You cannot copy content of this page

காளீஸ்வரி புஜை

ॐ श्री महाकाली माहालक्ष्मी महासरस्वती देवताभ्यो नमः

ஓம் ஸ்ரீ மஹாகாளி மஹாலக்ஷ்மி மஹா கன்யா ஸரஸ்வதீ தேவ்யை நமோ நமஹ:

மந்திரம்
ஓம் க்ரீம் காள்யை நமஹ ,
ஓம் கபாலின்யை நமஹ,
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரீம் பரமேஸ்வாரி
காளிகே ஸ்வாஹா

காளிமாதாவை சித்தகாலி, மகாகாளி, மகாகாலி, குஹ்யகாளி, பத்ரகாளி, ரக்தகாளி, ஸ்மசானகாளி, ரக்ஷாகாளி, தக்ஷிணகாளி என பல ஸ்வரூபங்களில் வழிபடுகிரார்கள்.

தேவி மகாத்மியத்தில் காளியை சத் – மகாலக்ஷ்மி என்றும், சித் – சரஸ்வதி என்றும், ஆனந்தமே மகாகாளி என்றும் கூறப்பட்டுள்ளது.

காளிதேவியை வழிபட்டால், எதிர்ப்புகள் எல்லாம் இல்லாமல் போவதுடன், எண்ணிய எண்ணங்கள் நிறைவேறி சந்தோஷ வாழ்க்கை அமையும்.

காளியை உபாசனை செய்து வழிபடுபவர்களுக்கு இன்பம், துன்பம், அறம், அன்பு, வெறுப்பு, அழகு, கோரம், அதர்மம் என்ற அனைத்தையும் ஒன்றாகவே பாவிக்கத் தோன்றும்.

தேஜஸ்வினீ, பராசக்தி, பரப்பிரம்ம சொரூபிணி, மோட்சதா, திகம்பரா, சித்விலாசனி, சின்மயி ஆகிய நற்பெயர்களைக் கொண்டவள் காளி.

சிறப்புடைய காளிக்கு கொற்றவை, துர்கை, சாமுண்டி என்று பல பெயர்கள் உள்ளன.

புறப்பொருள் வெண்பாமாலை இலக்கண நூலிலும், கலிங்கத்துப் பரணியிலும் காளி வழிபாடு வெற்றிக்குரிய பிரார்த்தனை முறையாகச் சொல்லப்பட்டதைக் கவனிக்க வேண்டும்.

ஆகம கிரந்தங்களில் காளி தேவியைப் பற்றி பல தியானங்கள் இருக்கின்றன. அவற்றில் பத்ரகாளி தியானம் அனைவராலும் சொல்லப்படுகிறது.

ச்யாமாபாம் ரக்த வஸ்த்ராம் ஜ்வலா சிகயுதாம்
அஷ்டஹஸ்தாம் த்ரிநேத்ரம் சூலம் வேதாள கட்கம்
டமருக சகிதம் வாமஹஸ்தே கபாலம் அன்யே
கண்டாந்து கேடாம் அபய வரயுதாம் சாபஹஸ்தாம்
சு தம்ஷ்ட்ராம் சாமுண்டாம் பீமரூபாம்
புவன பயகரீம் பத்ரகாளீம் நமாமி!

இந்த தியான விதிப்படி காளிக்கு எட்டு கைகள், மூன்று கண்கள், டமருகம், சூலம், கபாலம் கையில் ஏந்தியபடி, அபய வரத ஹஸ்தங்களுடன் காட்சி தருபவளாகச் சொல்லப்பட்டுள்ளது.

உத்தரகலாமிருதத்தில் காளி வழிபாடு: உடலில் பயத்தைப் போக்கி, மனோ தைரியத்தை வரவழைக்கும் காளி வழிபாடு பற்றி ஒரு துதியால் அறிய முடிகிறது.

காமேசஸ்ய ஸீவாம பாக நிலயாம் பக்தாகிலேஷ்டார்த்ததாம்
சங்கம் சக்ர மதாசவயம் ச வரதம் ஹஸ்தைர் ததானம் சிவாம்
ஸிம்ஹஸ்தாம் சசிகண்ட மௌலி லசிதாம் தேவீம் த்ரிநேத்ரோஜ் வலாம்
ஸ்ரீமத் விக்ரம சூரிய பாலன பராம் வந்தே மகா காலிகாம்.

கருத்து: ‘காமேஸ்வரக் கடவுளின் இடது பாகத்தை அலங்கரித்திருப்பவளும், தன் பக்தர்கள் கேட்பதைக் கொடுப்பவளும், அவர்களைப் பாதுகாக்கின்ற அடையாளமாகச் சங்கு சக்கரம் கொண்டு வரம் அளிப்பவளும், பிறை நிலவு தரித்து, பிரகாசமாக விளங்கும் முக்கண்களோடு, சிங்கத்தின் மீது அமர்ந்து அழகு உருவமாகக் காட்சி தருபவளும், சூரிய வம்சத்தில் பிறந்த விக்ரமார்க்க அரசனைக் காத்து நன்மை தருவதில் அக்கறை உடையவளுமான காளிதேவியை வணங்குவோமாக!’

விஸ்வாமித்ர மகரிஷி அருளிய துதியில், ஆதிகாளி, தட்சிணகாளி, க்ரீம்காளி, ஸ்திதி காளி, பத்ரகாளி, மதுகைடப சம்ஹார காளி, குஹ்ய காளி, வர காளி, சதுர்புஜ காளி, நடன காளி என்ற பத்து காளி வடிவங்கள் சொல்லப்பட்டுள்ளன.

தேவியின் விரிந்து பரவி ஆடிக்கொண்டிருக்கும் கூந்தல் இவள் கட்டிலடங்காநிலையில் உள்ள பரம்பொருளின் ஸ்வரூபத்தினள் என்ற உண்மையை குரிப்பதாகும்.

இவள் உடலில் வஸ்த்ரம் இன்றி இருப்பது இவள் குணங்கடந்த கோலத்தினள், நிர்குணஸ்வரூபிணீ என்ற தத்துவத்தை குறிப்பதாகும்.

இவள் இடது மேற்கரத்தில் தாங்கும் வாள் ஞான சக்தியின் சின்னமாகும்.

இடதுகீழ் கரத்தில் உள்ள வெட்டப்பட்ட சிரஸானது ஒரு யோகியானவன் பிரபஞ்சத்தில் எல்லா பற்றுகளும் துறந்து ஆனந்த நிலையில் திளைத் திருப்பதைக் காட்டும் சின்னமாகும்.

மேலும், இவள் தன் இடுப்பில் வெட்டப்பட்ட கரங்களை கோத்த மேகலையை தரித்திருப்பது கர்மயோக ஸித்தியின் மகிமையை காட்டும் சின்னமாகும்.

இவள் ஸ்ரீ மஹாகாளரின் இதயத்தில் வலப்பாதம் வைத்து ஸதா ஆடிக் கொண்டிருப்பது ஜீவன்முக்தனின் நித்யானந்த நிலையைக் காட்டுகிறது.

பரம கருணாமூர்த்தியாகிய இந்த தேவி, தன் குழந்தைகளாகிய எல்லா ஜீவன்களையும் ரக்ஷிக்கும் ஆனந்தத்தில் திளைத்து மகிழ்ந்து ஆடிய வண்ணம் அருளைப் பொழிகின்ற வேளையில், தனது வலது பாதத்தை தன் அன்பு நாயகராகிய மகாகாளரின் ஹ்ருதய ஸ்தானதிலே அமர்த்துகிறாள்.

தன் பிரிய தேவியின் பாதத்தை தாங்கி களிப்படையும் ஸ்ரீ மஹாகாளர், தேவியின் அருட்செயலின் ஆற்றலைக் கண்டு தன் இயல்பான இயக்கம்
செயல் அற்றுப் போவதை உணர்கிறார்.

செயலற்றுப் போன மஹாகாளர் ஒரு சவம் போல் கீழே கிடந்து தேவியின் ஆனந்த கூத்தை பேரின்பத்துடன் அனுபவித்துக் கொண்டிருக்கிரார்.

இந்த நிலையை தியானிக்கும், எந்த உபாசகனும் தானும் அந்த மகிழ்ச்சிப் பரவசத்தில் மூழ்கி சிவத்துவம் அடைவானே தவிர பீதிக்கு இரையாக மாட்டான்.

தேவியைஉபாசிப்பவர்கள் தங்களுள் குடிகொண்டிருக்கும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம் மாற்சரியம் ஆகிய ஆறு உட்பகைவர்களை
தேவியின் மந்தர ஜபம் என்கிற ஹோம அக்னியில் அர்ப்பணித்தலே பலியிடுதல் ஆகும்.

காளி தேவியின் மூல மந்திரத்துக்கு ” வித்யாராஜ்ஞீ ” என்று பெயர் அதாவது வித்யைகளுக்கெல்லாம் “பேரரசி” என்கிறது காளி தந்த்ரம்.

எந்த ஒரு தெய்வ வழிபாட்டிற்கும் பிரதான மானது அதன் மூலசக்தியே. இந்த மூலசக்தி பல பாதைகளில் இயங்கி பல ஸ்வரூபங்கள் கொள்கிறது. அவற்றில் எல்லாம்
இந்த மந்திரத்தின் வலிமையே இயக்கும் சக்தியாக விளங்கு வதால் இந்தமூல சக்திமூர்த்தியே மேலானது. இதுவே பராசக்தி மூர்த்தி என்று காளி தந்திரத்தில் வலியுறுத்தப்படுகிறது.

தமிழ் இலக்கியங்களில் காளி :

தமிழகத்தின் சங்க இலக்கியங்களில் காளி தொடர்பான செய்திகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்டுள்ள ‘பழையோள் குழவி’ என்பது காளியைக் குறித்திடும் சொல்லாக அமைகிறது.

நச்சினார்கினியர் காளியைப் “பழையோள்’ என்று குறிப்பிட்டுள்ளார். அகநானூற்றில் இடம்பெற்றுள்ள “கானமர் செல்வி”யும் கலித்தொகையில் கூறப்பட்டுள்ள “பெருங்காற்று கொற்றை” என்ற சொல் காளியுடன் இணைப்படுத்தப்படுகிறது.

சிலப்பதிகாரத்தில் கொற்றவை, அமரி, குமரி,கௌரி, அய்யை, சூலி, நீலி, கலையமர் செல்வி, விண்ணோர் பாவை போன்ற பெயர்கள் துர்க்கை மற்றும் காளியைக் குறிப்பிடுவதாகும்.

இருப்பினும் வழக்குரை காதையில் மதுரை மாநகர் சென்றடைந்த கண்ணகி, பாண்டியனின் அரண்மனையில் நின்ற காட்சியை வாயிற் காப்போன் கூறிடும் போது கண்ணகி என்ற பெண், துர்க்கை மற்றும் காளியைவிடச் சினம் கொண்டவளாக உள்ளாள் என்று கூறுவதாக அமைகிறது.

இதன் வாயிலாக துர்க்கை மற்றும் காளி ஆகிய இரண்டிற்கும் ஒரு வேறுபாடு அமைந்துள்ளது என்பது புலப்படுகிறது.

காளி என்பவள் சப்தமாதர்களில் இளையவள் என்றும், வனத்தில் உறைபவள் என்றும் சிலப்பதிகாரக் குறிப்புகளில் அறியமுடிகிறது.

மேலும், இதில் சக்கரவாளக் கோட்டம் தொடர்பான செய்திகள் விளக்கப்படும் போது இடுகாட்டில் காளிக்காக ஓர் கோயில் அமைக்கப்பட்டிருந்தது என்றும், ‘காடமர் செல்வி’ என்ற பெயரும் சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.

பெரும்பாலும் இலக்கியங்களில் காளி, ‘மயான வாசினி’ என்று விளக்கப்படுகிறாள்.

கி.பி 11ஆம் நூற்றாண்டு மற்றும் கி.பி 12ஆம் நூற்றாண்டில் ஜெயங்கொண்டாரால் எழுதப்பட்ட கலிங்கத்துப்பரணி காளி புகழ் பாடும் இலக்கியமாக அமையப்பெற்றுள்ளது.

கலையில் காளி :

பல்லவர் மற்றும் சோழர் கலாத்தில் காளி மற்றும் துர்க்கைக்கு எனத் தனிக் கோயில்கள் உருவாக்கப்பட்டன.

குறிப்பாக முதலாம் ஆதித்தன் காலத்தில் பழுவேட்டரையர்களின் பழுவூர் என்ற ஊரின் தென் பகுதியில் காளிக்கென்று தனிக்கோயில் உருவாக்கப்பட்டது. இதில் காளி எட்டு கைகளுடன் பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. படிமத்தில் ஓர் கால் அரக்கனின் மீது ஊன்றப்பட்டு ஜீவாலா கேசத்துடன் காணப்படும் இப்படிமத்தின் கையிலுள்ள திரிசூலம் வீசப்படும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய சமகாலத்தில் திருவக்கரையில் காளியின் படிமம் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக விஜயாலயன் காலம் தொடங்கி சோழர் கால ஊர்களின் எல்லைப் பகுதியில் காளிக்கென்று தனிக்கோயில்கள் எடுப்பிக்கப்பட்டு வந்துள்ளன.

ஆதிகாலம் முதல் பராசக்தியின் வழிபாட்டு முறைகள் 1.காளி 2. தாரா 3. சுந்தரி 4. புவனேஸ்வரி 5.பைரவி 6.சின்னமஸ்தா 7. தூமாவதி 8.பகளாமுகி 9. மாதங்கி 10.. கமலாத்மிகா என்ற பத்து தேவிகளின் உபாஸனை முறைகளாக பழக்கத்தில் இருந்து வருகின்றன.

இந்த வித்தைகளை ” தச மஹா வித்யா ” என்று அழைப்பார்கள். இவைகளுள் காளி வழிபாடே முதன்மையானதாக உள்ளதால் காளியை ஆதிபராசக்தி என்று வழங்குவது மரபாயிற்று.

தச மஹாவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது.

ஓர் மஹாசக்தி தனது நிலையில் பத்துவிதமாக பிரிவடைவதை அறியும் நுட்பமே தசமஹாவித்யா.

  1. மாதங்கி: என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து நன்மைகளையும் தனது பக்தர்களுக்கு அருள்பவள். அனைத்து நல்ல விஷயங்களையும் ஆகர்ஷித்து தருபவள். மீனாட்சி யின் அம்சம். ஸ்ரீ ராஜ சியாமளா என்றும் அழைக்கப்படுபவள். கிளியை கைகளில் தங்கியிருப்பாள். நன்மைகள் அனைத்தின் இருப்பிடம். இவளின் மந்திர ஜபம் ……அனைத்தையும் ஆகர்ஷிக்கும் வல்லமையை தரும். ஆன்ம சாதகர்களுக்கு அளவிடா ஆர்வத்தை சாதனைகளில் அளித்து மேலும், மேலும் அவர்களை அன்னை லலிதாம்பிகையிடம் அன்புப் பிணைப்பினில் வைத்திருப்பாள்.
  2. புவனேஸ்வரி: மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தரவதனமும் நிறைந்தவள். ‘ ஹ்ரீம் ‘ என்ற மந்திர பீஜத்திற்கு உரியவள். அனாஹத சக்கரத்திற்கு உரியவள்.
  3. பகுளாமுகி: பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால் தாக்குபவள். வேகமான பயணத்தால் எதிரிகளின் குழப்பத்திற்கு காரணமானவள். முக்கியமாக எதிரிகளின் நாக்கினை இழுத்து கதையால் அடித்து சிதைப்பவள். ‘ வாக் ஸ்தம்பனம் ‘ எதிரியிடத்து ஏற்படுத்துவாள்.
  4. திரிபுரசுந்தரி: பதினாறு வயது கன்னிகையின் உருவைகொண்டவள். புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவம், என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்குபவள். சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம் இவளுடையது.
  5. தாரா: நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹாசக்தியை உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள்.
  6. கமலாத்மிகா: தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா சக்தியாக திகழ்பவள். அழகும், செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே லக்ஷ்மியாக வணங்குகிறோம். வெள்ளை யானை சூழ வலம் வரும் நாயகி கமலாத்மிகா.
  7. காளி: கரிய நீல நிறம் கொண்டவள். வேதத்தில் அதர்வன வேதத்தை குறிப்பவள். மயானத்தில் உறைபவள். வெட்டுண்ட உடல்களை ஆடையாக அணிபவள். அடிமேல் அடி எடுத்து மிக மெதுவாகவும், ஆக்ரோஷமாகவும் நகர்பவள். சிவனை பாதத்திற்கு அடியில் வைத்திருக்கும் குரூரமான அமைப்பு காளியின் உருவம்.
  8. சின்னமஸ்தா: தலையற்ற உடலுடையவள். தலை கழுத்து பகுதியில் இருந்து வரும் ரத்தத்தை தனது கைகளில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம் இவளுடையது. ஆண் – பெண் உடலின் மேல் நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சி அளிப்பவள்.
  9. தூமாவதி: கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிற ஆடையும், நகைகள் இல்லாத விரிந்த தலையும் கொண்டவள். கையில் புகை கக்கும் பாத்திரம் உடையவள். தனது பக்தர்களுக்கு தீங்கு விளைவிப்போருக்கு தண்டனை அளிப்பவள்.
  10. திரிபுரபைரவி: பைரவி என எல்லோராலும் அழைக்கப்படுபவள். கழுதையின் மேல் அமர்ந்து குரூரமாக காட்சியளிப்பவள். கருநீல நிறத்தில் உடலும், பெரிய போர்வாள் கைகளிலும் கொண்டவள். முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட வித்யாசமான உருவ அமைப்பு கொண்டவள்.

இந்தியாவில் தசமஹாவித்யாவிற்கு தனித்தனி கோவில்கள் உண்டு. ஆதிசங்கராச்சாரியார் இதைதொடர்புகொண்டு புதிப்பித்தார் என்பது வரலாறு.

ஹரித்துவாருக்கு அருகில் ‘கன்கல்’ என்ற ஊரில் இருக்கும் ஆலயத்தில் தசமஹாவித்யா அனைத்தும் யந்திரங்களுடனும் மந்திரங்களுடனும் ஸ்தாபிக்கபட்டுள்ளது.

லலிதா சகஸ்ரநாமத்தில் ஸ்ரீசக்ரத்தில் அமைந்திருக்கும் மஹாசக்தியையும், மற்ற தசமஹாவித்யாக்களையும் தெரிந்து கொள்ளலாம்.

தச மகா வித்யா தேவிகளின் பெயர்கள்:

காளி: பரம்பொருளின் இறுதி வடிவம். காலத்தின் வடிவானவள்.
தாரா: வழிகாட்டியாகவும் பாதுகாவலியாகவும் விளங்கும் தெய்வம். மோட்சத்தைத் தரும் பேரறிவை வழங்கும் “”நீல சரசுவதி” எனும் பெருந்தெய்வமும் இவளே.
திரிபுரசுந்தரி (ஷோடசி):மூவுலகிலும் பேரழகி! தாந்திரீக நெறியின் பார்வதி. “மோட்சமுக்தி” என்றெல்லாம் போற்றப்படுபவள்.
புவனேசுவரி:பிரபஞ்ச வடிவாய்த் திகழும் அன்னை வடிவம்
பைரவி: அஞ்சத்தகும் அன்னையின் வடிவம்
சின்னமஸ்தா: தன் தலை தானே அரிந்த தியாகத் திருவுருவம்.
தூமாவதி: இறப்பின் தெய்வம்,
பகளாமுகி:எதிரிகளை அடக்கியாளும் தேவதை
மாதங்கி: இலலிதையின் தலைமை மந்திரிணி
கமலை: தாந்திரீக நெறியின் திருமகள்.

மிகவும் சக்திவாய்ந்த காளி மந்திரம்

பயம், எதிரிகள் தொல்லை, செய்வினை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள காளி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்.

ஓம் காளி நமஹ; ஓம் மாகாளி நமஹ;
ஓம் ஜெய காளி நமஹ; ஓம் உக்கிர காளி நமஹ;
ஓம் உத்தண்ட காளி நமஹ; ஓம் ஓங்கார காளி நமஹ;
ஓம் ஆஙகார காளி நமஹ; ஓம் ருத்ர காளி நமஹ;
ஓம் நீலி நமஹ; ஓம் சூலி நமஹ;

ஓம் திரிசூலி நமஹ; ஓம் முப்புரத்து நீலி நமஹ;
ஓம் சங்கரி நமஹ; ஓம் பயங்கரி நமஹ;
ஓம் பூரணி நமஹ; ஓம் காரணி நமஹ;
ஓம் மோஹினி நமஹ; ஓம் யோகினி நமஹ;
ஓம் வர்த்தினி நமஹ; ஓம் மஹிஷாசுர மர்த்தினி நமஹ;
ஓம் ஆனந்த ரூபிணி நமஹ; ஓம் ராஜ சிம்மாஸினி நமஹ;
ஓம் பவானி நமஹ; ஓம் பைரவி நமஹ;
ஓம் ஈஸ்வரி நமஹ; ஓம் அகிலாண்டேசுவரி நமஹ;
ஓம் மந்தி தாரணி நமஹ; ஓம் ராஜ ராஜேசுவரி நமஹ;
ஓம் காளி ! ஓம் மாகாளி ஓம் ஓம் மாகாளி ஸ்வாஹ!

ஸ்ரீ வராஹி மஹா மந்திரம்:

ஸ்ரீ வராஹி மஹா மந்திரம்
வராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். மாந்திரிகத்தில் ஓர் அசைக்க முடியாத சக்தியாக விளங்குபவள் வராஹி. வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. தன் பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை ஸ்ரீ வராஹி யந்திரம் வைத்து 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹா வராஹி அருள் கிட்டும்.


மூல மந்திரம்:
ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா

பூஜை முறைகள்:
வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும்.

இதன் பலன்:
தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.

காளி பூஜை செய்யும்முறை:

அமாவாசை அன்று மாலையிலோ, வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை அன்றோ, சதுர்த்தசி திதி நாளிலோ காளியை வழிபடுவது நல்லது. அஷ்டமி, நவமி, சிவராத்திரி, பரணி நட்சத்திர தினங்களும் உத்தமம். சாந்தமாக அமைந்த காளி ரூபம் கொண்ட படத்தை கண்ணாடிச் சட்டமிட்டு, சந்தனம் குங்குமம் இட்டு, பூச்சரங்களால் அலங்கரித்து, அதன் முன்பு சிவப்பு நூல் சுற்றிய கலசம் வைத்துவிட வேண்டும். செவ்வரளி, முல்லை, சாமந்தி மலர்களை வைத்துக் கொண்டு பூஜையைத் தொடங்கவேண்டும். முதலில் விநாயகரை வணங்கிவிட்டு, அன்றைய திதி, நாள், நட்சத்திரம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லி,’வாக், மனஸ் சாந்தியர்த்தம், உக்ர சக்தி, விசர்ஜனார்த்தம் காளீ உபாசனாக்ரம ஜபக்ரம பூஜாரம்பம் கரிஷ்யே’ என்று கூறியபடி, மஞ்சள் அட்சதையை எடுத்து வடக்கில் இட வேண்டும்.

ஸ்ரீகுருப்யோ நம: என்று மூன்று முறை சொல்லிவிட்டு, காளி சக்த்யை நம: கலச ஆவாஹன பூஜாம் க்ருத்வா’ என்று கலசத்தில் தீர்த்தம் விட்டு, சகலாராதனை ஸ்வர்ச்சிதம் என்று சொல்லி, பின் புஷ்பம் எடுத்துக் கொண்டு, 16 மாத்ருகா சக்திகளை அர்ச்சனை செய்யவும்.

ஓம் கௌர்யை நம:
ஓம் மாத்ரு தேவ்யை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் மேதா சக்த்யை நம:
ஓம் லோகமாத்ரு தேவ்யை நம:
ஓம் சாவித்ரீ தேவ்யை நம:
ஓம் த்ருதி தேவ்யை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் புஷ்டி தேவ்யை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் துஷ்டி தேவ்யை நம:
ஓம் தேவ சேனாயை நம:
ஓம் குல தேவி ஸ்ரீமகா காள்யை நம:
ஓம் ஸ்வதாயை நம:

என அர்ச்சனை செய்தபின், குங்கிலியம் கலந்த சாம்பிராணி தூபம் காட்டி, சர்க்கரை அன்னம், தயிரன்னம், மூன்று வகையான பழங்கள் நைவேத்தியம் செய்து, கைகளில் வாசனை மலர்களை எடுத்துக் கொண்டு, ஆத்ம பிரதட்சிணம் செய்து தியானம் கூறி, கலசத்தின் மேலும் காளி படத்தின் மேலும் சமர்ப்பிக்கவும். காலத்தை வென்று தருபவள் காளி என்பதால், இவள் தியானத்தை மூன்றுமுறை கூறுதல் நல்லது.

ஓம் துகூல வளநோபேதாம் சர்வாலங்கார சோபிதாம்
காதகும்ப நிபாம் த்யாயேத் காளீம் முஸல தாரிணீம்

‘ஸ்வர்ணம்போல மஞ்சள் நிறமான மேனியை உடையவளே! பட்டாடையை உடுத்தி இருப்பவளே! அதிகமான ஆபரணங்களை வைத்து அலங்காரம் செய்யப்பட்டவளே! உலக்கையைக் கையில் வைத்திருக்கும் கால ரூபிணியே! உன்னை வணங்குகிறேன்’ என்பதே இதன் பொருள். பின்னர் கற்பூர ஆரத்தி செய்து,

ஓம் பிசாசக் நாஸ்ய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ காளி பிரசோதயாத் – மகாகாள்யை நம:

கற்பூர நீராஜனம் தர்சயாமி என்று பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பிறகு பிரசாதங்களைக் குடும்பத்தில் உள்ளவர்களுக்குக் கொடுப்பதுடன், ஒரு சுமங்கலிக்கு சிவப்பு ரவிக்கைத் துணியுடன் வளையல் வைத்துத் தாம்பூலம் தரவேண்டும்.

வெற்றி தரும் காளி அஷ்டகத் துதி – கடந்த நூற்றாண்டில் காஞ்சிப் பெரியவரின் நண்பராக இருந்த ஸ்ரீசெம்மங்குடி முத்துசுவாமிகள் என்பவர் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மனுக்குச் சேவகம் செய்து வந்தார்.

முத்துசாமி சிவாச்சாரியார் என்றும் செம்மங்குடி சாமிகள் என்றும் அழைக்கப்பட்ட அவர் மதுரகாளிதேவியைப் பற்றி சக்தி வாய்ந்த அஷ்டகத்தைப் பாடி உள்ளார்.

காளியின் எண்குண ரூபவர்ணனையைக் கூறும் இந்தத் துதியை பூஜை முடிவில் மும்முறை கூறிட, துர்சக்திகள் அகன்று இன்பமே சூழும் – எல்லா நலன்களும் சித்திக்கும்.

இந்தத் துதிக்கு ஜெய மதுராஷ்டகம் என்று பெயர்.

ஓம் நமஸ்தே ஏகவஸ்த்ரே சிகிஜ்வால சிகேசுபே
வாமரூபே கபால தகனே சர்வாபரண பூஷிதே
க்ரூர தம்ஷ்ட்ரே ரத்தமால்யே அஷ்டாதச பூஜகரே
மங்களே காரணே மாதே மாதர்பலே ரக்ஷகே
குங்குமப்ரியே குணவாஸினே குலவிருத்திகாரணே ஸ்ரியே
சூல டமருகஞ்சைவ கபாலம் பாசதாரிணே
ஓம்காரரூபிணே சக்தி வரரூபே வராபயே!
ஸுகாசினே சாமுண்டே சுந்தரீ யோகதீஸ்வரி
ஸிம்ஹவாஹனப்ரியே தேவி ச்யாமவர்ணேச சாம்பவீ
மதுரகாளி ஸ்மசானவாஸே மாத்ருகா மகாமங்களீ
சீர்வாச்சூர் வாஸப்ரியே சீக்ர வரமண்டிதே
பூர்வபுண்ய தர்ஸனே தேவி மகாமங்கள தர்ஸனீ
ஜோதிர்மயே ஜயகாளிகே துக்க நாஸன ப்ரியே சிவே
ஜன்மலாப வரே காந்தே மதுரே ஜோதி ரூபிணே
சர்வக்லேச நாசினே மாதே சாவித்ரீ அபீஷ்டானுக்ரஹே
சோடசானுக்ரஹே தேவீ பக்தானுக்ரஹ அர்ச்சிதே
ஏகமாஸம் சுக்ரவாரே ஸெளபாக்யம் காளி தர்ஸனம்
சுக்ரசோம தினஞ் ஜபித்வா ஸர்வமங்கள நிதிபாக்யதம்
அஷ்ட பூர்வம் ஜபேந்நித்யம் அஷ்டஸித்தி ப்ராப்திதஞ்சுபம்
இதிஸ்ரீ முத்துஸ்வாமி ஜிஹ்வாத்வாரே ஜெயமதுராஷ்டகம்

ஸம்பூர்ணம்.

காளி பூஜையை ஒன்பது வெள்ளிக்கிழமைகள் செய்து வந்தால் வீட்டில் சகல காரிய சித்தியும் சர்வ மங்களங்களும் உண்டாகும்.

Scroll to Top