You cannot copy content of this page

சர்வ சித்தி தரும் சக்தி மந்திரங்கள்

சகல காரியங்கள் வெற்றி அடைய


ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர்
வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோனஹ் ப்ரசோதயாத்!


துர்கை
(ராகுதோஷ நிவர்த்திக்காக)
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்


அன்னபூரணி தேவி
(நித்தியான்ன பிராப்திக்காக)
ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
மஹேஸ்வர்யைஹ் தீமஹி
தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்
சிவதூதி
ஓம் சிவதூத்யை ச வித்மஹே
சிவங்கர்யைச தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்


பாலா
ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே
காமேஸ்வரீ ச தீமஹி
தன்னோ பாலா ப்ரசோதயாத்


அம்ருதேஸ்வரி தேவி
(ஆயுள் ஆரோக்கியம் பெற)
ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே
சக்தீஸ்வரீ ச தீமஹி
தன்னோ அம்ருத ப்ரசோதயாத்


வாக்பலா
(பேச்சுபிழை சரியாக)
ஓம் ஐம் திரிபிராதேவீ வித்மஹே
வாக்பவேஸ்வரீ தீமஹி
தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்


சர்வமங்கள
(நல் பயணத்திற்கு)
ஓம் சர்வமங்களை வித்மஹே
மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்


கன்னிகா பரமேஸ்வரி
(மாங்கல்ய பிராப்தம் கிடைக்க)
ஓம் பாலாரூபிணி வித்மஹே
பரமேஸ்வரி தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்
ஓம் த்ரிபுராதேவீ வித்மஹே
கந்யாரூபிணீ தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்


காமேச்வரி
(மங்களம் உண்டாக)
ஓம் க்லீம் த்ரிபுரதேவீ வித்மஹே
காமேச்வர்யை தீமஹி
தன்னோ க்லிண்ணே ப்ரசோதயாத்
ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லிந்நாய தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்


காமதேனு
(கேட்டது கிடைக்க)
ஓம் சுபகாமாயை வித்மஹே
காமதாத்ரை ச தீமஹி
தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத்


காளிகா தேவி
(கேட்ட வரம் கிடைக்க)
ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்


வாராஹி
(நினைத்தது நிறைவேற)
ஓம் வராஹமுகி வித்மஹே
ஆந்த்ராஸனீ தீமஹி
தன்னோ யமுனா ப்ரசோதயாத்

ஐஸ்வர்யம் நிலைக்கவும், நிம்மதி அடையவும் ஸ்லோகம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் !
கமலே கமலாலயே ப்ரஸீதப்ரஸீத !
ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் மஹாலக்ஷ?ம்யை நமஹ,
ஓம் ஸ்ரீம் ஹரீம், ஐம்
ஞானாயை, மஹாலக்ஷ்ம்யை, ஐஸ்வர்யாயை
கமலதாரிண்யை, சக்த்யை, சிம்ஹவாஹின்யை நமஹ !

ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி மந்திரம்

வைஷ்ணவத்தில் அன்னை ஸ்ரீ மகாலட்சுமி அருள் செய்வதைப் போலவே சைவத்தில் அன்னை ஸ்ரீ புவனேஸ்வரி சர்வ ஐஸ்வர்யங்களையும் வழங்கி அருள் புரிபவள்.


சித்தர்களின் பிரதான வழிபாட்டுத் தெய்வங்கள் வாலை, புவனை, திரிபுரை என்ற முப்பெரும் மகாசக்திகளே.

அகஸ்தியர் தனது பல பாடல்களில் இவர்களது உபாசனை பற்றியும் எந்த வாழ்க்கை முறை உள்ளவர்கள் யாரை உபாசனை செய்து சித்தி பெறலாம் என்பது பற்றியும் விரிவாகவே கூறுகிறார்.

இம்மந்திரம் தந்திர சாஸ்திரத்தில் உள்ளது.இது விரைவான பலன்களைத் தரவல்லது. இம்மந்திரத்தை வளர்பிறைத் திங்கட்கிழமை அல்லது பௌர்ணமி அன்று துவங்கித் தொடர்ந்து ஜெபித்து வர, கடன், நோய்கள் அற்ற வளமான,நலமான வாழ்வு தருவாள். புவனேஸ்வரி யந்திரம் வைத்து வழிபட்டால் நல்லது.

யந்திரம் வைத்து ஜெபித்தால் நமது மந்திர ஜெபத்தின் சக்தியை யந்திரம் உள்வாங்கி சக்தியைப் வீடு முழுவதும் பரப்பி வாழ்வை வளமாக்கும்.

பௌர்ணமி அன்று விசேஷமாக பூஜை செய்து நைவேத்யங்கள் படைத்து வழிபடவும்.மற்ற நாட்களில் இயன்றதைப் படைத்து வழிபடுங்கள்.

கீழே 3 மந்திரங்கள் உள்ளன இவற்றுள் எந்த மந்திரம் உங்களுக்கு இஷ்டமோ அதை ஜெபித்து வாருங்கள். அடிக்கடி மந்திரத்தை மாற்றாமல் ஜெபித்தல் நல்லது.

  1. ஓம் ஸ்ரீம் க்லீம் புவனேஸ்வர்யை நமஹா
  2. ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் புவனேஸ்வர்யை ஸ்வாஹா
  3. ஸ்ரீம் ஹ்ரீம் புவனேஸ்வர்யை நமஹா

பொன்னும் பொருளும் அள்ளித்தரும் ஸ்ரீ ஐஸ்வர்யதாரா தேவி மந்திரம்
மந்திரம்

ஓம்|ஸ்ரீங் ஸ்த்ரீம் |மஹாபத்மே பத்மவாஸினி |திரவ்ய சித்திம்|
ஸ்த்ரீம் ஸ்ரீங் ஹூம் பட் ||

நிறைவான பலனைத் தரும் இம்மந்திரத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று ஜெபிக்கத் துவங்கி தினமும் அல்லது 90 நாட்களுக்கு ஜெபித்து வரவும்.

தேங்காய்த் துண்டுகள், தேன், பச்சரிசி, ஏலக்காய் கலந்த நைவேத்யம் படைத்து வழிபட ஆபரணம்,ஆடைகள் நிறைவாகச் சேரும் யோகம் உண்டாகும்.

ஸ்ரீ வாராஹி வழிபாடு

கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||


அன்னை ஸ்ரீ மகாவாராஹி ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் பஞ்சபாணங்களில் இருந்து தோன்றியவள். இவளே ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவி (சேனாதிபதி).


ஸ்ரீ வாராஹி உபாசனை சிறந்த வாக்குவன்மை, தைரியம், தருவதோடு எதிர்ப்புகள், எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகும். அபிச்சாரம் எனப்படும் பில்லி,சூனியம்,ஏவல்களை நீக்குவாள். இவளை வழிபடுபவர்கள் எந்த மந்திரவாதிக்கும் அஞ்சத் தேவையில்லை. எதிரிகளின் வாக்கை, அவர்கள் செய்யும் தீவினைகளை ஸ்தம்பனம் செய்பவள். வழக்குகளில் வெற்றி தருபவள்.


மந்திர சாஸ்திரபழமொழி :- “வாராஹிக்காரனோடு வாதாடாதே” .
ஸ்ரீ வாராஹி வாக்கு சித்தி அருள்வதில் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியைப் போலவே முதன்மையானவள். எனவே இவளை உபாசிப்பவர்கள் யாரையும் சபிக்கக்கூடாது. அவை உடனே பலிக்கும். ஆனால் அதனால் பாதிப்படைந்தவரின் வேதனைக்கான பாவம் விரைவில் நம்மை வந்தே சேரும் அதில் இருந்து அன்னை நம்மைக் காக்க மாட்டாள்.எனவே எவருக்கும் அழிவு வேண்டி வணங்காமல் ”எதிரிகளால் துன்பம் ஏற்படாமல் காக்குமாறு” வேண்டி வழிபட வேண்டும்.


ஸ்ரீ வாராஹி எலும்பின் அதி தேவதை இவளை வணங்க எலும்பு தொடர்பான வியாதிகளும்,வாத,பித்த வியாதிகளும் தீரும்.


ஸ்ரீ மகாவாராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.

வழிபாட்டு முறைகள்


புதன்,சனிக்கிழமைகள்,திரயோதசி திதி,பஞ்சமி திதி,நவமி,திருவோண நட்சத்திரம் அன்றும் வழிபடலாம். எல்லா மாதங்களிலும் வரும் வளர்பிறை அஷ்டமி அன்று வழிபட சிறப்பான பலன்களைப் பெறலாம்.

ஆடி மாதம் வளர்பிறையின் முதல் 10 நாட்கள் இவளின் நவராத்திரி அந்த நாட்களில் தினமும் அவளுக்கு விருப்பமான நைவேத்தியங்களுடன் பூஜிக்க வல்வினைகள் யாவும் தீரும் என்று மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.


செல்வம் ,அரசியல் வெற்றி, பதவி, புகழ் வேண்டுவோர் பஞ்சமியிலும்,
மனவலிமை,ஆளுமை,எதிர்ப்புகளில் வெற்றியடைய அஷ்டமியிலும் சிறப்பாக வழிபடவேண்டும்.


எல்லா ஜெபங்களுக்கும் கிழக்கு நோக்கியும்,எதிர்ப்புகள் தீர தெற்கு நோக்கியும் அமர்ந்து ஜெபிக்கலாம்.


ஆலயங்களில் உள்ள ஸ்ரீ வாராஹி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவிக்க காரியத் தடைகள் நீங்கும்.

வெள்ளைப் பட்டு அணிவிக்க வாக்கு வன்மை ,கல்வியில் மேன்மை உண்டாகும்.


மஞ்சள் பட்டு அணிவிக்கக் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும்,திருமணத்தடை நீங்கும்.


பச்சைப் பட்டு அணிவிக்கச் செல்வப்பெருக்கு ஏற்படும்.


நீலவண்ணப் பட்டு அணிவிக்க எதிர்ப்புகளில் வெற்றி கிட்டும்.


ஸ்ரீ வாராஹி உபாசகர்கள் விளக்கிற்கு பஞ்சு,தாமரைத்தண்டு,வாழைத்திரி பயன்படுத்தலாம்.அதிலும் தாமரைத்தண்டு திரி மிகச் சிறந்தது.


நைவேத்தியங்கள்:-


தொலி எடுக்காத உளுந்து வடை,மிளகு சேர்த்த வெண்ணை எடுக்காத தயிர்சாதம், மொச்சை சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, நவதானிய வடை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம்,பச்சைகற்பூரம் கலந்த பால்,கருப்பு எள் உருண்டை ,சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேன் படைக்கலாம்.

ஸ்ரீ மகா வாராஹியின் மூல மந்திரம்:-


ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் ||
நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி ||
அந்தே அந்தினி நமஹா|
ருந்தே ருந்தினி நமஹா|
ஜம்பே ஜம்பினி நமஹா|
மோஹே மோஹினி நமஹா |
ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹா|
சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம்
சர்வ வாக்சித்த சக்ஷூர் முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம் ட: ட: ட: ட: ஹூம் அஸ்த்ராய ப்பட் ||


ஸ்ரீ மகாவாராஹியின் அங்க தேவதை -லகு வார்த்தாளி
உபாங்க தேவதை :-ஸ்வப்ன வாராஹி
பிரத்யங்க தேவதை :திரஸ்கரணி


ஸ்ரீ லகு வார்த்தாளி மூல மந்திரம் :-
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவி பாதுகாப்யாம் நமஹ||
இவள் ஸ்ரீ மகாவாராஹியின் அங்க தேவதை ஸ்ரீ மஹாவாராஹி மந்திரம் ஜெபிக்க இயலாதவர்கள் லகு வாராஹி மந்திரத்தை ஜெபித்து வரலாம்.இது எல்லா நிலைகளிலும் பாதுகாப்பாக விளங்கும்.


ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மூல மந்திரம் :-
ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி கோரே ஸ்வப்னம் ட்ட: ட்ட: ஸ்வாஹா||
அல்லது
ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி அகோரே ஸ்வப்னம் தர்சய ட்ட: ட்ட: ஸ்வாஹா||

இவள் ஸ்ரீ மகாவாராஹியின் உபாங்க தேவதை.இவளை உபாசனை செய்தால் நமக்கு வரும் நன்மை,தீமைகளைக் கனவில் வந்து அறிவித்து நம்மைக் காப்பாள். இம்மந்திரத்தை நியமங்களுடன் உறங்கும் முன் 11 நாட்கள் தொடர்ந்து தினமும் 1100 முறை ஜெபித்து வந்தால் 11 நாட்களுக்குள் அன்னை ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி கனவில் வந்து நம் மன விருப்பங்களை நிறைவேற்றி பிரச்சனைகளைத் தீர்ப்பாள்.

இவளுக்குப் பிடித்த நைவேத்யம் இளநீர்.


ஸ்ரீ திரஸ்கரணி மூல மந்திரம் :-
ஓம் நமோ பகவதி திரஸ்கரணி மஹாமாயே| மஹாநித்ரே|சகலபசுஜன மனஸ் சக்ஷு ச்ரோத்ரம் திரஸ்கரணம் குரு குரு ஸ்வாஹா||
இவள் மாயைக்கு அதிபதி .இவளை வழிபட மாயை நீங்கும்.மனகுழப்பங்கள் தீரும்.


குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :-


1.வாக்கு வன்மை,சபைகளில் பேர் பெற,கல்விஞானம் பெற:-
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி|
மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||


2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :-
ஓம் சத்ருசம்ஹாரி| சங்கடஹரணி| மம மாத்ரே |ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய|சர்வ சத்ரூம் நாசய நாசய ||


3.செல்வவளம் பெருக:-
க்லீம் வாராஹமுகி |ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி |ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||


4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற :-
ஸ்ரீம் பஞ்சமி சர்வசித்திமாதா| மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||


5.எல்லா வகையான பயமும் நீங்க :-
ஓம் ஹ்ரீம் பயங்கரி| அதிபயங்கரி|ஆச்சர்ய பயங்கரி| சர்வஜன பயங்கரி| சர்வ பூத பிரேத பிசாச பயங்கரி |சர்வ பயம் நிவாரய சாந்திர்ப்பவது மே சதா||


6.வறுமை நீங்க :-
ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||


ஸ்ரீ மகாவாராஹியின் பன்னிரு திருநாமங்கள்:-
மேற்கண்ட மந்திரத்தை ஜெபிப்பவர்கள்,ஜெபிக்க இயலாதவர்கள் யாவரும் கீழ்க்காணும் ஸ்ரீ மகாவாராஹியின் 12 நாமங்களை காலையில் குளித்து முடித்ததும் சொல்லி வணங்க அவள் அருள் துணை நிற்கும்.


1.பஞ்சமி
2.தண்டநாதா
3.சங்கேதா
4.சமயேச்வரி
5.சமயசங்கேதா
6.வாராஹி
7.போத்ரிணி
8.சிவா
9.வார்த்தாளி
10.மகாசேனா
11.ஆக்ஞா சக்ரேச்வரி
12.அரிக்னீ


ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள பாடல்கள் யாவும் மிகுந்த மந்திர சக்தி உடையவை .சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத் தெரியாதவர்களும், மற்றும் யாவரும் ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள 32 பாடல்களையும் தினம் படித்து வரலாம்.அல்லது அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட பலனைத்தரும் அதில் உங்கள் தேவைக்கான பாடலை மட்டும் தேர்ந்தெடுத்து தினமும் படித்து வர தேவை நிச்சயம் நிறைவேறும்.


காரியசித்தி,பயம் நீங்க மற்றும் பல காரியங்களுக்கும் சிறப்பு பூஜை,யந்திர,மந்திர,ஹோமம் ,ரக்ஷை, உள்ளது .ஸ்ரீ அச்வாரூடா , ஸ்ரீ அபராஜிதா மந்திரங்கள் ,அரசாங்களில் வெற்றி தருவதுடன் ,எத்தகைய வழக்கு, எதிர்ப்புகளையும் தீர்க்கும் .


கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகாவாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||
வாராஹி வாராஹி வாராஹி பாஹிமாம்||
வார்த்தாளி வார்த்தாளி வார்த்தாளி ரக்ஷமாம் ||

மனோன்மணி பூசை அகவல்

ஹ்ரீம் ஓம் மனோமணி அற்புதப் பொருளே
ஆதியே பரையே சோதியே சுடரே
ஹ்ரீம் ஓமென்னு மக்ஷரத் தாதி
ஸ்ரீ ஓமென்னும் சிற்பரத் தாளே
உருவடி வான வுத்தமக் கொழுந்தே
அருவடி வான ஆதிய நாதி
ஓங்கி றோமான ஓங்கார றீங்கிலியே
ஆங்கிறோ மான ஆதி யனாதி
புவனப் பதியே போற்றி சிவய நம
சிவய நம வென்று சிந்திப்போர்க்கு
அபாய மறுக்கும் மறு கோணத்தி
சற் கோணத்தி சற பாணத்தி
சொற் பவனத்தி சூக்ஷ்ம ரூபி
திரிபுர பவா திகழொளி பவா
பரிபுர பவா பவனொளி பவா
சயளொளி பவா சரஹன பவா
ஆயிளொளி யான அகார றீங் கிலியே
பராபரப் பொருளே பளிங்கொளி யாளே
நிராதார மான நிஷ்கள ரூபி
சவ்வுங் கிலியும் யவ்வுமா னவளே
யவ்வும் உவ்வும் சவ்வுமா னவளே
வாசி என்னும் வளரொளிக் கொழுந்தே
பூசனை புரியும் புவனப் பதியே
கிறிபுங் கிலியுஞ் சங் வங் யங்குச
ஆற்பனத் துஞ்சி யமுத வர்ஷினி
இறியும் இறீயும் றியுமானவளே
றீங்காரத்திலிருக்கும் வடுக்கா வங் யங்
வடுகா யங் வங் ஆபத் தாரணா
பஞ்சாட்சரத்தின் பழம்பொருளாதி
நெஞ்சாட்ச் சரத்தி னிறைந்திருப் பவளே
பிரிவரை யில்லாப் பெண்ணுக் கரசே
சிவாய வென்னும் தெரிசனப் பொருளே
பூவார் குழலே புவனா பதியே
சாற்றும் பொருளே சவுந்தரி யாளே
யேற்று மடியார்க்கு கிருதயத்தி லேழுதாப் பொருளே
அவ்வுயி ராளே யவயசாட்சி யமுதவர்ஷினி
செய்வினை தீர்க்கும் திரிகோணத்தி
ஐயுங் கிலியு முன்பத்தோ ரட்சரமுந்
துய்யுஞ் சவ்வுமாய்த் தோன்றி நின்றவளே
பேயனாகிலும் பெற்றருள் பிள்ளையைத்
தாயே காக்கத் தானுனக்கே பாரம்
யாநின் னுடையான அருவுரு வாளே
சரணஞ் சரணம் நமஸ்தே சரணம்
புவன சௌந்தரி போற்றி நமஸ்தே
உருவடிவாயு பதேசங் கொடுத்துன்
திருவடி தந்தருள் சிவசிவா சரணம்


அகவல் முற்றிற்று

வாழ்க வையகம் || வாழ்க வையகம் !! வையகம் !! வாழ்கவளமுடன் !!

Scroll to Top