You cannot copy content of this page

அரிசியில் அறிவியல் !

The Science behind Rice food !

அரிசியில் அறிவியல் !

​தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அரிசியைப் பற்றி என்ன கூறுகின்றனர் எனப் பார்க்கலாம்.

அரிசியில் அடங்கியுள்ள மூலக்கூறுகள் 

அரிசியல் அடங்கியுள்ள வேதியியல் மூலக்கூறுகளானது அதனுடைய மரபு மற்றும் சுற்றுப்புறச்சூழ்நிலையை சார்ந்தே அமைகின்றது. 

இந்திய அரிசியில் ஈரப்பதம் 10.9 – 13.8, புரதம் 5.5-9.31, மாவுச்சத்து 73.4-80.8, நார்ச்சத்து 0.2-1.0 மற்றும் தாது உப்புக்கள் 0.8-2.0 சதவீதமாகும்.

அரிசியில் முளைப்பகுதி, மேல் உறைப்பகுதி அதனுள் அடுக்குப் பகுதிகளில் அரிசியில் உண்ணும் பகுதியை விட சத்துக்களான புரதம், தாது உப்புக்கள், வைட்டமின்கள் அதிகம் காணப்படுகிறது. 

அரிசியில் மாவுச்சத்தானது 72-75 சதம் ஆகும்.  அரிசியில் காணப்படும் எளிதான சர்க்கரைகளாவன : குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் டெக்ஸ்ரின் புரதச்சத்து கோதுமையைவிட குறைந்த அளவே ஆகும். 

அதிக அளவு அர்ஜினைன் புரதம் மற்ற தானியங்களை விட அரிசியில் அதிக அளவு காணப்படுகிறது.  இதில் லைபின் மற்றும் திரியோனின் குறைந்த அளவே காணப்படுகிறது. 

தாது உப்புகளானது அதிகஅளவு அரிசியில் மேலுறை மற்றும் முளைப்பகுதிகளில் உள்ளது. 

குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் டெக்ஸ்ரின் புரதச்சத்து கோதுமையைவிட குறைந்த அளவே ஆகும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் மிகவும் இன்றியமையாமல் இருப்பது அரிசி சாதம். இந்தியா மட்டுமல்லாமல் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் அரிசியை உணவாக உட்கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, போன்ற இடங்களில் நெல் அமோகமாக விளைந்தது. ‘மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல், என்று ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.

இந்த திருக்குறள் சொல்லும் பொருள் என்னவென்றால், பசித்தீயின் அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால், அவன் உடம்பில் நோய்கள் அளவில்லாமல் வளரும்.

ஆகவே நம் உடல் உழைப்புக்கு ஏற்ற அளவு உணவு உட்கொள்ள வேண்டும். தகுந்த அளவில் உணவு உட்கொண்டால் மருந்து என ஒன்றும் தேவையில்லை.

உடல் உழைப்பு அதிகம் தேவை உள்ளவர்கள் கம்பு, கேப்பை, சோளம் போன்ற தானிய உணவையும் தாம் செய்யும் தொழிலில் உடல் உழைப்பு அதிகம் தேவையில்லாதவர்கள் அரிசி உணவை உண்பதும் நமது பாரம்பரிய வழக்கம்.

பிராமணர்கள் பச்சை அரிசையையும், பிராமணர்கள் அல்லாதவர்கள்புழுங்கல் அரிசையையும் உண்ணும் வழக்கம் நமது பாரம்பரியத்தில் உண்டு.

பொதுவாக அரிசி சாதம் சாப்பிடும் போது நமது உணவுத் தேவை மூன்று பங்கு எனில் சாதத்தின் அளவு மூன்றில் ஒரு பங்கு; காய்கறிகளின் அளவு மூன்றில் ஒரு பங்கு என உண்டு மூன்றில் ஒரு பங்கு வயிறு காலியாக இருக்குமாறு பார்த்துக் கொண்டு ரசத்தையும் புளிக்காத மோரையும் சாத உணவோடு சேர்த்துக் கொண்டால் எவ்வித நோயும் நமக்கு உணவால் ஏற்படாது.

சாப்பிட்டு முடித்து 25 நிமிடங்களுக்குப் பிறகு சிறிது உப்பு 1 தேக்கரண்டி மிளகு கலந்த வென்னீரை 1 டம்ளர் மிதமான சூட்டில் குடிப்பது அவசியம். கிரீன் டீ போன்றவற்றை குடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

நாம் சாப்பிட்ட உணவு எதுவாக இருந்தாலும் அதில் கலந்திருக்கும் செயற்கை உரம் மற்றும் பூச்சி மருந்து விளைவுகளால் ஏற்பட்ப நச்சுக்களை முற்றிலுமாக உப்பு மிளகு கலந்த நீர் நீக்கி விடும். உடலுக்கு சுறுசுறுப்பையும் மனதிற்கு உற்சாகத்தையும் தரும்.

நமது முன்னோர்கள் இது போன்ற உணவுப் பழக்கத்தையே கடைப்பிடித்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அரிசி உணவு உண்ணும் பழக்கம் நமது மரபணவில் கலந்தள்ளது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

நீங்கள் வாழும் பகுதியைச் சுற்றி விளையும் உணவுப் பொருட்கள் தான் உங்கள் உடலுக்கு பொருந்தக்கூடியது என்று தற்போது நவீன உதவியாளர்கள் அறிவியல் சார்ந்து கூறிவரும் கருத்து மிகவும் ஏற்புடையது.

நமது மரபணு சாரந்த உணவு என்றும் நமக்குத் தீமை தராது; நன்மையே தரும் என்பது அறிவியல்.

அரிசி உணவு உடலுக்கு நல்தல்ல என்ற தவறான பிரச்சாரம் இங்கு தொடர்ந்து செய்யப் பட்டு வருகிறது.

அரிசி உணவுப் பழக்கத்தை நமக்கு அன்னியமாக்கி, நமது பாரம்பரிய விவசாயத்தை அழிப்பது கார்ப்பரேட் விற்பனையாளர்களின் நோக்கமாக இருக்கலாம். இது உணவில் சுயச்சார்பு கொண்ட நம்மை இறக்குமதி சாரந்த உணவு முறைக்குத் தயார் செய்யும் தந்திரமாகக் கூட இருக்கலாம். உணவுப் பிரச்சாரத்தில் உள்ள அரசியலைப் புரிந்து நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளையர்களை விரட்டிச் சுதந்திரம் பெற்று விட்டோம். அவர்களுக்கு இன்னும் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் சொல்லும் பொய்களுக்கு மருத்துவ முலாம் பூசி அவைகளை நம்பி நம் பாரம்பரியத்தைத் தொலைக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.

நெல் மணிகள் அகிலம் ஆளும் அன்னபூரணித் தாயாரால் தோற்றுவிக்கப்பட்டு, நமது தமிழ்க் கடவுள் முருகனால் முதன் முதலில் பயிரடப் பட்டது என வேளிர் குலப் புராணம் எடுத்துரைக்கிறது.

அரிசி சிவலிங்க வடிவில் உள்ள தானியம். சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதிலிருந்து அரிசியின் புனிதத்தை நாம் அறிந்து கொள்ளலாம். அரிசி தெய்வீகமானது.

குழந்தைகளுக்கு முதல் திட உணவாக பால் சாதமும், பருப்பு சாதமும் தான் ஊட்டுகிறோம்.

இந்த நிகழ்வை அன்னபிரசன்ன விழாவாகக் கொண்டாடுவது நம் மரபு. குழந்தைகளுக்குச் சப்பாத்தி, ஓட்ஸ் மற்றும் மைதாநான் போன்றவைகளை ஊட்டும் விழா நம் மரபில் இல்லை.

இறைவனுக்கு புளியோதரை, தயிர் சாதம், பொங்கல் போன்ற அரிசி வகை உணவுகளைத்தான் நிவேதனமாகப் படைக்கின்றோம். அரிசிச் சாதத்தைத்தான் அன்னாபிஷேகமாகப் படைக்கிறோம். கடவளுக்குப் படைக்கப்படும் அனைத்தும் புனிதமானது. மருத்துவ குணம் வாய்ந்தது.

நிவேதனமாகப் படைக்கப்படும் தேங்காய், வாழைப் பழம், வெற்றிலை, வில்வம், சாத வகைகள் என அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தவை தான்.

பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்தில் அரிசி சாதம் தான் பிரதான பங்கு வகிக்கிறது. உலக சுகாதார மையம் நமது சத்துணவு திட்டத்தை வெகுவாகப் பரிந்துரை செய்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம்.

அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை.

பச்சரிசி என்பது நெல்லை அவிக்காமல் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை அவித்துக் குத்திப் பெறுவது புழுங்கலரிசி.

பச்சரிசி சிலருக்கு எளிதில் ஜீரணிக்காது. உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.

புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும்.

குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.

மெல்லிய உடல்வாகு வேண்டும் என்பதற்காக, பெண்கள் அரிசியைத் தவிர்ப்பது தவறு. அரிசியைத் தவிர்த்துவிட்டு, வெறும் கோதுமை உணவை உண்பது கர்ப்பப்பை சூட்டை அதிகரிக்கும்.

பயிரிடப்படாத நெல் வகையல்லாத மூங்கில் அரிசி குறிப்பிட்ட சில மூங்கில் வகைகளில் மட்டுமே விளைகிறது. இது மூட்டு வலியைப் போக்க வல்லது.

நெல்லை வேகவைத்துத் தயார் செய்யும் புழுங்கல் அரிசியில் சத்துக்கள் அதிகம். நெல்லில் இருக்கும் சத்துக்கள் அது வேகும் போது உள்ளே இருக்கும் அரிசியில் சேருகிறது.

புழுங்கல் அரிசியில் பொன்னி அரிசி இந்திய அளவில் ருசி நிறைந்ததாக அறியப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்கள் இதன் சுவைக்கு அடிமை.

அரிசியின் நீளம், வேகும்தன்மை, மணம், ருசி போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு அதனுடைய தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அரிசி எவ்வளவு பழையதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நல்லது. குறைந்தபட்சம் ஆறு மாதமான பழைய அரிசியையே நாம் உபயோகப்படுத்த வேண்டும்.

பழைய நெல்லில் இருந்து எடுக்கும் அரிசிக்கும், புதிய நெல்லில் இருந்து பெறும் அரிசிக்கும் வித்தியாசம் இருக்கிறது.

பழைய நெல் அரிசிக்கு விலை அதிகம். சத்தும் அதிகம் இருக்கிறது. அதனால் இவ்வகை அரிசியை ஆயுர்வேத சிகிச்சையில் மருந்து போல் பயன்படுத்துகிறார்கள்.

பழைய அரிசி வேக சற்று தாமதமாகும். ஆனால் சாம்பார், ரசம் போன்றவைகளுக்கு அது அதிக ருசி தரும்.

பச்சரிசியை பெரும்பாலும் மாவு தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். பச்சரிசி சாதமும் பலருக்கு விருப்பமானதாக இருக்கிறது.

குஜராத் பச்சரிசி, ஆந்திர பச்சரிசி, உத்தரபிரதேச பச்சரிசி என பலவகை பச்சரிசிகள் உள்ளன.

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் தபில் தேவ், சென்னை ஐ.ஐ.டி.யில் சில வகை நாட்டு ரக நெல் விதைகளில் இருக்கும் சத்துக்கள் பற்றி ஆய்வு செய்தார்.

ஒவ்வொரு வகை விதையும், ஒவ்வொரு விதத்தில் சத்துக்கள் கொண்டதாக இருந்தன. 160 வகைகளில் 68 வகைகளில் 20 மில்லி கிராமுக்கு அதிகமாக இரும்பு சத்து இருப்பதாக தெரியவந்தது.

அரிசியின் தவிட்டில்தான் அதிக நார்ச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ போன்றவை உள்ளன. அதனால் தவிட்டுடன் உள்ள அரிசியே சிறந்தது.

புழுங்கலரிசி என்பது நெல்லை அப்படியே வேக வைத்து எடுப்பது. இதனால் நெல்லின் தோலுக்கடியில் உள்ள வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து அப்படியே அரிசியில் தக்க வைக்கப்படும்.

ஆனால், பச்சரிசியில், உமியெடுக்கும் போது, அந்தச் சத்துக்கள் காணாமல் போகின்றன. எனவே, புழுங்கலரிசியே சத்தானது.

கைக்குத்தல் அரிசி, சிகப்பரிசி, பாஸ்மதி அரிசி, கவுனி அரிசி, வரகு அரிசி, தினை அரிசி, சாமை அரிசி என ஏகப்பட்ட அரிசி வகைகள் இன்று கிடைக்கின்றன.

இவை அத்தனையுமே ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருபவை. காரணம், இவை அனைத்திலும் கிளைசமிக் இன்டக்ஸ் (அதாவது, சாப்பிட்டதும் ரத்தத்தில் கலக்கும் ஆற்றல்) குறைவு.

உயர் ரக அரிசி என்று சொல்லப்படுவது இயற்கையான உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட நாட்டு ரக நெல்லில் பெறும் அரிசியாகும். இது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.

நாட்டு ரக அரிசியைத் தேடிப்பிடித்து வாங்கி உண்ணுங்கள். அது கிடைக்காத பட்சத்தில் பட்டை தீட்டப்படாத பொன்னிப் புழுங்கல் அரிசியை வாங்கி உண்ணுங்கள். ஆர்கானிக் அரிசி கிடைத்தால் இன்னும் நல்லது.

காலையில் இட்லியோ, தோசையோ சாப்பிடுகிறோம் என வைத்துக் கொள்வோம். அது 3 மணி நேரத்தில் செரித்து விடும். அரிசி உணவில் உள்ள சக்தியானது உடனடியாக ரத்தத்தில் கலந்து, சீக்கிரமே செரித்து விடுகிறது.

குக்கரில் சமைக்கலாமா?

உண்மையில் அரிசியை குக்கரில் வைத்து சாப்பிடுவதால்தான் நமக்கு பல நோய்கள் உண்டாகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை.

குக்கரில் சாப்பாடு செய்வது எளிதானதுதான். ஆனால், அதனால் உடல் பருமன், சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகம் இருக்கிறது.

வடித்துச் சமைக்கும் சாதத்தில் 30 முதல் 40 சதவிகிதம் மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) குறைந்து விடும். இரத்த சர்க்கரை அளவை அது கூட்டாது.

பழைய சாதம் நல்லதா?

பழைய சாதம் மிகவும் நல்ல உணவு. இரவு புதிதாக வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு, காலையில் சாப்பிடலாம். அதில் ஈஸ்ட் உருவாகியிருக்கும். உடலுக்குக் குளிர்ச்சியானது. சின்ன வெங்காயத்துடனும், மோர் மிளகாய் வற்றலுடனும் சாப்பிடுவது இன்னும் சிறந்தது.

நீரிழிவு உள்ளவர்கள், எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் மட்டும் இதை சாப்பிட வேண்டாம். மற்றவர்களும் பழைய சாதம் சாப்பிடுகிற நாள்களில், உடலுக்கு வேலை கொடுக்கிற செயல்களில் ஈடுபடுவது நல்லது.

அரிசியைப் பற்றி பரவலாக சில கட்டுக்கதைகள் வலம் வருவதால் அரிசி சாதம் சாப்பிடலாமா, அது உடலுக்கு நல்லதா என்ற சந்தேகம் பலரிடையே காணப்படுகிறது. அரிசியை பற்றி வரும் கட்டுக்கதைகள் என்னவென்று பார்க்கலாம்.

அரிசிச் சாதம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்?

அரிசியைப் பற்றி நிலவும் இந்த கட்டுக்கதை முற்றிலும் தவறானது. அரிசிச் சாதம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது. ஏனெனில், அரிசியில் உள்ள கொழுப்புச்சத்து கோதுமையை விட மிகவும் குறைவானதே. அது மட்டுமல்லாமல், அரிசிச் சாதம் எளிதில் செரிமானம் ஆகிவிடும்.

அரிசி சாதத்தில் அதிக உப்புச்சத்து உள்ளது?

அரிசி சாதத்தில் உள்ள சோடியம் அளவு மிகவும் குறைந்த அளவு இருப்பதால் அரிசிச் சாதத்தில் உப்பு சத்து குறைவாகவே இருக்கிறது.

இரவு நேரத்தில் அரிசி சாப்பிடக் கூடாது?

அரிசிச் சாதம் எளிதில் செரிமானம் ஆவது மட்டுமல்லாமல், தூக்கத்தைத் தூண்டுகிறது.

அரிசி எளிதில் செரிமானம் ஆகாது?

இது முற்றிலும் தவறு. நம் வயிற்றில் சுரக்கும் செரிமான அமிலங்கள் அரிசியை எளிதில் செரிமானம் செய்யும் சக்தி வாய்ந்தது. கல்லீரலுக்கு மிகவும் நன்மை அளிப்பதாகவும் அரிசி இருக்கிறது. ஆயுர் வேதத்தின்படி, அரிசி சாதம் அனைவருக்கும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது.

வெள்ளை அரிசியை விட சிகப்பு அரிசி நல்லது?

அதிக நார்ச்சத்து இருப்பதால், சிகப்பு அரிசி நல்லது என்று கூறுகின்றனர். இதனால்தான் சிகப்பு அரிசியை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஆனால் வெள்ளை அரிசியும் உடலுக்கு மிகவும் நல்லதே.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் அரிசி சாப்பிடக்கூடாது?

தயிர், குழம்பு, ரசம், பச்சடி, காய்கறி போன்றவற்றுடன் அரிசி சாதத்தை இந்தியர்கள் உட்கொள்கின்றனர். அதனால் நீரிழிவு நோய் உள்ளவர்களும் கூட அரிசி உணவுகளை சாப்பிடலாம். அளவுக்கு அதிகமாக எதையும் உட்கொள்ளாமல், அளவுடன் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழவேண்டும்.

காலங்காலமாக நம் முன்னோர்கள் அரிசி உணவை சாப்பிட்டு வர இன்றைய தலைமுறையினரோ அதில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் இருக்கிறது. அது சாப்பிடக்கூடாது உடல் நலத்திற்கு தீங்கானது, அதைச் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்றெல்லாம் நினைத்து அரிசியை ஒதுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் அரிசியில் அத்தனை சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன. அதைப் பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.

புழுங்கல் அரிசி : புழுங்கல் அரிசி எளிதாக, விரைவாக ஜீரணம் ஆகக் கூடிய தன்மை கொண்ட ஒரு உணவாகும். அரிசி சாதம் முழுமையாக ஜீரணம் அதிகபட்சம் மூன்று மணி நேரம் போதுமானது.

பச்சரிசி : உடல் மெலிந்து கொழுப்புச் சத்தே இல்லாமல் பலவீனமாகக் காணப்படுபவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம். ஆனால், வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் பிரச்சனை உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.

சிகப்பரிசி : சிகப்பரிசியில் அதிகமான நார்ச்சத்து உள்ளது. இதனை சாப்பிடுவதால், ரத்தத்தில் அதிகமான கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படுகிறது. மேலும் சிகப்பரிசியில் எண்ணெய்த் தன்மை இருப்பதால் ரத்த அழுத்தம் குறைகிறது.

பாஸ்மதி அரிசி : பாஸ்மதி அரிசியில் நிறைய பைபர் அடங்கியுள்ளது.

மூங்கில் அரிசி : மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். சர்க்கரை அளவைக் குறைக்கும். எலும்பை உறுதியாக்கும். நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.

மாப்பிள்ளை சம்பா : இந்த வகை அரிசியில் புரதம், நார்ச்சத்து மற்றும் பல தாதுக்கள் நிரம்பியிருக்கின்றன. இதை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும்.

சீரகச் சம்பா: இந்த வகை அரிசி இனிப்பு சுவையுடையது. அதனால் அதிகமாக சாப்பிடத்தூண்டும். சிறுவாத நோய்களை தீர்க்க வல்லது இது.

தினை அரிசி : இது ரத்த சோகையை அகற்றக்கூடியது. அத்துடன், காய்ச்சல் சளித்தொல்லை இருந்தால் அதன் வேகத்தை குறைக்கும் ஆற்றல் உண்டு.

மருந்தாகும் அரிசி :

வயிற்றுக்கடுப்பு, குடல் வறட்சி இருப்பவர்களுக்கு அரிசி உலையில் கொதிக்கும் போதே ஒரு டம்ளர் நீரை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் வெண்ணை அல்லது நெய் ஏதாவது ஒன்றை சேர்த்து குடித்தால் விரைவில் குணமாகும்.

சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவைச் சாப்பிடலாமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்படும். அரிசி உணவைச் சாப்பிடுவதால் சர்க்கரைநோய் அதிகரிக்கும் என்ற தவறான பரப்புரை காரணமாக நம் எல்லோருக்கும் இந்தக் கேள்வி எழுகிறது.

உடலில் ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கப் பாரம்பர்ய உணவு முறைகளே பெரிதும் உதவும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் தவிட்டுடன் உள்ள கைக்குத்தல் அரிசியையோ அல்லது புழுங்கல் அரிசையையோ பயன்படுத்தவேண்டும். அளவோடு சாப்பிடுவது சிறந்தது !

நம் மரபில் ஒரு லட்சத்து 65ஆயிரம் நெல் வகைகள் இருந்தாக வரலாறு கூறுகிறது.

அரிசி நம் உடலுக்கு நம்மையும் அறியாமல் பல்வேறுவகையான நன்மைகளைக் கொடுக்கக்கூடியது.

அரிசி நம் உடலைக் கெடுக்கவில்லை; அரிசியையும் மண்ணையும் வளர்ச்சி என்ற பெயரில் நாம்தான் பாழாக்கிவிட்டோம்.

பாரம்பர்ய நெல் வகைளைத் தேடிச்சென்று, புசித்து அவற்றின் பயனை அடைய முயலவேண்டும்.

தமிழர் வாழ்வியலுடன் கலந்திருந்த நம் நெல் வகைகளை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நம் மரபு சார்ந்த அனைத்து விஷயங்களையும் நாம் தேடத் தேட அவை மறுஉருவம் பெற்று, நம் அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கும் பெரும் சொத்தாக மாறும்.

பாரம்பர்ய நெல் வகைகளை உட்கொள்வதில் மிகப்பெரிய அறிவியல் காரணங்கள் உள்ளன.

நாம் உண்ணும் அரிசிகள் தீட்டப்படாதவையாக (unpolished rice) ஆக இருப்பது உடலுக்கு மிகுந்த நன்மை தரும்.

பாரம்பர்ய நெல் வகைகள் மட்டுமன்றி நம் தமிழர் மரபில் பல்வேறுவகையான சிறுதானிய உணவுகள் இருக்கின்றன.

அவை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நம் வாழ்வியலோடு மீண்டும் கலந்துவருகிறது.

சிறுதானியங்களை மாவாக்கிப் பயன்படுத்துவதைத் தவிர்த்து முழு தானியமாகப் பயன்படுத்துவது நல்லது.

குறிப்பாகத் தினை, சாமை, கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை அளவுடன் உட்கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சர்க்கரை நோய் அதிகரிக்கும். கொழுப்பு சம்மந்தப்பட்ட நோய்கள் வரும் என்பது தவறான கருத்து.

உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்கள் கட்டுப்படும்.

எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!

 1. கருப்பு கவுணி அரிசி
  மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
 2. மாப்பிள்ளை சம்பா அரிசி :
  நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
 3. பூங்கார் அரிசி:
  சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
 4. காட்டுயானம் அரிசி:
  நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
 5. கருத்தக்கார் அரிசி :
  மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
 6. காலாநமக் அரிசி:
  மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
 7. மூங்கில் அரிசி:
  மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
 8. அறுபதாம் குறுவை அரிசி:
  எலும்பு சரியாகும்.
 9. இலுப்பைப்பூ சம்பா அரிசி :
  பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
 10. தங்கச்சம்பா அரிசி:
  பல், இதயம் வலுவாகும்.
 11. கருங்குறுவை அரிசி:
  இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
 12. கருடன் சம்பா அரிசி:
  இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
 13. கார் அரிசி:
  தோல் நோய் சரியாகும்.
 14. குடை வாழை அரிசி:
  குடல் சுத்தமாகும்.
 15. கிச்சிலி சம்பா அரிசி:
  இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
 16. நீலம் சம்பா அரிசி:
  இரத்த சோகை நீங்கும்.
 17. சீரகச் சம்பா அரிசி:
  தோல் அழகு பெறும். எதிர்ப்பு சத்தி கூடும்.
 18. தூய மல்லி அரிசி :
  உள் உறுப்புகள் வலுவாகும்.
 19. குழியடிச்சான் அரிசி :
  தாய்ப்பால் ஊறும்.
 20. சேலம் சன்னா அரிசி :
  தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
 21. பிசினி அரிசி:
  மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
 22. சூரக்குறுவை அரிசி :
  பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
 23. வாலான் சம்பா அரிசி :
  சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
 24. வாடன் சம்பா அரிசி :
  அமைதியான தூக்கம் வரும்.

சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள் தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம்.

இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல் சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சர்க்கரை நோய் பற்றி சமூக வலைதளங்களில் நிறைய தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவற்றில் பல நம்பும்விதத்தில் இருப்பதால் பலர் குழப்பமான மனநிலையில் உள்ளனர்.

சமூக வலைதளங்களில் பரவும் தவறான பரப்புரை காரணமாக, சிலர் மருந்துகளைத் தவிர்த்துவிட்டு பழங்களை மட்டுமே உட்கொள்கின்றனர்.

பழங்களை மட்டும் உட்கொள்வதால் தீர்வு கிடைக்காது. சர்க்கரை நோய்க்குக் காரணமான வெள்ளைச் சர்க்கரை மற்றும் மைதாவை நம் வீட்டுச் சமையலறையில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்களை வெளியேற்றிய நம் வீரத்தமிழ் சமூகத்திற்கு இந்த வெள்ளை உணவுகளை வெளியேற்றுவது ஒன்றும் பெரிய காரியமில்லை.

வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை, பனைவெல்லம், பனங்கருப்பட்டி ஆகியவற்றைப் பயன்படுத்துவது நல்லது.

நம் மண்ணுக்கு எப்படி இயற்கை உரம் வலிமையைத் தருகிறதோ அதுபோல, நாட்டுச் சர்க்கரை போன்ற இனிப்புகள் உடலுக்கு வன்மையைத் தரும்.

சர்க்கரை நோயாளிகள் இத்தகைய பாரம்பர்ய இனிப்புகளைக் கவனத்துடன் மிகக் குறைந்தஅளவு உட்கொள்ளலாம்.

இயற்கையின் இனிப்புகளில் தேன் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

தேனீக்களைக்கூட நம் சமூகம் விட்டு வைக்கவில்லை. தேன் என்ற பெயரில் விற்கப்படும் பெரும்பாலான தேன் அனைத்தும் போலியானதே.

தேன் வாங்குவதற்கு முன்பு அதன் தரம் அறிந்து பயன்படுத்துவது மிகவும் நல்லது.

சர்க்கரை நோயாளிகள் இனிப்பு வகைகளைத் தவிர்த்து கைப்பு, துவர்ப்புச் சுவைகளை உணவுடன் சேர்த்து உண்பது சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க மூலிகைகள் பெரிதும் உதவிகரமாக இருக்கின்றன.

அத்தி, அல்லி, ஆலமரம், ஆவாரை, இஞ்சி, கடுக்காய், கருங்காலி, கல்யாண முருங்கை,கேழ்வரகு, சரக்கொன்றை, கோவை, சீந்தில், தண்ணீர்விட்டான், தொட்டாற்சிணுங்கி, நன்னாரி, நாவல், பீர்க்கு, மருது, மூங்கில், வாதுமை உள்ளிட்ட பல மூலிகைகளை பல்வேறு வடிவங்களில் உட்கொள்ளலாம்.

சூரியநமஸ்காரம், பச்சிமோத்தாசனம், வஜ்ராசனம், கோமுகாசனம், சலபாசனம், நவாசனம், மயூராசனம், தனுராசனம், ஹாலாசனம், சர்வங்காசனம் போன்ற யோகாசனங்களைச் செய்வதும் நல்ல பலன் தரும்.

இவற்றை நன்றாகக் கற்றுத்தேர்ந்த ஆசான்களிடம் பயிற்சி எடுத்துப் பின்பற்றுவது நல்லது. இந்த ஆசனங்கள் நம்மையும் அறியாமல் உடலுக்கும் மனதுக்கும் ஆற்றலை அதிகரிக்கும்.

அத்துடன் முதலில் கூறியதுபோல தினமும் யோகா, நடைப்பயிற்சி செய்து உடலைக் காக்க வேண்டியது அவசியம். மருந்துகள் மட்டுமன்றி சுய கட்டுப்பாடுகளுடன் இருந்தால் வாழ்வு செழிக்கும்.

Scroll to Top