You cannot copy content of this page

Day: 22 January 2020

126 நிறையழிதல்

நிறையழிதல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: நிறையழிதல். குறள் 1251: காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்நாணுத்தாழ் வீழ்த்த கதவு. மணக்குடவர் உரை:காமமாகிய மழு உடையாநின்றது: நாணமாகிய தாழில் அடைக்கப்பட்ட அறிவாகிய கதவினை. இஃது அறிவும் நாணமும் உடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. பரிமேலழகர் உரை:(நாணும் நிறையும் அழியாமை நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு – நாணாகிய தாழினைக் கோத்த நிறை என்னும் …

126 நிறையழிதல் Read More »

125 நெஞ்சொடுகிளத்தல்

நெஞ்சொடுகிளத்தல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: நெஞ்சொடுகிளத்தல். குறள் 1241: நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்எவ்வநோய் தீர்க்கும் மருந்து. மணக்குடவர் உரை:நெஞ்சே! நீ எனக்கு உற்ற எவ்வநோயைத் தீர்க்கும் மருந்தாவது யாதொன்றாயினும் ஒன்றை விசாரித்துச் சொல்லாய். இஃது ஆற்றுதலரி தென்று கூறியது. இவையெல்லாம் தனித்தனி சிலகூற்றென்று கொள்ளப்படும். பரிமேலழகர் உரை:(தன் ஆற்றாமை தீரும் திறன் நாடியது.) நெஞ்சே – நெஞ்சே; எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று – இவ்வெவ்வநோயினைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை; எனைத்து ஒன்றும் நினைத்துச் …

125 நெஞ்சொடுகிளத்தல் Read More »

124 உறுப்புநலனழிதல்

உறுப்புநலனழிதல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: உறுப்புநலனழிதல். குறள் 1231: சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளிநறுமலர் நாணின கண். மணக்குடவர் உரை:நமக்குத் துன்பம் ஒழிய வேண்டி நெடுநெறிக்கண் சென்றாரை நினைத்துக் கண்கள் நறுவிய பூக்களைக் கண்டு நாணா நின்றன. பலகால் அழுதலால் நிறங்கெட்டதென்றாவா றாயிற்று. பரிமேலழகர் உரை:(ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி – இவ்வாற்றாமை நம்கண்ணே நிற்பத் தாம் சேணிடைச் சென்ற காதலரை நீ …

124 உறுப்புநலனழிதல் Read More »

123 பொழுதுகண்டிரங்கல்

பொழுதுகண்டிரங்கல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: பொழுதுகண்டிரங்கல். குறள் 1221: மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்வேலைநீ வாழி பொழுது. மணக்குடவர் உரை:பொழுதே! நீ வெப்பமுடையை யானமையான் மாலையோ எனின் அல்லை: முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகியவொரு வேலாயிருந்தாய். இது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது. பரிமேலழகர் உரை:(பொழுதொடு புலந்து சொல்லியது.) பொழுது – பொழுதே; நீ மாலையோ அல்லை – நீ முன்னாள்களின் வந்த மாலையோ எனின் அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் …

123 பொழுதுகண்டிரங்கல் Read More »

122 கனவுநிலையுரைத்தல்

கனவுநிலையுரைத்தல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: கனவுநிலையுரைத்தல். குறள் 1211: காதலர் தூதொடு வந்த கனவினுக்குயாதுசெய் வேன்கொல் விருந்து. மணக்குடவர் உரை:நங்காதலர் விட்ட தூதரோடே வந்த கனவினுக்கு யான் யாது விருந்து செய்வேன்? இது தலைமகளாற்றுதற் பொருட்டுக் காதலர் வாராநின்றாரென்று தூதர் வரக் கனாக் கண்டேனென்று தோழி சொல்லியது. பரிமேலழகர் உரை:(தலைமகன் தூது வரக் கண்டாள் சொல்லியது). காதலர் தூதொடு வந்த கனவினுக்கு -யான் வருந்துகின்றது அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதினைக் கொண்டு …

122 கனவுநிலையுரைத்தல் Read More »

121 நினைந்தவர்புலம்பல்

நினைந்தவர்புலம்பல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: நினைந்தவர்புலம்பல். குறள் 1201: உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்கள்ளினும் காமம் இனிது. மணக்குடவர் உரை:தம்மாற் காதலிக்கப்பட்டவரை நினைத்தாலும் அது நீங்காத பெருங்களிப்பைத் தரும்: ஆதலால் கள்ளினும் காமம் இனிது. பரிமேலழகர் உரை:(தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது.) உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்- முன் கூடிய ஞான்றை இன்பத்தினைப் பிரிந்துழி நினைத்தாலும் அதுபொழுது பெற்றாற்போல நீங்காத மிக்க மகிழ்ச்சியைத் தருதலால்; கள்ளினும் காமம் இனிது – உண்டுழியல்லது மகிழ்ச்சி …

121 நினைந்தவர்புலம்பல் Read More »

120 தனிப்படர்மிகுதி

தனிப்படர்மிகுதி பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: தனிப்படர்மிகுதி. குறள் 1191: தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரேகாமத்துக் காழில் கனி. மணக்குடவர் உரை:தாம் காதலித்தாரால் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர் காம நுகர்ச்சியின்கண் பரலில்லாததோர் பழத்தைப் பெற்றவராவர். இது தடையின்றி நுகரலாமென்றது. பரிமேலழகர் உரை:(‘காதலரும் நின்னினும் ஆற்றாராய்க் கடிதின் வருவர், நீ அவரோடு பேரின்பம் நுகர்தி’, என்ற தோழிக்குச் சொல்லியது.) தாம் வீழ்வார் தம் வீழப் பெற்றவர் – தம்மாற் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர்; பெற்றாரே …

120 தனிப்படர்மிகுதி Read More »

119 பசப்புறுபருவரல்

பசப்புறுபருவரல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: பசப்புறுபருவரல். குறள் 1181: நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்பண்பியார்க்கு உரைக்கோ பிற. மணக்குடவர் உரை:காதலிக்கப்பட்டவர்க்கு அவர் அருளாமையை இசைந்த யான் பசந்தவெனது நிறத்தை மற்று யாவர்க்குச் சொல்லுவேன். இது தலைமகள் இப்பசப்பை யாவரால் நீக்குவேனென்று வெருட்சி கொண்டு கூறியது. பரிமேலழகர் உரை:(முன் பிரிவுடம்பட்ட தலைமகள் அஃது ஆற்றாது பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது.) நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் – என்னை நயந்தவர்க்கு அது பொழுது பிரிவை உடம்பட்ட நான்; பசந்த …

119 பசப்புறுபருவரல் Read More »

118 கண்விதுப்பழிதல்

கண்விதுப்பழிதல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: கண்விதுப்பழிதல். குறள் 1171: கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்தாம்காட்ட யாம்கண் டது. மணக்குடவர் உரை:அமையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய்தாரைத் தாங்காட்டுதலானே யன்றே? பின்னர் அக்கண்கள்தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதி? இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது. பரிமேலழகர் உரை:(நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன, நீ ஆற்றல் வேண்டும், என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தண்டா நோய் யாம் …

118 கண்விதுப்பழிதல் Read More »

117 படர்மெலிந்திரங்கல்

படர்மெலிந்திரங்கல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: படர்மெலிந்திரங்கல். குறள் 1161: மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்குஊற்றுநீர் போல மிகும். மணக்குடவர் உரை:இந்நோயை யான் மறைப்பேன்; மறைப்பவும் இஃது இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல மிகாநின்றது. தலைமகள் ஆற்றாமை கண்டு இதனை இவ்வாறு புலப்பட விடுத்தல் தகாதென்று தோழிக்குத் தலைமகள் கூறியது. பரிமேலழகர் உரை:(காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது என்ற தோழிக்குச் சொல்லிது.) நோயை யான் மறைப்பேன் – இந்நோயைப் பிறரறிதல் நாணி யான் மறையா நின்றேன்; இஃதோ …

117 படர்மெலிந்திரங்கல் Read More »

116 பிரிவாற்றாமை

பிரிவாற்றாமை பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: பிரிவாற்றாமை. குறள் 1151: செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்வல்வரவு வாழ்வார்க் குரை. மணக்குடவர் உரை:காதலர் போகாமையுண்டாயின் எனக்குக் கூறு பிரிந்தார் நீட்டியாது விரைந்து வருவாரென்று சொல்லுகின்ற வரவினைப் பின்புளராய் வாழ்வார்க்குக் கூறு. இது கடிதுவருவாரென்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றாமையாற் கூறியது. பரிமேலழகர் உரை:(பிரிந்து கடிதின் வருவல் என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.) செல்லாமை உண்டேல் எனக்கு உரை – நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச் சொல்; …

116 பிரிவாற்றாமை Read More »

115 அலரறிவுறுத்தல்

அலரறிவுறுத்தல் பால்: காமத்துப்பால். இயல்: களவியல். அதிகாரம்: அலரறிவுறுத்தல். குறள் 1141: அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்பலரறியார் பாக்கியத் தால். மணக்குடவர் உரை:நமது புணர்ச்சியால் வந்த அலர் எழுதலினானே அவளது ஆருயிர் நிற்கும். அவ்வாறு உயிர்நிற்றலை எங்கள் புண்ணியத்தாலே பலரறியா ராயினார்: அறிவாராயின் எமக்கு ஏதிலராய் அலர்தூற்றுவார், இவள் இறந்துபட வேண்டுமென்று தூற்றார். பரிமேலழகர் உரை:(அல்ல குறிப்பட்ட பிற்றைஞான்று வந்த தலைமகனைத் தோழி அலர் கூறி வரைவு கடாயவழி அவன் சொல்லியது.) அலர் எழ ஆர் உயிர் …

115 அலரறிவுறுத்தல் Read More »

114 நாணுத்துறவுரைத்தல்

நாணுத்துறவுரைத்தல் பால்: காமத்துப்பால். குறள்: களவியல். அதிகாரம்: நாணுத்துறவுரைத்தல். குறள் 1131: காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்மடலல்லது இல்லை வலி. மணக்குடவர் உரை:காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு ஏமமாவது மடல் ஏறுவதல்லது மற்றும் வலி யில்லை. இது தலைமகனை தோழி சேட்படுத்தியவிடத்து மடலேறுவேனென்று தலைமகன் கூறியது. பரிமேலழகர் உரை:(சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.) காமம் உழந்து வருந்தினார்க்கு – அரியராய மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு; ஏமம் மடல் அல்லது வலி …

114 நாணுத்துறவுரைத்தல் Read More »

113 காதற்சிறப்புரைத்தல்

காதற்சிறப்புரைத்தல் பால்: காமத்துப்பால். குறள்: களவியல். அதிகாரம்: காதற்சிறப்புரைத்தல். குறள் 1121: பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயிறு ஊறிய நீர். மணக்குடவர் உரை:பாலொடுகூடத் தேனைக்கலந்தாற் போலும்: மிகவும் இனிமைதரும் புகழினையுடையாளது வெள்ளிய எயிற்றினின்று ஊறிய நீர். இது புணர்ச்சியுண்மையும் காதல் மிகுதியும் தோன்றத் தலைமகன் கூறியது. பரிமேலழகர் உரை:(இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகன் தன் நயப்பு உணர்த்தியது.) பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் – இம்மெல்லிய மொழியினை யுடையாளது வாலிய எயிறூறிய நீர்; பாலொடு தேன் கலந்தற்று …

113 காதற்சிறப்புரைத்தல் Read More »

112 நலம்புனைந்துரைத்தல்

நலம்புனைந்துரைத்தல் பால்: காமத்துப்பால். குறள்: களவியல். அதிகாரம்: நலம்புனைந்துரைத்தல். குறள் 1111: நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்மென்னீரள் யாம்வீழ் பவள். மணக்குடவர் உரை:அனிச்சப்பூவே! நீ நல்ல நீர்மையை யுடையாய்; எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மிக நீர்மையாள் காண். இஃது உடம்பினது மென்மை கூறிற்று. பரிமேலழகர் உரை:(இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது.) அனிச்சமே வாழி நன்னீரை – அனிச்சப்பூவே, வாழ்வாயாக, மென்மையால் நீ எல்லாப் பூவினும் நல்ல இயற்கையையுடையை; யாம் வீழ்பவள் நின்னினும் மென்னீரள் – அங்ஙனமாயினும் எம்மால் விரும்பப்பட்டவள் …

112 நலம்புனைந்துரைத்தல் Read More »

111 புணர்ச்சிமகிழ்தல்

புணர்ச்சிமகிழ்தல் பால்: காமத்துப்பால். குறள்: களவியல். அதிகாரம்: புணர்ச்சிமகிழ்தல். குறள் 1101: கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்ஒண்தொடி கண்ணே உள. மணக்குடவர் உரை:கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலனும் இவ்வொள்ளிய தொடியை யுடையாள் மாட்டே யுள. இது பொறிகள் ஐந்தினுக்கும் ஒருகாலத்தே யின்பம் பயந்ததென்று புணர்ச்சியை வியந்து கூறியது. பரிமேலழகர் உரை:(இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது.) கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் -கண்ணால் கண்டும் செவியால் கேட்டும் நாவால் …

111 புணர்ச்சிமகிழ்தல் Read More »

110 குறிப்பறிதல்

குறிப்பறிதல் பால்: காமத்துப்பால். குறள்: களவியல். அதிகாரம்: குறிப்பறிதல். குறள் 1091: இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்குநோய்நோக்கொன் றந்நோய் மருந்து. மணக்குடவர் உரை:இவள் உண் கண்ணிலுள்ள நோக்கு இரண்டு வகைத்து; அவ்விரு வகையினும் ஒரு நோக்கு நோய் செய்யும்; ஒரு நோக்கு அதற்கு மருந்தாம். நோய்நோக்கென்பது முதல்நோக்கின நோக்கம்: மருந்து நோக்கென்பது இதனால் வருத்தமுற்ற தலைமகனைத் தலைமகள் உள்ளங்கலங்கி நாணோடுகூடி நோக்கின நோக்கம். இது நாணமுடைய பெண்டிரது உள்ளக்கருத்து வெளிப்படுமாறு கூறியது. பரிமேலழகர் உரை:(தலைமகன் தலைமகள் உளப்பாட்டுக் …

110 குறிப்பறிதல் Read More »

109 தகையணங்குறுத்தல்

தகையணங்குறுத்தல் பால்: காமத்துப்பால். இயல்: களவியல். அதிகாரம்: தகையணங்குறுத்தல். குறள் 1081: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலும்என் நெஞ்சு. மணக்குடவர் உரை:இக்கனங்குழையை யுடையாள் தெய்வங்கொல்லோ? நல்லதோர் மயில் கொல்லோ? அன்றி, மக்களுள்ளாள் கொல்லோ? என்மனம் மயங்கா நின்றவற்றுள் யாதோ? பரிமேலழகர் உரை:(தலைமகள் உருவு முதலியன முன் கண்டறிவன அன்றிச் சிறந்தமையின் அவளைத் தலைமகன் ஐயுற்றது.) கனங்குழை – இக்கனவிய குழையை உடையாள்; அணங்கு கொல் – இப்பொழிற்கண் உறைவாளோர் தெய்வமகளோ? ஆய்மயில் கொல் – அன்றி …

109 தகையணங்குறுத்தல் Read More »

108 கயமை

கயமை பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: கயமை. குறள் 1071: மக்களே போல்வர் கயவர் அவரன்னஒப்பாரி யாங்கண்ட தில். மணக்குடவர் உரை:மக்களை யொப்பவர் கயவர்; அம்மக்களை யொக்குமாறு போல ஒப்பது ஒன்றனோடு மற்றொன்று உவமை கூறப்படுமவற்றில் யாங்கண்டறிவது இல்லை. உறுப்பொத்துக் குணமொவ்வாமையால் கயவர் மக்களல்லராயினார். பரிமேலழகர் உரை:மக்களே போல்வர் கயவர் – வடிவான் முழுதும் மக்களை ஒப்பர் கயவர்; அவர் அன்ன ஒப்பாரி யாம் கண்டது இல் – அவர் மக்களை யொத்தாற்போன்ற ஒப்பு வேறு …

108 கயமை Read More »

107 இரவச்சம்

இரவச்சம் பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: இரவச்சம். குறள் 1061: கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்இரவாமை கோடி உறும். மணக்குடவர் உரை: பரிமேலழகர் உரை:கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை – தமக்கு உள்ளது கரவாது இவர் வரப்பெற்றேம் என்று உள்மகிழ்ந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தார் மாட்டும், இரவாதே ஒருவன் வறுமை கூர்தல்; கோடி உறும் – இரந்து செல்வம் எய்தலின் கோடி மடங்கு நன்று. (நலகுரவு மறைக்கப்படாத நட்டார் மாட்டும் ஆகாது …

107 இரவச்சம் Read More »

106 இரவு

இரவு பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: இரவு. குறள் 1051: இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்அவர்பழி தம்பழி அன்று. மணக்குடவர் உரை:தமக்கு இல்லாதவிடத்து இரக்கத்தக்காரைக் காணின் இரந்து கொள்க: அவர் இல்லை யென்பாராயின் அஃது அவர்க்குப் பழியாம்; தமக்குப் பழியாகாது. இது கூறுகின்ற இரத்தல் எல்லார்மாட்டுஞ் செயலாகா தென்பதூஉம், தக்கார் மாட்டிரத்தலென்பதூஉம் கூறிற்று. பரிமேலழகர் உரை:இரத்தக்கார்க் காணின் இரக்க – நல்கூர்ந்தார் இரத்தற்கு ஏற்புடையாரைக் காணின், அவர்மாட்டு இரக்க; கரப்பின் அவர் பழி தம் பழி …

106 இரவு Read More »

105 நல்குரவு

நல்குரவு பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: நல்குரவு. குறள் 1041: இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்இன்மையே இன்னா தது. மணக்குடவர் உரை:நல்குரவுபோல இன்னாதது யாதெனின் நல்குரவுபோல இன்னாதது தானே. (தானே – நல்குரவே) இது தன்னை யொத்த இன்னாதது பிறிதில்லை யென்றது. பரிமேலழகர் உரை:இன்மையின் இன்னாதது யாது எனின் – ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே – வறுமை போல இன்னாதது வறுமையே, பிறிதில்லை. (இன்னாதது – …

105 நல்குரவு Read More »

104 உழவு

உழவு பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: உழவு. குறள் 1031: சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை. மணக்குடவர் உரை:உழவு ஒழிந்த எல்லா நெறிகளிலும் சுழன்று திரிந்தாலும் ஏருடையவர் வழியே வருவர் உலகத்தார்: ஆதலான் வருந்தியும் உழுதலே தலைமையுடையது. இஃது உழவு வேண்டுமென்றது. பரிமேலழகர் உரை:சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் – உழுதலான் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிறதொழில்களைச் செய்து திரிந்தும், முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை …

104 உழவு Read More »

Scroll to Top