You cannot copy content of this page

சோமவார விரதம்

விரதங்களில் தலையாயது சோமவார விரதமாகும்.

திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாளாகும். எனவே அன்றைய நாள் சோமவார விரதம் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தார். அதனால் அவர் சிவனுக்கு மிகவும் பிடித்தவராகி சிவனின் சிரசிலேயே இடம்பெற்றார்.

சோமவார விரத நாளில் காலையில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி விரதத்தைத் தொடங்கலாம்.

ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். திருமணமாகாதவர்கள் நல்ல கணவன் வேண்டியும், திருமணமானவர்கள் கணவன் நோயில்லாமல் நீண்ட காலம் வாழவும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.

மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய் நீக்கம், அகால மரண பயமின்மை என எல்லா நற்பலன்களையும் சோமவார விரதம் தரும்.

இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.

காலையில் எழுந்து நீராடி, தினக்கடமைகளை முடிக்க வேண்டும். வீட்டிலேயே சிவபூஜை செய்ய வேண்டும். பகல் முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்து மாலையில் ஒரு வேளை மட்டும் உணவருந்தி சிவ சிந்தனையுடன் விரதமிருக்க வேண்டும்.

கணவன், மனைவி இருவருமாக இந்த விரதத்தை மேற்கொண்டு வந்தால் வாழ்வில் அனைத்து வளங்களும் கிட்டும்.

அன்றைய தினம் முழுவதும் “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை இடைவிடாது மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே இருந்தால் வாழ்வில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

இறைவனின் ஆயிரம் திருநாமங்களை கூறி வில்வத்தால் அர்ச்சித்தால் அனைத்து பாவங்களும் அகலும்,

சிவ ஸஹஸ்ர நாமம் (ஒரே நிமிடத்தில்)

சிவஸஹஸ்ரநாமத்திற்கு ஒரு எளிய வழியுண்டு என்று நம்மில் எத்தனை பேர் அறிவோம்,

சிவபெருமானால் உபதேசிக்கபட்ட இந்ந அதியற்புதமான எட்டு நாமக்களை சொல்வதால் 1008 திருநாமங்களை சொன்ன பலன் கிட்டும். அது என்ன எட்டு நாமக்கள்

”ஷிவோ மகேஷ்வரச்சைவ ருத்ரோ விஷ்ணு பிதமஹா ஸம்ஸாரவைத்ய ஸர்வேஷ பரமாத்மா ஸதாசிவ”

பொருள் – சிவ : அனைத்து வித மங்களங்களையும் அளிப்பவன், **மகேஷ்வர **: முடிவில்லா மஹா அண்டத்தை உடையவன், **ருத்ர **: ருத்ரன் (சிவபெருமானின் வடிவங்களிள் ஒன்று), **விஷ்ணு **: எங்கும் நிறைந்து இருப்பவர், பிதமஹா : தந்தையே, (ப்ரஹம்மனின் வடிவாக இருப்பவரே), **ஸம்ஸாரவைத்ய **: ஸம்ஸாரம் எனும் கொடிய நிலையிலிருந்து காப்பாற்றும் ஒரே வைத்தியர், **ஸர்வேஷ பரமாத்மா **: அனைத்து கடவுள்களினுள் இருக்கும் பரமாத்மா, **ஸதாசிவ **: சிவநெறியின் பரம்பொருளாகப் போற்றப்படுகின்ற சிவனின் வடிவம்.

இந்த **எட்டு **திருநாமக்களை ஒருவன் மூன்று முறை சொல்வதால் சிவபெருமானின் **1008 **திருநாமங்களை சொன்ன பலன் கிட்டும் என சிவபெருமானே சனகாதி முனிவர்களுக்கு சிவ மஹா புராணத்தில் உபதேசித்துள்ளார்.

சிவ மந்திரங்கள்
இந்த மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதால் வெற்றியும் காரிய சித்தியும் வாய்க்கும். நோய்களில் இருந்து விடுபட முடியும். பயம் மற்றும் கவலைகள் பறந்து விடும்.

பஞ்சாக்ஷர சிவ மந்திரம்:
ஓம் நமசிவய

பஞ்சாக்ஷர மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உடல் , உள்ளம் புனிதமடைகிறது. சிவபெருமானின் ஆசீர்வாதம் கிடைக்கிறது. நல்லவை எல்லாமே கிடைக்கும்

ருத்ர மந்திரம் :

ஓம் நமஸ்தேஸ்து பகவன்
விஸ்வேஸ்வராய,
மஹாதேவாய,
த்ரயம்பகாய,
த்ரிபுராந்தகாய,
த்ரிகாலாக்கினி காலாய
காலாக்னிருத்ராய,
நீலகண்டாய,
ம்ருத்யுஞ்ஜயாய,
ஸர்வேஸ்வராய,
ஸதாசிவாய,
ஸ்ரீமன்,
மஹாதேவாய நம!

இது ருத்ர மந்திரமாகும். இறைவன் சிவபெருமானின் ஆசிகளைப் பெற இந்த மத்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

சிவ காயத்ரி மந்திரம் :

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

இந்து மதத்தில், காயத்திரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாகும். சிவகாயத்திரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மன அமைதிக்காகவும் இறைவன் அருளைப் பெறவும் தினமும் இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்.

சிவா தியான மந்திரம்:

கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ

நாம் செய்த எல்லா பாவத்தில் இருந்தும் நம்மை விடுவிக்க கோரி இறைவனிடம் கேட்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.

மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வா ருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

மனிதனின் இறப்பு குறித்த பயத்தைப் போக்க மிருத்யுஞ்சய் மந்திரம் நல்ல பலனை நமக்கு அளிக்கும்.

கபாலி:

ஓம் ஹம் ஹம் சத்ரு ஸ்தம்பனாய ஹம் ஹம் ஓம் பத்

இப்பூஜையால் பாவங்கள் விலகுவதுடன்; வளமான வாழ்வும் பெறலாம்.

வீட்டிலேயே பூஜை செய்ய இயலாதவர்கள் சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்து, அடியவர்களுக்கும் அன்னதானம் செய்யவும்.

இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளிலாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும்.

விரதமிருப்பவர்கள் மாலை வேளையில் சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானை மனமுருக வழிபட்டு வரலாம்.

திருமணமான பெண்கள் வீட்டிலோ அல்லது சிவாலயம் சென்றோ முழு நெல்லிக்கனியில் சிறிய துளையிட்டு அதில், நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றினால் செல்வம் பெருகும்.

ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் ஸ்ரீமன் நாராயணன் கார்த்திகை மாதத்தில் தினமும் எழுந்தருள்கிறார். அம்மாதத்தில் செய்யப்படும் பூஜை ஆயிரம் மடங்கு பலன் தரும்.

கார்த்திகை மாதத்தில் கஸ்தூரியால் அபிஷேகம் செய்து, தாமரை மலரால் அர்ச்சனை செய்தால் லட்சுமிதேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிடுவாள். வில்வ இலையால் பூஜிப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை.

கார்த்திகை மாதத்தில் சாளக்கிராமத்தை துளசியால் அர்ச்சித்தால் வைகுண்டம் செல்லும் பாக்யம் கிட்டும்.

எல்லா திருமணத்திலும் அருந்ததியை பார்ப்பது என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆகும். கற்புக்கரசியாகிய அருந்ததியை வசிஷ்டர் தன் மனைவியாக அடைந்தது இந்த சோமவார விரதத்தை கடைபிடித்ததால் தான்.

சோம வாரத்தில் குற்றாலத்தில் நீராடி குற்றாலநாதர், குழல் வாய்மொழி அம்மையை தரிசிப்பது நல்லது.

இதே போல சுசீந்திரம் தாணுமாலய சுவாமியை வணங்கி வருவதும் உத்தமம்.

நாமும் சோமவார விரதம் இருந்து சிவனின் அன்புக்கு உரியவர்களாகி சிவசக்தியின் அருளைப் பெறுவோமாக.

Scroll to Top