திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்களிலும் வழங்ஙப் படுகிறது.
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது. ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்’ என்றும் அதன் உயர்வு கருதி “திரு” என்ற அடைமொழியுடன் “திருக்குறள்” என்றும் பெயர் பெறுகிறது.
குறளானது ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படுகிறது.
பிற பெயர்கள்:
- உத்தரவேதம்
- பொய்யாமொழி
- வாயுரை வாழ்த்து
- தெய்வநூல்
- பொதுமறை
- முப்பால்
- தமிழ் மறை
- ஈரடி நூல்
- வான்மறை
- உலகப்பொதுமறை
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை.
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் அனிச்சம், குவளை. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் நெருஞ்சிப் பழம். திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை குன்றிமணி. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து ஒள. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல் திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் பனை, மூங்கில். திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705 முறை) ஒரெழுத்து னி.
திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது “பற்று”. ஆறு முறை. திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் ளீ,ங
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசர். திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர். திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812
திருக்குறளை உரை யாசிரியர்களுள் 10வது உரையாசிரியர் பரிமேலழகர்.
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் ஒன்பது.
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 107 மொழிகளில் மொழி பெயர்க் கப்பட்டுள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க் கப்பட்டுள்ளது
குறளும் எண்ணும்…
திருக்குறளில் பல இடங்களில் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
‘ஒன்று’ என்று 11 இடங்களிலும்,
‘இரண்டு’ என்று 10 இடங்களிலும்,
‘நான்கு’ என்று 11 இடங்களிலும்,
‘ஐந்து’ என்று 14 இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘ஆறு’ என்று ஒரே ஒரு இடத்திலும்,
‘ஏழு’ என்று 7 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
‘எட்டு’, ‘பத்து’, ‘நூறு’, ‘ஆயிரம்’ ஆகியவை தலா ஒரு முறை பயன்படுத்தப்பட்டுள்ளன.
‘கோடி’ என்ற வார்த்தையை 7 இடங்களில் திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்.
உதடுகள் ஒட்டாத குறள் எண்கள்:
208, 240, 286, 310, 341, 387, 419, 427, 446, 472, 489, 516, 523, 668, 678, 679, 894, 1080, 1082, 1177, 1179, 1211, 1213, 1219, 1236, 1249, 1286, 1296
உதாரணத்துக்கு ஒன்று…இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. (310)
திருக்குறள் நூற் பிரிவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
அறத்துப்பால் (1-38)
பாயிரம்
- கடவுள் வாழ்த்து
- வான் சிறப்பு
- நீத்தார் பெருமை
- அறன் வலியுறுத்தல்
இல்லறவியல் - இல்வாழ்க்கை
- வாழ்க்கைத் துணைநலம்
- மக்கட்பேறு
- அன்புடைமை
- விருந்தோம்பல்
- இனியவை கூறல்
- செய்ந்நன்றி அறிதல்
- நடுவுநிலைமை
- அடக்கம் உடைமை
- ஒழுக்கம் உடைமை
- பிறன் இல் விழையாமை
- பொறை உடைமை
- அழுக்காறாமை
- வெஃகாமை
- புறங்கூறாமை
- பயனில சொல்லாமை
- தீவினை அச்சம்
- ஒப்புரவு அறிதல்
- ஈகை
- புகழ்
துறவறவியல் - அருள் உடைமை
- புலால் மறுத்தல்
- தவம்
- கூடா ஒழுக்கம்
- கள்ளாமை :
- வாய்மை
- வெகுளாமை
- இன்னா செய்யாமை
- கொல்லாமை
- நிலையாமை
- துறவு
- மெய் உணர்தல்
- அவா அறுத்தல்
ஊழியல் - ஊழ்
பொருட்பால் (39-108)
அரசியல்
- இறைமாட்சி
- கல்வி
- கல்லாமை
- கேள்வி
- அறிவுடைமை
- குற்றம் கடிதல்
- பெரியாரைத் துணைக்கோடல்
- சிற்றினம் சேராமை
- தெரிந்து செயல்வகை
- வலி அறிதல்
- காலம் அறிதல்
- இடன் அறிதல்
- தெரிந்து தெளிதல்
- தெரிந்து வினையாடல்
- சுற்றம் தழால்
- பொச்சாவாமை
- செங்கோன்மை
- கொடுங்கோன்மை
- வெருவந்த செய்யாமை
- கண்ணோட்டம்
- ஒற்றாடல்
- ஊக்கம் உடைமை
- மடி இன்மை
- ஆள்வினை உடைமை
- இடுக்கண் அழியாமை
அமைச்சியல் - அமைச்சு
- சொல்வன்மை
- வினைத்தூய்மை
- வினைத்திட்பம்
- வினை செயல்வகை
- தூது
- மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
- குறிப்பு அறிதல்
- அவை அறிதல்
- அவை அஞ்சாமை
அரணியல் - நாடு
- அரண்
கூழியல் - பொருள் செயல்வகை
படையியல் - படைமாட்சி
- படைச்செருக்கு
நட்பியல் - நட்பு
- நட்பு ஆராய்தல்
- பழைமை
- தீ நட்பு
- கூடா நட்பு
- பேதைமை
- புல்லறிவாண்மை
- இகல்
- பகை மாட்சி
- பகைத்திறம் தெரிதல்
- உட்பகை
- பெரியாரைப் பிழையாமை
- பெண்வழிச் சேறல்
- வரைவில் மகளிர்
- கள் உண்ணாமை
- சூது
- மருந்து
குடியியல் - குடிமை
- மானம்
- பெருமை
- சான்றாண்மை
- பண்புடைமை
- நன்றியில் செல்வம்
- நாண் உடைமை
- குடி செயல்வகை
- உழவு
- நல்குரவு
- இரவு
- இரவச்சம்
- கயமை
காமத்துப்பால் (109-133)
களவியல்
- தகையணங்குறுத்தல்
- குறிப்பறிதல்
- புணர்ச்சி மகிழ்தல்
- நலம் புனைந்து உரைத்தல்
- காதற் சிறப்பு உரைத்தல்
- நாணுத் துறவு உரைத்தல்
- அலர் அறிவுறுத்தல்
கற்பியல் - பிரிவாற்றாமை
- படர் மெலிந்து இரங்கல்
- கண் விதுப்பு அழிதல்
- பசப்பு உறு பருவரல்
- தனிப்படர் மிகுதி
- நினைந்தவர் புலம்பல்
- கனவு நிலை உரைத்தல்
- பொழுது கண்டு இரங்கல்
- உறுப்பு நலன் அழிதல்
- நெஞ்சொடு கிளத்தல்
- நிறை அழிதல்
- அவர் வயின் விதும்பல்
- குறிப்பு அறிவுறுத்தல்
- புணர்ச்சி விதும்பல்
- நெஞ்சொடு புலத்தல்
- புலவி
- புலவி நுணுக்கம்
- ஊடல் உவகை