You cannot copy content of this page

Month: January 2020

அபிஷேக திரவியங்கள்

அபிஷேகப் பொருட்களின் வரிசைக் கிரமம் : எண்ணெய், பஞ்சகவ்யம், மாவு, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன், கரும்பின் சாறு, (பழங்கள்), பழ ரசங்கள், இளநீர், அன்னாபிஷேகம், சந்தனம், ஸ்நபனம் அபிஷேக திரவியங்கள் தரும் பலன் : சுத்த நீர் – விருப்பங்கள் நிறைவேறும், மணம் உள்ள தைலம் – சுகம் தரும், பஞ்சகவ்யம் – பாவத்தைப் போக்கும், பஞ்சாமிர்தம் – செழிப்பினைத் தரும், நெய் – மோக்ஷம் அளிக்கும், பால் – வாழ்நாள் …

அபிஷேக திரவியங்கள் Read More »

கோமாதா ஸ்துதி!

கோமாதா ஸ்துதி!பசுவானவள் பரமேஸ்வரனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாகவும், இருக்கிறாள். பசுவை அடிக்கவோ, விரட்டவோ கூடாது. பூஜிக்க வேண்டுமென வேதம் சொல்கிறது. தேவிபாகவதம், பிரும்ம வைவர்த்தம் போன்ற புராணங்கள் ஸுரபி உபாக்யானம் மிக அழகானது. பிரும்ம சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவைப்படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான். அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனும் காலதேவனும்தான் முகத்தில் இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும் …

கோமாதா ஸ்துதி! Read More »

004 திருப்புகலியும், திருவீழிமிழலையும் – நட்டபாடை

திருப்புகலியும், திருவீழிமிழலையும் – நட்டபாடை 34 மைம் மரு பூங்குழல் கற்றை துற்ற, வாள்நுதல் மான்விழிமங்கையோடும்,பொய்ம் மொழியா மறையோர்கள் ஏத்த, புகலி நிலாவியபுண்ணியனே!எம் இறையே! இமையாத முக்கண் ஈச! என் நேச! இது என்கொலசொல்லாய்மெய்ம்மொழி நால்மறையோர் மிழலை விண் இழி கோயில்விரும்பியதே? பொ-ரை: கற்றையாகச் செறிந்து கருமை மருவி வளர்ந்த அழகிய கூந்தலையும், ஒளி சேர்ந்த நுதலையும், மான் விழி போன்ற விழியையும் உடைய உமையம்மையோடு, பொய் பேசாத அந்தணர்கள் ஏத்தப் புகலியில் விளங்கும் புண்ணியம் திரண்டனைய …

004 திருப்புகலியும், திருவீழிமிழலையும் – நட்டபாடை Read More »

003 திருவலிதாயம் – நட்டபாடை

திருவலிதாயம் – நட்டபாடை 23 பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல் தூவி,ஒத்த சொல்லி, உலகத்தவர் தாம் தொழுது ஏத்த, உயர் சென்னிமத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம்,சித்தம் வைத்த அடியார் அவர்மேல் அடையா, மற்று இடர், நோயே. பொ-ரை: வலிதாயம் சித்தம் வைத்த அடியார்களை இடர் நோய் அடையா என வினை முடிபு கொள்க. சிவனடியார்கள், விளங்குகின்ற அழகிய மலர்களை அகங் கையில் ஏந்தி மந்திரத்தோடு நீர் வார்த்துப் பூசிக்க அவர்களோடு …

003 திருவலிதாயம் – நட்டபாடை Read More »

கிழங்கு வகைகள் அறிவோம் !

கிழங்கு வகைகள் அறிவோம் ! பொரித்துச் சாப்பிடுவதைவிட வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது. வெறும் கிழங்கை மட்டும் தனியாகச் சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல. சில கிழங்குகளில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும்; சில கிழங்குகளில் தாதுப்பொருள்கள் அதிகம் இருக்கும். சாம்பார், குழம்பு வகைகள், சாலட், சூப் செய்யும்போது, காய்கறிகளோடு சேர்த்துக் கிழங்குகளை வேகவைத்துச் சாப்பிடலாம். அனைத்துச் சத்துகளையும் ஒருசேர எடுத்துக்கொள்ளும் இந்த முறை, ‘பேலன்ஸ்டு டயட்’ (Balanced Diet) எனப்படுகிறது. கிழங்கை எப்படிச் சாப்பிடக் கூடாது? கிழங்கை எண்ணெயில் பொரித்தால், அதன் …

கிழங்கு வகைகள் அறிவோம் ! Read More »

திருமண வரமளிக்கும் தலங்கள் !

திருமண வரமளிக்கும் தலங்கள் ! திருமண வரமளிக்கும் தமிழகத்தின் சிறப்புமிக்க சில தலங்களின் மகிமைகள் இங்கு இடம்பெற்றுள்ளன. திருமணத் தடையுள்ளவர்கள், இந்தத் தலங்களுக்கும் நேரில் சென்று வழிபட்டு வரம்பெருங்கள். மூக்குடி ஸ்ரீவீரகாளியம்மன் அம்மன் பெயர்: ஸ்ரீவீரகாளியம்மன். முற்காலத்தில் வீரவனம் என்ற பெயரில் திகழ்ந்தது மூக்குடி எனும் இந்தக் கிராமம். பாண்டவர்கள் வன வாசத்தின்போது இந்தப் பகுதிக்கு வந்து, இங்கு கோயில் கொண்டிருந்த ஸ்ரீவீரகாளியம்மனை வணங்கியதாகக் கூறுகிறார்கள். தங்குவதற்கு இடமின்றி தவித்த அவர்களுக்குத் தகுந்த இடத்தை வீரகாளியம்மன் காட்டி …

திருமண வரமளிக்கும் தலங்கள் ! Read More »

ஹோரை சாஸ்திரம்

பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஹோரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஹோரைகளை கணக்கிட்டுள்ளனர். சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஹோரைகளை …

ஹோரை சாஸ்திரம் Read More »

002 திருப்புகலூர் – நட்டபாடை

திருப்புகலூர் – நட்டபாடை 12 குறி கலந்த இசை பாடலினான், நசையால், இவ் உலகு எல்லாம்நெறி கலந்தது ஒரு நீர்மையனாய், எருது ஏறி, பலி பேணி,முறி கலந்தது ஒரு தோல் அரைமேல் உடையான் இடம் மொய்ம் மலரின்பொறி கலந்த பொழில் சூழ்ந்து, அயலே புயல் ஆரும் புகலூரே. பொ-ரை: சுரத்தானங்களைக் குறிக்கும் இசையமைதியோடு கூடிய பாடல்களைப் பாடுபவன். உயிர்கள் மீது கொண்ட பெருவிருப்பால் இவ்வுலகம் முழுவதும் வாழும் அவ்வுயிர்கள் தம்மை உணரும் நெறிகளை வகுத்து அவற்றுள் கலந்து …

002 திருப்புகலூர் – நட்டபாடை Read More »

வீட்டில் செய்யக் கூடாதவையும் செய்யக் கூடியதும்

வீட்டில் செய்யக் கூடாதவையும் செய்யக் கூடியதும் 150 குறிப்புகள்: மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம், விக்கிரகம் ஆகியவற்றை வீட்டில் வைக்க வேண்டும். வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும். அர்ச்சனைப் பொருட்களை இடது கையால்எடுத்துச் செல்லக் கூடாது. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது. எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் …

வீட்டில் செய்யக் கூடாதவையும் செய்யக் கூடியதும் Read More »

20 வகை பிரதோஷ விரத வழிபாடு

20 வகை பிரதோஷ விரத வழிபாடு தினசரி பிரதோஷம் :தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும்.இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம். பட்சப் பிரதோஷம் :அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” …

20 வகை பிரதோஷ விரத வழிபாடு Read More »

ஆலயதிற்குள் செய்யக் கூடாதது !

ஆலயதிற்குள் செய்யக் கூடாதது ! பிறர் பொருளைக் கொண்டு சுவாமிக்கு நைவேத்யம் செய்வது. வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம் செல்வது. ஒருவரைக் கெடுப்பதற்காக சுவாமியை வேண்டிக் கொள்வது. தம்பதிகளின் உடலுறுவுக்குப்பின் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் ப்ரவேசிப்பது. ஸ்த்ரீகள் மாதவிலக்கு ஆகக்கூடிய நாட்களைக் கணக்கிட்டுக் கருத்தில் கொள்ளாது, அந்நாட்களில் ஆலயம் செல்லுதல் மரணத்தினால் தீட்டு உள்ளவர்கள் ஆலயம் செல்வது. பிணத்தோடு உடன் சென்றவர், மரணத்தினால் தீட்டு உள்ளவர்களைத் தீண்டியவர்கள் ஆகியோர் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது. …

ஆலயதிற்குள் செய்யக் கூடாதது ! Read More »

சிவ பூஜை

அபிஷேகம் அபிஷேக தீர்த்தத்தில் போடுவதற்கு உகந்த திரவியங்கள் : பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலியன. அபிஷேகப் பொருட்களின் வரிசைக் கிரமம் : எண்ணெய், பஞ்சகவ்யம், மாவு, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன், கரும்பின் சாறு, (பழங்கள்), பழ ரசங்கள், இளநீர், அன்னாபிஷேகம், சந்தனம், ஸ்நபனம் அபிஷேக திரவியங்கள் தரும் பலன் : சுத்த நீர் – விருப்பங்கள் நிறைவேறும், மணம் உள்ள தைலம் – சுகம் தரும், பஞ்சகவ்யம் – பாவத்தைப் …

சிவ பூஜை Read More »

தர்ப்பணம் செய்யும் ஸ்தலங்கள் !

தர்ப்பணம் செய்யும் ஸ்தலங்கள் ! முன்னோர் சாபம் தீர்த்து, அவர்களது பரிபூரணமான ஆசியால் நம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெருகச் செய்யப்படுவதே ‘நீத்தார் கடன்’. அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே நீத்தார் கடன் செய்யலாம். தெய்வத் தலங்களில் நீத்தார் கடன் செய்வதன் மகிமையை நமது ஞான நூல்கள் விவரிக்கின்றன. அவற்றுள் சில: காசி: கங்கைக் கரையிலுள்ள புனிதமான தலம் காசி. இங்குள்ள விஸ்வநாதர் ஆலயமும், விசாலாட்சி ஆலயமும், அன்னபூரணி ஆலயமும் மிகவும் போற்றப்படுபவை ஆகும். காசியில் தர்ப்பணம் செய்வதை …

தர்ப்பணம் செய்யும் ஸ்தலங்கள் ! Read More »

30 வகை துவையல் !

30 வகை துவையல் ! சின்ன வெங்காயத் துவையல் தேவையானவை: சின்ன வெங்காயம் – 100 கிராம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு – 4, புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் – 6, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், வெல்லம் – சிறிதளவு.செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம் …

30 வகை துவையல் ! Read More »

சின்ன சின்ன சமையல் டிப்ஸ்

தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும் எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம். கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும். மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் …

சின்ன சின்ன சமையல் டிப்ஸ் Read More »

அதிர்ஷ்டம் தரும் கனவுகள் !

அதிர்ஷ்டம் தரும் கனவுகள் ! பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு என்று சொல்லிவிட முடியாது. சிலர் நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு என்றும், மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள் என்றும் கூறுவர். எல்லா கனவுகளும் பலிப்பதில்லை, மாறாக சில கனவுகள் வந்து மறைந்து விடும். சில கனவுகள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடும். அதிலும் சிலருக்கு நடக்க இருக்கும் நிகழ்வுகள் மற்றும் அதன் தொடர்பான விஷயங்களை கனவில் முன்னதாகவே காட்டி …

அதிர்ஷ்டம் தரும் கனவுகள் ! Read More »

நந்தி எம் பெருமான்

நந்தி தேவர் திட்பம் வாய்ந்தவர். சாந்தமான குணம் படைத்தவர். தர்மத்தின் வடிவமாய்த் திகழ்பவர். ஒப்புவமை இல்லாத பெருமை நிறைந்தவர். இந்திராதி தேவர்களாலும் முனிவர்களாலும் போற்றி துதிக்கப்படுபவர். `சிவயநம’ எனும் ஐந்தெழுத்தின் உருவத்தைக் கொண்டவர். அதாவது, பஞ்சாட்சரத்தின் வடிவமானவர். ஒப்பில்லாத நான்கு வேதங்களையும் நான்கு பாதங்களாகக் கொண்டவர். ஊழிக்காலத்தில் இறைவனுக்கு வாகனமாக இருந்து அவரைத் தாங்கும் பேறு பெற்றவர். நிரந்தரமான இடத்தை உடையவர். வில்லாளிகளில் மேன்மை உடையவர். பிறரால் வெற்றிபெற முடியாதவர். எக்காலத்திலும் சிவபெருமானை வணங்கிய தோற்றத்துடனும், அவரது …

நந்தி எம் பெருமான் Read More »

சைவ சமயம் அறிவோம் !

சைவ சமயம் அறிவோம் ! சைவ சமயம் என்றால் என்ன ? சிவபெருமானை முழமுதற் கடவுளாக கொண்டு வழிப்படும் சமயம் .(சிவ சம்பந்த முடையது சைவம்). சிவபெருமான் எப்படிபட்டவர் ? சிவபெருமான் என்றும் உள்ளவர் ,எங்கும் நிறைந்தவர் ,எல்லாம் அறிபவர் , எல்லாம் வல்லவர் . சிவபெருமான் உயிர்களுக்காக செய்யும் தொழில்கள் யாவை ? 1.படைத்தல் –மாயையிலிருந்து உடல், கருவிகள், உலகம் ,நுகர்ச்சிபொருள்களைப் படைத்து உயிர்களுக்குக் கொடுத்தல்.2.காத்தல் –படைக்கபட்டதை உயிர்கள் அனுபவிக்க ஒருகால எல்லைவரைகாத்து நிறுத்தி வைத்தல்.3.அழித்தல் …

சைவ சமயம் அறிவோம் ! Read More »

ஐம்பெரும் புராணம்

ஐம்பெரும் புராணம் குரு வணக்கம், விநாயகர் துதி, முருகர் துதி, அம்பாள் துதி, பன்னிரு திருமுறைகள், வாழ்த்து என்று வரிசையாக இறைவன் முன்னர் பாடுவது மரபு. இருப்பினும் நேரம் சுருக்கமாக இருக்கும் காலத்தில், ஐம்பெரும் புராணம் எனும் பஞ்ச புராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடல் பாடுவது சைவ மரபு. அவ்வாறாக, இறைவன் திருமுன் நின்று கொண்டு பஞ்ச புராண பாடல்களைப் பாடுங்கள். நீங்கள் உங்கள் சொந்த குரலிலே பாடுவதை இறைவன் ஒரு குழந்தை பாடுவதைப் போல ரசித்துக் …

ஐம்பெரும் புராணம் Read More »

001 திருப்பிரமபுரம் நட்டபாடை

திருப்பிரமபுரம் நட்டபாடை 1 தோடுடைய செவியன் விடையேறி யோர் தூவெண் மதி சூடிக்காடுடையசுட லைப்பொடிபூசியென்னுள்ளங் கவர் கள்வன்ஏடுடையமல ரான்முனை நாட் பணிந் தேத்தவருள் செய்தபீடுடையபிர மாபுரமேவிய பெம்மானி வனன்றே. 1 பொழிப்புரை: தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச் சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் …

001 திருப்பிரமபுரம் நட்டபாடை Read More »

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்/III

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்/III 4. மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று – செப்டம்பர் 20, 1893 நல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, சமயப் பிரசாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லை? கடுமையான பஞ்சங்களின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்யவில்லை. …

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்/III Read More »

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்/II

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்/II ஆசிரியர் சுவாமி விவேகானந்தர்II இங்கு மற்றொரு கேள்வி எழுகிறது. சூறாவளியில் சிக்கி, ஒரு கணம் கடல் அலையின் நுரை நிறைந்த உச்சிக்குத் தள்ளப்பட்டு, அடுத்த கணமே, ‘ஆ’ வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டு, நல்வினை தீ வினைகளின் ஆதிக்கத்தில் மேலும் கீழுமாக உருண்டு உழன்று கொண்டிருக்கும் ஒரு சிறு படகா மனிதன்? கடுஞ் சீற்றமும் படுவேகமும் தணியாத தன்மையும் கொண்ட காரண காரியம் என்னும் நீரோட்டத்தில் அகப்பட்டு, அழிந்து …

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்/II Read More »

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்/I

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்/I 1. வரவேற்புக்கு மறுமொழி – செப்டம்பர் 11, 1893 அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் …

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்/I Read More »

Scroll to Top