இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள்..!
மதுரை மிளகாய் சட்னி!!!
காய்ந்த மிளகாய் – 20
தக்காளி – 2
பூண்டு – 3 பல்
பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
முதலில் காய்ந்த மிளகாயை தண்ணீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஊற வைத்த மிளகாயுடன் தக்காளி , பூண்டு, கருவேப்பிலை , உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , பெருங்காயத்தூள் போட்டு தாளித்து , அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் நல்ல காரமான மிளகாய் சட்னி தயார்!!!
தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 1
தக்காளி -2
காய்ந்த வத்தல் -7 -8
எல் -1 தே.கரண்டி
வேர்க்கடலை -1 தே.கரண்டி
கடுகு -1\4 தே.கரண்டி
சீரகம் -1\4 தே.கரண்டி
உளுந்து -1\4 தே.கரண்டி
புளி – சிறு எழுமிச்சை அளவு
ந.எண்ணெய் – சிறிதளவு
செய்முறை:
1 முதலில் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து அதில் எல் மற்றும் வேர்க்கடலை சேர்த்து நன்கு வதக்கவும். எல் வெடித்ததும் அதை வேரு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்
2 பிறகு அதே சட்டியில் சிறிதளவு நல்லெண்ணை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் 1\4 தே.கரண்டி அளவிற்கு கடுகு, 1\4 தே.கரண்டி சீரகம்,1\4 தே.கரண்டி உளுந்து ,7 -8 காய்ந்த வத்தல்(கார தேவைக்கு),புளி, நீட்டமாக அறிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து அடுப்பை சிம்மிலே வைத்து மூடி போட்டு எண்ணயிலே நன்கு வதக்கவும்
3 பிறகு அதனுடன் வெட்டி வைத்துள்ள தக்காளி பழத்துண்டுகளை சேர்த்து அதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்கவும்
4 தக்காளி பழம் நன்கு வதங்கியதும் அதனுடன் நாம் முன்னரே வறுத்து வைத்திருந்த எல், வேர்க்கடலையை சேர்த்து இறக்கி நன்கு ஆற வைக்கவும்
5 நன்கு ஆறிய பிறகு அதனை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து இறக்கவும்
சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற தக்காளி சட்னி தயார்.
தக்காளிச் சாறு/சட்டினி
தேவையான பொருட்கள் (4 பேருக்கு)
தக்காளி – நன்கு பழுத்தது 4
பச்சை மிளகாய் – 4/5 (தேவைக்கேற்ப)
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – கடுகு,உளுந்து,எண்ணை, பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை இலைகள்
செய்முறை
தக்காளிப் பழங்களை கீறி 5 நிமிடம் மைக்ரோவேவ் அவனில் வேகவைக்கவும் (அ) பிரஷர் குக்கரில் சிறிதளவு நீர் விட்டு ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
தக்காளிப் பழங்கள் ஆறியதும் தோலை உரித்துவிட்டு மிக்ஸியில் நன்றாக மசிக்கவும். (தண்ணீர் விட வேண்டாம்)
கடாயில் சிறிதளவு எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும்.
தக்காளிச் சாற்றில் உப்பு, தாளிப்பு கொட்டி கிளறவும்.
சுவையான தக்காளிச் சாறு தயார். இது தோசை, இட்லிக்கு மிகவும் சுவையான ஜோடி.
கேரட் சட்னி
தேவையான பொருட்கள்
கேரட் – 4
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 3 பற்கள்
புளி – நெல்லிக்காய் அளவு
எள் – 1 தே. கரண்டி
சீரகம் – 1 தே. கரண்டி
தேங்காய் துருவல் – 3 தே. கரண்டி (தேவைப்பட்டால்)
உப்பு – தேவையான அளவு
கடுகு, உளுந்து, பெருங்காயம் – தாளிக்க
எண்ணை – சிறிதளவு
செய்முறை
கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எள், சீரகம் இவற்றை எண்ணை விடாமல் வறுத்து எடுத்து பொடித்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணை விட்டு பூண்டு, பச்சைமிளகாய், கேரட், தேங்காய் துருவல் ஆகியவற்றை முறையே போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்.
கேரட் கலவையுடன் எள், சீரகப் பொடி, உப்பு, புளி இவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து சட்னியில் கலக்கவும்.
கேரட் சட்னி தயார். இது ரவா உப்புமா, இட்லி உப்புமாவுக்கு அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கும் நன்றாகவே இருக்கும்.
கத்திரிக்காய் சட்னி
(4 பேருக்கு)தேவையான பொருட்கள்
பெரிய கத்திரிக்காய் – 5
வரமிளகாய் – 8 (தேவைக்கேற்ப குறைத்துக்கொள்ளவும்)
உளுந்து – 2 தே. கரண்டி
புளி – சிறிதளவு
உப்பு தேவையான அளவு
சர்க்கரை – 1 தே.கரண்டி (விருப்பமானால்)
கடுகு,உளுந்து,பெருங்காயம் – தாளிக்க
எண்ணை – தாளிக்க
செய்முறை
கத்திரிக்காயின் தோலைச்சுற்றிலும் சிறிதளவு எண்ணை தேய்த்து அடுப்புத் தீயில் நன்றாக சுட்டு எடுக்கவும். மேல் தோல் கறுப்பாக மாறிவிடும், உரிப்பதற்கும் ஏதுவாக இருக்கும். ( சுட்டு எடுக்க முடியவில்லையென்றால் ஒரு வாணலியில் போட்டு எல்லா பக்கமும் நன்றாக வறுத்து எடுக்கவும்)
கத்திரிக்காயின் மேல் தோலை நீக்கிவிடவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி அதில் வரமிளகாய் போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின்னர் உளுந்து போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
மிக்ஸியில் வரமிளகாய்,உளுந்து,புளி,உப்பு,சர்க்கரை ஆகியவற்றை போட்டு நன்றாக மசிய அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
மசிந்தபின் அதில் உரித்து வைத்திருக்கும் கத்திரிக்காயை சேர்த்து அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேமிக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணைவிட்டு அதில் கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து பின்னர் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கிளறிவிடவும். மேலே கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும்.
இது இட்லி, தோசைக்கு அருமையாக சேரும்.
வெங்காய சட்னி
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – ஒரு பௌல்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
புளி – ஒரு துண்டு
கறிவேப்பிலை
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியில், ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் 4 காய்ந்த மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன், புளி துண்டு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னர், இதனை ஆறவைத்து, மிக்சி ஜாரில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில், எண்ணெய்விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கியதும் அரைத்து வைத்த சட்னியை சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான வெங்காய சட்னி ரெடி..!
வெங்காயச் சட்னி செய்முறை…
(வேறு வகை)
தேவையான பொருட்கள்…
உளுந்தம் பருப்பு: 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம்- 12 முதல் 15
பூண்டு- 4 பல்
பச்சை மிளகாய்- 10 அல்லது 12
புளி- மீடியம் சைஸ் கோலிக்குண்டு அளவு
கறிவேப்பிலை: 1 ஆர்க்
செய்முறை:
அடுப்பில் வாணலியை ஏற்றி 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு 1 டேபிள் ஸ்பூன் உளுந்தப் பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம். பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதனுடன் புளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு உப்பு சேர்க்கவும். உப்பு கரைந்ததும் இறக்கி ஆற விட்டு மிக்ஸியில் அரைத்து கடுகு உளுந்து தாளித்து இறக்கவும். இந்தச் சட்னிக்கு அரைக்கும் போது தண்ணீர் அளவுடன் சேர்க்கவும். தண்ணீரே சேர்க்காது அரைத்தால் மூன்றூ நாட்கள் வரை வைத்துச் சாப்பிடலாம். புளி சேர்த்திருப்பதால் சீக்கிரம் கெடாது.
பிரண்டைச் சட்னி:
தேவையான பொருட்கள்:
பிரண்டை- நல்ல பிஞ்சுப் பிரண்டை 1 கட்டு
உளுந்து- 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம்- 10
காய்ந்த சிவப்பு மிளகாய்- 12 அல்லது 15
இஞ்சி- ஒரு சிறு துண்டு
பூண்டு- 4 பல்
புளி- 1 மலைநெல்லிக்காய் அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை: பிரண்டை வாங்கும் போது முற்றாத நல்ல பிஞ்சுப் பிரண்டையாக பார்த்து வாங்க வேண்டும். பிரண்டையின் மேல் தோலை உரித்து விட்டு அதில் நார் இருந்தால் அதையும் உரித்து நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இப்போது அடுப்பில் வாணலியை ஏற்றி 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு முதலில் உளுந்தைப் போட்டு வறுக்கவும். உளுந்து சிவந்ததும் அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். கறிவேப்பிலை மொறு மொறுவென வந்ததும் இஞ்சு, பூண்டைச் சேர்த்து அது வதங்கிய பின் பிரண்டையைச் சேர்த்து வதக்கவும். பச்சை வாடை அகன்று பிரண்டை வதங்கியதும் புளி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். பிறகு இறக்கி ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து கடுகு தாளித்து இறக்கவும்
கத்தரிக்காய் சட்னி
(வேறு வகை)
தேவையான பொருட்கள் :-
கத்தரிக்காய் – 4
க்காளி – 2
சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – சிறிது
மிளகுத் தூள் – சிறிது
கடுகு – சிறிது
உளுத்தம்பருப்பு – சிறிது
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
எண்ணெய் – சிறிது.
செய்முறை:-
கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
வெந்ததும் இறக்கி, மிக்சியில் அரைத்து, எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
கடைசியில் சிறிது மிளகுத் தூள் தூவவும் (ஒவ்வாமை ஏற்படாமலிருக்கும்).
கத்தரிக்காய், தக்காளி இரண்டிலும் இரும்புச்சத்து அதிகமிருப்பதால், ரத்த சோகையைத் தடுக்கும்.
பச்சை மிளகாய் தேங்காய் சட்னி.
செய்யத் தேவையான பொருட்கள் :-
பச்சைமிளகாய்5முதல்6வரை(காரத்தேவைக்கு
ஏற்ப ), வெள்ளைப்பூண்டு 2 பற்கள்,
முந்திரிப்பருப்பு 5, பொரிகடலை கொஞ்சம்,
தேங்காய் துருவியது 1/2 மூடி அளவு, கடுகு
சிறிதளவு, உடைச்ச உளுத்தம் பருப்பு சிறிதளவு,
கருகப்பிலை சிறிதளவு, உப்பு ( தேவையான
அளவு ) நல்லெண்ணை தேவையான அளவு
( தாளிக்க)
செய்முறை :-
முதலில் மிக்சி ஜாரில் பச்சை மிளகாய் 5 ஐ சிறிய
துண்டுகளாக வெட்டி போடவும். பிறகு துருவிய
தேங்காய் 1/2 மூடி அளவை அதில் போட்டு பின்
தட்டிய வெள்ளைபூண்டையும்,
பொரிகடலையையும், முந்திரிபருப்பு
ஆகியவற்றை போடவும். பிறகு சிறிதளவு
தண்ணீர் ஊற்றி நன்றாக இந்தக் கலவையை ஓரளவு நைஸாக அரைத்து
எடுத்துக்கொள்ளவும். ( உப்பு சரியாக உள்ளதா என்பதையும் பார்த்துக்கொள்ளவும் )
பிறகு சின்ன வாணலியை அடுப்பில் வைத்து
சூடானவுடன் இரண்டு கரண்டி நல்லெண்ணெய்
ஊற்றி சூடானவுடன் அதில் கடுகைப் போட்டுஅது
நன்கு பொரிந்தவுடன் உளுத்தம் பருப்பு உடைச்சது போட்டு அது பொன்னிறமாக
வறுத்த பிறகு அதில் கருவேப்பிலை கிள்ளிப்
போட்டு அதன் பிறகு இதை அரைத்து வைத்த சட்னியில் சேர்த்து பிறகு இட்லி, தோசைக்கு
தொட்டுக்கொள்ள பரிமாறவும்.
இப்போது சுவைமிகுந்த பச்சை மிளகாய்
தேங்காய் சட்னி தயார்.
பூண்டு தக்காளி சட்னி
தேவையான பொருட்கள் :
தக்காளி – 5
சிவப்பு மிளகாய் – 8 முதல் 10 வரை
பூண்டு – 12 பல்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கு
கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க
செய்முறை :
தக்காளியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும்.
அடுத்து பூண்டு, தக்காளியை சேர்த்து வதக்கவும்.
வறுத்த பொருட்கள் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெண் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த அரைத்த சட்டியில் கொட்டி கலந்து பரிமாறவும்.சூப்பரான தக்காளி பூண்டு கார சட்னி ரெடி தயார்.
உளுந்து சட்னி
உளுந்து சட்னி செய்ய தேவையான பொருட்கள்:-
உளுத்தம்பருப்பு – அரை டம்பளர்
தேங்காய் துருவல் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
உளுந்து சட்னி அரைப்பது எப்படி / உளுந்து சட்னி செய்வது எப்படி
உளுந்து சட்னி செய்முறை:
உளுந்து சட்னி அரைப்பது எப்படி? ஸ்டேப்: 1
முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும், அவற்றில் அரை டம்ளர் வெள்ளை உளுந்து சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
சட்னி அரைப்பது
பின் அதனுடன் இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு தேங்காய் துருவல், சிறிதளவு புளி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அடுப்பில் இருந்து இறக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் மைபோல் அரைக்க வேண்டும்.
பின்பு கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் கலந்து அனைவருக்கும் பரிமாறவும்.
இது இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள் என்பதால் வீட்டில் உள்ளவர்கள் இந்த சட்னியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்கமாட்டார்கள்.
நிலக்கடலை சட்னி
தேவையான பொருட்கள்:-
நிலக்கடலை – ஒரு கப்
பொட்டுக்கடலை – 1/4 கப்
பூண்டு பற்கள் – இரண்டு(பொடிதாக நறுக்கியது)
பச்சைமிளகாய் – 5 (தேவைக்கேற்ப)
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் சூடேறியதும் ஒரு கப் நிலக்கடலை மற்றும் 1/4 கப் பொட்டுக்கடலை இரண்டையும் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.
பின் இரண்டு பூண்டு பற்கள் மற்றும் 5 பச்சைமிளகாய், சிறிதளவு புளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
பின்பு அடுப்பில் இருந்து இறக்கி ஆறியதும், தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் மைபோல் அரைத்தெடுக்கவும்.
பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும் சிறிதளவு கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் கலந்துவிடவும்.
இந்த நிலக்கடலை சட்னி இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்வதற்கு மிகவும் ருசியாக இருக்கும். அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.
கொத்தமல்லி சட்னி:
தேவையான பொருட்கள்:
வெள்ளை உளுந்து – 1/2 கரண்டி
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடிதாக நறுக்கியது)
தேங்காய் துருவல் – 1/4 கப்
பச்சைமிளகாய் – 3
பூண்டு பற்கள் – 2
புளி – சிறிதளவு
கொத்தமல்லி – ஒருக்கட்டு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி சட்னி
செய்முறை:-
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடேறியதும், 1/2 கரண்டி உளுத்தப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
பின்பு அதனுடன் பொடிதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
பிறகு 1/4 கப் துருகிய தேங்காயினை சேர்த்து வதக்க வேண்டும், பிறகு இரண்டு பூண்டு பற்கள், மூன்று பச்சைமிளகாய், சிறிதளவு புளி, ஒரு கட்டு கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
வதக்கிய பின்பு நன்கு ஆறவைத்து பின் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் மைபோல் அரைத்து கொள்ளவும்.
பின்பு கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் கலந்து அனைவருக்கும் பரிமாறவும்.
இது இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.
கறிவேப்பிலை சட்னி இப்படி செய்து பாருங்க..!
தேங்காய் சட்னி
(வேறு வகை)
தேவையான பொருட்கள்:
(4 பேருக்கு)
தேங்காய் – 1 மூடி (1/2 தேங்காய்)
பச்சைமிளகாய் – 3
சிறிய வெங்காயாம் – 7
இஞ்சி – அரை விரல் நீளம்
கடுகு – 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை – 5 இலைகள்
எண்ணெய் – தேவைகேற்ப
உப்பு – தேவைகேற்ப
சமைக்கும் முறைகள்:
தேங்காய், பச்சைமிளகாய், சிறிய வெங்கயாம் – 2, இஞ்சி போன்றவற்றை அம்மியில் வைத்து நேவாக அரைக்கவும்.
தேவையான அளவிற்கு மேலே அரைத்ததில் தண்ணீரை சேர்க்கவும்.
அடுப்பில் மிதமான சூடுடன் வாணலியில் எண்ணையை விட்டு கடுகு, கருவேப்பில்லை, வெங்காயம் கொண்டு வதக்கவும்.
ஒரு நிமிடம் வதக்கியவுடன் மேலே அரைத்ததை கொண்டு தாளிக்கவும்.
சுவையான காசாங்காடு கிராம தேங்காய் சட்னி தயார்.
பச்சை வெங்காய சட்னி
உரித்த சின்ன வெங்காயம் – 1 கப்
வரமிளகாய் – 8 அல்லது 10
புளி – கோலி அளவு
கல் உப்பு – தேவையான அளவு
கடுகு – 1/2 ஸ்பூன்
உ.பருப்பு – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
பெருங்காயம் – 2 சிட்டிகை
எண்ணை – 1 குழிக்கரண்டி
மிளகாய், உப்பு, புளி மூன்றையும் முதலில் மிக்ஸியில் போட்டு நைசாக பொடிக்கவும். 1 ஸ்பூன் தண்ணீர் விட்டு 2 நிமிடம் ஊர வைத்து மீண்டும் மிக்ஸியை ஓட்டவும். கடைசியாக வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும்.
கடாயில் ஒரு குழிக்கரண்டி எண்ணை விட்டு கடுகு, உ.பருப்பு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து எண்ணையுடன் சட்னியில் சேர்த்து கலக்கவும்
சுவையான கார சட்னி தயார். கோதுமை தோசை, ரவா தோசை,மைதா தோசைக்கு செம காம்பினேஷன்.
கடலைபருப்பு சட்னி
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
கடலைபருப்பு – இரண்டு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை – ஒரு ஆர்க்கு
வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்தமிளகாய் கடுகு தாளித்து வெடித்ததும் கடலைபருப்பை சேர்த்து நன்றாக பொன்னிறம் வரும் வரை வறுக்கவும்
ஒன்றன் பின் ஒன்றாக வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் அதை ஆறவைத்து மிக்ஸ்யில் நைசாக அரக்கவும்.
அரைத்த சட்னியை வேறு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பொடியாக நறுக்கிய கருவேப்பில்லை தூவவும்..
இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையான கடலைபருப்பு சட்னி ரெடி
கத்தரிக்காய் சட்னி
(மாற்று வகை)
கத்தரிக்காய் கால் கிலோ
பெரிய வெங்காயம் 3
தக்காளி 3
மிளகா வத்தல் 8
எண்ணை 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு அரை, அரை டீஸ்பூன்
கத்தரிக்கா, வெங்காயம், தக்காளியை பொடிசாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி முதலில் மிளகாயை வறுத்துபிறகு காய்களையும் சேர்த்து சுருள வதக்கவும்.
நன்கு ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
கொத்துமல்லி பொட்டு கடலை சட்னி
கொத்துமல்லி கீரை எடை குறைக்கவும், உடம்பிலுள்ள கழிவுகளை அகற்றவும், இரத்ததை சுத்தபடுத்தவும், மெயினா கேன்சர் நோயாளிகளுக்கு இந்த சட்னி கீமோ தெரபியால் நாக்கு மறத்து போய் சுவை தெரியாமல் இருக்கும் போது இந்த துவையலை அரைத்து அவர்கள் தினம் சாப்பிட்டால் வாய்க்கு ருசிபடும்.
தேவையானவை
கொத்துமல்லி தழை – ஒரு பஞ்ச்
லெமன் – அரை பழம்
பெரிய பச்ச மிளகாய் – ஒன்று
இஞ்சி துறுவல் – கால் ஸ்பூன்
தேங்காய் துறுவல் – இரண்டு மேசை கரண்டி
வெங்காயம் – அரை ( தேவைபட்டால்)
பொட்டு கடலை – ஒரு கை பிடி
உப்பு – கால் ஸ்பூன் (ருசிக்கு ஏற்ப கூட்டிகொள்ளவும்)
செய்முறை
கொத்து மல்லி தழையை ஆய்ந்து மண்ணில்லாமல் கழுவி எடுத்து பொடியாக அரிந்து கொள்ளவும்.
சிறிது நேரம் தண்ணீரில் மூழ்க வைத்தாலே மண் அடியில் தங்கிவிடும். மிக்சியில் பொட்டுகடலை,பச்சமிளகாய், தேங்காய் இது முன்றையும் ஒரு திருப்பு திருப்பவும்.
3.பிறகு இஞ்சி துறுவல், லெமன் சாறு,உப்பு,வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
குறிப்பு:-
தோசை, ஆப்பம், இட்லி, உப்புமா, சேமியா குழிபணியாரம் எல்லா வகையான உணவு களுக்கும் பொருந்தும்
தக்காளி இஞ்சி சட்னி
அரைக்க
நன்கு பழுத்த தக்காளி = நான்கு
இஞ்சி = ஒரு அங்குல துண்டு
கான்ச் மிளகாய் = ஒன்று
தேங்காய் துருவல் = ஒரு மேசை கரண்டி
உப்பு = சிறிது
தாளிக்க
எண்ணை = அரை தேக்கரண்டி
கடுகு = கால் தேக்கரண்டி
பெருங்காயம் = ஒரு பின்ச்
செய்முறை
தக்காளியை பொடியாக அரிந்து, இஞ்சியை தோல் நீக்கி பொடியாக அரிந்து அத்துடன் தக்காளி,உப்பு, காஞ்ச மிளகாய் சேர்த்து நன்கு அரைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்.
சுவையான தக்காளி இஞ்சி சட்னி ரெடி
குறிப்பு: இது கர்பிணி பெண்கள் வாய்க்கு ருசி படும்.தோசைக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும், செய்வதும் சுலபம்.
மாங்காய் சட்னி
தேவையானவை:
புளிப்பான சிறிய மாங்காய் ஒன்று
துருவிய தேங்காப்பூ ஒரு மூடி
பச்சை மிளகாய் 3
கடுகு ஒரு டீஸ்பூன்
உளுந்து ஒரு டீஸ்பூன்
மிளகா வத்தல் 2
பெருங்காயப்பொடி ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணை 2ஸ்பூன்
மாங்காயை நன்கு கழுவி, தோல் சீவி மிருதுவாகத் துருவிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணை ஊற்றி,கடுகு, பருப்பு, மிளகாவத்தல் சிவக்க வறுக்கவும்.
இத்துடன் தேங்கா பூ,மிளகாய் மாங்கா துருவல் பெருங்காயம் சேர்க்கவும்.
உப்பு சேர்த்து மிக்சியில் கரகரப்பாக அரைக்கவும்.
வேர்க்கடலை சட்னி
(மாற்று வகை)
தேவையானவை:
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை — ஒரு கப்
தனியா, ஜீரகம், கடுகு — தலா ஒரு, ஒரு ஸ்பூன்
மிளகா வத்தல் — 5
எண்ணை — ஒருஸ்பூன்
உப்பு — தேவையான அளவு
கடாயில் எண்ணை ஊற்றி தனியா,ஜீரகம்,கடுகு, மிளகாய் சிவக்கவறுத்து ஆறியதும் வேர்க்கடலையுடன்உப்பும் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.
காரசட்னி
(மாற்று வகை)
தே.பொருட்கள்
நறுக்கிய வெங்காயம் – 1/2 கப்
நறுக்கிய தக்காளி -1/4 கப்
காய்ந்த மிளகாய் -5 அல்லது 6
புளி -ப்ளுபெர்ரி பழளவு
உளுத்தம் பருப்பு- 1டீஸ்பூன்
கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
தாளிக்க
எண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம் பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
*வெறும் கடாயில் உளுத்தம்பருப்பு+கடலைப்பருப்பு இவற்றை தனித்தனியாக வறுக்கவும்.
*பின் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்கயம்+தக்காளி+காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
*மிக்ஸியில் முதலில் பருப்புகளை பொடிக்கவும்,பின் வதக்கிய வெங்காய கலவை மற்றும் புளி+உப்பு சேர்த்து நீர் விடாமல் அரைக்கவும்.
*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
பி.கு
அரைக்கும் போது நீர் சேர்க்க தேவையில்லை தேவையெனில் 2 டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து அரைக்கவும்.
தேங்காய் சட்னி
(மாற்று வகை)
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் – 1 கப்
பொட்டுக்கடலை – 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
பச்சைமிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு
கடுகு – சிறிதளவு
உளுந்தம்பருப்பு – சிறிதளவு
காய்ந்தமிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
முதலில் ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி அதனை நன்றாக அரைத்து வேறொரு கின்னத்தில் மாற்றி வைத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதனுடன் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு தாளித்தவற்றை நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து நன்றாக கலந்தால் சுவையான தேங்காய் சட்னி தயார்.
தேங்காய் சட்னி
(மாற்று வகை)
தேவையான பொருட்கள்
தேங்காய் – ½ மூடி (மீடியம் சைஸ்)
பொரிகடலை – ஒரு கைபிடி (தோராயமாக இரண்டு குழிக்கரண்டி)
பச்சை மிளகாய் – ஒன்று (மீடியம் சைஸ் உருண்டையானது)
இஞ்சி – சுண்டு விரல் அளவு
வெள்ளைப்பூண்டு – 2 பற்கள் (மீடியம் சைஸ்)
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)
மிளகாய் வற்றல் – 1 எண்ணம்
கறிவேப்பிலை – இரண்டு கீற்று
கடுகு – ½ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் தேங்காயை சிறுசிறு துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்.
சிறுசிறு துண்டுகளாக தேங்காய்
இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை அலசி காம்பினை நீக்கவும்.
முதலில் மிக்ஸியில் தேங்காய் துண்டுகளை போட்டு அடித்துக் கொள்ளவும்.
தேங்காய் பூவுடன் பொரிகடலை, இஞ்சி துண்டுகள், வெள்ளைப் பூண்டு, பச்சை மிளகாய், தேவையான உப்பு, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
மிக்சியில் அடிக்கும் முன்பு
அரைத்த கலவை
பின் அரைத்த கலவையுடன் தேவையான தண்ணீர் சேர்த்து வைக்கவும்.
தண்ணீர் சேர்த்ததும் பின் அடுப்பில் வாணலியை வைத்து நல்ல எண்ணெய் ஊற்றவும்.
நல்ல எண்ணெய் காய்ந்ததும் சதுரமாக நறுக்கிய சின்ன வெங்காயத் துண்டுகள், கறிவேப்பிலை, கடுகு, உளுந்தம் பருப்பு சேர்க்கவும்.
தாளிக்கும் போது
கடுகு வெடித்ததும் தேங்காய் கலவையுடன் தாளிதம் செய்யவும்.
தாளித்துக் கொட்டியதும் சுவையான தேங்காய் சட்னி தயார்.
காரமான வெங்காய சட்னி
காலையில் இட்லி அல்லது தோசைக்கு மிகவும் சிம்பிளாக ஒரு சட்னி செய்ய நினைத்தால், வெங்காய சட்னியை செய்து சாப்பிடுங்கள். இது 5 நிமிடத்தில் செய்யக்கூடிய அட்டகாசமான சட்னி. மேலும் இது கெட்டுப் போகவும் செய்யாது. காலையில் செய்தால், இரவு வரை வைத்து சாப்பிடலாம். பேச்சுலர்களுக்கு ஏற்ற சட்னியும் கூட.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 3 (நறுக்கியது)
வரமிளகாய் – 7-8
பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் பொட்டுக்கடலை, உப்பு, புளிச்சாறு மற்றும் வெல்லம் சேர்த்து 4-5 நிமிடம் மிதமான தீயில் வதக்கி விட வேண்டும். பின்பு அதனை இறக்கி குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட வேண்டும். அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்தால், வெங்காய சட்னி ரெடி!!!
இந்த சட்னியில் புளிச்சாற்றிற்கு பதிலாக எலுமிச்சை சாறு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இதுவும் வித்தியாசமான சுவையைத் தரும்.