இந்த விழுதை கிழங்குத் துண்டுகள் ஒவ்வொன்றின் மீதும் தடவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். தோசைக் கல்லைச் சூடாக்கி, அதன்மீது கிழங்குகளைப் பரவலாக அடுக்கி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, கிழங்குகளை இரு புறமும் திருப்பி விட்டு மொறுமொறுப்பாக வேக வைத்தெடுங்கள்.


பீன்ஸ் பொடிமாஸ்

தேவை: பீன்ஸ் கால் கிலோ, பெரிய வெங்காயம் 1, உப்பு தேவைக்கு, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன், சோம்பு அல்லது கடுகு அரை டீஸ்பூன், பொட்டுக் கடலை 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: பீன்ஸை பொடியாக நறுக்கி சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேக வையுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். பொட்டுக் கடலையை நைஸாக பொடித்து வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி சோம்பு அல்லது கடுகைத் தாளியுங்கள். பிறகு வெங்காயம், மிளகாய்த் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்குங்கள். பிறகு பீன்ஸை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, பொட்டுக் கடலைப் பொடியை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.


நெல்லை உருளைப் பொரியல்

தேவை: உருளைக்கிழங்கு அரை கிலோ, பெரிய வெங்காயம் 2, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன்.

அரைக்க: தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், சின்ன வெங்காயம் 5

செய்முறை; உருளைக்கிழங்கை தோல் நீக்கி விரல் நீளத் துண்டுகளாகவும், வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களைச் சிறிதளவு தண்ணீர் விட்டு சற்று கரகரப்பாக அரைத்து வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் கிழங்கு, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துக் கிளறி, அரை கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேகவையுங்கள். கிழங்கு முக்கால் பதம் வெந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, கிழங்கு வெந்து சுருளும் வரை கிளறி, கறிவேப்பிலைத் தூவி இறக்குங்கள்.


பப்பாளிக்காய் பொரியல்

தேவை: பப்பாளிக்காய் (சிறிய சைஸ்) 1, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 3, மலர வெந்த துவரம் பருப்பு, தேங்காய்த் துருவல் தலா 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.

செய்முறை: பப்பாளிக்காயை தோல், விதை நீக்கி, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து தண்ணீரில் வேகவைத்து வடித்து வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் வேகவைத்த காய், தேங்காய்த் துருவல், துவரம் பருப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.


பிஞ்சுமக்காச்சோளப்பொரியல்

தேவை: பிஞ்சு மக்காச் சோளம் 1 கிலோ, உப்பு தேவைக்கு, எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்

அரைக்க: தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 5, இஞ்சி 1 துண்டு, பூண்டு 6 பல், புதினா, மல்லி தலா 1 கைப்பிடி.

செய்முறை: மக்காச்சோளத்தின் பட்டைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து பிசறி ஆவியில் ஐந்து நிமிடம் வேகவையுங்கள். அரைக்கக் கூறியுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் விட்டு அரையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாடை போகக் கிளறுங்கள். பிறகு சோளம், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.


கலர்ஃபுல் பொரியல்

தேவை: கோஸ் கால் கிலோ, கேரட் 2, பீன்ஸ் 100 கிராம், பட்டாணி அரை கப், பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் 1 கப், தேங்காய்த் துருவல் 1 கப், மலர வேக வைத்த பாசிப் பருப்பு அரை கப், வேக வைத்த கடலைப் பருப்பு அரை கப், உப்பு தேவைக்கு, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 4, இஞ்சி 1 துண்டு, கடுகு 1 டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 2

செய்முறை: காய்கறிகளைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, சிறிதளவு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடித்துவிட்டு வையுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய் வற்றலை சேர்த்து வதக்குங்கள். அதில் வேக வைத்துள்ள காய்கறி, பருப்பு வகைகள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.


பரங்கிக்காய் பொரியல்

தேவை: பரங்கிக்காய் கால் கிலோ, வேகவைத்த வேர்க் கடலை அரை கப், வெல்லம் 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 2, கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை: பரங்கிக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்குங்கள். வேர்க் கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, மிளகாய் வற்றலை (முழுதாக) சேர்த்து வறுத்து அதனுடன் பரங்கிக்காயை சேருங்கள். அதில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்துக் கிளறுங்கள். காய் வெந்ததும் வேர்க்கடலை, வெல்லம், தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.


கத்தரிப் பொடி பொரியல

தேவை: கத்தரி அரை கிலோ, உப்பு தேவைக்கு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன்.

பொடிக்க: முழு உளுந்து 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 5, மிளகு அரை டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், முந்திரி 5.

செய்முறை: கத்தரிக்காயை நீளவாக்கில்நறுக்குங்கள். பொடிக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களை தனித் தனியே வறுத்து (பச்சை மிளகாயை சிறு தீயில், நன்கு வெளுப்பாகும்வரை வறுக்க வேண்டும்) பிறகு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து நைஸாக பொடித்து வையுங்கள்.

எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்தை தாளித்து கத்தரிக்காயை, தேவையான உப்பு சேர்த்து லேசாகக் கிளறுங்கள். மிதமான தீயில், மூடி வைத்து வேகவைக்க வேண்டும். கத்தரிக்காய் வெந்து, தண்ணீர் வற்றியதும் பொடியைத் தூவிக் கிளறி இறக்குங்கள்.


வாழைக்காய் ப்ரெட் பொரியல்

தேவை: வாழைக்காய் 2, உப்பு ப்ரெட் 3 ஸ்லைஸ், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, உப்பு, எண்ணெய் தேவைக்கு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்.

அரைக்க: தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், கரம் மசாலா அரை டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பூண்டு 5 பல்.

செய்முறை: வாழைக்காயை தோல் நீக்கி விரல் நீளத் துண்டுகளாக சற்று கனமாக நறுக்குங்கள். வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். தண்ணீரில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூளைப் போட்டு அதில் வாழைக்காயைச் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டி காய்களைத் தனியே எடுத்து வையுங்கள். எண்ணெயைக் காயவைத்து அதில் காய்களை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரித்தெடுங்கள். ப்ரெட்டையும் விரல் நீளத்துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்தெடுங்கள். மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு உளுந்தைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். சிறிது வதங்கியதும் தக்காளி, அரைத்து வைத்துள்ள விழுது, சிறிதளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கிளறுங்கள். பிறகு வாழைக்காயைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் கிளறி, வறுத்த ப்ரெட், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.


சேம்பு ரோஸ்ட் பொரியல்

தேவை: சேப்பங்கிழங்கு அரை கிலோ, பெரிய வெங்காயம் 1, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு, கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன்.

அரைக்க: சின்ன வெங்காயம் 10, சீரகம் 1 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், பூண்டு 4 பல்.

செய்முறை: கிழங்கை வேகவைத்து தோலை நீக்கிவிட்டு நான்காக நறுக்குங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். சிறிதளவு எண்ணெயை சூடாக்கிக் கிழங்குகளை வறுத்தெடுங்கள். இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்தைத் தாளித்து வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு மிளகாய்த் தூள், சேப்பங் கிழங்கு, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பிறகு அரைத்த விழுது சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.


முள்ளங்கி பொரியல்

தேவை: வெள்ளை முள்ளங்கி கால் கிலோ, வெங்காயம் 2, தக்காளி 2, மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு, சோம்பு தலா அரை டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன், பூண்டு 4 பல்.

செய்முறை: முள்ளங்கியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். நறுக்கிய முள்ளங்கியை தண்ணீரில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பூண்டை நசுக்கி வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் கிளறி பிறகு முள்ளங்கி, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.


முருங்கை மசாலாப்பொரியல்

தேவை: முருங்கைக்காய் 3, பெரிய வெங்காயம் 2, தக்காளி 4, உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

அரைக்க: தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், மல்லித் தூள் 1 டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பூண்டு 5 பல், சோம்பு 1 டீஸ்பூன்.

செய்முறை: முருங்கைக்காயை விரல் நீளத் துண்டுகளாக நறுக்குங்கள்.வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கூறியுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்தெடுங்கள். எண்ணெயைச் சூடாக்கி வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பின்னர் முருங்கைக்காய், அரை கப் தண்ணீர் சேர்த்துக் கிளறி, மூடி வையுங்கள். தீ மிதமாக எரிய வேண்டும். முருங்கைக்காய் வெந்ததும், தீயை அதிகப்படுத்தி, கறிவேப்பிலை தூவி, சுருளக் கிளறி இறக்குங்கள்.


பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல்

தேவை: பீன்ஸ் அரை கிலோ, பெரிய வெங்காயம் 2, மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன், கெட்டி தேங்காய்ப்பால் அரை கப், பூண்டு 4 பல், உப்பு தேவைக்கு, எண்ணெய் ஒன்றரை டேபிள் ஸ்பூன்.

செய்முறை: பீன்ஸை குறுக்குவாக்கில் ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கி, தேவையான உப்பு சேர்த்து வேக வைத்தெடுங்கள். (அரை கப் தண்ணீர் விட்டு குக்கரில் போட்டு ஒரு விசில் வந்ததும் ஆவியை நீக்கி, நீரை வடித்துவிட்டு காயை எடுத்து வைத்தால் காய் சரியான பதத்தில் வெந்திருக்கும்) பூண்டை நசுக்குங்கள். வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி வெங்காயம், பூண்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்குங்கள். சிறிது வதங்கியதும் வெந்த பீன்ஸ், தேங்காய்ப்பால், மிளகாய்த் தூள் சேர்த்து தேங்காய்ப்பால் வற்றும் வரை கிளறி இறக்குங்கள்.


காலிஃப்ளவர் மிளகுப் பொரியல்

தேவை: காலிஃப்ளவர் சிறியது 1, பெரிய வெங்காயம் 2, எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: மிளகு 1 டேபிள் ஸ்பூன், சீரகம் 2 டீஸ்பூன், சோம்பு அரை டீஸ்பூன், பட்டை லவங்கம் ஏலக்காய் தலா 1, பூண்டு 6 பல், இஞ்சி 1 சிறு துண்டு

செய்முறை: காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்குங்கள். அரைக்கக் கூறியுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு நீர் விட்டு நைஸாக அரையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி வெங்காயம், மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்குங்கள். பின்னர் காலிஃப்ளவர், தேவையான உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து மிதமான தீயில், அரை பதத்துக்கு வேக வையுங்கள். பிறகு மூடியைத் திறந்து அரைத்த விழுதை சேர்த்து, காய் நன்றாக வேகும்வரை சுருளக் கிளறி இறக்குங்கள்.


வாழைக்காய் பூண்டு வறுவல் :

தேவையான பொருட்கள் :

வாழைக்காய் – 3

அரைக்கத்தேவையான பொருட்கள்:
பூண்டு -5 பல் தோலுரித்தது தக்காளி- 1 சிறியது, சோம்பு-1/2 தனிமிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி மஞ்சள்தூள்-1/4 தேக்கரண்டி உப்பு-1/2 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய்- 2 மேஜைக்கரண்டி சோம்பு-1/2 சீரகம்-1/4 கறிவேப்பிலை 1 கொத்து

செய்முறை:

வாழைக்காயை தோலகற்றி, அரைவட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.

அரைக்கும் பொருட்களை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த விழுதை நறுக்கிய வாழைக்காயுடன் பிரட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யவும்.

மசாலா பிரட்டியை வாழைக்காயை அதில் சேர்த்து இளந்தீயில் மூடி வைத்து,வறுத்தெடுக்கவும்.

சுவையான வாழைக்காய் பூண்டு வறுவல் ரெடி செய்து மகிழுங்கள் .

வாழைக்காய் பூண்டு வறுவல், மணமும் சுவையும் நிறைந்தது, சமைக்கும்போதே சுவைக்கத்தூண்டும். மீண்டும், மீண்டும் செய்யத் தோன்றும் ஒரு அற்புத குறிப்பு. பூண்டின் மணமும் , சுவையும் இதன் தனிச்சிறப்பு. மருத்துவ குணம் நிறைந்தது பூண்டு என்பது அறிந்ததே, அதோடு மட்டுமல்லாமல் வாழைக்காய் என்றாலே நம் சிந்தையில் தோன்றுவது வாய்வுத்தொல்லை, அதைக்குறைக்கும் வகையில் உணவே மருந்து என்பதற்கு ஏற்ப இந்தக்கலவை சேர்க்கப்பட்டுள்ளது.


கத்திரிக்காய் வறுவல் :

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய்-1/2 கிலோ, பிஞ்சாக இருந்தால் நல்லது.

அரைக்க :

சின்ன வெங்காயம்-5-7 உரித்தது பூண்டு-3 பல் உரித்தது தக்காளி-1 சிறியது தனி மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி, அல்லது சிவப்பு மிளகாய் -3, 5 உப்பு-3/4 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் -1 மேஜைக்கரண்டி சோம்பு-1/2 தே .க உளுந்து -1/2 தே .க கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை :

கத்திரிக்காயை நீல வாக்கில் சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.

மேலே குறிப்பிட்டுள்ள அரைக்கும் பொருட்களை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யவும்.

நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து நிறம் மாறும்வரை நன்கு வதக்கவும்.

பிறகு அரைத்த விழுதை சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து, வறுத்து எடுக்கவும். வதங்கும் போதே மணம் பிரமாதமாக இருக்கும்.

சுவையான கத்திரிக்காய் வறுவல் தயார்.

ஊட்டச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த, அதிக அளவில் நாம் பயன்படுத்தும் கத்திரிக்காயில் ஒரு எளிய சுவையான வறுவல். இது ரசம், சாம்பார், தயிர் சாதம் என எல்லாவற்றிற்கும் ஏற்றது.

கத்திரிக்காய் வறுவல்: எண்ணெய் குறைவு, சுவையோ அதிகம், செய்வது எளிது.


வாழைக்காய் வறுவல் :

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் 2 சோம்பு-1 தே .க சீரகம் 1/2 தே .க தக்காளி-1 சிறிய பூண்டு-5 பல் மிளகாய்த்தூள்-1 தே .க மஞ்சள்தூள்-1/4 தே .க உப்பு-1/2 தே .க

செய்முறை:

வாழைக்காயை படத்தில் காண்பது போல் தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும். (தண்ணீரில் போட்டு வைக்கவும் நிறம் கருக்காமல் இருக்கும்.)

வாழைக்காய்த்தவிர அனைத்து பொருட்களையும் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

நறுக்கிய வழைக்கயுடம் அரைத்த விழுதை சேர்த்து பிசறவும்.

அடி கனமான பத்திரத்தில், 4 தேக்கரண்டி எண்ணெய் காய வைத்து கறிவேப்பிலை சேர்த்து பிசறிய வாழைக்காயை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். த ண்ணீர் சேர்க்காமல் வேகும் வரை வதக்கவும்.

வாழைக்காய் வறுவல் ரெடி.

பெருமை வாய்ந்த வாழை மரம் முழுமையான மகத்துவம் நிறைந்தது, அதன் அடி முதல் நுனி வரை பயன் தரக்கூடியது. முக்கியமாக நாம் சமையலில் பயன்படுத்தும். வாழைக்காய்,வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், முறையே சமைத்த இவை அனைத்தையும் வைத்து உட்கொள்ள உதவும் வாழை இலை. அற்புதம், இதன் மருத்துவ குணம் நிறைந்த படைப்பு.
வாழைக்காயின் மிக எளிய, ருசியான குறிப்பு வாழைக்காய் வறுவல், இது ரசம் சாதம், சாம்பார் சதம், தயிர் சாதம் என எல்லாவற்றுடனும் பொருந்தும்.


காளான் மிளகுப் பொரியல்

தேவை: காளான் 200 கிராம், சின்ன வெங்காயம் 1 கப், இஞ்சி 1 துண்டு, பூண்டு 8 பல், மிளகுத்தூள் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, சீரகம் அரை டீஸ்பூன்.

செய்முறை: காளானை சுத்தம் செய்து இரண்டிரண்டாக நறுக்குங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயை சூடாக்கி சீரகத்தைத் தாளித்து, வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் தூவி வதக்குங்கள். வதங்கியதும் காளானைச் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி, மிளகுத்தூள், கறிவேப்பிலை தூவி மேலும் மூன்று நிமிடம் கிளறி இறக்குங்கள்.


பீட்ரூட் பொடிமாஸ்

தேவை: பீட்ரூட் அரை கிலோ, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், வேகவைத்த கடலைப் பருப்பு அரை கப், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை: பீட்ரூட்டை தோல் நீக்கி துருவுங்கள். எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து துருவிய பீட்ரூட், உப்பு சேர்த்து, மிதமான தீயில் பீட்ரூட் வேகும் வரை கிளறுங்கள். பிறகு மிளகாய்த் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்குங்கள்.


பனீர் பொடிமாஸ்

தேவை: பனீர் 200 கிராம், சின்ன வெங்காயம் 15, இஞ்சி 1 துண்டு, பூண்டு 8 பல், பச்சை மிளகாய் 4, தக்காளி 1, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு, உப்பு தேவைக்கு, சோம்பு அல்லது கடுகு அரை டீஸ்பூன்.

செய்முறை: பனீரை உதிர்த்து வையுங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி சோம்பு (அல்லது கடுகு) தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி சேர்த்துக் கிளறி பனீர், மல்லித்தழை, உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள்.


பனங்கிழங்குப் பொரியல்

தேவை: பனங்கிழங்கு 4, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சைச் சாறு 1 டேபிள் ஸ்பூன்.

பொடிக்க: மிளகாய் வற்றல் 10, தனியா, கடலைப் பருப்பு, தேங்காய்த்துருவல் தலா 1 டேபிள் ஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன்.

செய்முறை: பனங்கிழங்கின் தோலை நீக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வையுங்கள். ஆறியதும் தோல், நடு நரம்பை நீக்கிவிட்டு பொடியாக நறுக்குங்கள். ஒரு டீஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து மிதமான தீயில் சிவக்க வறுத்துப் பொடியுங்கள். மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கி, கடுகு உளுந்து தாளித்து நறுக்கிய பனங்கிழங்கு, அரைத்து வைத்துள்ள பொடி, உப்பு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.


காளான் மிளகு வறுவல்

தேவையான பொருட்கள்:

காளான் -200 கிராம், சிறிதாக நறுக்கிக்கொள்ளவும் உப்பு-1/2 தேக்கரண்டி மிளகு போடி-1/2 தேக்கரண்டி எண்ணெய் -2 தேக்கரண்டி

செய்முறை:

கடாயைக்காய வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய காளான் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

உப்பு சேர்த்து கிளறவும்,இப்பது வேகத்தேவையான நீர் அதிலிருந்தே சுரக்கும் ஆகையால் தண்ணீர் சேர்க்கத்தேவையில்லை.

சில நொடிகளில் வெந்துவிடும் குணம் உடையது காளான். இப்போது முனுக்கிய மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.

இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது ப்ரெட்டுடன் சேர்த்தும் பரிமாறலாம்

குறிப்பு : இதனுடன் முட்டை சேர்த்து கிளறலாம் காலை உணவிற்க்கு ஏற்றது.

மருத்துவ குணம் நிறைந்த இந்தக்காளான் பற்றி அனைவரும் அறிந்ததே, சுவையும், மனமும், கூடவே சத்தும் நிறைந்த இந்த காளான் உடலுக்கு பலத்தையும், தெம்பையும் கொடுக்கவல்லது. இவ்வளவு அறிந்தும் ஏன் காளான் மாத்திரைகள்? நேரடியாக காளான் சமைத்து அதன் லாபத்தை பெறுவோமே!


வெண்டைக்காய் வறுவல்:

தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் -1/2 கிலோ தக்காளி-1 சிறியது பூண்டு -3 -4 பல் சீரகம் -1/2 தேக்கரண்டி அரிசி மாவு-1 தேக்கரண்டி சோள மாவு -1 மிளகாய் த்தூள் -1 தேக்கரண்டி எண்ணெய் -4 லிருந்து 8 தேக்கரண்டி

செய்முறை :

வெண்டைக்காயைக்கழுவி, அடி நுனி வெட்டி கொள்ளவும்.

அடி பகுதியிலிருந்து நுனி வரை நேராக வகுந்து கொள்ளவும்.

சீரகம், தக்காளி, உப்பு, மிளகாய்ப்பொ டி, உரித்த பூண்டு, அரிசி மாவு, சோள மாவு எல்லாம் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வகுந்த வெண்டைக்காயினுள் அரைத்த விழுதை அடைக்கவும், சுமார் 1/4 தேக்கரண்டி

தோசைக்கல் காயவைத்து சிறிது எண்ணெய் (1 1tsp) விட்டு மிதமான தீயில் வறுக்கவும். வெந்தவுடன் சூடாக பரிமாறவும்

வெண்டைக்காய் வறுவல் அற்புதமான சுவையுடையது, மீண்டும் மீண்டும் உண்ணத் தூண்டும் பதார்த்தம். வெண்டைக்காய் விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்ணச்செய்யும் இந்த வறுவல், மனமும் சுவையும் பசியைத்து தூண்டும், செய்முறையும் சுலபமானது .


சர்க்கரைவள்ளி கிழங்கு மிளகு வறுவல் :

செய்முறை:

சர்க்கரை வள்ளி கிழங்கை கழுவி வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.

மூன்று நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

வானலியில் எண்ணெய் காயவைத்து வர மிளகாய்,கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக்கொள்ளவும்.

கறிவேப்பிலை சேர்த்து சர்க்கரைவள்ளி கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும் .

இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை மிதமான தீயில் வறுத்தெடுக்கவும்.

சுவையான மொறு மொறு சர்க்கரைவள்ளி கிழங்கு வறுவல் ரெடி .

சத்து மிகுந்த சர்க்கரைவள்ளி கிழங்கு தற்சமயம் அதிகமாக கடைகளில் காண முடிகிறது இதன் மருத்துவ குணங்கள் கருதி நாம் நமது உணவில் சேர்த்து பயன்பெறும் வகையில் சுலபமான சமையல் குறிப்புகளுடன் சுவையான மிளகு வருவல். உண்ண, உண்ண தெவிட்டாத சுவை சமைத்து பாருங்கள்.


பலாக்காய் கோலா உருண்டை:

தேவையான பொருட்கள் :

பலாக்காய் துண்டுகள் -2 கோப்பை பலாக்காய் தோலகற்றி, துண்டுகளாக வெட்டி, மஞ்சள், உப்பு சேர்த்து ஒரு விசில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வருக்கத்தேவையான எண்ணெய் பொட்டுக்கடலை 2 மேஜைக்கரண்டி

அரைக்க :

பச்சை மிளகாய் -4 பூண்டு- 5 பல் இஞ்சி-1 சிறு துண்டு சோம்பு -1 தேக்கரண்டி சீரகம்-1/2 தேக்கரண்டி முந்திரி பருப்பு -5 மிளகு-5 பட்டை, கிராம்பு -சில

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தேக்கரண்டி எண்ணெய்யில் வருத்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

பொட்டுக்கடலை 2 மேஜைக்கரண்டி பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்,

வேகவைத்த பலாக்காயை ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும்அல்லது மசித்துக்கொள்ளவும்,

வேகவைத்த பலாக்காய் , அரைத்த விழுது, பொட்டுக்கடலை மாவு, உப்பு சிறிது சேர்த்து நன்றாக கலந்து ,சிறு,சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் காயவைத்து பொன்நிறமாக வருத்தெடுக்கவும் .

சுவையான பலாக்காய் கோலா உருண்டை தயார்.

சைவத்தில் ஓர் அசைவ உணவின் செய்முறை கொண்டு அனைவரும் விரும்பும் அற்புத சுவை படைத்திடுவீர்.

பலாக்காய் கோலா உருண்டை எளிய முறையில் சிரமமின்றி தயாரிக்கலாம் சுவையும், மனமும் பசியைத்தூண்டும்.

**************************************

ஆந்திர கோவைக்காய்ப் பொரியல்

தேவை: கோவைக்காய் அரை கிலோ, உப்பு தேவைக்கு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன்.

அரைக்க: சின்ன வெங்காயம் 10, மிளகாய் வற்றல் 8.

செய்முறை: காய்களைக் கழுவி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். வெங்காயத்தின் தோலை நீக்கி வையுங்கள். 2 டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து மிளகாய் வற்றலை லேசாக வறுத்து பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கி ஆறவைத்து ஒன்றிரண்டாக அரைத்து வையுங்கள். தண்ணீர் சேர்க்கக் கூடாது.

மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கி கடுகை தாளித்து, நறுக்கிய காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து, மிதமான தீயில் வேக வையுங்கள். முக்கால் பதம் வெந்ததும் மூடியை நீக்கிவிட்டு வெங்காயக் கலவையைச் சேருங்கள். பச்சை வாடை நீங்கி, கலவை வதங்கி சுருண்டதும் இறக்குங்கள்.


உருளைக்கிழங்கு ஸ்பெஷல் ஃபிரை

தேவை: உருளைக்கிழங்கு அரை கிலோ, உப்பு, எண்ணெய் தேவைக்கு.

அரைக்க: இஞ்சி 1 துண்டு, பூண்டு 6 பல், சோம்பு 1 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்.

செய்முறை: உருளைக்கிழங்கை தோல் நீக்கி, அரை அங்குல கனத்துக்கு வட்ட வட்டமாக வெட்ட வேண்டும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து, அதனோடு உப்பைக் கலந்து வையுங்கள். இந்தக் கலவையை உருளைக்கிழங்கு துண்டு ஒவ்வொன்றின் மீதும் தடவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.

தோசைக் கல்லை சூடாக்கி, அதன் மேல் கிழங்குகளை பரவலாக அடுக்கி வைத்து, சுற்றிலும் எண்ணெயை ஊற்றுங்கள். இதனை இருபுறமும் திருப்பிப்போட்டு மொறுமொறுப்பாக நன்கு வேக வைத்து இறக்குங்கள்.


கத்தரி மொச்சைப் பொரியல்

தேவை: கத்தரிக்காய் கால் கிலோ, காய்ந்த மொச்சை விதை அரை கப், பெரிய வெங்காயம் 2, புளி நெல்லிக்காய் அளவு, உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன்.

பொடிக்க: மிளகாய் வற்றல் 8, தனியா 1 டேபிள் ஸ்பூன், கடலைப் பருப்பு 2 டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: மொச்சையை ஓர் இரவு முழுக்க ஊற வைத்து, உப்பு சேர்த்து வேக வைத்து, நீரை வடித்துவிட்டு வையுங்கள். கத்தரிக்காயையும் வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்குங்கள். புளியை அரை கப் நீரில் கரைத்து வடிகட்டுங்கள்.

ஒரு டீஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, பொடிக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து சிறு தீயில் சிவக்க வறுத்து, நைஸாக பொடித்து வையுங்கள். மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து வெங்காயத்தை வதக்குங்கள். வதங்கியதும் கத்தரிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் கிளறுங்கள். கத்தரிக்காய் முக்கால் பதம் வெந்ததும், புளி கரைசல், வேகவைத்த மொச்சை, அரைத்து வைத்துள்ள பொடி ஆகியவற்றை சேர்த்து சுருளக் கிளறி கறிவேப்பிலை தூவி இறக்குங்கள்.


கோஸ் கடலைப் பருப்புப் பொரியல்

தேவை: முட்டை கோஸ் கால் கிலோ, கடலைப் பருப்பு கால் கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, கடுகு 1 டீஸ்பூன், சோம்பு அரை டீஸ்பூன்.

செய்முறை: கோஸ், வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்குங்கள். கடலைப் பருப்பை பதமாக வேகவைத்து நீரை வடித்துவிட்டு வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, சோம்பு தாளித்து அதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, அதனுடன் கோஸ், உப்பைச் சேர்த்து, மிதமான தீயில், கோஸ் வேகும் வரைக் கிளறி, கடைசியில் கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.


வெண்டைக்காய் பொடிப் பொரியல்

தேவை: பிஞ்சு (விரல் நீள) வெண்டைக்காய் அரை கிலோ, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், தனியாத் தூள் 1 டீஸ்பூன், மாங்காய் (ஆம்சூர்) தூள் 1 டீஸ்பூன், சீரகத் தூள் 1 டீஸ்பூன், கரம் மசாலா அரை டீஸ்பூன், உப்பு முக்கால் டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: வெண்டைக்காய்களை காம்பு, வால் பகுதிகளை நீக்கிவிட்டு நடுவில் லேசாகக் கீறி வையுங்கள். காய், எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலக்குங்கள். இந்தப் பொடியை வெண்டைக்காய்களுக்குள் சிறிது சிறிதாக தூவி வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி, அதில் பொடி அடைத்த காய்களைப் போடுங்கள். மீதமுள்ள பொடிகளையும் தூவி மிதமான தீயில் அவ்வப்போது பிரட்டிவிட்டு மொறுமொறுப்பாக வேக வைத்தெடுங்கள்.


அவரைக்காய் மசாலா பொரியல்

தேவை: அவரைக்காய் அரை கிலோ, சின்ன வெங்காயம் 1 கப், தக்காளி 2, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன், கடலைப் பருப்பு 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை: அவரைக்காயை சற்று பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பைத் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி, மிளகாய்த் தூள், அவரைக் காய், உப்பு சேர்த்துக் கிளறி, அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி, மிதமான தீயில் வேக வையுங்கள். வெந்ததும் தீயை அதிகப்படுத்தி தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.


பலாக்கொட்டை சோயாப் பொரியல்

தேவை: பலாக்கொட்டை 15, சோயா 10 உருண்டைகள், பெரிய வெங்காயம் 2, தக்காளி 4, இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து, சோம்பு தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை: பலாக்கொட்டையை உப்பு சேர்த்து வேகவைத்து இரண்டாக நறுக்குங்கள். சோயாவை கொதி நீரில் இரண்டு நிமிடம் வைத்திருந்து அலசி எடுத்து, பிறகு குளிர்ந்த நீரில் போட்டு இரண்டு மூன்று முறை நன்கு அலசிப் பிழிந்து, இரண்டாக நறுக்கி வையுங்கள். வெங்காயம், தக்காளியை சன்னமாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து வெங்காயத்தை வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, பலாக்கொட்டை சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். கடைசியாக சோயா, கறிவேப்பிலை சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.


வாழைக்காய் முருங்கை கறி பொரியல்

தேவை: வாழைக்காய் 1, முருங்கைக்காய் 2, வெங்காயம் 2, தக்காளி 2, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கெட்டி தேங்காய்ப்பால் கால் கப், உப்பு தேவைக்கு எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன். கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு, உளுந்து, சோம்பு தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: வாழைக்காயைப் பொடியாக நறுக்குங்கள். முருங்கைக்காயின் சதைப் பகுதியை வழித்தெடுத்து வையுங்கள். வெங்காயம், தக்காளியை சன்னமாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, சோம்பு, கறிவேப்பிலையை தாளித்து வெங்காயத்தை வதக்குங்கள். வதங்கியதும் வாழைக்காய், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, வெந்ததும் தேங்காய்ப்பால், முருங்கையின் சதைப் பகுதி ஆகியவற்றைச் சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.


கோவைக்காய் கொண்டைக் கடலை பொரியல்

தேவை: கோவைக்காய் அரை கிலோ, கொண்டைக் கடலை அரை கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 2, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், தனியாத்தூள் 1 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம் தலா அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை: கோவைக்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நீளமாக, சன்னமாக நறுக்குங்கள். கொண்டைக்கடலையை ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் வற்றலை தாளித்து பிறகு வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். சிறிது வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு கோவைக்காய், மிளகாய்த் தூள், தனியாத் தூள், தக்காளி, உப்பு, வேகவைத்த கடலை ஆகியவற்றைச் சேர்த்து சுருளக் கிளறி இறக்குங்கள்.


சோளப் பொரியல்

தேவை: உதிர்த்த மக்காச் சோள முத்துக்கள் 1 கப், கேரட் 1, பனீர் 100 கிராம், பீன்ஸ் 10, பட்டாணி அரை கப், எண்ணெய் 1 டீஸ்பூன், சீரகத் தூள், மிளகாய்த் தூள் தலா அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: சோள முத்துக்களை சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து நீரை வடித்துவிட்டு வையுங்கள். கேரட், பீன்ஸை பொடியாக நறுக்குங்கள். சோளம் வேக வைத்த தண்ணீர் நிறைய மீதமிருந்தால் அதிலேயே நறுக்கிய காய்கள், பட்டாணி, பனீர் ஆகியவற்றை வேக வைத்து நீரை வடித்துவிட்டு வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி அதில் சோள முத்துக்கள், வேக வைத்த காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிளகாய்த் தூள், சீரகத் தூள், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.


மினி கோஸ் மஷ்ரூம் பொரியல்

தேவை: குட்டி கோஸ் 100 கிராம், காளான் 1 பாக்கெட், பெரிய வெங்காயம் 2, தக்காளி 2, இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், தனியாத் தூள் 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, கறிவேப்பிலை சிறிதளவு, மிளகு 1 டீஸ்பூன், சோம்பு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை: கோஸை நடுவில் பாதியளவுக்கு இரண்டாகக் கீறி வையுங்கள். காளானை இரண்டாகவும், வெங்காயம், தக்காளியைப் பொடியாகவும் நறுக்குங்கள். மிளகு, சோம்பு, கறிவேப்பிலையை வறுத்து பொடியுங்கள். எண்ணெயைச் சூடாக்கி, வெங்காயத்தை வதக்கி, பிறகு தக்காளி, கோஸ், மிளகாய்த் தூள் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்குங்கள். சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து, மிதமான தீயில் வேக வையுங்கள். காய் வெந்து பச்சை வாடை போனதும், காளானைச் சேர்த்து பொடித்து வைத்திருக்கும் பொடியைத் தூவிக் கிளறி இறக்குங்கள்.


மொறு மொறு பக்கோடா :

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 கோப்பை (100 கிராம்) அரிசி மாவு 1/2 கோப்பை (50 கிராம்) பெரிய வெங்காயம் – 2 பெரியது கறிவேப்பிலை -3 கொத்து சிறிதாக வெட்டிக்கொள்ளவும். பச்சை மிளகாய் – 2 சிறிதாக வெட்டிக்கொள்ளவும் மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி உப்பு- 1/4 தேக்கரண்டி சோம்பு- 1/2 தேக்கரண்டி எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி

செய்முறை:

பெரிய வெங்காயம் நீள வாக்கில் வெட்டிவைத்துக்கொள்ளவும்

பச்சைமிளகாய், கறிவேப்பிலை பொடியாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெட்டிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூள், சோம்பு- 1/2 தேக்கரண்டி சேர்த்து நன்கு பிசையவும்.

பின்னர், மாவு, எண்ணெய் சேர்த்து தண்ணீர் விடாமல் பிசறிக்கொள்ளவும். எண்ணெய், பக்கோடா மொறு மொறுப்பாக வர உதவும்.

தேவைப்பட்டால் 1 மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து மாவு வெங்காயத்தில் பரவும் படி பிசறி ரெடியாக வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் காயவைத்து பக்கோடாவை சிறிது சிறிதாக பரவலாக போட்டு பொறித்தெடுக்கவும்.

சுவையான மொறு மொறு வெங்காய பக்கோடா தயார். சூடான டீ, காப்பியுடன் பரிமாறவும்.

மொறு மொறு வெங்காய பக்கோடா நொடியில் தயாராகும் இடை பலகாரம். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், விருந்தாளிகள், என அனைவரையும் உங்கள் கை வண்ணத்தால் அசத்துங்கள்.

Scroll to Top