You cannot copy content of this page

தமிழ் எண்கள் அறிவோம் !

தமிழ் எண்கள் அறிவோம் !

எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
என்பார் ஔவையார்.

குறள் 392:.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு


என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெருமான் வாக்கு.

தமிழ் எண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை மிகவும் ஒத்து காணப்படும்.

தமிழ் எண்களும் கிரந்த எண்களும் ஒரே எண் வடிவைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கிரந்த எண்களைப் போல் தமிழில் சுழியம் கிடையாது.

எண் வடிவங்கள் :

௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10

எண் என்பது எண்ணிக்கை. பொருள்களை முழு-எண்களாகவும் பின்ன-எண்களாகவும் மக்கள் எண்ணுகின்றனர்.

எண்ணுப்பெயர் :

தொல்காப்பியர் முழு எண்களை எண்ணும் சொற்களைக் குறிப்பிடுகிறார். அவை ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், நூறாயிரம் எனப்பத்தின் மடங்குகளாக உள்ளன. திருக்குறளில் 954 ஆம் குறளில்,

“அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்”

கோடி என்னும் எண் குறிப்பிடப் படுகிறது. கோடி என்னும் சொல் கடைசி எல்லையைக் குறிக்கும். கோடிக்கு மேல் உள்ள எண்களைத் தொல்காப்பியர் அல்பெயர் எண் என்று குறிப்பிடுகிறார். தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பவை அந்த எண்கள்.

பின்னம் :

ஒன்றிற்குப் பின்னே உள்ள எண்களைப் பின்னம் என்கிறோம். பின்னே உள்ளது பின்னம். தொல்காப்பியர் அரை, கால் முதலான பின்ன எண்கள் ஒன்றரை என்பது போல் முழு எண்ணோடு புணர்வதையும், காலே அரைக்கால் என்பது போல் பின்னத்தோடு பின்னம் புணர்வதையும் குறிப்பிடுகிறார்.

எண் குறியீடு :

எண்ணுப் பெயர்கள் பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர் எண் குறியீடுகள் பற்றிக் குறிப்பிடவில்லை. 30 எழுத்துக்களால் உணர்த்தப்படும் தமிழ் மொழியைப் பற்றித் தொல்காப்பியம் பேசுகிறது. எண் குறியீடு இந்த 30 எழுத்துக்களுக்கு அப்பாற்பட்டது.

மதுரைக் கணக்காயனார் போன்ற புலவர்களும், மதுரை வேளாசான், முக்கால் ஆசான் நல்வெள்ளையார், மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார், மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார், மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார், மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார், மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் என ‘ஆசிரியர்’ எனச் சிறப்பிக்கப்பட்டுள்ள புலவர்களும் எண் – கணக்கைக் கற்பித்துவந்த சங்ககாலப் புலவர்கள்.

எண் குறியீடு பற்றிய சான்று :

தமிழரின் எண் குறியீடு எப்படி இருந்தது என்பதைக் காட்டும் செய்தி 13-ஆம் நூற்றாண்டு ஒட்டக்கூத்தன், புகழேந்தி ஆகிய புலவர் காலத்து ஔவையார் பாடலில் உள்ளது.

அவர் ‘அவலட்சணமே’ என்னும் சொல்லால் ஒருவனைத் திட்டும்போது ‘எட்டேகால் லட்சணமே’ என்று திட்டுகிறார். ‘அ’ என்னும் எழுத்து எட்டைக் குறிக்கும். ‘வ’ என்னும் பின்ன-எண் எழுத்து ‘கால்’ என்னும் பின்ன எண்ணைக் குறிக்கும். எனவே எட்டேகால் லட்சணம் என்பது அவலட்சணம் என்னும் பொருளை உணர்த்தும். ஒன்று என்னும் முழுமையைப் பின்னோக்கிப் பகுக்கும் போது தமிழர்கள் இரண்டு வகையான பாகுபாடுகளைக் கடைப்பிடித்துள்ளனர்.

பகுப்புப் பெயர்கள் :

ஒன்று என்னும் முழுமையை இரண்டு இரண்டாகப் பகுத்துக்கொண்டு செல்லும் முறைமை. இதில்
அரை – ½
கால் – ¼
அரைக்கால் – 1/8
வீசம் (அல்லது) மாகாணி – 1/16
அரைவீசம் – 1/32
கால்வீசம் – 1/64
அரைக்கால்வீசம் – 1/128
எனப் பின்னத்தின் பெயரும் குறியீடும் அமையும்.
ஒன்று என்னும் முழுமையை முதலில் ஐந்தாகப் பகுத்து அதன் பின்னத்தை இரண்டிரண்டாகப் பகுத்துக்கொண்டு சொல்லும் முறைமை. இதில்
நான்மா – 1/5
இருமா – 1/10
ஒருமா – 1/20
அரைமா – 1/40
காணி – 1/80
அரைக்காணி – 1/160
முந்திரி – 1/320
எனப் பின்னத்தின் பெயர்கள் அமையும்.


தமிழர் அளவை முறைகளில் சில.

அடிப்படை அலகு தொகு
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/57511466188800000 0 – வெள்ளம்
1/57511466188800000 000 – நுண்மணல்
1/23238245302272000 00000 – தேர்த் துகள்.



நீட்டலளவு


10 கோன் – 1 நுண்ணணு
10 நுண்ணணு – 1 அணு
8 அணு – 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் – 1 துசும்பு
8 துசும்பு – 1 மயிர்நுணி
8 மயிர்நுணி – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 சிறுகடுகு
8 சிறுகடுகு – 1 எள்
8 எள் – 1 நெல்
8 நெல் – 1 விரல்
12 விரல் – 1 சாண்
2 சாண் – 1 முழம்
4 முழம் – 1 பாகம்
6000 பாகம் – 1 காதம்(1200 கெசம்)
4 காதம் – 1 யோசனை
பொன் நிறுத்தல் தொகு
4 நெல் எடை – 1 குன்றிமணி
2 குன்றிமணி – 1 மஞ்சாடி
2 மஞ்சாடி – 1 பணவெடை
5 பணவெடை – 1 கழஞ்சு
8 பணவெடை – 1 வராகனெடை
4 கழஞ்சு – 1 கஃசு
4 கஃசு – 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல் தொகு
32 குன்றிமணி – 1 வராகனெடை
10 வராகனெடை – 1 பலம்
40 பலம் – 1 வீசை
6 வீசை – 1 தூலாம்
8 வீசை – 1 மணங்கு
20 மணங்கு – 1 பாரம்
முகத்தல் அளவு தொகு
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
பெய்தல் அளவு தொகு
300 நெல் – 1 செவிடு
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
5 மரக்கால் – 1 பறை
80 பறை – 1 கரிசை
48 96 படி – 1 கலம்
120 படி – 1 பொதி



கால அளவு
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி-நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் – 12 மாதம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்


எண்ணல் அளவை தொகு
ஒன்றிலிருந்து கோடி வரை அனைவரும் அறிந்தவையே. கோடிக்கு பிறகான எண்களின் பெயர்களை பின்வறுமாறு:

10 கோடி – 1 அற்புதம்
10 அற்புதம் – 1 நிகற்புதம்
10 நிகற்புதம் – 1 கும்பம்
10 கும்பம் – 1 கணம்
10 கணம் – 1 கற்பம்
10 கற்பம் – 1 நிகற்பம்
10 நிகற்பம் – 1 பதுமம்
10 பதுமம் – 1 சங்கம்
10 சங்கம் – 1 சமுத்திரம்
10 சமுத்திரம் – 1 ஆம்பல்
10 ஆம்பல் – 1 மத்தியம்
10மத்தியம் – 1 பரார்த்தம்
10பரார்த்தம் – 1 பூரியம்


தமிழ் இலக்கம் பெயர் எண் அளவு
௨ந முந்திரி 1/320
அரைக்காணி 1/160
அரைக்காணி முந்திரி 3/320
காணி 1/80
கால் வீசம் 1/64
அரைமா 1/40
அரை வீசம் 1/32
முக்காணி 3/80
முக்கால் வீசம் 3/64
ஒருமா 1/20
மாகாணி (வீசம்) 1/16
இருமா 1/10
அரைக்கால் 1/8
மூன்றுமா 3/20
மூன்று வீசம் 3/16
நாலுமா 1/5
கால் 1/4
அரை 1/2
3/4 முக்கால் 3/4


இன்றைய காலத்திலும் பயன்படுத்தும் முகத்தல் அளவைகள் என்பது, ஆழாக்கு, உழக்கு, நாழி போன்றவையாகும். ஒரு ஆழாக்கு என்பது 125 மில்லி லிட்டர் கொண்டதாகும். உழக்கு என்பது 250 மி.லி. நாழி என்பது 1 லி.

செவிடு 25 மி.லி
பிடி = 2 செவிடு 50 மி.லி
ஆழாக்கு =5 செவிடு 125 மி.லி
உழக்கு = 2 ஆழாக்கு 250 மி.லி
உரி = 2 உழக்கு 500 மி.லி
மூவுழக்கு = 3 உழக்கு 750 மி.லி
நாழி = 4 உழக்கு 1 லி
குறுணி = 8 நாழி 8 லி
பதக்கு = 2 குறுணி 16 லி
முக்குறுணி = 3 குறுணி 24 லி
தூணி = 4 குறுணி 32 லி
கலம் = 3 தூணி 96 லி
கரிசை = 100 தூணி 3200 லி

ஒரு ஆழாக்கு நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் முப்பத்தியொரு கிராம்.
முன்னூற்று அறுபது நெல் ஒரு சோடு


பொன்நிறுத்தல்
4 நெல் எடை – 1 குன்றிமணி
2 குன்றிமணி – 1 மஞ்சாடி
2 மஞ்சாடி – 1 பணவெடை
5 பணவெடை – 1 கழஞ்சு
8 பணவெடை – 1 வராகனெடை
4 கழஞ்சு – 1 கஃசு
4 கஃசு – 1 பலம்


பண்டங்கள் நிறுத்தல்
32 குன்றிமணி – 1 வராகனெடை
10 வராகனெடை – 1 பலம்
40 பலம் – 1 வீசை
6 வீசை – 1 தூலாம்
8 வீசை – 1 மணங்கு
20 மணங்கு – 1 பாரம்


பெய்தல் அளவு
300 நெல் – 1 செவிடு
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
5 மரக்கால் – 1 பறை
80 பறை – 1 கரிசை
96 படி – 1 கலம்
120 படி – 1 பொதி.


முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.


நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.


நிலங்களின் அளவு

நிலங்களின் அளவைக் குறிக்க, சென்ட், ஏக்கர் அளவுகள் தற்போது வழக்கத்தில் உள்ளன. ஆனாலும், ஒவ்வொரு பகுதியிலும் வட்டார வழக்கில் ஒவ்வொரு அளவு வழங்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, ‘ஒரு குழி’ என்பது, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி (காவிரிப் பாசனப் பகுதிகளில்) ஆகிய மாவட்டங்களில் 144 சதுர அடி நிலத்தையும்; மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் 60 சென்ட் நிலத்தையும்; சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில்

8 சென்ட் நிலத்தையும்; கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 576 சதுர அடி நிலத்தையும் குறிக்கிறது. கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் 16 சென்ட் அளவை ‘ஒரு வல்லம்’ என்கிறார்கள். திருநெல்வேலி, ராமநாதபுரம் பகுதிகளில் 8 சென்ட் பரப்பு கொண்ட நிலத்தை ‘ஒரு குருணி’ என்கிறார்கள்

Scroll to Top