You cannot copy content of this page

வித விதமான பச்சடி

பச்சடி என்பது ஒரு பாரம்பரிய தென்னிந்திய வகை உணவாகும். இது உணவின் போது தொட்டுக் கொள்ள உதவும் பக்க உணவாக பரிமாறப்படுகிறது.

பரவலாக தென்னிந்திய மொழிகளில் பச்சடி ஒரு துரித உணவைக் குறிப்பதாகவும் உள்ளது.

கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் வட இந்திய ராய்தாவைப் போன்ற ஒரு காய்கறி உணவாக பச்சடியை கருதுகிறார்கள். இது காய்கறி, தயிர், தேங்காய், இஞ்சி மற்றும் கறி வேப்பிலை இலைகளுடன் கடுகு சேர்த்து சமைக்கப்படுகிறது.

பச்சடி பொதுவாக பருவகால காய்கறிகள் அல்லது பழங்கள் கொண்டு இலேசான மசாலாவுடன் தேங்காய் மற்றும் தயிர் கொண்டு தயாரிக்கப்படும் உணவாகும்.

பச்சடி பெரும்பாலும் அன்று பறிக்கப்பட்ட புதிய காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

சோறு மற்றும் இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிகளுக்கு ஒரு துணை உணவாக வழங்கப்படுகிறது.

பச்சடி பல வகையான காய்கறிகள் சேர்க்கப்பட்ட ஓர் உணவாகும்.

ஆயிரம் தான் இருந்தாலும் எங்க அம்மா சமையல் போல வருமா என்பவர்கள் இதை முயற்சி செய்து பாருங்கள் அம்மாவின் கைமணம், மாறாத சுவையுடன் வித விதமான பச்சடி தயார்.


தயிர் பச்சடி

தேவையானவை:

தயிர் ஒரு கப்
சின்ன வெங்காயம் 5 அல்லது பெரிய வெங்காயம் பாதி
வெள்ளாரி பிஞ்சு பாதி
கேரட் பாதி
பச்சை மிளகாய் 1
இஞ்சி_சிறுதுண்டு
பெருங்காயம் பெயருக்கு சிறிது
கறிவேப்பிலை ஒன்றிரண்டு இலைகள்
கொத்துமல்லி தழை கொஞ்சம்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு

செய்முறை:

தயிரில் சிறிது உப்பு சேர்த்து கட்டிகளில்லாமல் கடைந்துகொள்ளவும்.

அதனுடன் கொடுத்துள்ள எல்லாப் பொருள்களையும் விருப்பமான அளவில் நறுக்கி சேர்த்து கலந்துகொள்ளவும்.

துளியளவு எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கலக்கி பறிமாறவும்.

பிரியாணி, புலாவ், கலவை சாதம் இவை எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.

இந்த வெயில் நாளுக்கு அப்படியேகூட சாப்பிடலாம்.


நெல்லிக்காய்ப் பச்சடி

தேவையான பொருட்கள்

பச்சை நெல்லிக்காய் – 7 அல்லது 8
தேங்காய் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
உப்பு – 1 தேக்கரண்டி
தயிர் – 1 கிண்ணம்
கடுகு – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 1
பெருங்காயம் – சிறிதளவு
இஞ்சி – 1 துண்டு
எண்ணெய் – தாளிப்பதற்கு
கறிவேப்பிலை, கொத்துமல்லி -தேவைக்கேற்ப
செய்முறை

நெல்லிக்காயை குக்கரில் சாதம் வைக்கும் போது வைத்து, வெந்தவுடன் எடுத்து, விதைகளை நீக்கி, மிளகாய், தேங்காய், இஞ்சி சேர்த்து மிக்சியில் அரைத்து எடுக்கவும்.

பிறகு தயிரில் உப்புப் போட்டு அரைத்த விழுதை போட்டு கலக்கவும். கடுகு, பெருங்காயம் தாளித்து, கொத்துமல்லி, கறிவேப்பிலை போடவும்.

வேகவிடாமல் பச்சை நெல்லிகாயை அரைத்தும் செய்யலாம். தேவையானால் சிவப்பு மிளகாய் தாளிக்கவும். காய்ந்த நெல்லிக்காயை நெல்லிமுள்ளி என்பார்கள். அதையும் இதே போல் வேகவிட்டுத் தேங்காய் அரைத்துக் கலந்து மிளகாய், கடுகு, பெருங்காயம் தாளித்துச் செய்யலாம்.


மாங்காய் பச்சடி

இனிப்பு, கசப்பு, காரம், உப்பு, துவர்ப்பு மற்றும் புளிப்பு. இவை அனைத்தும் இந்த பச்சடியில் உண்டு. இதை செய்வது மிகவும் சுபலம்.

1 ஸ்பூன் வேப்பம் பூ
4 ஸ்பூன் மாங்காய் துண்டுகள்
3 ஸ்பூன் வெல்லம்
1/2 ஸ்பூன் கடுகு
2 பச்சை மிளகாய்
1/2 ஸ்பூன் உப்பு
1 ஸ்பூன் நெய்

முதலில் வாணலியில் நெய் விட்டு கடுகு போட்டு, வெடித்ததும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

பிறகு வேப்பம் பூ போட்டு வதக்கவும். பிறகு மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்.

பிறகு 1 கப் தண்ணீர் விடவும். மாங்காய் துண்டுகள் வெந்ததும் வெல்லம் சேர்க்கவும்.

உப்பு போடவும். நன்றாக கொதித்ததும் இறக்கவும். அருமையான பச்சடி ரெடி.

வேப்பம் பூ சேர்க்காமலும் மாங்காய் பச்சடி செய்யலாம். குக்கரில் மாங்காயை செதுக்கி போட்டு, வேக வைத்து பிறகு மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று அரைத்து வழக்கம் போல் மேலே கூறியபடி செய்ய வேண்டியது தான்.


மோர் மிளகாய் பச்சடி

இது ரொம்ப சுலபமான ஆனால் ருசியான பச்சடி.

தேவையானவை:

சிவக்க வறுத்து அரைத்த உளுத்தம் பொடி 1/2 கப்
திக்கான மோர் – ஒரு கப்
மோர் மிளகாய் வறுத்தது அல்லது வறுக்காதது எதானாலும் பரவாஇல்லை 4- 6
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

மோர் மிளகாய் யை கிள்ளி போட்டு, மேலே சொன்ன எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
அவ்வளவுதான் ‘டாங்கர் பச்சடி’ தயார் புன்னகை
எல்லா காரமான துவயல்களுக்கும் , கூட்டுக்கும் இது ரொம்ப நல்லா இருக்கும்.
நாங்க இதில் சாதம் போட்டுக் கூட சாப்பிட்டுவிடுவோம்.
ரொம்ப அருமையாக இருக்கும் .


நெல்லிக்காய் பச்சடி

தேவையானவை :

பெரிய நெல்லிக்காய் – 5
‘திக்’ ஆக குழப்பிய தயிர் – 1 cup
பச்சை மிளகாய் – 2 – 4
தேங்காய் துருவல் – ஒரு மேஜைக்கரண்டி
இஞ்சி 1 இன்ச் அளவு
கடுகு – 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

நெல்லிக்காயை நறுக்கிக்கொள்ளவும்.
பச்சைமிளகா, இஞ்சி,உப்பு , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிருடன் உள்ள நெல்லிக்காய் விழுதில் கொட்டவும்.
அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.


தேங்காய் இஞ்சி பச்சடி

தேவையானவை :

‘திக்’ ஆக குழப்பிய தயிர் – 1 cup
பச்சை மிளகாய் – 4 -6
தேங்காய் துருவல் – 1 கப்
இஞ்சி 2 -3 இன்ச் அளவு
கடுகு – 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பச்சைமிளகா, இஞ்சி,உப்பு , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிருடன் உள்ள விழுதில் கொட்டவும்.
அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
எல்லா துவையலுக்கும் இது சுவையான சைடு டிஷ்.
முக்கியமாய் ‘ஸ்ரார்த துவையலுக்கு; ரொம்ப நல்லா இருக்கும்.புன்னகை


வெள்ளரிக்காய் பச்சடி!

பச்சடி வகைகள் – தக்காளி பச்சடி ! 4c823610

தேவையானவை :

2 வெள்ளரிக்காய் – அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
2 கப் குழப்பின கெட்டி தயிர்
1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
இரண்டு பச்சை மிளகாய் – பொடியாக நறுக்கவும்
உப்பு

தாளிக்க :

அரை ஸ்பூன் கடுகு
ஒரு சிட்டிகை பெருங்காயம்
அரை ஸ்பூன் எண்ணெய்

செய்முறை :

ஒரு பேசினில் , துருவிய வெள்ளரிக்காய், தயிர், கொத்துமல்லி தழை , பச்சை மிளகாய், உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
தாளிக்க கொடுத்ததை தாளித்து இதன் மேல் கொட்டவும்.
அவ்வளவுதான், சுவையான வெள்ளரிக்காய் பச்சடி ரெடி.
எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.

குறிப்பு: சிலர் வெள்ளரிக்காயை துருவல் மிகவும் சிறியதாக நறுக்கியும் செய்வார்கள்.புன்னகை


வெள்ளரிக்காய் பச்சடி 2

தேவையானவை :

2 வெள்ளரிக்காய் – அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
‘திக்’ ஆக குழப்பிய தயிர் – 1 cup
பச்சை மிளகாய் – 4 -6
தேங்காய் துருவல் – 1 கப்
இஞ்சி 2 -3 இன்ச் அளவு
கடுகு – 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
ஒரு சிட்டிகை பெருங்காயம்

எண்ணெய் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பச்சைமிளகா, இஞ்சி,உப்பு , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
கொஞ்சமும் தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
துருவிய வெள்ளரிக்காயையும் அதில் போட்டு நன்கு கலக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, தயிருடன் உள்ள விழுதில் கொட்டவும்.
அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
எல்லா துவையலுக்கும் இது சுவையான சைடு டிஷ்.


மாங்காய் இஞ்சி பச்சடி!

தேவையானவை:

புளிப்பில்லாத தயிர் – 2கப்

நறுக்கிய மாங்காய் இஞ்சி – 11/2டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – 4டேபிள்ஸ்பூன்

சீரகம் 1 /2 டீஸ்பூன்

கடுகு – 1/4டீஸ்பூன்

கொத்துமல்லி இலைகள் – சிறிதளவு.

பெருங்காயம், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

தேங்காய், சீரகம், மாங்காய் இஞ்சி முதலியவற்றை விழுதாக அரைக்கவும்.

தயிரில் அரைத்தவிழுது, உப்பு போட்டுக் கலந்து, கடுகு, பெருங்காயம் தாளித்து கொத்துமல்லியைத் தூவி அலங்கரிக்கவும்.


பூசணிக்காய் பச்சடி

தேவையான பொருட்கள்

பூசணிக்காய் – ஒரு சிறிய பகுதி (பத்தை)
தயிர் – 1 கோப்பை
பச்சை மிளகாய் – 2
தேங்காய் துருவல் – 2 மேஜைக்கரண்டி
கடுகு – சிறிதளவு
உளுத்தம்பருப்பு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

  1. பூசணிக்காயை துருவி வாணலியில் சிறிது நீர் விட்டு வேகவிடவும்.
  2. பச்சை மிளகாயை தனியே அரைத்துக் கொள்ளவும்.
  3. காய் வெந்ததும், உப்பு, அரைத்த பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்க விடவும்.
  4. தனியே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெந்து கொண்டிருக்கும் பூசணிக்காயில் கொட்டி இறக்கவும்.
  5. பூசணிக்காய் ஆறியதும், தயிர், கொத்தமல்லித்தழை, தேங்காய்ப்பூ சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு: பூசணிக்காய் கொழகொழவென இல்லாமல் கெட்டியாக இருக்க வேண்டும்.


கடுகு-தேங்காய் பச்சடி

தேவையானவை:

கடுகு – ஒரு டேபிள்ஸ்பூன் (10 கிராம்), தேங்காய் துருவல் – அரை மூடி (100 கிராம்), தயிர் – ஒரு கப் (100 மில்லி), சுக்குப்பொடி – ஒரு சிட்டிகை, சின்ன வெங்காயம் – 2, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி லேசாக வதக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், கடுகு, சுக்குப் பொடி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதில், நன்றாக அடித்த தயிரைச் சேர்த்து, தேவையான உப்பு போட்டு கலக்கவும். இதை வெறுமனே சாப்பிடலாம். இட்லி, சப்பாத்தி போன்ற டிபன் அயிட்டங்களுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.


கத்தரிக்காய்ப் பச்சடி:

தேவையான பொருட்கள்: நல்ல பெரிய கத்தரிக்காய் ஒன்று. புளிக்காத கெட்டித் தயிர் இரண்டு கிண்ணம். உப்பு, பெருங்காயத் தூள், தாளிக்க கடுகு ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் இரண்டு, கருகப்பிலை, கொத்துமல்லி.

கத்தரிக்காயைக் கழுவி எண்ணெய் தடவி விட்டு நடுவில் ஒரு கத்தியால் குத்தி விட்டு நெருப்பில் சுட வேண்டும். அல்லது மைக்ரோவேவ் அவன் அல்லது க்ரில்லரில் சுடவும். நடுவில் குத்தினால் தான் உள்ளேயும் வேகும். பின்னர் தோலை உரித்துவிட்டுப் பிசைந்து தயிரில் உப்போடு சேர்த்துக் கலக்கவும். பின்னர் எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய், கருகப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும். பச்சைக் கொத்துமல்லித் தழையைப் பொடிப் பொடியாக நறுக்கித் தூவவும்

கேரட் பச்சடி

தேவையான பொருட்கள்

கேரட் – 2
தயிர் – 2 கோப்பை
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறிய துண்டு
தேங்காய் துருவல் – ஒரு மேஜைக்கரண்டி
கடுகு – சிறிதளவு
உளுத்தம்பருப்பு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

  1. கேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும்.
  2. வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளவும்.
  4. பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து வதக்கி, கேரட் துருவல் மேல் போடவும்.
  5. அதனுடன் உப்பு, தேங்காய்ப்பூ சேர்த்து கலக்கவும்.
  6. பின்னர் தயிர் கலந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு

  1. தேங்காய் துருவல் தேவைப்பட்டால் சேர்க்கலாம்.
  2. கேரட்டை வேக விடக் கூடாது.

விளாம்பழ பச்சடி !

தேவையானவை :

விளாம்பழம்- – 2
பொடியாக்கிய வெல்லம் – 3/4கப்
சுக்குப்பொடி – 1/2டீஸ்பூன்
கடுகு – 1/4டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
நெய் – 2டீஸ்பூன்
உப்பு – ஒருசிட்டிகை

செய்முறை:

விளாம்பழத்தை உடைத்து,ஓட்டிலிருந்து எடுத்து, கூழாக மசித்து வைக்கவும்.

வெல்லத்தை தூளாக்கி, கொஞ்சம் தண்ணீர்விட்டு அடுப்பில் வைக்கவும்.

வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும்.

மீண்டும் அடுப்பில் வைத்து, ‘பிசு பிசு’ பாகு வந்ததும், ( கையில் தொட்டால் ஓட்டவேண்டும், அது தான் பதம் புன்னகை ) மசித்து வைத்த விளாம்பழத்தை போட்டு கலக்கவும்.

உப்பு, சுக்குப்பொடி போட்டுக் கலக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கவும்.

ஒரு சின்ன கடாய் அல்லது தாளிக்கும் கரண்டி இல், நெய்விட்டு கடுகு, பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும்.

அருமையான விளாம்பழ தித்திப்பு பச்சடி தயார் !


நெல்லிமுள்ளி பச்சடி !

தேவையாவை :

நெல்லிமுள்ளி – 10 – 15
புளிப்பில்லாத தயிர் – 2கப்
பச்சைமிளகாய் – 4
தேங்காய்த்துருவல். – 3டேபிள்ஸ்பூன்
நெய் – 1டீஸ்பூன்
கொத்தமல்லி – 1/4கப் நறுக்கியது
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

நெல்லிமுள்ளியை ஒரு அரைமணி நேரம் வெந்நீரில் ஊறவைத்து மைய அரைத்துக் கொள்ளவும்..
அதில், தேங்காய், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைத்த அனைத்தையும் புளிக்காத தயிரில் கலந்து,உப்பு போட்டு கலக்கவும்.
பிறகு, நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.
தேவையானால் கொத்துமல்லி தூவலாம்.

குறிப்பு: பெரிய நெல்லிக்காய்களை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்வதையே நெல்லி முள்ளி என்று சொல்கிறோம். இந்த பச்சடியை பொதுவாக துவாதசி அன்று செய்வார்கள். காய்ந்தாலும் நெல்லிக்காய் இல் உள்ள சத்துக்கள் வீணாவது இல்லை.


மணத்தக்காளி வற்றல் பச்சடி !

தேவையானவை:

மணத்தக்காளி வற்றல் – 1/4கப்
கெட்டித்தயிர். – 2கப்
மிளகாய்வற்றல் – 1
துவரம்பருப்பு – 1/2டீஸ்பூன்.
சீரகம் – 1/4டீஸ்பூன்
நெய் – 2டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

வாணலி இல் நெய்விட்டு மணத்தக்காளி வற்றலை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பின் மிளகாய் வத்தல்,சீரகம், துவரம்பருப்பு, இவைகளை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
பிறகு, அனைத்தையும் தயிரில் கலந்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து , உப்பு சேர்க்கவும்.


மல்டி வெஜிடபிள் பச்சடி!

தேவையானவை:

துருவிய கேரட்,சௌசௌ,முட்டைகோஸ் குடைமிளகாய் – தலா 2டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் – தலா 1டேபிள்ஸ்பூன்
வறுத்த கசகசா – 1/2டீஸ்பூன்
கடுகு – 1/4டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 1
மல்லித்தழை – சிறிதளவு
தயிர் – 3கப்
உப்பு – ருசிக்கேற்ப
எண்ணெய் – தேவையானாளவு.

செய்முறை:

வாணலி இல் எண்ணெய்விட்டு கடுகு தாளிக்கவும்.
குழப்பி வைத்துள்ள தயிரில் கொட்டவும்.
தேங்காய், பச்சைமிளகாய், கசகசா மற்றும் கோத்த்துமல்லி எல்லாவற்றையும் விழுதாக அரைக்கவும்.
பின்பு, மிகவும் பொடியாக நறுக்கிவைத்துள்ள காய்கறிகள் அரைத்த விழுது எல்லாவற்றையும் தயிரில் போட்டு நன்கு கலக்கவும்.
உப்பு போட்டு கலந்து பரிமாறவும்.


நுங்கு பச்சடி:

தேவை:

தோலுரித்த நுங்கு -1 கப்
நறுக்கிய பேரீச்சம்பழம் -1 டேபிள்ஸ்பூன்
மாம்பழவிழுது – 1/2 கப்
நெல்லித்துருவல் -1/2 டீஸ்பூன்
பன்னீர்திராட்சை – 10
தேன் (அ) வெல்லக்கரைசல் – தேவைக்கேற்ப
உப்பு – 1 சிட்டிகை

செய்முறை.
முதலில் நுங்கையும், பேரிச்சம்பழத்தையும் கலக்கவும்.பின்பு துருவியநெல்லி, மாம்பழ விழுது போட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, தேவைப்பட்டால் வெல்லக்கரைசல் (அ) தேன் கலந்து, இறுதியில் திராட்சையினால் அலங்கரிக்கவும்.
நுங்கில் நிறைய ஃபைபர் உள்ளது. வயிற்றிற்கு நல்லது. இதன் தோலை வெயில் உலர்த்தி பொடித்து முகத்திற்கு பேக் போட்டால் முகம் பளபளப்பாகும்.
திராட்சை கல்லீரல், மண்ணீரலுக்கு மிகவும் நல்லது. ரத்தத்தை சுத்தம் செய்வதுடன்,ரத்தம் விருத்தியடையும்.கர்பமாக உள்ளபோது தினமும் 1 கப் கிரேப்ஜுஸ் குடித்தால், குழந்தையின் பல் எலும்பு வலுவடையும். ஒற்றைத்தலைவலி, வயிற்றுப்பிரச்னையும் நீங்கும்


சௌ சௌ பச்சடி

தேவை.
துருவிய சௌசௌ – 1/4கப்
தக்காளித்துண்டுகள் ,துருவியகாரட், நெல்லித் துருவல் – தலா 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலைவிழுது – 1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1டேபிள்ஸ்பூன்
இஞ்சி,மிளகாய் விழுது- 1டீஸ்பூன்
கெட்டித்தயிர் – 2 கப்
உப்பு – தேவைக்கு

செய்முறை.
எல்லாவற்றையும் தயிரில் கலந்து உப்பு போட்டு ,இறுதியில் மிளகுப்பொடி தூவவும்.
சௌசௌவில் நிறைய கால்ஷீயம் உள்ளது.எலும்புகளைப் பாதுகாக்கும்.. நெல்லிக்காய் இருதயத்திற்கும், கிட்னிக்கும் நல்லது.


வெஜிடபிள் பச்சடி.

தேவை:
துருவிய கேரட்,சௌசௌ,முட்டைகோஸ் குடைமிளகாய் – தலா 2டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய சிறியவெங்காயம் – 1டீஸ்புன்
பொட்டுக்கடலை, தேங்காய்ப்பூ – தலா 1டேபிள்ஸ்பூன்
வறுத்த கசகசா – 1/2டீஸ்பூன்
கடுகு – 1/4டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 1
மல்லித்தழை – சிறிதளவு
தயிர் – 3கப்
உப்பு – ருசிக்கேற்ப
எண்ணெய் – தேவையானாளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்துத் தயிரில் போடவும்.தேங்காய்,பச்சைமிளகாய், கசகசா, பொட்டுக்கடலை, மல்லித்தழையை விழுதாக அரைத்துக் கொள்ளவும் பின்பு, நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், அரைத்தவிழுது முதலியவற்றைத் தயிரில் சேர்த்து, உப்பு போட்டு கலந்து பரிமாறவும்.

பைனாப்பிள் பச்சடி.

தேவை:

அன்னாசிபழத்துண்டுகள் – 2கப்
தக்காளி – 2
தண்ணீர் – 2 கப்
ரோஜா இதழ்கள் – 1/2கப்
சுக்குப் பொடி,ஏலப்பொடி – தலா ஒருசிட்டிகை
துருவிய பாதாம், முந்திரி – தலா 1 டீஸ்பூன்
சர்க்கரை, உப்பு – சிறிதளவு.

செய்முறை:

இரண்டு கப் தண்ணீரில் தக்காளிப்பழத்தைப் போட்டுக் கொதிக்கவைத்து, ஆறியதும் தோல்நீக்கி மசிக்கவும். அன்னாசித் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மசித்த தக்காளியுடன் குறைந்த தீயில் இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும்.தயிரில் உப்பு போட்டு, ஏலப்பொடி, சுக்குப்பொடி, ரோஜா இதழ்கள், துருவிய பாதாம், முந்திரி, அன்னாசி பழத்துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும்.

சுண்டை பச்சடி.

தேவை:

சுண்டைக்காய் – 1/4கப்
வேகவைத்த துவரம்பருப்பு – 1/2கப்
புளி – சிறுநெல்லிக்காய் அளவு
கீறியபச்சைமிளகாய் – 3
பொடித்தவெல்லம் – 2டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4டீஸ்பூன்
வற்றல்மிளகாய் – 3
கடுகு, மல்லிப்பொடி – 1/4டீஸ்பூன்
பெருங்காயம் – ஒருசிட்டிகை
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

சுண்டைக்காயை சுத்தம் செய்து, மிக்ஸியில் ஒருசுற்று சுற்றிஎடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வத்தல் மிளகாய் தாளித்து, ,சுண்டைக்காய்போட்டு வதக்கவும்.புளியைக் கரைத்து வதக்கிய காயில் ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள், மல்லிப்பொடி,,வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும்.பின்பு வேகவைத்த துவரம்பருப்பைச் சேர்த்து,ஒருகொதி வந்ததும் இறக்கி கறிவேப்பிலைத் தூவ்வும்.


மாங்காய் பச்சடி

தேவை:

மாங்காய் – 2
கீறியபச்சைமிளகாய் – 4
பொடித்த வெல்லம் – 1/4கப்
தேங்காய்த் துருவல் – 3டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒருசிட்டிகை
வேப்பம்பூ. – 1/4டீஸ்பூன்
உப்பு,எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

மாங்காயைத் தோல்நீக்கி செதில் செதிலாக சீவிக்கொள்ளவும்.,கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பச்சைமிளகாய்,மாங்காய்சேர்த்துவதக்கி,,மஞ்சள்தூள்,தேவையானஅளவுஉப்புபோட்டுசிறிதுதண்ணீர்ஊற்றிவேகவைக்கவும்.வெந்ததும்,வெல்லம், தேங்காய் போடவும். இறக்குமுன் ,வேப்பம்பூ தாளிக்கவும். ,


பாகற்காய் பச்சடி
.
தேவை: .

வில்லைகளாக்கிய பாகற்காய் – 1/2கப்
தயிர் – 2கப்
மிளகாய்ப்பொடி,தனியா,சீரகம் – தலா 1/2டீஸ்பூன்
வெள்ளைஎள், எண்ணெய் – தலா 1டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 11/2டீஸ்பூன்
சர்க்கரை – 3டீஸ்பூன்
புளி – சிறிதளவு
உப்பு – ருசிக்கேற்ப

செய்முறை:

கடாயில் எண்ணெ ஊற்றி கடலைபருப்பு,எள்,தனியா, சீரகம், புளி முதலியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்.பாகற்காய் வில்லைகளை எண்ணெயில் பொரித்துக் ளொள்ளவும். தயிரில் பொடித்த பொடி, பாகற்காய், சர்க்கரை முதலியவற்றைப் போட்டு,த்தேவையான அளவு உப்பு சேர்த்து,இறுதியில் கடுகு தாளிக்கவும்.

மா இஞ்சி பச்சடி.

தேவை;

புளிப்பில்லாத தயிர் – 2கப்
நறுக்கிய மா இஞ்சி – 11/2டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 4டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/4டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
மல்லித்தழை – சிறிதளவு.
பெருங்காயம், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

தேங்காய், சீரகம், மா இஞ்சி, பெருங்காயம் முதலியவற்றை விழுதாக அரைக்கவும். தயிரில் அரைத்தவிழுது, உப்பு போட்டுக் கலந்து, கடுகு தாளித்து மல்லித்தழையைத் தூவி அலங்கரிக்கவும்.

குடைமிளகாய் பச்சடி.

தேவை:

வேகவைத்த மேக்ரோனி – 1/4 கப்
வேகவைத்த துவரம்பருப்பு – 1/2கப்
புளித்தண்ணீர் – 1/4கப்
தக்காளி – 2
வெங்காயம், குடைமிளகாய் – தலா 1
கீறிய பச்சைமிளகாய் – 2
எண்ணெய் – 2டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1/4டீஸ்பூன்
சோம்பு – 1/2டீஸ்பூன்

செய்முறை:

மேக்ரோனியை வேகவைத்துக் கொள்ளவும்.தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து,, நறுக்கிய வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கவும். பின் குடைமிளகாய், தக்காளி போட்டு வதங்கியதும், புளித்தண்ணீர் ஊற்றி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, மேக்ரோனியைப் போட்டுக் கொதிக்கவிடவும்.(தேவைப் பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்) இறுதியில் வேகவைத்த துவரம்பருப்பை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.


நாரத்தை பச்சடி.

தேவை

நாரத்தை (பொடியாக நறுக்கியது) ,உப்பு – தேவைக்கேற்ப
புளி – நெல்லிக்காய் அளவு
மஞ்சள்தூள் 1/2டீஸ்பூன்
துருவிய வெல்லம் – 1/4கப்
கடுகு,சீரகம்,துவம்பருப்பு – தலா1/4டீஸ்பூன்
நறுக்கிய பச்சைமிளகாய் – 3
எண்ணெய் – 1/4கப்

செய்முறை:

வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, சீரகம், துவரம்பருப்பு,பச்சைமிளகாய் தாளித்து,புளியைக் கரைத்துச் சேர்த்து, உப்பு,மஞ்சள்தூள்,வெல்லம்,நார்த்தங்காய் போட்டுக் கொதிக்க வைக்கவும். நார்த்தங்காய் வெந்ததும் இறக்கவும்.


புடலங்காய் பச்சடி.

தேவை:

பிஞ்சுபுடலங்காய் – 1
தயிர் – 2கப்
பச்சைமிளகாய் – 2
பொட்டுக்கடலை – 11/2டீஸ்பூன்
கடுகு,சீரகம் – தலா 1/4டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 1டேபிள்ஸ்பூன்
மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – ருசிக்கேற்ப

செய்முறை:

புடலங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பொட்டுக்கடலை,சீரகம்,மல்லித்தழை, தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து புடலங்காயைப் போட்டு மெல்லியதீயில் வதக்கவும்.பின்பு அரைத்தவிழுது,புடலங்காய் முதலியவற்றைத் தயிரில் கொட்டிக் கலந்து உப்பு சேர்க்கவும்.


தக்காளி – தேங்காய் பச்சடி:

தேவையானவை:
தயிர் – 1 கப்
தேங்காய் துருவல் – 1/2 கப்
தக்காளி 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – கொஞ்சம்
உப்பு
தாளிக்க – எண்ணை

செய்முறை:

இஞ்சி, மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி, தேங்காயோடு உப்பு சேர்த்து தயிருடன் கலந்து, தாளித்து (கடுகு, உளுந்து போட்டு தான்), கொத்தம்ல்லி தழையுடன் பரிமாறவும் (வேண்டுமானால் – ஃப்ரிட்ஜில் வைத்து)


கத்தரிக்காய் பச்சடி:

தேவையானவை:
தயிர் – 1 கப் (புளிக்காதது)
சின்னதா கத்திரிக்காய் – 4-5
தேங்காய் துருவல் – 2-3 ஸ்பூண்
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 2
உப்பு
தாளிக்க – எண்ணை

செய்முறை:

கத்தரிக்காயை மெல்லியதாக நறுக்கி, பூண்டை நசுக்கி – இரண்டையும் எண்ணையில் வதக்கி ஒரு டிஷ்யூ பேப்பர் போட்டு எண்ணையை எடுத்து விடுங்கள். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து கொள்ளவும். தயிருடன் இரண்டையும் கலந்து உப்பு சேர்த்து தாளித்து பரிமாறவும்.

சிறுகீரை பச்சடி:

தேவை.
சுத்தம்செய்து,பொடியாக நறுக்கிய சிறுகீரை – 1/2கப்
பொடியாக நறுக்கிய சிறியவெங்காயம் – 1/4கப்
தக்காளி – 2
பூண்டு – 3பல்
பச்சைமிளகாய் – 4
இஞ்சி – சிறியதுண்டு
ஜீரகம் – 1/4டீஸ்பூன்
தயிர் – 2கப்
நல்லெண்ணைய் – 2டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

செய்முறை.
சிறுகீரையை தண்ணிர் தெளித்து வேகவைக்கவும். கடாயில் எண்ணைய்ஊற்றி, சீரகம் தாளித்து, வெங்காயம், தேங்காய் ,தக்காளி, இஞ்சி,பச்சைமிளகாய்,பூண்டு போட்டு வதக்கி ஆறியதும், வேகவைத்த கீரையுடன் மிக்ஸியில் அரைக்கவும். பின்அரைத்தவிழுதினை தயிரில் கலந்து, உப்பு சேர்த்தால் சத்தான பச்சடி ரெடி.
சிறுகீரை ரத்தத்தை சீராக்கும். நீர்கடுப்பை நீக்கும்.


வெண்டைக்காய் பச்சடி:

தேவை.
வெண்டைக்காய் -1/2 இஞ்ச் அளவில் வெட்டவும்
தயிர் – 1கப்
தேங்காய் – 2 துண்டு
காய்ந்தமிளகாய் – 3
கிராம்பு – 2
கடுகு – 1/4டீஸ்பூன்.
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணைய் – தேவையான அளவு

செய்முறை.
கடாயில் எண்ணைய் விட்டு, கடுகு, மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, வெண்டைக்காயை போட்டு வதக்கி ,உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்பு மிக்ஸியில் கிராம்பு, தேங்காய். காய்ந்தமிளகாய் முதலியவற்றை பொடிசெய்து, வெண்டைக்காயில் போட்டு பிரட்டி, ஆறியதும் தயிரில் கலக்கவும்.


வெங்காயத்தாள் ரெய்தா.

தேவை.
கெட்டித்தயிர் – 1கப்
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – 1/4கப்
சதைத்தபூண்டு – 4
மல்லித்தழை,புதினா – தலா 1 டேபிள்ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கேற்ப –

செய்முறை.
கெட்டித்த்யிருடன் வெங்காயத்தாள்,பூண்டு,புதினா,மல்லித்தழை,உப்பு,மிளகுத்தூள் கலந்தால் பச்சடி தயார்


பூந்தி ரெய்தா:

தேவை.
கெட்டித்தயிர் – 1கப்
பூந்தி – 1கப்
உடைத்து வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு – 5
பச்சைமிளகாய் – 2
சர்க்கரை – 1 டீஸ்பூன்
மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை.
முந்திரி,பச்சைமிளகாய்,மல்லித்தழை, சர்க்கரை எல்லாவற்றையும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அரைத்த முந்திரிவிழுதுடன், வறுத்தவேர்க்கடலை, ,உப்பு சேர்த்துத் தயிருடன் கலந்து, பூந்தியை மேலே தூவவும்.


வெண்பூசணி பச்சடி:

தேவை.
வெண்பூசணித்துண்டுகள் – 2கப்
தேங்காய் – 2 துண்டுகள்
கடுகு,மஞ்சள்தூள், வெந்தயம் – தலா 1/4 டீஸ்பூன்
புளிநீர் – 1/4கப்
காய்ந்தமிளகாய் – 4
வெல்லம்,மல்லித்தழை,கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை.
பூசணித்துண்டுகளை புளிநீரில், மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து வேகவைக்கவும். தேங்காய்,கடுகு, காய்ந்தமிளகாய் இவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணைய் ஊற்றி வெந்தயம், மிளகாய் தாளித்து பூசணிக்காயில்போட்டு ,வெல்லம், அரைத்த விழுதினையும் சேர்த்து சிறிதுகொதித்ததும் அடுப்பை அணைக்கவும். 333333.சிறுகீரை பச்ச

சௌசௌ, மாதுளை பச்சடி:

தேவை.

சௌசௌ – 1
மாதுளை – 1/4கப்
தயிர் – 1/4கப்
தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் – 1
கொத்தமல்லித்தழை – 1/4கப்
இஞ்சி – சிறியதுண்டு
உப்பு – ருசிக்கேற்ப

செய்முறை”

சௌசௌவைப் பொடியாக வெட்டி ஆவியில் வேகவைக்கவும். தேங்காய், இஞ்சி, பச்சைமிளகாய், மல்லித்தழை எல்லாவற்றையும் அரைத்துத் தயிரில்போட்டு ,வேகவைத்த சௌசௌ , உப்பு சேர்த்து , இறுதியில் மாதுளை முத்துக்களைச் சேர்த்துப் பரிமாறவும்.
சுரைக்காயிலும் இதுபோல் செய்யலாம்


நெல்லிமுள்ளி பச்சடி:

தேவை.
நெல்லிமுள்ளி – 10
புளிப்பில்லாத தயிர் – 2கப்
பச்சைமிளகாய் – 4
தேங்காய்த்துருவல். – 3டேபிள்ஸ்பூன்
நெய் – 1டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – 1/4கப்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

நெல்லிமுள்ளியை வெந்நீரில் ஊறவைத்து மைய அரைத்துக் கொள்ளவும்.. தேங்காய், பச்சைமிளகாய் நன்றாக அரைக்கவும். அரைத்த அனைத்தையும் புளிக்காத தயிரில் கலந்து,உப்பு போட்டு ,நெய்யில் கடுகு தாளித்து, பெருங்காயம், மல்லித்தழைத் தூவவும்.

பலாப்பழப் பச்சடி:

தேவை;

பலாச்சுளை – 1கப்
வெல்லக்கரைசல் – 1/4கப்
சுக்குப்பொடி – 1/2டீஸ்பூன்
முந்திரி, தேன் – சிறிதளவு.

செய்முறை:

பலாப்பழத்தைப் பொடியாக நறுக்கி, சிறிதளவு நீரில் வேகவைத்து,நீரை வடிகட்டி பின் வெல்லக்கரைசலில் போட்டு ,அடுப்பில் வைத்துக் கிளறி ,இறுகியதும் இறக்கவும். இறுதியில் தேன் சேர்த்து ,நெய்யில் வறுத்த முந்திரிபருப்பால் அலங்கரிக்கவும்.

விளாம்பழ பச்சடி:

தேவை:
விளாம்பழம்- – 2
பொடியாக்கிய வெல்லம் – 3/4கப்
சுக்குப்பொடி – 1/2டீஸ்பூன்
கடுகு – 1/4டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
நெய் – 2டீஸ்பூன்
உப்பு – ஒருசிட்டிகை

செய்முறை:

வெல்லத்தை சுத்தம்செய்து, வடிகட்டி, பாகாக்கவும். (கம்பிபதம்) விளாம்பழத்தை ஓட்டிலிருந்து எடுத்து, கூழைமசித்து பாகுடன் சேர்த்து, உப்பு, சுக்குப்பொடி போட்டுக் கலக்கவும்.பின்பு கடாயில் நெய்விட்டு கடுகு, பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும்.


செம்பருத்திப்பூ பச்சடி:

தேவை:

சிவப்பு செம்பருத்திப்பூ – 10
தயிர் – 3கப்
கடுகு – 1/4டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2டீஸ்பூன்
எண்ணெய் – 1டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

செம்பருத்திப்பூவை நன்றாக சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துத் தயிரில் போட்டு, உப்பு செம்பருத்திப் பூவைச் சேர்த்துக் கலக்கவும்.


மணத்தக்காளி வற்றல் பச்சடி.

தேவை:

மணத்தக்காளி வற்றல் – 1/4கப்
கெட்டித்தயிர். – 2கப்
மிளகாய்வற்றல் – 1
துவரம்பருப்பு – 1/2டீஸ்பூன்.
சீரகம் – 1/4டீஸ்பூன்
நெய் – 2டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

கடாயில் நெய்விட்டு மணத்தக்காளி வற்றலை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின் மிளகாய் வத்தல்,சீரகம், துவரம்பருப்பு, இவைகளை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். இறுதியில் அனைத்தையும் தயிரில் கலந்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து , உப்பு சேர்க்கவும்.


பருப்புசிலி:

  1. எண்ணை குறைவு.
  2. நேரம் சேமிப்பு

பருப்பு இட்லி க்கு:
துவரம் பருப்பு – 3/4 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 5-6 வரை (உங்க வயித்தோட சக்திய பொருத்து)

செய்முறை:

பருப்புகள் இரண்டையும் ஒரு இரண்டு-மூன்று மணி நேரம் ஊறவைத்து, அரைக்கும் பொழுது, 1 ஸ்பூன் பெருங்காயம், கொஞ்சமா உப்பு சேத்து கட்டியான பதத்துக்கு அரைத்து எடுத்துக்கோங்க. (வ்டைக்கு அரைப்போம் ல.. அதே பதம் தான்!),
இத இட்லி தட்டு ல ஊத்தி இட்லியா எடுத்து வச்சிக்கோங்க (ஃப்ரீஸர் ல ஒரு Ziplock கவர் ல போட்டு வச்சிக்கலாம்).
வேணும் போது, ஒரு 1/2 மணிக்கு முன்னாடி வெளில எடுத்து உதிர்த்து கொள்ளலாம். (மிக்ஸில ஒரு சுத்து விட்டாலும் ஆச்சு, இந்த இட்லிய வச்சே, பருப்பு உருண்டை குழம்பும் செய்வேன், நான் ரொம்ப சோம்பேறி தெரியுமோ?, பருப்பு உருண்டை குழம்பு கதைய அப்புறம் பாக்கலாம்)
இப்போ எந்த பருப்பு உசிலினாலும் நாம செய்யலாம் ல?? உதாரணத்துக்கு:


பீன்ஸ் பருப்புசிலி:

1/2 KG பீன்ஸ்
2 ஸ்பூன் கடலை பருப்பு
2 ஸ்பூன் உளுந்து பருப்பு
கடுகு, எண்ணை, கறிவேப்பிலை – தாளிக்க
பருப்பு இட்லி – 3 – 4 வரை (நீங்க பெரிய இட்லி யா வாத்து இருந்தா.. நான் எப்படி அளவு சொல்றது ல?, நான் mini இட்லி தட்டுல செஞ்சி வைக்குறேன், பாக்கவும் நல்லா இருக்கும் ல)

செய்முறை:

முதலில் கொஞ்சமா தண்ணி விட்டு பீன்ஸ உப்பு போட்டு வேக விடுங்க.கடாயில் எண்ணை விட்டு, காய்ந்ததும், அதில் கடுகு, பருப்பு வகைகளை போட்டு, கறிவேப்பிலை பொட்டு தாளித்ததும், பருப்பு இட்லிகளை உதிர்த்து போட்டு வதக்கவும், கிளறி கொண்டே இருக்கணும் (இல்லனா அடி பிடித்து, என் நிறத்துல தான் உங்களுக்கு பருப்புசிலி வரும்), நல்லா பொன் நிறமாகும் பொழுது, அதில் வேக வைத்த பீன்ஸ போட்டு துளி உப்பு போட்டு, கிளறி இறக்கணும்.

பீன்ஸ் பருப்புசிலி தயார்.


கத்திரிக்காய் கொத்சு:

பெரிய அளவு கத்திரிக்காய் – 1
புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காயம், கடுகு, எண்ணை – தாளிக்க
பச்சை மிளகாய் – 3

கத்திரிக்காயை சுட்டு (oven இருந்தா – PRE HEAT – 180-230 DEGREE ல 10 Mins, எண்ணை தடவி 10-15 mins) தோலை உறித்து பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணை விட்டு கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளித்து, புளி ஜலத்தை விட்டு கொதித்ததும், சுட்டு பிசைந்த கத்திரிக்காயயும் போட்டு கொதித்தும் கொத்தமல்லி தழை போட்டு பரிமாறவும் 🙂

கரிசலாங்கண்ணி பச்சடி.

தேவை:

மஞ்சள்கரிசலாங்கண்ணி கீரை – 1கப்
கெட்டித்தயிர் – 2கப்
வறுத்த உளுத்தம்பருப்பு – 1டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கீரையை இட்லிபானையில் வேகவைத்துக் கொள்ளவும். ஆறியதும் உளுத்தம்பருப்புடன் சேர்த்து அரைத்துத் தயிரில் கலந்து, உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.(இக்கீரை என்றும் இளமையாகயுடன் இருக்க உதவும். கண்பார்வைக்கு நல்லது.)


வேர்க்கடலை ரெய்தா.

தேவை:

வேகவைத்த வேர்க்கடலை – 1/2கப்
புளிக்காத கெட்டித் தயிர் – 2கப்
துருவிய கேரட் – 1
சீரகத்தூள்,மிளகுத்தூள் – 1/2டீஸ்பூன்
கடுகு – 1/4டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

வேகவைத்த வேர்க்கடலையை மிக்ஸியில் லேசாக ஒருசுற்றுசுற்றிக் கொள்ளவும். தயிரில்,கேரட், வேர்க்கடலை போட்டு, மிளகு ,சீரகத்தூள்,உப்பு சேர்த்துக் கலந்து,கடுகு தாளித்துக் கொட்டி, மல்லித்தழைத் தூவவும்.


நேந்திரம்பழ பச்சடி.

தேவை:

நேந்திரம்பழம் – 1
தயிர் – 2கப்
ஒன்றிரண்டாகத் தட்டிய சின்னவெங்காயம் – 1/4கப்
தேங்காய்த் துருவல் – 1/4கப்
சீரகம். -1டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி,கடுகு – தலா 1/4டீஸ்பூன்
எண்ணெய் – 1டேபிள்ஸ்பூன்
மஞ்சள்பொடி, பெருங்காயப் பொடி – தலா 1 சிட்டிகை
உப்பு – ருசிக்கேற்ப
மல்லித்தழை – சிறிதளவு.

செய்முறை:

தேங்காய், சீரகம் இரண்டையும் மைய அரைக்கவும் வாழைப்பழத்தை ஆவியில் வேகவைத்து மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயத்தைமஞ்சள்தூளுடன் போட்டு வதக்கவும். பின்பு அரைத்த விழுது, மசித்த வாழைப்பழத்தையும் வதக்கிய பொருட்களில் சேர்த்து, உப்பு, காரப்பொடித் தூவி இறக்கவும். ஆறியதும் தயிரில் கலந்து, மல்லித்தழையால் அலங்கரிக்கவும்.


பாலக்கீரை பச்சடி.

தேவை:

நறுக்கிய பாலக்கீரை – 1கப்
தயிர் – 3கப்
மெலியதாக நறுக்கிய சின்னவெங்காயம் – 1/4கப்
எண்ணெய் – 2டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி – 1/2டீஸ்பூன்
கடுகு, சீரகம் தலா 1/4டீஸ்பூன்
நறுக்கிய பூண்டு – 1டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளிக்கவும். பின் வெங்காயம், பூண்டு ,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இறுதியில் கீரையுடன், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, லேசாக வதக்கி (அதிகம் வதக்கினால்ருசி மாறிவிடும்) அடுப்பை அணைக்கவும். ஆறியதும் தயிரில் கொட்டிக் கலக்கவும்.


முந்திரி, வாழைப்பழ பச்சடி.

தேவை

முந்திரி பருப்பு – 2டேபிள்ஸ்பூன்
உலர்ந்த திராட்ஷை – 2டேபிள்ஸ்பூன்
வாழைப்பழம் – 1
நெய் – 1டேபிள்ஸ்பூன்
சர்க்கரை – 1/4கப்
ஏலப்பொடி – ஒருசிட்டிகை

செய்முறை:

காணலியில் நெய் ஊற்றி முந்திரி,திராட்ஷையை வறுத்துக் கொள்ளவும்.வாழைப்பழத்தை சிறுதுண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். சர்க்கரையில் சிறிது தண்ணீர்சேர்த்து பாகாக்கிக் கொள்ளவும் (பிசுக்குப்பதம்) . பின்பு வறுத்தமுந்திரி, திராட்ஷை, வாழைப்பழத்தைப் போட்டு, ஏலப்பொடி சேர்க்கவும். (ஆப்பிள்,பேரிச்சை, போன்றவற்றையும் போடலாம்)

கேரட், குடைமிளகாய் பச்சடி.

தேவை:

பொடியாக நறுக்கிய குடைமிளகாய்,கேரட் – தலா 1/4கப்
கெட்டித்தயிர் – 2கப்
பொட்டுக்கடலை – 1டீஸ்பூன்
இஞ்சித்துருவல் – 1/2டீஸ்பூன்
கடுகு,சீரகம் – தலா 1/4டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 1/4கப்
பச்சைமிளகாய் – 2
மல்லித்தழை – சிறிதளவு.
உப்பு – ருசிக்கேற்ப

செய்முறை:

தேங்காய்,பச்சைமிளகாய், இஞ்சித்துருவல்,பொட்டுக்கடலை ஆகியவற்றை விழுதாக அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் தாளித்து, குடைமிளகாயை போட்டு லேசான தீயில் வேகவிடவும். பின்பு தயிரில் அரைத்தவிழுது, கேரட், வதக்கிய குடைமிளகாய், உப்பு,சேர்த்துக் கலக்கி, மல்லித்தழைத் தூவவும்


பீட்ரூட் பச்சடி.

தேவை:

துருவிய பீட்ரூட் – 1
சர்க்கரை – 3/4கப்
பால்கோவா – 3டீஸ்பூன்
வறுத்த முந்திரி – 1டேபிள்ஸ்பூன்
நெய் – 2டீஸ்பூன்
சுக்குப்பொடி,ஏலப்பொடி – தலா ஒருசிட்டிகை

செய்முறை:

துருவியபீட்ரூட்டை வேகவைத்து அரைக்கவும். அரைத்த வுழுதில் சர்க்கரை,பால்கோவா,ஏலப்பொடி, சுக்குப்பொடி சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதிவந்ததும் உடனே இறக்கி ( அப்பொழுதுதான் பால்கோவாவின் சுவைகுன்றாமல் இருக்கும்) , வறுத்த முந்தியை சேர்க்கவும்

வாழைக்காய் பச்சடி.

தேவை:

வாழைக்காய் – 1
தயிர் – 2கப்
துண்டுகளாக்கிய பச்சைமிளகாய் – 2
.இஞ்சித்துருவல் – 1/4டீஸ்பூன்
கடுகு, சீரகம் – தலா 1/4டீஸ்பூன்
வறுத்தவேர்க்கடலை – 2டீஸ்பூன்
உப்பு, எலுமிச்சைசாறு – தேவைக்கேற்ப

செய்முறை:

வாழைக்காயை அடி,நுனி நீக்கி தோலுடன் முக்கால் வேக்காடாக வேகவைக்கவும் ஆறியதும் தோலெடுத்துத் துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், பச்சைமிளகாய் தாளித்துத் தயிரில் கொட்டவும்.பின்பு துருவிய வாழைக்காய், வேர்க்கடலை, உப்பு முதலியவற்றையும் தயிரில் கலந்து, இறுதியில் எலுமிச்சைசாறு ஊற்றிப் பரிமாறவும்..


சுரைக்காய் பச்சடி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
சுரைக்காய் – 1 கப் பொடியாக நறுக்கியது
சி. வெங்காயம் – 10 நறுக்கியது
கறிவேப்பிலை – 1 கொத்து
வர மிளகாய் – 1
கடுகு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையானளவு
புளி – சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் – தாளிப்பதற்கு
தயிர் – 1 கப்
அரைக்க
தேங்காய் துருவல் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – 1 கொத்து
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பற்கள்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 5
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வதங்கிய பின் சுரைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.

உப்பு, மஞ்சள் தூள் போடவும்.

புளியை நன்கு கரைத்து ஊற்றி கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.

வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
ஆறியதும் தயிரில் கலக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைத்து சுரைக்காயில் சேர்த்து நன்கு கலக்கவும்.
சுவையான சுரைக்காய் பச்சடி தயார்.


Scroll to Top