You cannot copy content of this page

நாராயண ஸூக்தம்

விஷ்ணு காயத்ரி

ஓம் நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு; ப்ரசோதயாத்

ஓம் ஸஹ நாவவது
ஸஹ நௌ புனக்து
ஸஹவீர்யம் கரவாவஹை
தேஜஸ்வி நாவதீதமஸ்து
மா வித்விஷாவஹை

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

ஆயிரக் கணக்கான தலைகள் உடையவரும், ஒளிமிக்கவரும், எல்லாவற்றையும் பார்ப்பவரும், உலகிற்கெல்லாம் மங்கலத்தைச் செய்பவரும், உலகமாக இருப்பவரும், அழிவற்றவரும், மேலான நிலை ஆனவரும் ஆகிய நாராயணன் என்னும் தெய்வத்தை தியானம் செய்கிறேன்.

இந்த உலகைவிட மேலானவரும், என்றும் உள்ளவரும், உலகமாக விளங்குபவரும், பக்தர்களின் துன்பங்களைப் போக்குபவருமாகிய நாராயணனைத் தியானம் செய்கிறேன்.

உலகிற்கு நாயகரும், உயிர்களின் தலைவரும், என்றும் உள்ளவரும், மங்கல வடிவினரும், அழிவற்றவரும், சிறப்பாக அறியத் தக்கவரும், எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருப்பவரும், சிறந்த புகலிடமாக இருப்பவருமான நாராயணனை தியானம் செய்கிறேன்.

தியானம் என்பது இறைவனின் திரு சன்னிதியில் இருப்பது. ஒரு படத்தையோ உருவத்தையோ கற்பனை செய்து கொண்டிருப்பதோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதோ அல்ல. அவரது திரு சன்னிதியில் நாம் இருப்பதை உணர வேண்டும். அவர் பேரொளியுடன் திகழ்வதை மனத்தளவில் காணவேண்டும்

நாராயணனே சிறந்த ஒளி. நாராயணனே பரமாத்மா. நாராயணனே பரப்பிரம்மம். நாராயணனே மேலான உண்மை.

நாராயணனே தியானம் செய்பவர்களுள் சிறந்தவர். நாராயணனே சிறந்த தியானம்.

இவ்வளவு மகிமைகளுடன் திகழ்கின்ற இறைவன் நம்முள்ளேயே இருக்கிறார்

மனம் எல்லையற்று பரந்த தெய்வத்தை நினைப்பதில் ஈடுபட்டது.

உலகம் முழுவதிலும் காணப்படுவது எதுவாயினும் கேட்கப்படுவது எதுவாயினும் அவை அனைத்தையும் உள்ளும் புறமும் வியாபித்தபடி நாராயணன் இருக்கிறார்.

முடிவற்றவரும், அழிவற்றவரும், அனைத்தும் அறிந்தவரும், சம்சாரப் பெருங்கடலின் இறுதியில் (அதாவது, ஆசைகள் உணர்ச்சிவேகங்கள் போன்ற அலைகள் கொந்தளிக்கின்ற சம்சாரப் பெருங்கடலின் இறுதியில் என்பது ஆசைகள் அடங்கி மனம் அமைதியுற்றபின்) இருப்பவரும், உலகிற்கெல்லாம் மங்கலத்தைச் செய்பவரும் ஆகிய நாராயணனை தியானம் செய்கிறேன். அவரே பிரம்மா, அவரே சிவன், அவரே விஷ்ணு, அவரே இந்திரன், அவர் அழிவற்றவர், சுய ஒளியுடன் பிரகாசிப்பவர். தனக்குமேல் யாரும் இல்லாதவர்.

காணும் பொருட்களின் அழகாகவும், காட்சிக்கு ஆதாரமாகவும் உள்ள பரம்பொருளை, உடல்தோறும் உறைபவனை, கருமேனித் திருமாலும் செம்மேனிச் சிவனும் ஒன்றாக இணைந்த வடிவை, முற்றிலும் தூயவனை, முக்கண்ணனை, எல்லாம் தன் வடிவாய்க் கொண்டவனை பலமுறை வணங்குகிறேன்.

நாராயணனை அறிந்து கொள்வோம். அதற்காக அந்த

வாசுதேவனை தியானிப்போம். அந்த விஷ்ணு நம்மைக்கும் காக்கட்டும்

யார் பூமியையும் அதிலுள்ள அனைத்தயும் உருவாக்கி உள்ளாரோ, மேலே உள்ள விண்ணுலதைத் தாங்கியுள்ளாரோ, மூன்றடியால் மூன்று உலகங்களையும் அளந்தாரோ, சான்றோரால் போற்றப் படுகிறாரோ அந்த மஹாவிஷ்ணுவின் மகிமை மிக்க செயல்களைப் போற்றுவோம்.

எங்கே தேவர்கள் மகிழ்கிறார்களோ, எங்கே மனிதர்கள் போக விரும்பு கிறார்களோ, எது விஷ்ணுவின் மனத்திற்கு உகந்த இருப்பிடமோ, எங்கே அமுதத் தேனூற்று பெருகுகின்றதோ, விஷ்ணுவின் மேலான அந்தத் திருவடிகளை நான் அடைவேனாக.

உமது மணம் நிறைந்ததான பூமி மற்றும் விண்ணுலகம் இரண்டையே நாங்கள் அறிவோம். ஒளி பொருந்திய திருமாலே, நீர் மட்டுமே மேலான உலகை அறிவீர். இந்த பூமியில் நீர் நடந்து, அதனை இருப்பிடமாகக் கொள்வதற்கு மனிதர்களுக்குக் கொடுத்துள்ளீர்.

எண்ணற்ற அழகுகள் பொருந்திய இந்த பூமியை விஷ்ணு தமது மகிமையினால் மூன்று முறை அளந்துள்ளார். மஹாவிஷ்ணுவே! உமது மேலான பெருமை காரணமாக நீர் விஷ்ணு என்று பெயர் பெறுகிறீர். மேலும், இது உமது மகிமைக்குப் பொருத்தமாகவே உள்ளது.

எந்த பூமியின் ஏழு பகுதிகளிலும் விஷ்ணு நடந்தாரோ அந்த பூமியின் பாவங்களிலிருந்து தேவர்கள் நம்மைக் காக்கட்டும். விஷ்ணு நடந்தபோது தமது திருவடிகளை மூன்று முறை வைத்தார். அவர் தமது மூன்று அடிகளால் உலகை அளந்து இங்கே தர்மங்களை நிறுவியுள்ளார்.

பரந்த வானம் போல் கண்களை உடையவர்களான ரிஷிகள் விஷ்ணுவின் மேலான உறைவிடத்தை எப்போதும் காண்கிறார்கள்.

அளவற்ற வற்றாத செல்வம் பெறுவதற்கும், மங்கா புகழ் பெறுவதற்கும் விஷ்ணுவைத் தியானிப்போம். எல்லா வெற்றியும் கிடைக்கிறது, எல்லாமே அடையப் படுகிறது. எல்லாமே வளம் பெறுகிறது.

முன்பு எது இருந்ததோ, எது இனி வரப் போகிறதோ, இப்பொழுது எது காணப் படுகிறதோ எல்லாம் இறைவனே.

மரணமிலா பெருநிலைக்குத் தலைவராக இருப்பவரும் அவரே. ஏனெனில் அவர் இந்த ஜடவுலகைக் கடந்தவர்,

இங்கு காணப்படுவதெல்லாம் இறைவனின் மகிமையே. ஆனால் அந்த இறைவன் இவற்றைவிடச் சிறப்பு மிக்கவர்.

எல்லா உருவங்களையும் தோற்றுவித்து, பெயர்களையும் அமைத்து, எந்த இறைவன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரோ, மகிமை பொருந்தியவரும் சூரியனைப் போல் ஒளிர்பவரும் இருளுக்கு அப்பாற்பட்டவருமான அந்த இறைவனை நாம் அறிவோமாக.

எந்த இறைவனை பிரம்மா ஆதியில் பரமாத்மா என்று கண்டு கூறினாரோ, இந்திரன் நான்கு திசைகளிலும் எங்கும் நன்றாகக் கண்டானோ அவரை இவ்வாறு அறிபவன் இங்கேயே அதாவது இந்தப் பிறவியிலேயே முக்தனாக ஆகிறான். தர்மங்களைக் கடைப்பிடிக்கின்ற மகான்கள் அந்த மேலான உலகை அடிவார்கள்.

இறைவன் பிரபஞ்சத்தில் செயல்படுகிறார். பிறக்காதவராக இருந்தும் அவர் பல்வேறு வடிவங்களில் தோன்றுகிறார். அவரது உண்மையான வடிவத்தை மகான்கள் நன்றாக அறிகிறார்கள்.

யார் தேவர்களிடம் தேஜஸாக விளங்குகிறாரோ, தேவர்களின் குருவாக இருக்கிறாரோ, தேவர்களுக்கு முன்பே தோன்றியவரோ அந்த ஒளிமயமான பரம்பொருளுக்கு நமஸ்காரம்.

ஹ்ரீ தேவியும், செல்வத்தின் தலைவி யாகிய லட்சுமி தேவியும் உமது மனைவியர்.

எம் பெருமானே நாங்கள் விரும்புவதைக் கொடுத்தருள்வாய். இவ்வுலக இன்பத்தைக் கொடுத்தருள்வாய். இகத்திலும் பரத்திலும் அனைத்தையும் தந்தருள்வாய்.


விஷ்ணு ஸூக்தம்

விஷ்ணோர்நுகம் வீர்யாணி ப்ரவோசம் ய: பார்திவானி விமமே

ராஜாஸி யோ அஸ்கபாயதுத்ர ஸதஸ்தம் விசக்ரமாணஸ்
த்ரேதோருகாய: ததஸ்ய ப்ரியமபிபாதோ அஸ்யாம் நரோ-யத்ர
தேவயவோ-மதந்தி உருக்ரமஸ்ய ஸஹிபந்துரித்தா விஷ்ணோ:
பதே பரமே மத்வ உத்ஸ: ப்ரதத்-விஷ்ணுஸ்-ஸ்தவதே வீர்யாய
ம்ருகோ ந பீம: குசரோ கிரிஷ்டா: யஸ்யோருஷு த்ரிஷு
விக்ரமணேஷு அதிக்ஷியந்தி புவநானி விஸ்வா
பரோ-மாத்ரயா-தநுவா வ்ருதான் ந-தே-மஹித்வமன்வஸ்நுவந்தி

உபேதே வித்ம ரஜஸி ப்ருதிவ்யா விஷ்ணோ தேவத்வம் பரமஸ்ய
வித்ஸே விசக்ரமே ப்ருதிவீ மேஷ ஏதாம் ÷க்ஷத்ராய
விஷ்ணுர்மநுஷே தஸஸஸ்யன் த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜநாஸ:
ஊருக்ஷிதி ஸுஜநிமாசகார த்ரிர்தேவ: ப்ருதிவீமேஷ ஏதாம்
த்வேஷங்க்-க்ஹ்யஸ்ய ஸ்தவிரஸ்ய நாம பர்யாப்த்யா அநந்தராயாய
ஸர்வஸ்தோமோ தி ராத்ர
உத்தமமஹர்பவதி ஸர்வஸ்யாப்த்யே
ஸர்வஸ்யஜித்த்யை ஸர்வமேவ
தேனாப்நோதி ஸர்வம் ஜயதி

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:


புருஷ ஸூக்தம், நாராயணஸூக்தம், விஷ்ணு ஸூக்தம்
புருஷ ஸூக்தம் – ரிக்வேதம் 10.8.90

வேத மந்திரங்களுள் கருத்துச்செறிவிலும், மந்திர ஆற்றலிலும், மங்கலத்தைச் சேர்ப்பதிலும் மிக முக்கியமான ஒன்று இந்தச் சூக்தம்.


ஓம் தச்சம்யோராவ்ருணீமஹே காதும் யஜ்ஞாய காதும் யஜ்ஞபதயே தைவீ ஸ்வஸ்திரஸ்து ந: ஸ்வஸ்திர் மானுஷேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் சன்னோ அஸ்து த்விபதே | சம் சதுஷ்பதே

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

ஓம் ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்

ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா அத்யதிஷ்ட்டத்தசாங்குலம் 1

புருஷ ஏவேதக்ம் ஸர்வம். யத்பூதம் யச்ச பவ்யம்

உதாம்ருதத்வஸ்யேசான: யதன்னேனாதி ரோஹதி 2

ஏதாவானஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாக்ம்ச்ச பூருஷ:

பாதோ(அ)ஸ்ய விச்வா பூதானி த்ரிபாதஸ்யாம்ருதம் திவி 3

த்ரிபாதூர்த்வ உதைத் புருஷ: பாதோ(அ)ஸ்யேஹா(அ)(அ)பவாத் புன:

ததோ விஷ்வங் வ்யக்ராமத் ஸாசனானசனே அபி 4

தஸ்மாத்விராடஜாயத விராஜோ அதி பூருஷ: ஸ ஜாதோ

அத்யரிச்யத பச்சாத்பூமிமதோ புர: 5

யத்புருஷேண ஹவிஷா தேவா யஜ்ஞமதன்வத வஸந்தோ அஸ்யாஸீதாஜ்யம் க்ரீஷ்ம இத்ம: சரத்தவி: 6

ஸப்தஸ்யாஸன் பரிதய: த்ரி: ஸப்த ஸமித: க்ருதா:
தேவா யத்யஜ்ஞம் தன்வானா: அபத்னன் புருஷம் பசும் 7

தம் யஜ்ஞம் பர்ஹிஷி ப்ரௌக்ஷன் புருஷம் ஜாதமக்ரத:

தேன தேவா அயஜந்த ஸாத்யா ரிஷயச்ச யே 8

தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ஸம்ப்ருதம் ப்ருஷதாஜ்யம்

பசூக்ம்ஸ்தாக்ம்ச் சக்ரே வாயவ்யான் ஆரண்யான் க்ராம்யாச்ச யே 9

தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ரிச: ஸாமானி ஜஜ்ஞிரே

சந்தாக்ம்ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத் யஜுஸ்தஸ்மாதஜாயத 10

தஸ்மாத்ச்வா அஜாயந்த யே கே சோபயாதத: காவோ ஹ

ஜஜ்ஞிரே தஸ்மாத் த்ஸ்மாஜ்ஜாதா அஜாவய: 11

யத் புருஷம் வ்யதது: கதிதா வ்யகல்பயன் முகம் கிமஸ்ய

கௌ பாஹூ காவூரு பாதாவுச்யேதே 12

ப்ராஹ்மணோ(அ)ஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய: க்ருத:

ஊரூ ததஸ்ய யத்வைச்ய: பத்ப்யாக்ம் சூத்ரோ அஜாயத 13

சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோ: ஸூர்யோ அஜாயத

முகாதிந்த்ரச் சாக்னிச்ச ப்ராணாத்வாயுரஜாயத 14

நாப்யா ஆஸீதந்தரிக்ஷம் சீர்ஷ்ணோ த்யௌ: ஸமவர்த்தத

பத்ப்யாம் பூமி திச: ச்ரோத்ராத் ததா லோகாக்ம் அகல்பயன் 15

வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம்

ஆதித்யவர்ணம் வர்ணம் தமஸஸ்து பாரே

ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர: நாமானி

க்ருத்வா(அ)பிவதன் யதாஸ்தே 16

தாதா புரஸ்தாத்யமுதாஜஹார சக்ர: ப்ரவித்வான்

ப்ரதிசச்சதஸ்ர: தமேவம் வித்வானம்ருத இஹ பவதி

நான்ய: பந்தா அயனாய வித்யதே 17

யஜ்ஞேன யஜ்ஞமயஜந்த தேவா: தானி தர்மாணி ப்ரதமான்யாஸன்

தே ஹ நாகம் மஹிமா: ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா: 18

அத்ப்ய: ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விச்வ கர்மண: ஸமவர்த்ததாதி

தஸ்ய த்வஷ்ட்டா விததத்ரூபமேதி தத் புருஷஸ்ய விச்வமாஜானமக்ரே 19

வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத்

த்மேவம் வித்வானம்ருத இஹ பவதி நான்ய: பந்தா வித்யதே(அ)யனாய 20

ப்ரஜாபதிச்சரதி கர்பே அந்த: அஜாயமானோ பஹுதா விஜாயதே தஸ்ய தீரா: பரிஜானந்தி யோனிம் மரீசீனாம் பதமிச்சந்தி வேதஸ: 21

யோ தேவேப்ய ஆதபதி யோ தேவானாம் புரோஹித: பூர்வோ

யோ தேவேப்யோ ஜாத: நமோ ருசாய ப்ராஹ்மயே 22

ருசம் ப்ராஹ்மம் ஜனயந்த: தேவா அக்ரே ததப்ருவன் யஸ்த்வைவம் ப்ராஹ்மணோ வித்யாத் தஸ்ய தேவா அஸன் வசே 23

ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ன்யௌ அஹோராத்ரே பார்ச்வே

நக்ஷத்ராணி ரூபம் அச்வினௌ வ்யாத்தம் 24

இஷ்ட்டம் மனிஷாண அமும் மனிஷாண ஸர்வம் மனிஷாண 25

ஓம் தச்சம்யோராவ்ருணீமஹே காதும் யஜ்ஞாய காதும் யஜ்ஞபதயே தைவீ ஸ்வஸ்திரஸ்து ந: ஸ்வஸ்திர் மானுஷேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் சன்னோ அஸ்து த்விபதே | சம் சதுஷ்பதே

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:


இதுவரை கண்ட 18 மந்திரங்களுடன் புருஷஸூக்தம் நிறைவு பெறுகின் றது.

ஆனால் தென்னாட்டில் பொதுவாக இத்துடன் உத்தர நாராயணம், நாராயண ஸூக்தம், விஷ்ணுஸூக்தத்தின் முதல் மந்திரம் இவற்றுடன் சேர்த்தே பாராயணம் செய்கிறார்கள்.

அவை பின்வருமாறு:

நாராயண ஸூக்தம் – தைத்திரீய ஆரண்யகம் 4.10.13

புருஷஸுக்தத்துடன் பாராயணம் செய்யப்படும் இந்த ஸுக்தம் தியானத்தின் செயல்முறையை விளக்குகிறது. இந்த ஸூக்தத்தை ஓதி பொருளைச் சிந்தித்து பின்னர் தியானம் செய்வது மிக்க பலனைத் தரும்.


ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து ஸஹவீர்யம் கரவாவஹை

தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

ஓம்

ஸஹஸ்ரசீர்ஷம் தேவம் விச்வாக்ஷம் விச்வசம்புவம்

விச்வம் நாராயணம் தேவமக்ஷரம் பரமம் பதம் 1

விச்வத: பரமான் நித்யம் விச்வம் நாராயணக்ம் ஹரிம்

விச்வமேவேதம் புருஷஸ்தத்விச்வ முபஜீவதி 2

பதிம் விச்வஸ்யாத்மேச்வரக்ம் சாச்வதக்ம் சிவமச்யுதம்

நாராயணம் மஹாஜ்ஞேயம் விச்வாத்மானம் பராயணம் 3

நாராயண பரோ ஜ்யோதிராத்மா நாராயண பர:

நாராயணம் பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர:

நாராயண பரோ த்யாதா த்யானம் நாராயண பர: 4

யச்ச கிஞ்சிஜ்ஜகத் ஸர்வம் த்ருச்யதே ச்ரூயதே(அ)பி வா

அந்தர்பஹிச்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித: 5

அனந்தமவ்யயம் கவிக்ம் ஸமுத்ரே(அ)ந்தம் விச்வ சம்புவம்

பத்மகோச ப்ரதீகாசக்ம் ஹ்ருதயம் சாப்யதோமுகம் 6

அதோ நிஷ்ட்ட்யா விதஸ்த்யாந்தே நாப்யாமுபரிதிஷ்ட்டதி

ஜ்வாலமாலாகுலம் பாதீ விச்வஸ்யாயதனம் மஹத் 7

ஸந்ததக்ம் சிலாபிஸ்து லம்பத்யாகோச ஸன்னிபம் தஸ்யாந்தே

ஸுஷிரக்ம் ஸூக்ஷ்மம் தஸ்மின் ஸர்வம் ப்ரதிஷ்ட்டிதம் 8

தஸ்ய மத்யே மாஹானக்னிர் விச்வார்ச்சிர் விச்வதோமுக:

ஸோக்ரபுக்விபஜன் திஷ்ட்டன்னா ஹாரமஜர: கவி: 9

திர்யகூர்த்வமத: சாயீரச்மயஸ் தஸ்ய ஸந்ததா

ஸந்தாபயதி ஸ்வம் தேஹமாபாத தலமஸ்தக:

தஸ்ய மத்யே வஹ்னிசிகா அணீயோர்த்வா வ்யவஸ்தித: 10

நீல தோயத மத்யஸ்தாத்வித்யுல்லேகேவ பாஸ்வரா

நீவார சூகவத் தன்வீ பீதா பாஸ்வத்யணூபமா 11

தஸ்யா: சிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித: ஸ ப்ரஹ்ம

ஸ சிவ: ஸ ஹரி: ஸேந்த்ர: ஸோ(அ)க்ஷர: பரம: ஸ்வராட் 12

ரிதக்ம் ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் க்ருஷ்ணபிங்கலம்

ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விச்வரூபாய வை நமோ நம: 13

விஷ்ணு ஸூக்தம் – ரிக்வேதம்

ரிக்வேதம் முழுவதிலும் மஹாவிஷ்ணு பல இடங்களில் துதிக்கப் பட்டாலும், அவருக்கென்று முழுமையாக சில துதிகள் மட்டுமே உள்ளன.அவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது இந்த ஸுக்தம்.


ஓம்

விஷ்ணோர் நுகம் வீர்யாணி ப்ரவோசம்

ய: பார்த்திவானி விமமே ரஜாக்ம்ஸி

யோ அஸ்கபாயதுத்தரக்ம் ஸதஸ்தம்

விசக்ரமாணஸ்த்ரேதோருகாய: 1

விஷ்ணோரராடமஸி விஷ்ணோ: ப்ருஷ்ட்டமஸி

விஷ்ணோ: ச்ஞப்த்ரேஸ்தோ விஷ்ணோஸ்ஸ்யூரஸி

விஷ்ணோர் த்ருவமஸி வைஷ்ணவமஸி

விஷ்ணவே த்வா 2

ததஸ்ய ப்ரியமபிபாதோ அச்யாம்

நரோ யத்ர தேவயவோ மதந்தி

உருக்ரமஸ்ய ஸ ஹி பந்துரித்தா

விஷ்ணோ: பதே பரமே மத்வ உத்ஸ: 3

ப்ரதத்விஷ்ணு: ஸ்தவதே வீர்யாய

ம்ருகோ ந பீம: குசரோ கிரிஷ்ட்டா:

யஸ்யோருஷு த்ரிஷுவிக்ரமணேஷு

அதிக்ஷியந்தி புவனானி விச்வா

பரோ மாத்ரயா தனுவா வ்ருதான

ந தே மஹித்வமன்வச்னுவந்தி 4

உ பே தே வித்வ ரஜஸீ ப்ருதிவ்யா விஷ்ணோ

தேவத்வம் பரமஸ்ய வித்ஸே

விசக்ரமே ப்ருதிவீமேஷ ஏஷாம்

க்ஷேத்ராய விஷ்ணுர் மனுஷே தசஸ்யன் 5

த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜனாஸ:

ஊருக்ஷிதிக்ம் ஸுஜனிமாசகார த்ரிர் தேவ:

ப்ருதிவீமேஷ ஏதாம் விசக்ரமே சதர்ச்சஸம் மஹித்வா

ப்ரவிஷ்ணுரஸ்து தவஸஸதவீயான்

த்வேஷக்ம் ஹ்யஸ்ய ஸ்தவிரஸ்ய நாம 6

அதோ தேவா அவந்து நோ யதா விஷ்ணுர் விசக்ரமே

ப்ருதிவ்யாஸ் ஸப்த தாமபி: இதம் விஷ்ணுர் விசக்ரமே

த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாக்ம் ஸுரே 7

த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்ய:

ததோ தர்மாணி தாரயன் விஷ்ணோ கர்மாணி பச்யதோ

யதோ வ்ரதானி பஸ்பசே இந்த்ரஸ்ய யுஜ்யஸ்ஸகா 8

தத்விஷ்ணோ பரமம் பதக்ம் ஸதா பச்யந்தி ஸூரய:

திவீவ சக்ஷுராததம் தத்விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாக்ம் ஸஸ்ஸமிந்ததே விஷ்ணோர்யத் பரமம் பதம் 9

பர்யாப்த்யா அனந்தராயாய ஸர்பஸ்தோமோ(அ)திராத்ர

உத்தம மஹர் பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வஸ்ய

ஜித்யை ஸர்வமேவ தேனாப்னோதி ஸர்வம் ஜயதி 10


Scroll to Top