You cannot copy content of this page

வீட்டில் செய்யக் கூடாதவையும் செய்யக் கூடியதும்

வீட்டில் செய்யக் கூடாதவையும் செய்யக் கூடியதும்

150 குறிப்புகள்:

  1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம், விக்கிரகம் ஆகியவற்றை வீட்டில் வைக்க வேண்டும்.
  2. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
  3. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.
  4. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால்எடுத்துச் செல்லக் கூடாது.
  5. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.
  6. எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.
  7. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது.
    மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.
  8. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது
  9. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.
  10. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.
  11. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.
  12. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச்செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.
  13. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.
  14. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது
  15. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.
  16. பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.
  17. செவ்வாய்க் கிழமை, புதன் கிழமை பகல்,வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.
  18. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம.
  19. வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.
  20. மனநோயாளிகளைத் துன்புறுதக் கூடாது. அவர்களின் சாபம் தீங்கு விளைவிக்கும்.
  21. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.
  22. கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.
  23. திருநங்கைகளைத் துன்புறுதக் கூடாது. அவர்களின் சாபம் தீங்கு விளைவிக்கும்.
  24. காவல் துறையினரையும், பத்திரிகையாளர்களையும் பகைத்துக் கொள்ளக் கூடாது.
  25. சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் துன்புறுத்தக் கூடாது.
  26. அர்ச்சகர் மற்றும் சிவாச்சாரியார்களுக்கு கோபம் உண்டாக்கும் செயல்களைச் செய்யக் கூடாது.
  27. மாற்று மதத்தினரைக் கேலி பேசி அவர்களின் தெய்வங்களைப் பழிக்கக் கூடாது.
  28. வியாழக்கிழமை துணி துவைக்கக் கூடாது. வண்ணான் கூலி கொடுக்கக் கூடாது.
  29. வியாழக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. உடலில் சோப்புப் போடக்கூடாது.
  30. வியாழக்கிழமை நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளக் கூடாது. வியாழக்கிழமை பயணம் வெற்றி தராது.
  31. ராகு காலத்தில் தெரிந்தே சிறிய பொருட்களைத் தொலைப்பதும், தெரிந்தே பிறரிடம் சிறிய மதிப்பில் ஏமாறுவதும் பெரிய அளவில் நன்மை தரும்.
  32. தாய், தந்தை, குரு, கன்னிப் பெண்கள் ஆகியோரது ஆசீர்வாதம் பெரிய அளவில் நன்மை தரும்.
  33. நேரம் கிடைக்கும் போதெல்லாம் குளத்து மீன்களுக்குப் பொரி அளிப்பது, காகங்களுக்கு உணவளிப்பது, பறவைகளுக்குத் தண்ணீர் அளிப்பது, சனிக்கிழமைகளில் கருப்பு நாய்களுக்கு உணவளிப்பது மிகச்சிறந்த பலன்களைத் தரும்.
  34. உருத்திராக்கம் அணிந்தவர்களைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தால் அவர்களை நமது இரு கைகளையும் கூப்பி வணங்க வேண்டும். அவ்வாறு வணங்குவது நமக்கு சிவ பலம் கிடைக்கச் செய்யும்.
  35. உருத்திராக்கம் அணிந்திருப்பவர்கள் தம்மை வணங்ககியவருக்கு பதில் வணக்கம் செய்ய வேண்டும்.
  36. தீபாவளியன்றோ, பவுர்ணமி யன்றோ வெள்ளிக் கிழமையன்றோ சிறுமியருக்குப் பட்டுப்பாவாடை பரிசு அளிப்பது சிறந்த பலன்களை நல்கும்.
  37. வீட்டில் துளசி மாடம் அமைத்து வழிபடுவது வீடு பேறு நல்கும்.

அபிஷேகப் பொருட்களின் வரிசைக் கிரமம் : எண்ணெய், பஞ்சகவ்யம், மாவு, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன், கரும்பின் சாறு, (பழங்கள்), பழ ரசங்கள், இளநீர், அன்னாபிஷேகம், சந்தனம், ஸ்நபனம்

  1. கப்பல் மூழ்குவது: கப்பல் மூழ்குவது போன்ற ஓவியத்தை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருந்தால், அது எதிலும் வெற்றியைக் கிடைக்கச் செய்யாது. ஆகவே இந்த ஓவியத்தை உடனே அகற்றுங்கள்.
  2. நீர் வீழ்ச்சி: நீர் வீழ்ச்சி நீர் வீழ்ச்சி போன்ற ஓவியங்கள் கண்களைக் கவரும் படி மிகவும் அழகாக இருக்கத் தான் செய்யும். ஆனால் இம்மாதிரியான ஓவியங்களை வீட்டில் வைத்திருந்தால், அது நல்லதல்ல.
  3. உக்கிரமான விலங்குகள்: புலியின் ஓவியம் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கலாம். ஆனால் இதன் ஓவியத்தை வீட்டில் வைத்தால், வீட்டில் சண்டைகளும், வாக்குவாதங்களும் தான் அதிகரிக்கும்.
  4. தாஜ்மஹால்: தாஜ்மஹால் காதலின் நினைவுச் சின்னமாக இருக்கலாம். இருப்பினும் இது ஒரு கல்லறை என்பதால், இதன் ஓவியத்தை வீட்டில் வைத்தால், எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்
  5. மகாபாரதம்: மகாபாரத கதாபாத்திரங்கள் கொண்ட ஓவியத்தை வீட்டில் வைத்திருந்தால், அதனால் மன அழுத்தம் அதிகரிப்பதோடு, வீட்டில் சண்டைகளும் அதிகரிக்கும்.
  6. குழந்தை அழுவது போன்ற ஓவியம்: குழந்தைகள் அழுவது போன்ற ஓவியங்கள் பார்ப்பதற்கு மார்டன் ஆர்ட் போன்று காணப்படலாம். ஆனால் இந்த ஓவியங்களை வீட்டில் வைத்திருந்தால், அது அது நல்லதல்ல.
  7. போர் அல்லது மாயாஜாலம்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, போர், பில்லி சூனியம் அல்லது பேய் போன்ற ஓவியங்கள், வீட்டில் உள்ளோரின் மனதை பாதிப்பதோடு, வீட்டில் வாக்குவாதத்தை அதிகரிக்கும.
  8. எதிரிகளை அழிப்பது போன்ற ஆக்ரோஷமான படங்களை வீட்டில் வைக்கக்கூடாது.
  9. ஒரே மாதிரியான கடவுளின் படங்களை நிறைய வைக்கக் கூடாது. அதுபோல் இருந்தால் அவற்றை அருகருகிலோ அல்லது எதிரிலோ வைக்கக்கூடாது.
  10. உடைந்த தெய்வ சிலைகள், கிழிந்த படங்களை வைத்திருக்கக்கூடாது.
  11. நகத்தை பற்களால் கடிக்க கூடாது.
  12. மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது.
  13. தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது.
  14. நெருப்பை வாயினால் ஊதக்கூடாது.
  15. செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படிதிதி தோஷம் இல்லை.
  16. துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷத்தை உண்டாக்கும்.
  17. ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது. கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம். ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது.
  18. தண்ணீரிலும்,எண்ணெய்யிலும் நம் நிழலை நாம் பார்க்கக்கூடாது.
  19. இருட்டிலோ, நிழல் விழும் இடங்களிலோ அமா்ந்து உண்ணக்கூடாது.வெளிச்சத்தில் அமா்ந்தே உண்ணவேண்டும்.
  20. உண்ணும்போது முதலில் இனிப்பையும், முடிவில் கசப்பையும் உண்ணவேண்டும்.
  21. ஈர ஆடையுடனும், தலைமுடியை அவிழ்த்துவிட்டும் உண்ணக்கூடாது.
  22. நெல்லிக்காய், இஞ்சி, தயிா், வறுத்தமா. இவற்றை இரவில் உண்ணக் கூடாது.
  23. உறவினர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு உடனே எண்ணெய் தேய்த்து நீராடக் கூடாது.
  24. கன்றுக்குட்டி,மாடு ஆகியவை கட்டியிருக்கும்கயிற்றை தாண்டக்கூடாது.
  25. பெண்கள் வீட்டில் கண்ணீா் விடமால் பார்த்துக் கொள்ள வேண்டும். அவா்கள் தலையை விாித்துப்போட்டிருப்பதும், இரு கைகளாலும் தலையை சொறிவதும் கூடாது.
  26. தன்தாய், தந்தை பிணத்தை தவிர பிறபிணங்களை பிரம்மச்சாாி சுமந்து செல்லக்கூடாது.
  27. தன்மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் கணவன் அந்நியா் பிணத்தை சுமந்து செல்லக்கூடாது. ஆனால் தன்தாய், தந்தை, பிள்ளையில்லாத சகோதரன், பிள்ளையில்லாத மாமன் ஆகியோாின் பிணத்தை சுமக்கலாம்.
  28. தீட்டு உள்ளவா்கள் கட்டிலில் படுக்க கூடாது. தரையில் தான் படுக்க வேண்டும்.
  29. மாலைவெயில், ஓமப்புகை, தூயநீா்பருகுதல், இரவில் பாற்சோறு சாப்பிடுதல் என்பன ஆயுளைவிருத்தி செய்யும்.
  30. ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
  31. செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, கடைன செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில்
    திரும்ப கொடுப்பது சிரேஷ்டம்.
  32. வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
  33. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.
  34. எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.
  35. கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.
  36. துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.
  37. உப்பை தரையில் சிந்தக்கூடாது.
  38. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
  39. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
  40. இராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
  41. வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
  42. சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
  43. தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
  44. பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
  45. சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
  46. காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்.
  47. தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
  48. விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.
  49. விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும்.
  50. வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.
  51. மாலை ஆறுமணிக்குள் திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.
    ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.
  52. எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் நன்மை பெருகும். எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.
  53. எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
  54. வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
  55. எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும
  56. எந்தக் குறையையும் எண்ணி பெண்கள், முதியோர் கண்ணீர் விடக்கூடாது.
  57. சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள், வருத்தப் படாத முதியோர் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
  58. தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், பெரியோர்களின் ஆசீர்வாதமும் கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
  59. குழந்தைகளிடமும், பெண்களிடமும்,வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது.
  60. அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
  61. பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
  62. அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது
  63. வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
  64. இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
  65. வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.
  66. பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.
  67. மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.
  68. விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.
  69. விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.
  70. கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.
  71. பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.
  72. சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது.
  73. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.
  74. நகத்தை கிள்ளி வீட்டில் போடக்கூடாது.
  75. பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.
  76. சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.
  77. ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.
  78. பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.
  79. தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.
  80. பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது
  81. செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது.
  82. செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
  83. நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.
  84. ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் “இல்லை” போன்ற அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.
  85. வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிக்குள் நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.
  86. ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.
  87. எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்குஅதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.
  88. தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.
  89. அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். முதலில் சிரமமாக இருந்தாலும் இப்படிப் பழகிவிட்டால் பிறகு பழக்கமாகிவிடும். இப்படி செய்வது ஆரோக்கியம், நீண்ட ஆயுள் முதலிய பலனை கொடுக்கும். அந்த நேரத்தில் தேவர்களும் ,முன்னோர்களும் நம்வீட்டை நோக்கி வருகிறார்கள் . அப்போது விழித்திருந்து மனதால் அவர்களை வழிப்பட்டால் அவர்களைக் கௌரவித்து வரவேற்பதாகும் .அவர்கள் சந்தோசப்பட்டு நமக்கு நன்மை செய்வார்கள்.
  90. அதிகாலை விழித்தவுடவுன் பசுவையாவது ,தன் முகத்தையாவது ,தன் வலது உள்ளங்கையையாவதுமுதலில் பார்த்து விட வேண்டும்.
  91. செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் 5 முக கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிப்பட வேண்டும்.
  92. ஒவ்வொரு பௌர்ணமி அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து , பால், பாயசம், கல்கண்டு ,கனி வகைகளை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உன்ன வேண்டும்.
  93. வைரம், வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே
    கிடைக்கும்.
  94. ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட வைரம், வெள்ளி முதலியவற்றை தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்க கூடாது. தன காலத்திருக்குப் பின்னரே அவர்களுக்குச் சேர வேண்டும்,முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக்கொடுக்கலாம்.
  95. நெருப்பும் தண்ணீரும் சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் உண்டு.
  96. அன்றாடம் ஒரு வேளைக்கு ஒரு கைப்பிடி அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் அன்னதானம் செய்ய என்று போட்டால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். லக்ஷ்மி வீட்டில் வாசம் செய்வாள்.
  97. காலையில் எழுந்தவுடன் யார் முகத்தையும் பார்க்காமல் தண்ணீர் இரண்டு மடக்கு குடிக்க,லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும், கோபம் வராது.
  98. முதலில் பெண்குழந்தை பிறந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பின் ஆண்குழந்தை பிறந்தால் நல்லது.தம்பி மேல் பாசம் அதிகம் இருக்கும்.
  99. நம் பெரியோர்கள் எப்போதும் வீட்டில் சிரிப்பும் ஆனந்தமும் பெருக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள். குழந்தைகள் விளையாடும் சந்தோஷ ஒலி, பறவைகள் எழுப்பும் இனிய கீதங்கள், வீணை, மிருதங்கம் போன்ற வாத்தியங்களின் இனிய இசை நம் இல்லங்களில் நிறைந்திருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
  100. மாற்றுத் திறனாளிகளை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. மாற்றுத் திறனாளிகள் கண்ணீர் சிந்தாமல் அவர்களை அன்புடன் பேணுதல் வேண்டும்.
  1. கிழக்குத் திசையில் தீபம் ஏற்றி வைத்தால் வீட்டில் பீடை அகலும். துன்பங்கள் அகலும்.
  2. மேற்கு திசையில் தீபம் ஏற்றி வைத்தால் சனி தோஷம், கிரகதோஷம், சல்லிய தோஷம், பங்காளிப்பகை, கடன் தொல்லை ஆகியவை தீரும்.
  3. வடக்குத் திசையில் தீபம் ஏற்றி வைத்தால் திருமணத் தடை, கல்வித் தடை நீங்கும். செல்வம் உண்டாகும்.
  4. தெற்குத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது. இது அசுப காரியங்களுக்கு மட்டுமே. தெற்குப் பார்த்த வீட்டில் குடியிருப்பவர்கள் காலை, மாலை வீட்டின் முன் விளக்கேற்றி வைக்கும்போது அது கிழக்குத் திசை பார்த்து இருக்க ஏற்றி வைக்க வேண்டும்.
  5. எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை பார்க்க ஏற்றி வைக்கக் கூடாது.
  6. ஒரு முகம் ஏற்றி வைத்தால் மத்திம பலன் கிடைக்கும்.
  7. இரண்டு முகங்கள் ஏற்றி வைத்தால் குடும்ப ஒற்றுமை உண்டாகும். மூன்று முகங்கள் ஏற்றி வைத்தால் புத்திரனால் சுகம் பெறலாம்.
  8. நான்கு முகங்கள் ஏற்றி வைத்தால் பசு போன்ற செல்வம் தரும்.
  9. ஐந்து முகங்கள் ஏற்றி வைத்தால் செல்வத்தைப் பெருக்கும்.
  10. ஒரு முகம் ஏற்றினால் கிழக்குப் பார்த்து விளக்கினை வைக்கவும்.
  11. மௌனமாக இருந்து பழகினால், மனசாட்சியின் மெல்லிய குரலை நம்மால் கேட்க முடியும் என்பர். மோனம் (மௌனம்) என்பது ஞானவரம்பு என்று அவ்வையார் குறிப்பிடுகிறார்.
    வியாழக்கிழமைகளில் மௌனவிரதம் கடைப்பிடிப்பவர்கள் ஞானநிலை எய்துவதுடன், தெய்வாம்ச சக்தியையும் பெறுகிறார்கள்.
  12. ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்:

தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.

பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும்.

தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும்.

பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்.

ஓராண்டுக்கு மேலாக
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும்.

Scroll to Top