You cannot copy content of this page

ஆலயதிற்குள் செய்யக் கூடாதது !

ஆலயதிற்குள் செய்யக் கூடாதது !

 1. பிறர் பொருளைக் கொண்டு சுவாமிக்கு நைவேத்யம் செய்வது.
 2. வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம் செல்வது.
 3. ஒருவரைக் கெடுப்பதற்காக சுவாமியை வேண்டிக் கொள்வது.
 4. தம்பதிகளின் உடலுறுவுக்குப்பின் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் ப்ரவேசிப்பது.
 5. ஸ்த்ரீகள் மாதவிலக்கு ஆகக்கூடிய நாட்களைக் கணக்கிட்டுக் கருத்தில் கொள்ளாது, அந்நாட்களில் ஆலயம் செல்லுதல்
 6. மரணத்தினால் தீட்டு உள்ளவர்கள் ஆலயம் செல்வது.
 7. பிணத்தோடு உடன் சென்றவர், மரணத்தினால் தீட்டு உள்ளவர்களைத் தீண்டியவர்கள் ஆகியோர் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது.
 8. மலஜலங்களை அடக்கிக் கொண்டு ஆலயம் செல்லுதல்.
 9. மலஜலம் கழித்தபின் சுத்தி செய்துகொள்ளாமல் ஆலயம் புகுதல்.
 10. கருப்பு வஸ்திரம் தரித்துக் கோயிலுக்குச் செல்லுதல், பூஜை செய்தல்.
 11. குரோதம், கோபத்துடன் ஆலயம் செல்லுதல், பூஜை செய்தல்.
 12. துவஜஸ்தம்பமும் பலிபீடமும் கடந்து உள்ளே சென்றபிறகு, எங்கேயாவது கீழே விழுந்து நமஸ்காரம் செய்தல்.
 13. பகவானுக்கும் நந்திக்கும் இடையே குறுக்காக நடத்தல் அல்லது பிரதக்ஷிணம் செய்தல்.
 14. ஈர வஸ்திரங்களையோ, விழுப்பு வஸ்திரங்களையோ அணிந்து ஆலயம் செல்லுதல்.
 15. சாப்பிட்டுவிட்டுக் கோயிலுக்கு வழிபாட்டிற்காகச் செல்லுதல்.
 16. இடுகாடு அல்லது சுடுகாடு சென்று வந்த நாட்களில் ஆலயம் செல்லுதல்.
 17. புலால், மது போன்றவற்றை உண்ட நாட்களில் திருக்கோயில் செல்லுதல்.
 18. கால் அலம்பாமல் ஆலயத்திற்குள் அடியெடுத்து வைத்தல்.
 19. மூர்த்திகளைத் தொடுதல்.
  மூர்த்திகளின் அருகில் கற்பூரம் ஏற்றுதல், அல்லது தீபம் ஏற்றுதல்.
 20. விபூதி, குங்குமம், புஷ்பம் முதலியவற்றைத் தரையில் சிந்துதல்.
 21. கோயில் உள்ளே தீபத்தினை விரலால் தூண்டுதல், கைகளைச் சுவரிலும் மற்றுள்ள இடங்களிலும் துடைத்தல்.
 22. எச்சில் துப்புதல்
 23. நைவேத்யம் ஆகும்போது மூர்த்தியைப் பார்த்தல்.
 24. சிவ நிர்மால்யங்களை மிதித்தல் அல்லது தாண்டுதல்
 25. விமானம், த்வஜஸ்தம்பம், பலிபீடம், விக்ரஹம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல்.
 26. உடலின் மேல் பாகத்தை புருஷர்கள் மூடிச் செல்லுதல்.
 27. நெற்றிக்கு விபூதி இடாமை.
 28. தலைமயிரை அவிழ்த்துத் தொங்கவிடுதல்.
 29. தலைமயிரை ஆற்றுதல்
  மூக்கைச் சிந்துதல்.
 30. தும்முதல்
 31. கோட்டுவாய் (கொட்டாவி) விடுதல்.
 32. வாயில் எதையேனும் அடக்கியிருத்தல்.
 33. வம்பு பேசுதல், கூச்சல், இரைச்சல் இடுதல்.
 34. வேகமாக வலம் வருதல்
 35. தீபம் அணையும்படி மூச்சுக் காற்று விடுதல்
 36. கை-கால்களை நீட்டிக் கொண்டு உட்காருதல், படுத்தல், உறங்குதல்
  சத்தமாகச் சிரித்தல், பிறரை அடித்தல், அழுதல், சண்டையிடுதல்,விளையாடுதல்.
 37. விக்ரஹங்களுக்குப் பின்புறத்தைக் காட்டி
  நிற்றல்
 38. தாம்பூலம் தரித்தல்
 39. வாஹனத்தின் மீதமர்ந்தோ, பாதரøக்ஷயுடனோ ஆலய வளாகத்திற்குள் செல்லுதல்.
 40. உடல் சுத்தம் இல்லாதபோது ஆலயம் செல்வது.
 41. ஒரு கையை மட்டும் தூக்கிக் கும்பிடுதல்
 42. அப்பிரதக்ஷிணமாகச் சுற்றுதல்
 43. மூர்த்திகளுக்கு எதிரில் காலை நீட்டி உண்ணல்.
 44. தின்பண்டங்களைச் சுவைத்துக்கொண்டிருத்தல்.
 45. பொய் பேசுதல், வாதம் செய்தல்,சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல்.
 46. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு, மற்றவர்க்குச் சாபம் அளித்தல்.
 47. பிறரிடம் கடும் சொற்களைக் கூறுதல்
 48. நர ஸ்துதி செய்தல்
 49. பிறரை இழிவு படுத்துதல்
 50. அபானவாயு விடுதல்
 51. விரல் நகம் கடித்தல்.
 52. வாய்க்குள், மூக்கினிற்குள் கை விடல்.
 53. எச்சிலைத் தொடல்.
 54. குப்பைகளைப் போடுதல்.
 55. அமங்கலச் சொற்களைக் கூறுதல்.
 56. கடவுளுக்கு நிவேதனம் செய்யப்படாததைப் புசித்தல்.
 57. வேறு வகைகளில் பயன்படுத்திய பிறகு, எஞ்சியதைக் கடவுளுக்கு அளித்தல்.
 58. ஸந்நிதிக்குப் பின்புறத்தில் அமர்ந்திருத்தல்.
 59. ஆலயத்துள், பிறரை வணங்குதல்,
 60. எந்த ஒரு ஆலயத்தையும் சார்ந்த எந்த ஒரு தேவதையையும் இழிவு படுத்திப்பேசுதல்.

மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது.

 • அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி போன்ற நாட்களில் வில்வ இலை பறிக்கக்கூடாது. இதற்கு முந்தைய நாள் மாலையிலேயே இதைப் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 • மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.
 • கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.
 • விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக்கூடாது.
 • தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது.
 • கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது. கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக்கூடாது.

வணங்கும் விதி

பிரம்மா , விஷ்னு , சிவன் இம்மூவரை வணங்கும் போது , சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும்.
மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகூப்பி வணங்கினால் போதும்.
குருவை வணங்கும் போது , நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும்.
அரசரையும் , தகப்பனாரையும் வணங்கும் போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்கவேண்டும்.
… பிராமணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும்.
தன்னுடைய தாயை வணங்கும் போது வயிற்றில் கைவைத்து வணங்க வேண்டும்.
மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.பூமியில் நெடுஞசாண் கிடையாக வணங்க வேண்டும். ஆனால் பெண்கள் , மாதா , பிதா , குரு , தெய்வம் மற்றும் கணவனை வணங்கும் போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்களுடைய ஸ்தனங்கள் பூமியில் படக்கூடாது.

Scroll to Top