You cannot copy content of this page

வேர்க்கடலை & தேங்காய்ப்பால்

நிலக்கடலை என அழைக்கப்படும் வேர்கடலை ஃபேபேசீஸ் குடும்பத்திற்கு சொந்தமானது, மேலும் வேர்க்கடலை அதன் சாப்பிடக் கூடிய விதைகளுக்காக முக்கியமாக பயிரிடப்படுகிறது.

வேர்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்த அளவில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே உங்கள் நாவின் சுவை மொட்டுகளுடன் சேர்த்து நம் உடலுக்கும் வேர்கடலை ஒரு விருந்து ஆகும்.

பாலிபினால்கள், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பிற செயல்பாட்டு சேர்மங்களும் இந்த மொறுமொறுப்பான கொட்டைகளில் உள்ளன. வேர்க்கடலைகள், ரெஸ்வெராட்ரோல், பீனாலிக் அமிலங்கள், ஃபிளாவோனாய்டுகள் மற்றும் பைட்டோஸ்டெரோல்கள் போன்ற கலவைகளின் ஒரு பெரிய ஆதாரமாக இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது, இது நம் உணவில் இருந்து கெட்ட கொழுப்பு உறிஞ்சப்படுவதைத் தடுக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

எண்ணெய் உற்பத்தியைத் தவிர, வேர்க்கடலை வெண்ணெய், இனிப்பு தின்பண்டம், வறுத்த வேர்க்கடலை, சிற்றுண்டி பொருட்கள், சூப்கள் மற்றும் சாலட் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.

வேர்கடலை பற்றி சில அடிப்படை தகவல்கள்:

அறிவியல் பெயர்: அராசிஸ் ஹைபோகாகியா
பொதுவான பெயர் (கள்): வேர்க்கடலை,அராசிஸ் ஹைபோகாகியா, முங்ஃபலி
குடும்பம்: ஃபேபசீஸ் / லெகுமினினோசே – பீ குடும்பம்
பொதுவான இந்தி பெயர்: मूँगफली (முங்ஃபலி)

வேர்க்கடலை

வேர்க்கடலையில் மாமிசத்தை விட அதிகளவு புரத சத்து இருப்பதால், இது புரத சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த உணவாக இருக்கிறது.

வேர்க்கடலை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. சருமத்தின் இறந்த செல்களை நீக்க இது உதவியாக உள்ளது.

நிறைந்துள்ள சத்துக்கள்

100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம். போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

வேர்கடலை

வேர்க்கடலையை பச்சையாக சாப்பிடுவதை விட வேக வைத்த வேர்கடலையை சாப்பிவது நல்லது. இதனால் உடலுக்கு பல்வேறு சத்துக்கள் கிடைக்கின்றன.

மன அழுத்தம் போக்கும்

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது

கடலை எண்ணெய்

கடலை எண்ணெய் ஒரு டிஸ்பூன் அளவு எடுத்து உணவில் சேர்த்துக்கொள்வதால், சிறுநீர் கழிப்பது தொடர்பாக இருக்கும் பிரச்சனைகள் நீங்குகின்றன. மேலும் மலச்சிக்கலை போக்கவும் இது உதவுகிறது.

பால்

பாலுடன் ஒரு டீஸ்பூன் அளவு கடலை எண்ணெய்யை கலந்து குடிப்பதால் பால்வினை நோய்கள் அகலுகின்றன.

புரதம்

வேர்க்கடலையை தோல் நீக்கி இடித்து பொடியாக்கி, அதனை பாலில் வேக வைத்து குடிப்பதால் புரதம் மற்றும் வீரியம் அதிகரிக்கிறது.

மூளை வேலை செய்ய

மூளை நன்றாக வேலை செய்ய வேர்க்கடலை மிகவும் பயனுள்ள ஒரு பொருளாக உள்ளது. மூளைக்கு புத்துணர்ச்சியை தருகிறது. உடல் சோம்பலை நீக்கி உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்க உதவுகிறது.

வீக்கங்கள்

வேர்க்கடலையை சாப்பிடுவது உடலில் காணப்படும் வீக்கங்களை குணப்படுத்த உதவுகிறது. எனவே இதனை நீங்கள் பயம் இல்லாமல் சாப்பிடலாம்.

சக்கரை நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த வேர்கடலையை சாப்பிடுவதினால், அவர்களுக்கு வரும் மாரடைப்பு பிரச்சனை குறைகிறது. இருதயத்தை பலப்படுத்த இது உதவுகிறது.

புற்றுநோய் வராமல் தடுக்க

வேர்க்கடலை புற்றுநோய் வராமல் தடுக்கவும், இருதயத்தை நோய் கிருமிகள் தாக்காமல் இருக்கவும் இது உதவுகிறது.

**************************************

தேங்காய்ப் பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – இயற்கை மருத்துவம

நீரிழிவு :-

உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். ஆனால் தேங்காய்ப் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது. முழு தானியங்கள், அவரை மற்றும் பட்டாணிகள், நட்ஸ் போன்றவற்றிலும் அதிக அளவு மாங்கனீசு அடங்கியுள்ளது.

சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்கும் :-

உடலின் அநேக செயல்பாட்டிற்கு பயன்படும் முக்கிய உலோகமாக காப்பர் விளங்குகிறது. அதிலும் காப்பர் மற்றும் வைட்டமின் சி, சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடைன் மீள் திறனுடன் வைத்திருக்கும். இத்தகைய காப்பர் தேங்காய்ப் பாலில் அதிகம் நிறைந்துள்ளது.

எலும்புகளை உறுதியாக வைக்க உதவி புரியும் :-

தேங்காய்ப் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. குறிப்பாக உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்குகிறது. அதிலும் பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது, உடலில் பாஸ்பேட் கலப்பதால், எலும்பு உருக்குதலை அது தடுக்கும்.

இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கும் :-

போதுமான இரும்புச்சத்து உடம்பில் இல்லாததால், உலகத்தில் உள்ள பலருக்கும் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது. இரும்புச் சத்து குறைபாடு இருப்பதால், உடலானது ஹீமோகுளோபின் அதிகரிப்பதை தடுத்து நிறுத்தும். இதனால் இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல், இரத்த சோகையை உண்டாக்கும். ஒரு கப் தேங்காய்ப் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது.

தசைகளையும் நரம்புகளையும் ரிலாஸாகச் செய்யும் :-

எப்போதெல்லாம் தசை பிடிப்பு மற்றும் தசை வலி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் கொஞ்சம் உணவோடு சேர்த்து தேங்காய்ப் பாலை பருகினால் நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் இதில் அதிக அளவு மக்னீசியம் இருப்பதால், தசை வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. மேலும் ஒவ்வொரு நரம்பு அணுக்களுக்கும் வலித் தடுப்பானாக விளங்குவது மக்னீசியத்தின் முக்கியமான அம்சமாகும். உடலில் மக்னீசியம் இல்லையென்றால், கால்சியம் நரம்புகளை ஊக்குவிக்கும். அதனால் நரம்பு அணுக்கள் சுறுசுறுப்பாக செயல்படும். அளவுக்கு அதிகமாக நரம்பு அணுக்கள் சுறுசுறுப்பாக இருப்பதால், தசைகள் அளவுக்கு அதிகமாக சுருங்குவதற்கு காரணமாக விளங்குகிறது.

உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும் :-

உடல் எடையைக் குறைக்க முற்படுபவர்களுக்கு, கண்டிப்பாக இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும். தேங்காய்ப் பால் வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும். அதற்கு காரணம் தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து தான்.

கீல்வாதத்தின் இடர்பாட்டைக் குறைக்கும் :

செலினியம் என்பது ஒரு முக்கியமான ஆக்சிஜனேற்றத் தடுப்பான். இத்தகைய செலினியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது. ஆகவே கீல்வாதம் இருப்பவர்கள், இதனை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். குறைந்த அளவு செலினியம் இருப்பவர்களுக்கு, முடக்கு வாதம் ஏற்பட அதிகமான வாய்ப்புள்ளது.

இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த உதவும் :-

இரத்தக் கொதிப்பை எண்ணி கவலைப்படுபவர்கள், பொட்டாசியம் கலந்த உணவை உண்டால், இந்த பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பொட்டாசியம் உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவும். இத்தகைய பொட்டாசியம் தேங்காய்ப் பாலில் அதிகம் உள்ளது.

உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பை நிலைநிறுத்த உதவும் :-

தேங்காய்ப் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும்.

புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் :-

உடம்பில் உள்ள புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. இது புற்றுநோய் அணுக்களின் செயல்பாடுகளை குறைக்கும்

Scroll to Top