You cannot copy content of this page

வேல்வகுப்பு, ஸ்ரீ வள்ளி தெய்வயானை

வேல்வகுப்பு, ஸ்ரீ வள்ளி தெய்வயானை


வேல் வகுப்பு

பருத்தமுலை சிறுத்தவிடை வெளுத்த நகை கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்கு நிகராகும்

பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை

தெறிக்கவர மாகும்

பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு கவிப்புலவ னிசைக்குருகி வரைக்குகையை யிடித்து வழி காணும்

பசித்தலகை முசித்தழுது முறைப்படுத லொழித்தவுண ருரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவரு ணேரும்

சுரர்க்குமுனி வரர்க்குமக பதிக்கும்விதி தனக்குமரிதனக்கு நரர் தமக்குமுறு

மிடுக்கண்வினை சாடும்

சுடர்ப்பரிதி யொளிப்பநில வொழுக்குமதி யொளிப்பஅலை யடக்குதழ லொளிப்பவொளி ரொளிப்பிரபை வீசும்

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கவிடர் நினைக்கினவர் குலத்தைமுத

லறக்களயு மெனக்கொர் துணையாகும்

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழும் அறத்தை நிலைகாணும்

தருக்கி நமன் முருக்கவரி னெருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்தவிறை கழற்கு நிகராகும்

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை வாகும்

தனித்துவழி நடக்குமென திடத்துமொரு வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு பகற்றுணையதாகும்

சலத்துவரு மரக்கருடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்த தொடை யெனச்சிகையில் விருப்பமொடு சூடும்

திரைக்கடலை யுடைத்து நிறை புனற்கடிது குடித்துடையு முடைப்படைய

வடைத்துதிர நிறைத்துவிளை யாடும்

திசைக்கிரியை முதற்குளிச னறுத்தசிறை முளைத்ததென முகட்டினிடை பறக்கவற விசைத்ததிர வோடும்

சினத்தவுண ரெதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும்

திருத்தணியி லுதித்தருளு மொருத்தன்மலை விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.


தெய்வயானை யம்மையார் வணக்கம்

சங்கரி தன் மருமகளைச் சங்கரிதன் மகளைச் சங்கரிக்குஞ்சங்கரனை மாமனெனுந் தையலை

வெங்கரிதந் திடுபிடியை விண்ணவர்கோன் சுதையை விண்ணவர்கள்

பணிந்தேத்தும் விண்ணுலகத் தணங்கைப்

பைங்கழுநீர் விழியாளைப் பைங்கழுநீர் நிறமே படைத்தாளைப்

பைங்கழுநீர் செங்கரங் கொண்டாளைச்

செங்கமலை தருமமுதைக் கந்தரிடத்தமருந்தெய்வயாணையைத் தொழுது திருவருள் பெற்றிடுவோம்.


வள்ளி யம்மையார் வணக்கம்

மாதவனோர் மாதவனாய் மாதவஞ் செய்திடலும் வனமானாய் வந்தெதிர்ந்த மலர்மானைப் புணரப்

பூதலமங் கையருருவாய் அவதரித்து வள்ளிப் பொருப்புறையும் பொருப்பர்மனை விருப்பமுடன் வளர்ந்து

தீதகலும் தினைகாத்து வேங்கை யுருவெடுத்த செவ்வேளை யவ்வேளைச் சேர்ந்திருகைக் கோளுங்

காதலுடன் புரிந்திறைவன் வலப்பாகத் தமருங் கன்னியெனும் வள்ளிகழ லுன்னி வழுத்திடுவாம்.

(திருத்தணிகைப் புராணச் சுருக்கம்)


Scroll to Top