You cannot copy content of this page

வித விதமான கீரை சமையல்

வித விதமான கீரை சமையல்

தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரை.

பல்வேறு சத்துக்களையும், விட்டமின்களையும் தன்னகத்தே அடக்கிய கீரையை வாரம் ஓரிரு முறையாவது சாப்பிட வேண்டியது அவசியம்.

கீரை டிப்ஸ்…

கீரையுடன் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்தால், பசுமை மாறாமல் இருக்கும்.

வல்லாரைக் கீரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி அதிகரிக்கும் என்பது உண்மையே. அதற்காக, அள்ளி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தால் தலைவலி, மயக்கம் என்று படுத்தும்  ஜாக்கிரதை!

புளிச்சக்கீரை குடலுக்கு வலுவூட்டக்கூடியது. இதில் துவையல் செய்து சாப்பிட்டால், வயிற்றுப் புண், வயிற்றுக் கடுப்பு ஆகியவை குணமாகும்.

கீரைகளில் மசியல், கூட்டு செய்யும்போது பயத்தம்பருப்பை சேர்த்துச் செய்ய வேண்டும். இது சுவையைக் கூட்டுவதோடு… உடலுக்குச் சத்தையும், குளிர்ச்சியையும் தந்து தெம்பும் ஊட்டும்.

பாலக்கீரையில் அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது. இந்தக் கீரையில் உப்பு சேர்த்து லேசாக வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மலச்சிக்கலை போக்கி, உடம்பைப் புத்துணர்ச்சியாக வைக்கும்.

வயிற்றில் இருக்கும் அதிகப்படியான சதையை (தொப்பை) குறைக்கச் செய்யும் குணம் பசலைக்கீரைக்கு உண்டு. லேசாக வேக வைத்து பொரியல் செய்துகூட சாப்பிடலாம்.

மணத்தக்காளிக் காய்களை உப்பு, மோரில் பிசிறி வெயில் காய வைத்து, எண்ணெயில் பொரித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண், வயிற்றுப் புண் ஆகியவை குணமாகும்.

இரவு வேளையில் கீரை சமைத்து சாப்பிடக்கூடாது என்பார்கள். சரிவர ஜீரணமாகாமல் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதுதான் காரணம்.

சிறுகீரை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அது தரும் பலன்கள் பெரிதுதான்.

மிளகு, சீரகம், சோம்பு, தக்காளி, வெங்காயம் இவற்றோடு சிறுகீரையைச் சேர்த்து வேக வைத்து, சிறிது பருப்பையும் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் பித்தம், நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம் குறையும்.

சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், இன்சுலின் இயல்பாக சுரக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

எந்தக் கீரையானாலும் துவையல் செய்தும் சாப்பிடலாம். கீரையை நிறம் மாறாமல் நன்றாக வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், 2 பூண்டு பல், புளி, உப்பு சேர்த்து சிறிது எண்ணெயில் தனியாக வறுக்கவும். பிறகு, வதக்கிய கீரையுடன் சேர்த்து அரைத்தால் துவையல் தயார்.

இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். ருசியாக இருப்பதோடு, சத்துக்களும் அப்படியே உடல் சேரும்.

பொன்னங்கண்ணி மோர் கூட்டு

தேவையானவை: பொன்னங்கண்ணிக்கீரை – ஒரு கட்டு, துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், சீரகம், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கெட்டித் தயிர் – 100 கிராம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையைப் பொடியாக நறுக்கி வேக வைக்கவும். துவரம்பருப்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். தேங்காய் துருவல், சீரகம், ஊற வைத்த துவரம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் இவை எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்து… வெந்த கீரை, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறியதும் கெட்டித் தயிர் சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


அரைக்கீரை பருப்பு மசியல்

தேவையானவை: அரைக்கீரை – ஒரு கட்டு, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 4 (நீளமாக நறுக்கவும்), துவரம்பருப்பு – 50 கிராம். (வேக வைக்கவும்), புளி – நெல்க்காய் அளவு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரை, தக்காளியைப் பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து… பச்சை மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் வெந்த கீரை, வெந்த துவரம்பருப்பு சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்து மேலும் கொதிக்க விட்டு இறக்கவும்.

இதேபோல் பசலைக்கீரையிலும் செய்யலாம். புளிக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும்.


அகத்திக்கீரை  சுண்டைக்காய் பொரியல்

தேவையானவை: அகத்திக்கீரை – ஒரு கட்டு, துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், (முக்கால் பதத்தில் வேக வைக்கவும்), காய்ந்த மிளகாய் – 2, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள் – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், சுண்டைக்காய் வற்றல் – 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை மலராக வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து… கிள்ளிய காய்ந்த மிளகாய், சுண்டைக்காய் வற்றல்  சேர்த்து வறுக்கவும். இதில் கீரையை நறுக்கி சேர்த்து வதக்கி… வெந்த துவரம்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும். கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


பசலைக்கீரை ஸ்வீட் கார்ன் குருமா

தேவையானவை: பசலைக் கீரை – அரை கட்டு, சீஸ் – 2 க்யூப் (துருவிக் கொள்ளவும்), ஸ்வீட் கார்ன் – 2 (உதிர்த்து வேக வைக்கவும்), டிரை மாங்காய்த்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன், கிராம்பு – 1, பட்டைத்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 3 டேபிள்ஸ்பூன், துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, வெங்காயம் (சிறியது) – 1, பயத்தம்பருப்பு – 100 கிராம், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பசலைக் கீரையைப் பொடியாக நறுக்கி… பயத்தம்பருப்பு, வெங்காயம், மஞ்சள்தூள், கிராம்பு, பட்டைத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து மசிக்கவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சோள முத்துக்கள், மசித்த கீரைக் கலவை, மாங்காய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, கீழே இறக்கி சீஸ் துருவல் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


புளிச்சகீரை சட்னி

தேவையானவை: புளிச்ச கீரை – ஒரு கட்டு, காய்ந்த மிளகாய் – 8, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காய்ந்த மிளகாயுடன் புளிச்ச கீரை சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… அரைத்த கீரை விழுது, உப்பு சேர்த்து நன்றாக சுருளக் கிளறி இறக்கவும்.

தயிர் சாதத்துடன் சாப்பிட ருசியாக இருக்கும்.


வெந்தயக்கீரை மலாய் கட்டா

தேவையானவை: கடலை மாவு – 150 கிராம், ஓமம் – அரை டீஸ்பூன், வெந்தயக்கீரை – 2 கட்டு, பச்சை மிளகாய் – 2.கிரேவி செய்ய: வெங்காயம் – 2, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி – 3, தனியாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன், பட்டைத்தூள் – கால் டீஸ்பூன், ப்ரெஷ் க்ரீம் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரை, வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை நறுக்கி சாறு எடுக்கவும். கடலை மாவுடன் வெந்தயக் கீரை, ஓமம், பச்சை மிளகாய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். சிறிது மாவை எடுத்து விரல் நீளத்துக்கு உருட்டி கொதிக்கும் தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வேக விட்டு, பிறகு வடித்து தனியே வைக்கவும். கட்டா ரெடி! வடித்த நீரை கொட்ட வேண்டாம்.

மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி – பூண்டு விழுது, தக்காளி சாறு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி… மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், பட்டைத்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். வடித்து தனியாக வைத்திருந்த நீரை தேவையான அளவு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து, கட்டாக்களை போட்டு மேலும் 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.


பனீர் கிரீன் ஸ்டீம்டு கேக்

தேவையானவை: ஏதேனும் ஒரு கீரை – அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), பனீர் துருவல், வேர்க்கடலை – தலா 50 கிராம், கடுகு – ஒரு டீஸ்பூன், நெய் (அ) எண்ணெய், உப்பு – தேவையான அளவு. கேக் தயாரிக்க: கடலை மாவு – 150 கிராம், தயிர் – 100 கிராம், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், சமையல் சோடா, பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேக் செய்ய கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கலக்கவும். கீரையில் உப்பு சேர்த்து, நெய் (அ) எண்ணெய் விட்டு லேசாக வதக்கவும். சிறு சிறு கிண்ணங்களில் லேசாக எண்ணெய் தடவி, துருவிய பனீர், வேர்க் கடலை சிறிது, அதன் மேல் வதக்கிய கீரை, அதற்கும் மேல் கரைத்து வைத்துள்ள கடலை மாவு கரைசல் என கிண்ணத்தில் பாதி அளவுக்கு ஊற்றவும். கிண்ணங்களில் நிரப்பியதும், அவற்றை குக்கரில் வைத்து வெயிட் போடாமல் வேக வைத்து எடுக்கவும். சிறிது ஆறியதும், கத்தியால் எடுத்து, ஒரு தட்டின் மேல் பரப்பி, மேலாக சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும். இதேபோல் தயிர், சமையல் சோடா இல்லாமல் தோசை மாவிலும் செய்யலாம்.


பருப்புக்கீரை டிக்கா

தேவையானவை: பருப்புக்கீரை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), உருளைக்கிழங்கு – 2 (வேக வைக்கவும்) வேக வைத்த பச்சைப் பட்டாணி – 50 கிராம், வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), கெட்டித் தயிர் – 50 கிராம், டிரை மாங்காய்தூள் – 2 டேபிள்ஸ்பூன், சாட் மசாலாத்தூள், மிளகாய்தூள் – தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல் – சிறிதளவு, சோள மாவு – 5 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையைத் தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். இதனுடன் எண்ணெய், நீங்கலாக கொடுத்துள்ள மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி கட்டை விரலால் அழுத்தி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.


சிறுகீரை  பச்சைப் பட்டாணி கூட்டு

தேவையானவை: சிறுகீரை – ஒரு கட்டு, பச்சைப் பட்டாணி – ஒரு பாக்கெட், வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – தலா ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1, தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் கிரீம் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுத்து… கீறிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். உப்பு, பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும். தண்ணீர் வற்றி கெட்டியானதும், பச்சைப் பட்டாணி, தூள் வகைகள், தயிர் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். கிரீம் சேர்த்து, அடுப்பை சிறியதாக வைத்து நன்றாக கொதிக்க விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம். 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.


சிறுகீரை குணுக்கு

தேவையானவை: பொடியாக நறுக்கிய சிறுகீரை – ஒரு கைப்பிடி அளவு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் – 3, பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, பூண்டுப் பல் – ஒன்று, இஞ்சி – சிறு துண்டு, எண்ணெய் – 250 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, வடிகட்டவும். இதனுடன் காய்ந்த மிளகாய், தோல் உரித்த பூண்டுப் பல், சுத்தம் செய்து நறுக்கிய இஞ்சி சேர்த்து கெட்டியாக அரைக்கவும் (சிறிது கரகரப்பாக மசிந்தால் போதும்). கீரையை நீரில் அலசி வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி, அரைத்த மாவுடன் சேர்த்து… நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, மாவை நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை பக்கோடா மாதிரி கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: அடைமாவு மிகுதியாகிவிட்டால், அதனுடன் கீரை சேர்த்து இதே முறையில் தயாரிக்கலாம். இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன்.


கீரை  வெஜிடபிள் சமோசா

தேவையானவை: மைதா மாவு – 200 கிராம், பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணிக்கீரை – ஒரு கைப்பிடி அளவு, நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், கோஸ் துருவல் – 4 டீஸ்பூன், கேரட் துருவல் – 2 டீஸ்பூன், உருளைக்கிழங்கு – இரண்டு, எண்ணெய் – 250 மில்லி, கரம் மசாலாத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பொன்னாங்கண்ணிக்கீரை, வெங்காயம், கோஸ் துருவல், கேரட் துருவல் ஆகியவற்றை வதக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். வதக்கிய கீரை மற்றும் காய்களுடன், மசித்த உருளைக்கிழங்கு, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா மாவை, சின்ன உருண்டைகளாக உருட்டி, சிறிய வடிவில் இட்டு உள்ளே கீரை – வெஜிடபிள் உருண்டைகளை வைத்து சமோசா வடிவில் மூடவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, சமோசாக்களை பொரித்து எடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).


அரிசி ரவை  கீரை கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி – 250 கிராம், பொடியாக நறுக்கிய அரைக்கீரை  – ஒரு கைப்பிடி அளவு, மிளகு – ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு  – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 50 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியுடன் துவரம்பருப்பு, மிளகு சேர்த்து ரவை போல உடைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்துள்ள கீரையை வதக்கிக் கொள்ளவும். கனமான பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயை விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். வதக்கிய கீரை சேர்க்கவும். ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதித்த உடன் ரவையைத் தூவி, உப்பு சேர்த்துக் கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பத்திரத்தை மூடி வைத்து, வெந்த உடன் இறக்கவும். வெந்த கலவையை பிசைந்து, உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: கத்திரிக்காய் கொத்சு, வெங்காய கொத்சு இதற்கு சிறந்த காம்பினேஷன்.


முளைக்கீரை சாம்பார்

தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை  – கைப்பிடி அளவு, துவரம்பருப்பு – 100 கிராம் (வேக வைக்கவும்), புளி – எலுமிச்சம்பழம் அளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பொடியாக நறுக்கிய முளைக்கீரையை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். புளியை 250 மில்லி தண்ணீர் விட்டுக் கரைத்து, சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். சிறிது நேரம் கொதித்த உடன் கீரையை சேர்க்கவும். இதனுடன் வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும். பின்னர் ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: இதேமுறையில் வெந்தயக்கீரை, அரைக்கீரையிலும் சாம்பார் தயாரிக்கலாம்.


முளைக்கீரை புளிப்பச்சடி

தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை – ஒரு கப், புளி – எலுமிச்சம்பழ அளவு, வெல்லம் – 100 கிராம், கடுகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் ஒன்று, எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:  நறுக்கிய கீரையை வேகவிட்டு நன்கு மசிக்கவும். மசித்த கீரையுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்த்து… சிறிது நேரம் கொதிக்கவிட்டு பொடித்த வெல்லம் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதித்த உடன், எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: புளிப்பும் இனிப்பும் கலந்த இந்தக் கீரைப்பச்சடி, வற்றல் குழம்பு சாதத்துக்கு சூப்பர் காம்பினேஷன்.


முருங்கைக்கீரை அடை

தேவையானவை:  பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு, இட்லி அரிசி – 200 கிராம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு சிறிய கிண்ணம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு (சுத்தம் செய்து, தோல் சீவி, நறுக்கவும்), காய்ந்த மிளகாய் – இரண்டு, மிளகு – 10, எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:  இட்லி அரிசியை தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியைக் களைந்து கரகரப்பாக அரைக்கவும். காய்ந்த மிளகாய், இஞ்சி, மிளகு, பருப்புகளை சேர்த்து அரைத்து, அரிசி மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரையை மாவுடன் நன்றாகக் கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, தோசைக்கு ஊற்றுவதைவிட சிறிது அதிகம் மாவை ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: வெல்லம் – வெண்ணெய், அவியல் ஆகியவை அடைக்கு நல்ல காம்பினேஷன்.


வெரைட்டி கீரை சட்னி

தேவையானவை: புதினா, பாலக்கீரை – தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – ஒரு சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), சாம்பார் வெங்காயம் – நான்கு, காய்ந்த மிளகாய்  – ஒன்று, உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புதினா, பாலக்கீரையை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். சாம்பார் வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி வதக்கிக் கொள்ளவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து அரைக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும்.

குறிப்பு: இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்றது இந்த சட்னி.


அரைக்கீரை போண்டா

தேவையானவை: பொடியாக நறுக்கிய அரைக்கீரை, பொடியாக நறுக்கிய வெங்காயம் – தலா ஒரு கப், அரிசி மாவு – 2 டீஸ்பூன், கடலை மாவு – 100 கிராம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு – ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2 (சிறியது), எண்ணெய் – 250 மில்லி. உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சியை சுத்தம் செய்து, தோல் சீவி, பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய கீரை, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாயை நன்றாக வதக்கிக் கொள்ளவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, வதக்கிய கீரை கலவையுடன் சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறிய எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

கடலை மாவுடன் சிறிதளவு உப்பு, அரிசி மாவு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, கரைத்து வைத்த மாவில் உருண்டைகளை தோய்த்துப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.


கீரை  வெஜிடபிள் பீட்ஸா

தேவையானவை: பொடியாக நறுக்கிய அரைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு, இட்லி அரிசி, பாசிப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு கப், கோஸ் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய சிவப்பு அல்லது மஞ்சள் குடமிளகாய் – தலா ஒரு கப், சீஸ் – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 100 மில்லி,  உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பாசிப்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கோஸ் துருவல், கேரட் துருவல் இரண்டையும் வதக்கி, நறுக்கிய குடமிளகாய், கீரை, உப்பு சேர்த்து மேலும் வதக்கி எடுத்து, அரைத்த மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை பீட்ஸா வடிவத்தில் கெட்டியாக ஊற்றி, மிதமான தீயில் அடுப்பை எரியவிட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.  இதை பிளேட்டில் எடுத்து வைத்து, அழகாக கட் செய்து, சீஸ் வைத்து அலங்கரித்து, மேலே கொத்தமல்லி தூவி சாப்பிடக் கொடுக்கவும்.

குறிப்பு: சத்து மிகுந்த இந்த வித்தியாசமான பீட்ஸாவின் புது ருசி, குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும்.


கலவைக்கீரை கூட்டு

தேவையானவை: பருப்புக்கீரை, முருங்கைக்கீரை, முளைக்கீரை – தலா ஒரு கைப்பிடி அளவு,  பாசிப்பருப்பு, தேங்காய் துருவல்  – தலா ஒரு கப்,  சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரை வகைளை, நறுக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். பாசிப்பருப்பை குழைவாக வேகவிடவும். தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனுடன், வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்து, கீரையும் சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, கொதிக்கும் கீரையில் சேர்த்து இறக்கவும்.


முடக்கத்தான் கீரை தோசை

தேவையானவை: முடக்கத்தான் கீரை – ஒரு கைப்பிடி அளவு, இட்லி அரிசி, பாசிப்பருப்பு – தலா ஒரு கப், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, தக்காளி – ஒன்று, காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியையும் பாசிப்பருப்பையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சியை சுத்தம் செய்து, தோல் சீவி நறுக்கவும். அரிசி, பருப்பை களைந்து… தக்காளி, காய்ந்த மிளகாய், இஞ்சி, கீரை ஆகியவற்றை சேர்த்து நைஸாக அரைத்து, உப்பு சேர்க்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி, மிதமான தீயில் அடுப்பை எரியவிட்டு, கரைத்து வைத்திருக்கும் மாவை தோசைக்கல்லில் மெல்லியதாக, பரவலாக ஊற்றி, இருபுறமும் சிறிதளவு எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: சாம்பார், இட்லி மிளகாய்ப்பொடி இதற்கு ஏற்ற சைட் டிஷ். முடக்கத்தான் கீரை மூட்டுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கக் கூடியது.


சிறுகீரை உருண்டை குழம்பு

தேவையானவை: பொடியாக நறுக்கிய சிறுகீரை – ஒரு கைப்பிடி அளவு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, புளி – எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையை சிறிதளவு எண்ணெயில் வதக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து… காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். புளியைக் கரைத்து அதனுடன் சாம்பார் பொடி சேர்க்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அரைத்த பருப்பு விழுதை சேர்த்துக் கிளறி, பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். கரைத்து வைத்த புளித் தண்ணீர் – சாம்பார் கலவையை கொதிக்கவிட்டு, வதக்கிய கீரை, வேக வைத்த உருண்டைகளை சேர்க்கவும். பிறகு சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.


வெரைட்டி கீரை போளி

தேவையானவை: மைதா மாவு – 200 கிராம், பொடியாக நறுக்கிய முளைக் கீரை , முருங்கைக்கீரை, வல்லாரைக்கீரை  – தலா ஒரு கப், வெல்லம் – 200 கிராம், தேங்காய்த் துருவல் – ஒரு கப்,  கடலைப்பருப்பு – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை, நெய் – 100 மில்லி, நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்.

செய்முறை: மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர், எண்ணெய் சேர்த்து, கேசரி பவுடரையும் சேர்த்துப் பிசைந்து மூடி வைக்கவும். கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, வேகவிட்டு தண்ணீர் வடித்து, தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.  கீரைகளை சிறிதளவு நெய் விட்டு வதக்கவும். வெல்லத்தைப் பொடித்து தண்ணீர் விட்டு கரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிக்கட்டி, மீண்டும் சிறிது நேரம் கொதிக்கவிடவும். கெட்டியானதும், கீரை சேர்த்து, அரைத்த பருப்பு விழுதை சேர்த்து கெட்டியாக கிளறி இறக்கி, சிறு உருண்டைகளாக உருட்டவும்.

பிசைந்து வைத்த மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி… நெய் தடவிய வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து அப்பள வடில் இட்டு, உள்ளே கீரை பூரண உருண்டையை வைத்து மூடி, போளிகளாக தட்டவும். தவாவை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, போளிகளை போட்டு, சுற்றிலும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: வல்லாரைக் கீரை ஞாபகசக்தியை வளர்க்கக் கூடியது.


முளைக்கீரை  பருப்பு வடை

தேவையானவை: முளைக்கீரை – ஒரு கட்டு (கழுவி பொடியாக நறுக்கவும்), கடலைப்பருப்பு – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 4, சோம்பு – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சித் துருவல் – அரை டீஸ்பூன், கொத்தமல், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பை ஊற வைத்து வடித்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் சோம்பு, வெங்காயம், முளைக்கீரை, இஞ்சித் துருவல், கொத்தமல், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


உருளை  முருங்கைக்கீரை மசாலா

தேவையானவை: முருங்கைக்கீரை – அரை கட்டு (உதிர்த்து வேக வைக்கவும்), பட்டை – சிறிய துண்டு, கிராம்பு – 2, சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டுப் பல் – 3, இஞ்சித் துருவல், கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு – 4, பச்சை மிளகாய் – 4, வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தக்காளி – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து சிறு துண்டுகளாக நறுக்கவும். வேக வைத்த கீரையை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இஞ்சி – பூண்டுடன், நறுக்கிய பாதி அளவு வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும். தக்காளி, பச்சை மிளகாயைத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சீரகம், மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கு, இஞ்சி-பூண்டு-வெங்காய விழுது, அரைத்த கீரை விழுதை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.


மல்ட்டி கீரை சூப்

தேவையானவை: முளைக்கீரை, முருங்கைக்கீரை, பசலைக்கீரை, கொத்தமல், புதினா – தலா ஒரு பிடி, மிளகுத்தூள், சோள மாவு – தலா 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புதினா, கொத்தமல்யுடன் மற்ற கீரைகளையும் நன்றாகக் கழுவி ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்த கீரைகளை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து, கீரைக் கலவையில் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


பாலக் ரைஸ்

தேவையானவை: பாஸ்மதி அரிசி – 200 கிராம், பாலக் கீரை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் – 1, (பொடியாக நறுக்கவும்), பூண்டு பேஸ்ட் – கால் டீஸ்பூன், இஞ்சித் துருவல், சோம்பு – கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, கிராம்பு – 2, நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, உதிராக வடித்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சோம்பு, கிராம்பு தாளித்து… பூண்டு பேஸ்ட், இஞ்சித் துருவல், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியவுடன் வெங்காயம், கீரை சேர்த்து மேலும் வதக்கி, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, வடித்த சாதத்துடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.


வெந்தயக்கீரை கொழுக்கட்டை

தேவையானவை: வெந்தயக்கீரை – 2 கட்டு, கடலை மாவு, கோதுமை மாவு – தலா 50 கிராம், மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையை ஆய்ந்து, நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கவும். இதனுடன் கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, கலந்து பிசையவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.


வல்லாரை துவையல்

தேவையானவை: வல்லாரைக்கீரை – ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, புளி – நெல்க்காய் அளவு, பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வல்லாரைக்கீரையைப் பொடியாக நறுக்கி, சிறிது எண்ணெயில் வதக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். இதனுடன் புளி, உப்பு, வதக்கிய கீரை சேர்த்து துவையலாக அரைக்கவும்.


கீரை வெஜிடபிள் ஆம்லெட்

தேவையானவை: பாலக் கீரை – அரை கட்டு, கடலை மாவு – 50 கிராம், தக்காளி – 3, வெங்காயம் – 1, சீஸ் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் – தலா கால் டீஸ்பூன், ஜாதிக்காய்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாலக் கீரை, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை அரைத்து சாறு எடுக்கவும். கீரையுடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். கடலை மாவு, வெங்காயம், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், ஜாதிக்காய்தூள், உப்பு, சீஸ் துருவல், கீரை விழுது, தக்காளி சாறு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, கரைத்த மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி, வேக வைத்து எடுக்கவும்.


கீரை  நட்ஸ் சாலட்

தேவையானவை: காய்ந்த திராட்சை – 50 கிராம், வல்லாரைக்கீரை – ஒரு சிறிய கட்டு (பொடியாக நறுக்கி வதக்கவும்), மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரி – தலா 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து கலக்கவும்.


கிரீன் ஸ்மூத்தி

தேவையானவை: பழுத்த வாழைப்பழம் – 2, மணத்தக்காளி கீரை – அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் – 50 மில், பச்சை திராட்சை – 50 கிராம்.

செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஐஸ் க்யூப் சேர்த்துப் பருகவும்.


முருங்கைக்கீரை  காராமணி பொரியல்

தேவையானவை: முருங்கைக்கீரை – அரை கட்டு (உருவிக் கொள்ளவும்), காராமணி – 50 கிராம் (வேக வைக்கவும்), காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – கால் கப், ஒன்றிரண்டாக பொடித்த தனியா, பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சித் துருவல், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பூண்டு, பெருங்காயத்தூள், சீரகம், தனியா சேர்த்து தாளிக்கவும். இஞ்சித் துருவல், முருங்கைக்கீரை சேர்த்து வதக்கி, காராமணி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்கி இறக்கவும்.


ரங்கீலா ரொட்டி

தேவையானவை: பாலக் கீரை – ஒரு கட்டு (விழுதாக அரைக்கவும்), கேரட், பீட்ரூட் – தலா 1 (வேக வைத்து, தனித்தனியே அரைத்து, தனியாக வைக்கவும்), கோதுமை மாவு – 150 கிராம் (3 பங்காக பிரித்துக் கொள்ளவும்), உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரைத்த கீரையுடன் ஒரு பங்கு கோதுமை மாவு, உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கேரட் விழுதுடன் இரண்டாவது பங்கு கோதுமை மாவு, உப்பு சேர்த்துப் பிசையவும். பீட்ரூட் விழுதுடன் மூன்றாவது பங்கு கோதுமை மாவு, உப்பு சேர்த்துப் பிசைந்து தனியே வைக்கவும். ஒவ்வொரு கலவையிருந்தும் சிறிதளவு எடுத்து, உள்ளங்கையில் வைத்து லேசாக உருட்டிக் கொள்ளவும். இதை சப்பாத்தியாக இட்டு, தோசைக்கல்ல் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.


பைங்கன் பாலக்

தேவையானவை: கத்திரிக்காய் – 4, பாலக் கீரை – அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் – 2, இஞ்சித் துருவல் – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, நெய் (அ) எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி… கீறிய பச்சை மிளகாய், கொத்தமல், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்றாக வேகவிடவும். கடாயில் நெய் (அ) எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பெருங்காயத்தூள், தனியாத்தூள், கீரையை சேர்த்து வதக்கி வேக வைக்கவும். வெந்ததும் மசித்து, கத்திரிக்காய் கலவையில் சேர்த்துக் கிளறவும்.


மணத்தக்காளிகீரை மிளகூட்டல்

தேவையானவை: மணத்தக்காளிகீரை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), மிளகு – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையில் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். வெந்த கீரையில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.


முளைக்கீரை  அவல் சாலட்

தேவையானவை: முளைக்கீரை – அரை கட்டு (வதக்கிக் கொள்ளவும்), வறுத்த அவல் – 100 கிராம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு (வேக வைத்து, தோல் உரிக்கவும்) – 1, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பவுல் எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலந்து வைக்கவும்


முளைக்கீரை  தக்காளி மசாலா கிரேவி

தேவையானவை: முளைக்கீரை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), தக்காளி, உருளைக்கிழங்கு – தலா 3, வெங்காயம் – 1, மஞ்சள்தூள், சீரகம், கரம் மசாலாத்தூள், இஞ்சி – பூண்டு விழுது – தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – இரண்டு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைவேக்காட்டில் வேக வைத்து, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். தக்காளியை அரைத்து சாறு எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும். கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், நறுக்கிய கீரை சேர்த்து வதக்கி, தக்காளி சாறு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

இறக்குவதற்கு முன்பு பொரித்த உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.


மேத்தி காக்ரா

தேவையானவை: கடலை மாவு, மைதா மாவு, கோதுமை மாவு – தலா 100 கிராம், பொடித்த ஓமம் – ஒரு டீஸ்பூன், வெந்தயக் கீரை – 2 கட்டு, மிளகாய்த்தூள் – எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் கடலை மாவு, மைதா மாவு, பொடித்த ஓமம், வெந்தயக்கீரை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து… சிறிது எண்ணெய் விட்டு பிசைந்து, சப்பாத்தி மாதிரி தேய்த்துக் கொள்ளவும். காயும் தோசைக்கல்ல் ஒவ்வொரு சப்பாத்தியாகப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக சுட்டெடுக்கவும்.


சிறுகீரை கட்லெட்

தேவையானவை: சிறுகீரை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), உருளைக்கிழங்கு – 3, பொடித்த வேர்க்கடலை, வறுத்துப் பொடித்த அவல் – தலா 3 டேபிள்ஸ்பூன், இஞ்சி – பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய், பிரெட் துண்டுகள் – தலா 3, சோள மாவு – இரண்டு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். இதில் சிறுகீரையைச் சேர்த்து… பொடித்த வேர்க்கடலை, இஞ்சி – பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்க்கவும், பிரெட்டை தண்ணீரில் முக்கி உடனே பிழிந்து சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசையவும். பிசைந்து வைத்த கலவையிருந்து சிறிது எடுத்து கட்லெட்டுகளாக தட்டி, சோள மாவு கரைசல் முக்கி எடுத்து, அவல் பொடியில் புரட்டி, தோசைக்கல்ல் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக எடுக்கவும்.


புதினா பக்கோடா

தேவையானவை: புதினா – ஒரு கட்டு, சேமியா – 100 கிராம், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, வெங்காயம் – 2, உடைத்த முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொதிக்கும் நீரில் சேமியாவைப் போட்டு, வெந்ததும் வடித்து எடுத்து, குளிர்ந்த தண்ணீரில் அலசவும். இதனுடன் பொடியாக நறுக்கிய புதினா, வெங்காயம் சேர்த்து வதக்கி, முந்திரி, மிளகாய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து பிசைந்து, காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.


பாலக் பச்சடி

தேவையானவை: பாலக்கீரை – அரை கட்டு, தயிர் – 100 கிராம், பச்சை மிளகாய் – 1, கடுகு, சீரகம், எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாலக்கீரையைப் பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிட்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். வெறும் கடாயில் சீரகத்தை வறுத்து, அரைத்த கீரையுடன் சேர்க்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து, கீரைக் கலவை, உப்பு சேர்த்துக் கிளறி, தயிருடன் கலந்து பரிமாறவும்.


மேத்தி புலாவ்

தேவையானவை: பாசுமதி அரிசி – 150 கிராம், வெந்தயக்கீரை – 4 கட்டு (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் – 150 மில், ஏலக்காய் – 3 (இடித்துக் கொள்ளவும்), கிராம்பு – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் – 3, நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு சீரகம், கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து… பச்சை மிளகாய், வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும். இதில் தேங்காய்ப்பால், ஊற வைத்த அரிசி, உப்பு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கிளறி, குக்கரில் வேக வைத்து இறக்கவும். ஏதேனும் ஒரு பச்சடியுடன் பரிமாறவும்.


முளைக்கீரை  பருப்பு வடை

தேவையானவை: முளைக்கீரை – ஒரு கட்டு (கழுவி பொடியாக நறுக்கவும்), கடலைப்பருப்பு – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 4, சோம்பு – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சித் துருவல் – அரை டீஸ்பூன், கொத்தமல், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பை ஊற வைத்து வடித்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் சோம்பு, வெங்காயம், முளைக்கீரை, இஞ்சித் துருவல், கொத்தமல், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


உருளை  முருங்கைக்கீரை மசாலா

தேவையானவை: முருங்கைக்கீரை – அரை கட்டு (உதிர்த்து வேக வைக்கவும்), பட்டை – சிறிய துண்டு, கிராம்பு – 2, சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டுப் பல் – 3, இஞ்சித் துருவல், கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு – 4, பச்சை மிளகாய் – 4, வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தக்காளி – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து சிறு துண்டுகளாக நறுக்கவும். வேக வைத்த கீரையை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இஞ்சி – பூண்டுடன், நறுக்கிய பாதி அளவு வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும். தக்காளி, பச்சை மிளகாயைத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சீரகம், மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கு, இஞ்சி-பூண்டு-வெங்காய விழுது, அரைத்த கீரை விழுதை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.


மல்ட்டி கீரை சூப்

தேவையானவை: முளைக்கீரை, முருங்கைக்கீரை, பசலைக்கீரை, கொத்தமல், புதினா – தலா ஒரு பிடி, மிளகுத்தூள், சோள மாவு – தலா 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புதினா, கொத்தமல்யுடன் மற்ற கீரைகளையும் நன்றாகக் கழுவி ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்த கீரைகளை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து, கீரைக் கலவையில் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


பாலக் ரைஸ்

தேவையானவை: பாஸ்மதி அரிசி – 200 கிராம், பாலக் கீரை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் – 1, (பொடியாக நறுக்கவும்), பூண்டு பேஸ்ட் – கால் டீஸ்பூன், இஞ்சித் துருவல், சோம்பு – கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, கிராம்பு – 2, நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, உதிராக வடித்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சோம்பு, கிராம்பு தாளித்து… பூண்டு பேஸ்ட், இஞ்சித் துருவல், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியவுடன் வெங்காயம், கீரை சேர்த்து மேலும் வதக்கி, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, வடித்த சாதத்துடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.


வெந்தயக்கீரை கொழுக்கட்டை

தேவையானவை: வெந்தயக்கீரை – 2 கட்டு, கடலை மாவு, கோதுமை மாவு – தலா 50 கிராம், மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையை ஆய்ந்து, நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கவும். இதனுடன் கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, கலந்து பிசையவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.


வல்லாரை துவையல்

தேவையானவை: வல்லாரைக்கீரை – ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, புளி – நெல்க்காய் அளவு, பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வல்லாரைக்கீரையைப் பொடியாக நறுக்கி, சிறிது எண்ணெயில் வதக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். இதனுடன் புளி, உப்பு, வதக்கிய கீரை சேர்த்து துவையலாக அரைக்கவும்.


கீரை வெஜிடபிள் ஆம்லெட்

தேவையானவை: பாலக் கீரை – அரை கட்டு, கடலை மாவு – 50 கிராம், தக்காளி – 3, வெங்காயம் – 1, சீஸ் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் – தலா கால் டீஸ்பூன், ஜாதிக்காய்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாலக் கீரை, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை அரைத்து சாறு எடுக்கவும். கீரையுடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். கடலை மாவு, வெங்காயம், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், ஜாதிக்காய்தூள், உப்பு, சீஸ் துருவல், கீரை விழுது, தக்காளி சாறு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, கரைத்த மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி, வேக வைத்து எடுக்கவும்.


கீரை  நட்ஸ் சாலட்

தேவையானவை: காய்ந்த திராட்சை – 50 கிராம், வல்லாரைக்கீரை – ஒரு சிறிய கட்டு (பொடியாக நறுக்கி வதக்கவும்), மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரி – தலா 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து கலக்கவும்.


கிரீன் ஸ்மூத்தி

தேவையானவை: பழுத்த வாழைப்பழம் – 2, மணத்தக்காளி கீரை – அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் – 50 மில், பச்சை திராட்சை – 50 கிராம்.

செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஐஸ் க்யூப் சேர்த்துப் பருகவும்.


முருங்கைக்கீரை  காராமணி பொரியல்

தேவையானவை: முருங்கைக்கீரை – அரை கட்டு (உருவிக் கொள்ளவும்), காராமணி – 50 கிராம் (வேக வைக்கவும்), காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – கால் கப், ஒன்றிரண்டாக பொடித்த தனியா, பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சித் துருவல், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பூண்டு, பெருங்காயத்தூள், சீரகம், தனியா சேர்த்து தாளிக்கவும். இஞ்சித் துருவல், முருங்கைக்கீரை சேர்த்து வதக்கி, காராமணி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்கி இறக்கவும்.


ரங்கீலா ரொட்டி

தேவையானவை: பாலக் கீரை – ஒரு கட்டு (விழுதாக அரைக்கவும்), கேரட், பீட்ரூட் – தலா 1 (வேக வைத்து, தனித்தனியே அரைத்து, தனியாக வைக்கவும்), கோதுமை மாவு – 150 கிராம் (3 பங்காக பிரித்துக் கொள்ளவும்), உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரைத்த கீரையுடன் ஒரு பங்கு கோதுமை மாவு, உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கேரட் விழுதுடன் இரண்டாவது பங்கு கோதுமை மாவு, உப்பு சேர்த்துப் பிசையவும். பீட்ரூட் விழுதுடன் மூன்றாவது பங்கு கோதுமை மாவு, உப்பு சேர்த்துப் பிசைந்து தனியே வைக்கவும். ஒவ்வொரு கலவையிருந்தும் சிறிதளவு எடுத்து, உள்ளங்கையில் வைத்து லேசாக உருட்டிக் கொள்ளவும். இதை சப்பாத்தியாக இட்டு, தோசைக்கல்ல் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.


தேவையானவை: கத்திரிக்காய் – 4, பாலக் கீரை – அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் – 2, இஞ்சித் துருவல் – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, நெய் (அ) எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

பைங்கன் பாலக்

செய்முறை: கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி… கீறிய பச்சை மிளகாய், கொத்தமல், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்றாக வேகவிடவும். கடாயில் நெய் (அ) எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பெருங்காயத்தூள், தனியாத்தூள், கீரையை சேர்த்து வதக்கி வேக வைக்கவும். வெந்ததும் மசித்து, கத்திரிக்காய் கலவையில் சேர்த்துக் கிளறவும்.


மணத்தக்காளிகீரை மிளகூட்டல்

தேவையானவை: மணத்தக்காளிகீரை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), மிளகு – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையில் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். வெந்த கீரையில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.


முளைக்கீரை  அவல் சாலட்

தேவையானவை: முளைக்கீரை – அரை கட்டு (வதக்கிக் கொள்ளவும்), வறுத்த அவல் – 100 கிராம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு (வேக வைத்து, தோல் உரிக்கவும்) – 1, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பவுல் எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலந்து வைக்கவும்


முளைக்கீரை  தக்காளி மசாலா கிரேவி

தேவையானவை: முளைக்கீரை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), தக்காளி, உருளைக்கிழங்கு – தலா 3, வெங்காயம் – 1, மஞ்சள்தூள், சீரகம், கரம் மசாலாத்தூள், இஞ்சி – பூண்டு விழுது – தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – இரண்டு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைவேக்காட்டில் வேக வைத்து, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். தக்காளியை அரைத்து சாறு எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும். கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், நறுக்கிய கீரை சேர்த்து வதக்கி, தக்காளி சாறு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

இறக்குவதற்கு முன்பு பொரித்த உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.


பொன்னங்கண்ணி மோர் கூட்டு

தேவையானவை: பொன்னங்கண்ணிக்கீரை – ஒரு கட்டு, துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், சீரகம், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கெட்டித் தயிர் – 100 கிராம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையைப் பொடியாக நறுக்கி வேக வைக்கவும். துவரம்பருப்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். தேங்காய் துருவல், சீரகம், ஊற வைத்த துவரம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் இவை எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்து… வெந்த கீரை, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறியதும் கெட்டித் தயிர் சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


கீரை இனிப்பு கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு (ஊற வைத்து, நிழலில் உலத்தி, அரைத்து, சலித்த மாவு) – இரண்டு கப், கடலைப்பருப்பு – 100 கிராம், பொடியாக நறுக்கிய அரைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு, பொடித்த வெல்லம் – 100 கிராம், தேங்காய் துருவல் – ஒரு கப், ஏலக்காய்த்தூள், நெய் – சிறிதளவு.

செய்முறை: கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து ஊற வைத்து, வேகவிட்டு தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி கொதிக்க விட்டு, அரைத்த கடலைப்பருப்பு விழுதை சேர்த்து கெட்டி யாகக் கிளறவும். கீரையை வதக்கி இதனுடன் சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி உருட்டிக் கொள்ளவும். இதுதான் பூரணம்.

அரிசி மாவின் அளவில் ஒரு பங்குக்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். இதில் அரிசி மாவைத் தூவிக் கிளறி, பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி, சொப்பு செய்து, உருட்டி வைத்த பூரணத்தை உள்ளே வைத்து மூடவும். இட்லித் தட்டில் சிறிதளவு நெய் தடவி பூரணம் நிரப்பிய சொப்புகளை வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.


பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – 200 கிராம், பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணிக்கீரை – ஒரு கப், வெண்ணெய் –  2 டீஸ்பூன், வெள்ளை எள், ஓமம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் வெண்ணெய், எள், ஓமம், உப்பு சேர்க்கவும். பொன்னாங்கண்ணிக்கீரையை பொடியாக நறுக்கி, சிறிதளவு எண்ணெயில் வதக்கி, மாவுடன் சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். மாவை மெல்லிய சப்பாத்திகளாக இடவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் அடுப்பை வைத்து, சப்பாத்திகளை சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் சேர்த்துப் பிசைந்தும் தயாரிக்கலாம். இது எளிதில் ஜீரணம் ஆகிவிடும். இதற்கு சட்னி, சாஸ் தொட்டு சாப்பிடலாம்.


தூதுவளைக்கீரை துவையல்

தேவையானவை: தூதுவளைக்கீரை – 2 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் – 2, பூண்டுப் பல் – 4, புளி – நெல்லிக்காய் அளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை மிதமான தீயில் வறுக்கவும். கீரையை கவனமாக ‘கட்’ செய்து சேர்த்து வதக்கவும் (சிறிய முள் இருக்கும்). புளி, உப்பு, வதக்கிய பூண்டு, வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பு, வதக்கிய கீரை எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும்.

குறிப்பு: இருமல், சளித் தொந்தரவு இருந்தால், தூதுவளைக்கீரை துவையலை சூடான சாதத்துடன் சாப்பிட… நல்ல நிவாரணம் கிடைக்கும்.


பாலக்கீரை தால்

தேவையானவை: பாலக்கீரை – ஒரு கட்டு, பாசிப்பருப்பு – 100 கிராம், தக்காளி, பச்சை மிளகாய் – தலா ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாலக்கீரையை சிறிதளவு எண்ணெயில் வதக்கி அரைக்கவும். பாசிப்பருப்பை வேக வைத்து கீரையுடன் சேர்க்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு… கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் கீரை – பருப்பு கலவை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.


அரைக்கீரை கட்லெட்

தேவையானவை: பொடியாக நறுக்கிய அரைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு, உருளைக்கிழங்கு – ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு, ரஸ்க்தூள், கேரட் துருவல் – தேவையான அளவு, இஞ்சி விழுது –  ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,  எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். அரைக்கீரை, வெங்காயத்தை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் உப்பு, கேரட் துருவல், கொத்தமல்லி, இஞ்சி விழுது சேர்த்து மேலும் வதக்கவும். வதக்கிய கீரை கலவையுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்துப் பிசைந்து, கட்லெட் வடிவத்தில் தட்டி, ரஸ்க் தூளில் புரட்டவும். தவாவில் பரவலாக கட்லெட்களை வைத்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.

குறிப்பு: இதை புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, சாஸ் தொட்டு சாப்பிடலாம்.


மிக்ஸ்டு கீரை புலாவ்

தேவையானவை: பாசுமதி அரிசி – 250 கிராம், புதினா – ஒரு கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, வல்லாரைக்கீரை – தலா ஒரு கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், கரம் மசாலாத்தூள்,  ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – இரண்டு (பொடியாக நறுக்கவும்), உலர்திராட்சை,  முந்திரிப்பருப்பு, பிஸ்தா பருப்பு – தலா 10, நெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசுமதி அரிசியுடன் ஒரு பங்கு அரிசிக்கு இருமடங்கு என்ற அளவில் தண்ணீர் அளந்து விட்டு, குக்கரில் வேக வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் நெய் விட்டு புதினா, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, வல்லாரைக்கீரை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். திராட்சை, முந்திரி, பிஸ்தாவை நெய்யில் தனித்தனியாக வறுக்கவும். சாதத்தை அகலமான பாத்திரத்தில் போட்டு வதக்கிய கீரை கலவை, திராட்சை, முந்திரி, பிஸ்தா சேர்த்து நன்கு கலக்கினால்… மிக்ஸ்டு கீரை புலாவ் ரெடி!


புதினா  பொன்னாங்கண்ணிக்கீரை சீடை

தேவையானவை: அரிசி – 200 கிராம், பொன்னாங்கண்ணிக்கீரை, புதினா  – தலா ஒரு கைப்பிடி அளவு,  மிளகுத்தூள், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 250 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, வடிகட்டி, நிழலில் உலர்த்தி மிக்ஸியில் மாவாக அரைத்து சலித்து லேசாக வறுக்கவும். இந்த மாவுடன் மிளகுத்தூள், சீரகம், உப்பு, கறிவேப்பிலை, வெண்ணெய் சேர்த்து… புதினா, பொன்னாங்கண்ணிக்கீரையை நறுக்கி சேர்க்கவும். இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து, சீடைகளாக உருட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சீடைகளைப் போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.


மல்டி கீரை ஊத்தப்பம்

தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை, அரைக்கீரை  பொன்னாங்கண்ணிக்கீரை – தலா ஒரு கைப்பிடி அளவு, இட்லி அரிசி – 250 கிராம், உளுத்தம்பருப்பு – 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்) எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியையும் உளுத்தம்பருப்பையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, முளைக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கி அரைத்து வைத்த மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தவாவை சூடாக்கி, மாவை ஊத்தப்பங்களாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

குறிப்பு: இட்லி மிளகாய்ப்பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன்.


அகத்திக்கீரை பருப்பு உசிலி

தேவையானவை:  துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 100 கிராம், பொடியாக நறுக்கிய அகத்திக்கீரை – ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் – 2,  மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அகத்திக்கீரையை பொடியாக நறுக்கி வேகவிடவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த பருப்பை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பருப்பு உதிரி உதிரியாக வரும்வரை கிளறவும். வேக வைத்த அகத்திக்கீரையில் இருந்து தண்ணீரைப் பிழிந்து விட்டு, கீரையை பருப்புடன் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.


முளைக்கீரை வடை

தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு – 200 கிராம், மிளகு – 10, பச்சை மிளகாய் – இரண்டு, எண்ணெய் – 250 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து அரைக்கவும். சிறிது மசிந்தவுடன் மிளகு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கீரையை  வதக்கி மாவுடன் சேர்த்துப் பிசையவும். பிறகு, வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அடுப்பை  மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு தேங்காய் சட்னி சிறந்த காம்பினேஷன்.


மல்டி கீரை சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை – 4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை – சிறிதளவு, சோள மாவு – 2 டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, வெண்ணெய், நெய் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:  முளைக்கீரை, முருங்கைக்கீரையை நெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். சோள மாவை 250 மில்லி தண்ணீர் விட்டுக் கரைத்து… மிளகுத்தூள், உப்பு, வதக்கிய கீரை, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கொதிக்கவிட்டு, வெண்ணெய் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: வேறு காய்கறிகளைக் கொண்டும் இதே முறையில் சூப் தயாரிக்கலாம்.


கீரைப் பொங்கல்

தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு, அரிசி – 250 கிராம், பாசிப்பருப்பு – 100 கிராம், மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி  – ஒரு டீஸ்பூன், வறுத்த முந்திரி – 10, கறிவேப்பிலை – சிறிதளவு, நெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு

செய்முறை: அரிசியையும், பாசிப்பருப்பையும் லேசாக சூடுவரும் வரை வறுக்கவும். மிளகு, சீரகத்தைப் பொடித்துக் கொள்ளவும். இஞ்சியை சுத்தம் செய்து, தோல் சீவி, பொடியாக நறுக்கவும். வறுத்த அரிசி – பருப்புடன் ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.

வாணலியில் நெய் விட்டு நறுக்கிய கீரை, மிளகு – சீரகப்பொடி, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வேக வைத்த சாதத்துடன் தேவையான உப்பு சேர்த்து மசித்து… வதக்கிய கீரை கலவை, வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறினால்… கீரைப் பொங்கல் தயார்.

குறிப்பு: புளிப்புத்தன்மை இல்லாத எந்த கீரையிலும் பொங்கல் தயாரிக்கலாம்.


கலவைக்கீரை பக்கோடா

தேவையானவை: அரிசி மாவு, கடலை மாவு – தலா ஒரு கப், பூண்டு விழுது, இஞ்சி விழுது – தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணிக்கீரை, புதினா, அரைக்கீரை, முருங்கைக்கீரை எல்லாம் சேர்த்து – 2 கைப்பிடி அளவு,  பச்சை மிளகாய் – ஒன்று, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 250 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, கடலை மாவு, பூண்டு விழுது,  இஞ்சி விழுது, உப்பு, மிளகாய்த்தூள், நறுக்கிய பொன்னாங்கண்ணிக்கீரை, புதினா, அரைக்கீரை, முருங்கைக்கீரை, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுத்து… சூடாகப் பரிமாறவும்.


மணத்தக்காளிக்கீரை பொரியல்

தேவையானவை:  மணத்தக்காளிக்கீரை – ஒரு கட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு, உளுத்தம்பருப்பு, – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மணத்தக்காளிக்கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். நறுக்கிய கீரையை தண்ணீரில் அலசி இதனுடன் சேர்த்து வதக்கி… தக்காளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.


முளைக்கீரை தயிர்க்கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு, தேங்காய் துருவல் – ஒரு கப், பச்சை மிளகாய் – ஒன்று, புளிக்காத தயிர் – ஒரு கப், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தேங்காய், பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். முளைக்கீரையை வேகவிடவும். கீரை வெந்ததும், உப்பு, தேங்காய் விழுது, தயிர் சேர்த்துக் கலக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்துக் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: இதேமுறையில் வாழைத்தண்டு, கோஸ் ஆகியவற்றிலும் தயிர்க்கூட்டு தயாரிக்கலாம்.


சிறுகீரை தட்டை

தேவையானவை: அரிசி மாவு – 100 கிராம், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், வறுத்து அரைத்து சலித்த உளுத்தமாவு  – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய சிறுகீரை – ஒரு கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 250 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் வெண்ணெய், உப்பு, உளுத்தமாவு, பொடியாக நறுக்கிய கீரை, மிளகாய்த்தூள், கறிவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும். ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி, உருண்டைகளை அதில் வைத்து, சிறிய தட்டைகளாக தட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தட்டைகளை சேர்த்து பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.


Scroll to Top