You cannot copy content of this page

Day: 21 January 2020

000 திருக்குறள் நூற் பிரிவு

திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்களிலும் வழங்ஙப் படுகிறது. திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது. ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்’ என்றும் அதன் உயர்வு கருதி “திரு” என்ற …

000 திருக்குறள் நூற் பிரிவு Read More »

050 இடனறிதல்

இடனறிதல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: இடனறிதல். குறள் 491: தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்அல் லது. மணக்குடவர் உரை:முடியுமிடங் கண்டாலல்லது யாதொரு வினையுந் தொடங்கா தொழிக; எளிதென்றிகழாதொழிக. இஃது இடமறிதல் வேண்டுமென்பது கூறிற்று பரிமேலழகர் உரை:முற்றும் இடம் கண்ட பின்அல்லது – பகைவரை முற்றுதற்கு ஆவதோர் இடம் பெற்றபின் அல்லது, எவ்வினையும் தொடங்கற்க – அவர்மாட்டு யாதொரு வினையையும் தொடங்காதொழிக, எள்ளற்க – அவரைச் சிறியர் என்று இகழாதொழிக. (முற்றுதல்: வளைத்தல். அதற்கு …

050 இடனறிதல் Read More »

049 காலமறிதல்

காலமறிதல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: காலமறிதல். குறள் 481: பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது. மணக்குடவர் உரை:இராப்பொழுது வெல்லுங் கூகையைக் காக்கை பகற்பொழுது வெல்லும். ஆதலான் மாறுபாட்டை வெல்லும் அரசர்க்குக் காலம் வேண்டும் இது காலமறிதல் வேண்டும் என்றது. பரிமேலழகர் உரை:கூகையைக் காக்கை பகல் வெல்லும் – தன்னின் வலிதாய கூகையைக் காக்கை பகற்பொழுதின்கண் வெல்லாநிற்கும், இகல் வெல்லும் வேந்தர்க்குப் பொழுது வேண்டும் – அது போலப் பகைவரது இகலை வெல்லக் …

049 காலமறிதல் Read More »

048 வலியறிதல்

வலியறிதல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: வலியறிதல். குறள் 471: வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல். மணக்குடவர் உரை:செய்யும் வினையினது வலியும் தனக்கு உண்டான வலியும் பகைவனது வலியும் தனக்கும் பகைவர்க்கும் துணையாயினார் வலியும் எண்ணிப் பின்பு வினைசெய்க. இது வலியறியும் இடம் கூறிற்று. பரிமேலழகர் உரை:வினை வலியும் – தான் செய்யக்கருதிய வினைவலியையும், தன் வலியும் – அதனைச் செய்து முடிக்கும் தன் வலியையும், மாற்றான் வலியும் – அதனை விலக்கலுறும் …

048 வலியறிதல் Read More »

047 தெரிந்துசெயல்வகை

தெரிந்துசெயல்வகை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. குறள் 461: அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல். மணக்குடவர் உரை:வினை செய்து முடித்தற்கு அழியும் பொருளும் அது செய்து முடித்தாலுளதாகும் பொருளுமாய்நின்று அப்பொருளினாற் பின்புண்டாய் வரும் பயனும் எண்ணிப் பின்பு வினைசெய்ய வேண்டும். பரிமேலழகர் உரை:அழிவதூஉம் – வினைசெய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதையும், ஆவதூஉம் – அழிந்தால் பின் ஆவதனையும், ஆகி வழி பயக்கும் ஊதியமும் – ஆய் நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையும், …

047 தெரிந்துசெயல்வகை Read More »

046 சிற்றினஞ்சேராமை

சிற்றினஞ்சேராமை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. குறள் 451: சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும். மணக்குடவர் உரை:சிற்றினத்தை யஞ்சுவர் பெரியர்; சிறியவர் அதனைச் சுற்றமாகக் கொண்டு விடுவர். இது பெருமை வேண்டுவார் சிற்றினஞ் சேராரென்றது. பரிமேலழகர் உரை:பெருமை சிற்றினம் அஞ்சும் – பெரியோர் இயல்பு சிறிய இனத்தைச் அஞ்சாநிற்கும், சிறுமை தான் சுற்றமாச் சூழ்ந்து விடும் – ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்த பொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் …

046 சிற்றினஞ்சேராமை Read More »

045 பெரியாரைத் துணைக்கோடல்

பெரியாரைத் துணைக்கோடல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல். குறள் 441: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல். மணக்குடவர் உரை:அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க. இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று. பரிமேலழகர் உரை:அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறன்அறிந்து தேர்ந்து கொளல். அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை – அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, தேர்ந்து திறன் …

045 பெரியாரைத் துணைக்கோடல் Read More »

044 குற்றங்கடிதல்

குற்றங்கடிதல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: குற்றங்கடிதல். குறள் 431: செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து. மணக்குடவர் உரை:பிறர்மனை நயத்தலும், வெகுளியும், சிறியார் செய்வன செய்தொழுகுதலும் இல்லாதார்க்கு ஆக்கம் தலையெடுக்கும் நீர்மையுடைத்து. பிறர்மனை விரும்புதல் செருக்கினால் வருதலின் செருக்கு என்றார். பரிமேலழகர் உரை:செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் – மதமும் வெகுளியும் காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம், பெருமித நீர்த்து – மேம்பாட்டு நீர்மையினை உடைத்து. (மதம் : …

044 குற்றங்கடிதல் Read More »

043 அறிவுடைமை

அறிவுடைமை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை. குறள் 421: அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண். மணக்குடவர் உரை:ஒருவனுக்குக் குற்றமறைக்குங் கருவியாவது அறிவு: பகைவராலும் உட்புகுந்து அழிக்கலாகா அரணும் அதுதானே. இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கு மென்றும் பிறரால் வருந்தீமையைக் காக்குமென்றும் அறிவினாலாம் பயன் கூறிற்று. பரிமேலழகர் உரை:அறிவு அற்றம் காக்கும் கருவி – அரசர்க்கு அறிவு என்பது இறுதி வாராமல் காக்கும் கருவியாம், செறுவார்க்கு அழிக்கலாகா உள் அரணும் – அதுவேயுமன்றிப் …

043 அறிவுடைமை Read More »

042 கேள்வி

கேள்வி பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கேள்வி. குறள் 411: செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்து ளெல்லாந் தலை. மணக்குடவர் உரை:ஒருவற்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வருஞ் செல்வம்: அச்செல்வம் பிறசெல்வங்க ளெல்லாவற்றினும் தலையாகலான். பரிமேலழகர் உரை:செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் – ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை – அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான். ( செவியான் வரும் செல்வம் – கேள்வியால் எல்லாப் பொருளையும் …

042 கேள்வி Read More »

041 கல்லாமை

கல்லாமை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கல்லாமை. குறள் 401: அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியநூலின்றிக் கோட்டி கொளல். மணக்குடவர் உரை:கொம்மையின்றி வட்டாடினாற் போலும்; நிரம்பிய நூல்களைக் கற்றலின்றி வார்த்தை சொல்லுதல். அரங்கு- சூது: வட்டாடுதல்- உருண்டை யுருட்டல்: கோட்டி கொளல்- ‘புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி’ என்றாற்போல. இது கல்லாதார் வார்த்தை சொல்லின் அது தப்புமென்றது. பரிமேலழகர் உரை:அரங்கு இன்றி வட்டு ஆடியற்று – அரங்கினை இழையாது வட்டாடினாற்போலும், நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கோளல் …

041 கல்லாமை Read More »

040 கல்வி

கல்வி பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கல்வி. குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக. மணக்குடவர் உரை:கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக. இது கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது. பரிமேலழகர் உரை:கற்பவை கசடு அறக் கற்க – ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, கற்றபின் அதற்குத் தக நிற்க – அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. (‘கற்பவை’ என்றதனான், …

040 கல்வி Read More »

039 இறைமாட்சி

இறைமாட்சி பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: இறைமாட்சி. குறள் 381: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசருள் ஏறு. மணக்குடவர் உரை:படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணுமென்னும் ஆறுபொருளினையும் உடையவன் அரசருள் ஏறுபோல்வன். ஈண்டுக் குடியுள் நாடு அடங்கிற்று. இஃது அரசனுக்கு உண்டாக்குவன கூறிற்று. பரிமேலழகர் உரை:படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் – படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன், அரசருள் …

039 இறைமாட்சி Read More »

038 ஊழ்

ஊழ் பால்: அறத்துப்பால். இயல்: ஊழியல். அதிகாரம்: ஊழ். குறள் 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி. மணக்குடவர் உரை:ஒருவனுக்கு ஆக்கங் கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் முயற்சி தோன்றும்; அழிவு கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் மடிதோன்றும். இஃது ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் ஏதுவான முயற்சியும் முயலாமையும் ஊழால் வருமென்றது. பரிமேலழகர் உரை:கைப்பொருள் ஆகுஊழால் அசைவு இன்மை தோன்றும் – ஒருவற்குக் கைப்பொருளாதற்குக் காரணமாகிய ஊழான் முயற்சி உண்டாம்; போகு ஊழால் மடி தோன்றும் – அஃது …

038 ஊழ் Read More »

037 அவாவறுத்தல்

அவாவறுத்தல் பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: அவாவறுத்தல். குறள் 361: அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்தவாஅப் பிறப்பீனும் வித்து. மணக்குடவர் உரை:எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர். இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது. பரிமேலழகர் உரை:எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும் வித்து – எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து: அவாஅ என்ப – அவா என்று சொல்லுவர் நூலோர். …

037 அவாவறுத்தல் Read More »

036 மெய்யுணர்தல்

மெய்யுணர்தல் பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: மெய்யுணர்தல். குறள் 351: பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்மருளானாம் மாணாப் பிறப்பு. மணக்குடவர் உரை:பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்; மாட்சிமையில்லாத பிறப்பு. இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது. பரிமேலழகர் உரை:பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம் – மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே உளதாம், மாணாப் பிறப்பு – இன்பம் இல்லாத பிறப்பு. (அவ் விபரீத உணர்வாவது, மறுபிறப்பும், …

036 மெய்யுணர்தல் Read More »

035 துறவு

துறவு பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: துறவு. குறள் 341: யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன். மணக்குடவர் உரை:எவன் யாதொன்றினின்றும் யாதொன்றினின்றும் நீங்கினான் அவன் அதனளவு துன்பமுறுதலிலன். பரிமேலழகர் உரை:யாதனின் யாதனின் நீங்கியான் – ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான், அதனின் அதனின் நோதல் இலன் – அவன் அப்பொருளால் துன்பம் எய்துதல் இலன். (அடுக்குகள் பன்மை குறித்து நின்றன. நீங்குதல் – துறத்தல். ஈண்டுத்துன்பம் என்றது இம்மைக்கண் அவற்றைத் …

035 துறவு Read More »

034 நிலையாமை

நிலையாமை பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: நிலையாமை. குறள் 331: நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை. மணக்குடவர் உரை:நில்லாத பொருள்களை நிலைநிற்பனவென்று நினைக்கின்ற புல்லிய வறிவுடைமை இழிந்தது. எனவே, பொருள்களை யுள்ளவாறு காணவொட்டாத மயக்கத்தைக் கடிய வேண்டுமென்றவாறாயிற்று. பரிமேலழகர் உரை:நில்லாதவற்றை நிலையின என்று உணரும் புல்லறிவு ஆண்மை -நிலையுதல் இலவாகிய பொருள்களை நிலையுதல் உடையஎன்று கருதுகின்ற புல்லிய அறிவினை உடையராதல்; கடை -துறந்தார்க்கு இழிபு. (தோற்றம் உடையவற்றைக் கேடில என்று கருதும் புல்லறிவால் …

034 நிலையாமை Read More »

033 கொல்லாமை

கொல்லாமை பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: கொல்லாமை. குறள் 321: அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும். மணக்குடவர் உரை:நல்வினை யாதெனின் கொல்லாமை; கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுந் தருமாதலால். இஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது. பரிமேலழகர் உரை:அறவினை யாது எனின் கொல்லாமை – அறங்களெல்லாம் ஆகிய செய்கை யாது என்று வினவின், அஃது ஓர் உயிரையும் கொல்லாமையாம், கோறல் பிற வினை எல்லாம் தரும் – அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையும் தானே …

033 கொல்லாமை Read More »

032 இன்னாசெய்யாமை

இன்னாசெய்யாமை பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: இன்னாசெய்யாமை. குறள் 311: சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னாசெய்யாமை மாசற்றார் கோள். மணக்குடவர் உரை:மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும் பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு. இது பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டுமென்றது. பரிமேலழகர் உரை:சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் – யோகமாகிய சிறப்புத்தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கு இன்னா செய்து பெறலாமாயினும்; பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் – அதனைச் செய்யாமை …

032 இன்னாசெய்யாமை Read More »

031 வெகுளாமை

வெகுளாமை பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: வெகுளாமை. குறள் 301: செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கா. மணக்குடவர் உரை:தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளாத வனாவான்; இயலாவிடத்தில் அதனைத் தவிர்ந்ததனாலும் பயனில்லை, தவிராததனாலும் பயனில்லை; இது வெகுளாமையாவது வலியவன் வெகுளாமை யென்றது. பரிமேலழகர் உரை:சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான்-தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளால் தடுப்பானாவான், அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் – ஏனைப் பலியாத இடத்து …

031 வெகுளாமை Read More »

030 வாய்மை

வாய்மை பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: வாய்மை. குறள் 291: வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல். மணக்குடவர் உரை:பொய் சொல்லாத மெய்யென்று சொல்லப்படுவது யாதென்று வினவின், பிறர்க்கு யாதொன்றானும் தீமை பயவாத சொற்களைச் சொல்லுதல், வாய்மை யாது என்றார்க்கு இது கூறப்பட்டது. பரிமேலழகர் உரை:வாய்மை எனப்படுவது யாது எனின் – மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று வினவின், தீமை யாதொன்றும் இலாத சொலல் – அது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் …

030 வாய்மை Read More »

029 கள்ளாமை

கள்ளாமை பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: கள்ளாமை. குறள் 281: எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்கள்ளாமை காக்கதன் நெஞ்சு. மணக்குடவர் உரை:பிறரா லிகழப்படாமையை வேண்டுவா னிவனென்று சொல்லப்படுமவன் யாதொரு பொருளையுங் களவிற் கொள்ளாமல் தன்னெஞ்சைக் காக்க. இது களவு ஆகாதென்றது. பரிமேலழகர் உரை:எள்ளாமை வேண்டுவான் என்பான் – வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான், எனைத்து ஒன்று கள்ளாமை தன் நெஞ்சு காக்க – யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக்கொள்ளக் கருதாவகை …

029 கள்ளாமை Read More »

Scroll to Top