இறை வாகன காயத்திரி மந்திரங்கள்!
(மயில், நந்தி, கருடன்,)
ஸ்ரீ மயில் காயத்ரீ
(விஷக்கடி ஆபத்துகள் நீங்க)
”ஒம் மயூராய வித்மஹே
சுக்ல பாதாய தீமஹி
தன்னோ சிகி ப்ரசோதயாத்”
(வடிவேலன் வாகனமான மயிலே,
பணிந்திட்டேன், விஷக்கடியிலிருந்து என்னைக்
காப்பாய் மயிலே சரணம்.)
ஸ்ரீ நந்தி காயத்திரீ
(சிவ கடாட்சம் பெற)
ஒம் தத் புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்னோ நந்தி ப்ரசோதயாத்!
(தேவ புருஷனே, ஒரே எண்ணம்
கொண்ட சிவ பக்தனே, சிவ கடாட்சம்
பெற்றவரே, நந்தி தேவரே அருள்புரிவாய்!)
ஸ்ரீ கருடன் காயத்ரீ
(மரண பயம் நீங்க)
”ஓம் பட்சி ராஜாய வித்மஹே,
விஷ்ணு வாகனாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்”
(பட்சிகளின் அரசே, பெருமாளின் வாகனமாய்
இருக்கும் கருடபகவானே, உள்ளத்தில் காலன் பயம்
ஒழித்து கள்ளமிலா பக்தர் தமை காத்திடுவாய்.)
ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரீ
(பயம், அச்சம் நீங்க)
”ஓம் ஸ்ஹஸ்ர சீர்ஷாய வித்மஹே,
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ சேஷ ப்ரசோதயாத்”
(1000 தலை கொண்ட நல்ல அரவே, பரந்தாமன்
பள்ளி கொள்ள பாயான பாம்பரசே வரம்தா
பயம் நீங்க அருள்வாய் உன்னருளே.)
ஸ்ரீ நாகராஜன் காயத்ரீ
(சர்ப்ப தோஷங்கள் விலகிட, சந்தான பாக்யம் பெற)
”ஓம் ஸர்ப்ப ராஜாய வித்மஹே,
நாகமணி சேகராய தீமஹி
தந்நோ நாகேந்த்ர ப்ரசோதயாத்”
(ஸர்பங்களின் அரசே, ஒளிமிகக் கொண்ட நாகமணியை
வைத்திருக்கும் நாகதேவனே, நலம் தந்து
குலம் காப்பாய் வலம் வந்து உனைப் பணிந்தேன்.)