You cannot copy content of this page

Month: February 2020

செண்பகப்பூ!

செண்பகப்பூ! மைக்கேலிய செம்பகா… இது செண்பக மரத்தின் தாவரவியல் பெயர். செண்பகம் என்ற பெயரில் ஒரு பறவை இருப்பது கூடுதல் தகவல். மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளில் தானாகவே வளரும் செண்பக மரம், மேல்நோக்கிக் குவிந்த இலைகளையும் நறுமணமுள்ள மஞ்சள் மற்றும் வெள்ளை நிறமுள்ள மலர்களையும் உடையது. இரண்டு செண்பக மரங்களை வீட்டில் வளர்த்தால் சொர்க்கத்தைக் காணலாம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும், `சௌபாக்ய விருட்சம்’ என்ற சாஸ்திரப் பெயரைக் கொண்டுள்ள இந்த மரத்தை வீட்டில் வளர்த்து செவ்வாய்க்கிழமைகளில் …

செண்பகப்பூ! Read More »

திருவாச்சி மரம் அல்லது மந்தாரை

திருவாச்சி மரம் அல்லது மந்தாரை மரம், இளமஞ்சள் நிறத்தில் அழகிய மலர்களை உடைய, இளம்பச்சை நிற இலைகளைக் கொண்ட திருவாச்சி, இன்று மிக அரிதாகக் காணப்படும் ஒரு குறுமரமாகிவிட்டது. சிருவாச்சி, இருவாச்சி, திரு ஆத்தி, மந்தாரை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுவது போலவே, திருவாச்சி மரமும் பல விதங்களில் மனிதரின் வியாதிகள் தீர, மருத்துவப் பலன்கள் தருபவை. ஆன்மீகத்திலும், சித்த வைத்தியத்திலும் பெரும் பயனாகும், திருவாச்சி, தமிழ் சங்கீத இசை உலகிலும், வாத்தியங்களுக்கு இன்றியமையாத ஒரு துணையாகவும் …

திருவாச்சி மரம் அல்லது மந்தாரை Read More »

004 பாடல்-4

04 விடமடைசு வேலை யமரர்படை சூலம் விசையன் விடு பாண மெனவேதான் விழியுமதி பார விதமுமுடை மாதர் வினையின்விளை வேது மறியாதேகடியுலவு பாயல் பகலிரவெ னாது கலவிதனில் மூழ்கி வறிதாய கயவனறி வீன னிவனுமுயர் நீடு கழலிணைகள் சேர அருள்வாயேஇடையர்சிறு பாலை திருடிகொடு போக இறைவன்மகள் வாய்மை யறியாதே இதயமிக வாடி யுடையபிளை நாத கணபதியெ னாம முறைகூறஅடையலவ ராவி வெருவஅடி கூர அசலுமறி யாம லவரோடே அகல்வதென டாசா லெனவுமுடி சாட அறிவருளும் ஆனை முகவோனே. …

004 பாடல்-4 Read More »

003 பாடல்-3

03 உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகிஒண்கடலிற் றேனமுதத் துணர்வூறிஇன்பரசத் தேபருகிப் பலகாலும்என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயேதம்பிதனக் காகவனத் தணைவோனேதந்தைவலத் தாலருள்கைக் கனியோனேஅன்பர்தமக் கானநிலைப் பொருளோனேஐந்துகரத் தானைமுகப் பெருமாளே. பதவுரை தம்பிதனக்கு ஆக – தம்பியாகிய முருகவேள் பொருட்டு, வனத்து அணைவோனே – கானகத்தில் (யானை வடிவங் கொண்டு) சென்றவரே! தந்தை வலத்தாள் – தந்தையாராகியச் சிவபெருமானை வலஞ் செய்ததனால், அருள் – வழங்கிய, கை கனியோனே – கரத்தில் ஏந்தியக் கனியையுடையவரே! அன்பர் தமக்கு ஆன – அன்புடையோர்கட்கு உரிமையான, …

003 பாடல்-3 Read More »

002 பாடல்-2

02 பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடைபட்சியெனு முக்ரதுர கமுநீபப்பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழியபட்டுருவ விட்டருள்கை வடிவேலும்திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதருசிற்றடியு முற்றியப னிருதோளும்செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடுசெப்பென எனக்கருள்கை மறவேனேஇக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடநெய்எட்பொரிய வற்றுவரை யிளநீர்வண்டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவௌரிப்பழ மிடிப்பல் வகை தனிமூலம்மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொருவிக்கினச மர்த்தனெனு மருளாழிவெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்வித்தகம ருப்புடைய பெருமாளே. தோற்றுவாய் நினைக்க முத்தியளிக்குந் திருவருணையில்நம் அருணகிரிப் பெருந்தகையார் முன் குமாரக்கடவுள் தோன்றி “முத்தைத்தரு” என்று அடியெடுத்துத் …

002 பாடல்-2 Read More »

001 விநாயகர் துதி

விநாயகர் துதி 1 கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரிகப்பிய கரிமுக னடிபேணிக்கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவகற்பக மெனவினை கடிதேகும்மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்மற்பொரு திரள்புய மதயானைமத்தள வயிறனை உத்தமி புதல்வனைமட்டவிழ் மலர்கொடு பணிவேனேமுத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்முற்பட எழுதிய முதல்வோனேமுப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்அச்சது பொடிசெய்த அதிதீராஅத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்அப்புன மதனிடை யிபமாகிஅக்குற மகளுட னச்சிறு முருகனைஅக்குண மணமருள் பெருமாளே. பதவுரை கைத்தலம் – திருக்கரத்திலே, நிறைகனி – நிறைந்தகனியையும், அப்பமொடு அவல்பொரி – அப்பத்தோடு …

001 விநாயகர் துதி Read More »

மேலத்திருமாணிக்கம்

மதுரை- தேனி சாலையில் மதுரையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் இருக்கிறது உசிலம்பட்டி. இங்கிருந்து கோடங்கிநாயக்கன்பட்டி, தாடையம்பட்டி வழியே சுமார் 18 கி.மீ. தொலைவு பயணித்து மேலத்திருமாணிக்கம் கிராமத்தை அடையலாம். இங்கு அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயம் மிகப் பழைமையானது. ஆலய வரலாற்றுக்கு சாட்சியாகக் கல்வெட்டுகள் இருக்கின்றன. முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் சடாவர்மன் குலசேகரப் பாண்டி யன், மாறவர்மன் விக்கிரம பாண்டியன் முதலான பல மன்னர்களது கல் வெட்டுகள் இருக்கின்றன. அவற் …

மேலத்திருமாணிக்கம் Read More »

திருமூல நாயனார் துதி

திருமூல நாயனார் துதி ஐய மாக்கடல் ஆழ்ந்த உயிர்க்கெலாம்கையில் ஆமல கம்மெனக் காட்டுவான்மையல் தீர்திரு மந்திரஞ் செப்பியசெய்ய பொற்றிரு மூலனைச் சிந்திப்பாம். பதிபசுபாச விளக்கம் திருமூல தேவனையே சிந்தைசெய் வார்க்குக் கருமூலம் இல்லையே காண். தனிப் பாடல் திருமூலன் கண்ணுக்கு இனியோன் காதலன் காதலுறுபண்ணுக்கு உரியோன் பராபரன் பரமனுறைவிண்ணுக்கு வேதியன் வித்தகன் வேமியபுண்ணுக்கு மருந்தோன் பூரணன் புண்ணியனே! உத்தமன் நம்மை உய்விக்கும் நாதன்நித்தமும் நம்மை நேசிக்கும் நேசன்சித்தமும் சீவனும் உமையொரு பாகன்பித்தனும் பிறையோன் பக்தனும் ஆமே! அய்யம் தீர்த்த …

திருமூல நாயனார் துதி Read More »

025 ஏட்டுப் பிரதியில் காணப்பட்ட பாடல்கள்

ஏட்டுப் பிரதியில் காணப்பட்ட பாடல்கள் அத்தாளத் தாள மதிலசை விற்கால்ஒத்தாட வோவாதி யாவேத மூடுறவைத்தாடி கூடல் தினமான மாகவேசித்தான நந்திதென் னம்பலத் தாடுமே. 48 ஆகஞ் சிவானந்த வைவொளி பூரிக்கிலேக வொளியா மிதய கமலத்தேதாகமுஞ் சோகமுஞ் சார்கலை யுன்னிலாக மனங்கசிந் தானந்த மாகுமே. 49 ஆணவ மூலத் தகார முதித்திடப்பேணி யுகாரங் கலாதி பிறிவிக்கத்தாணு மகாரஞ் சதாசிவ மாகவேஆணவ பாச மடர்தல் செய்யாவே. 50 உண்ண லுறங்க லுலாவ லுயிர் போதல்நண்ணல் நரக சுவர்க்கத்து நாட்டிடப்பண்ண லவன் …

025 ஏட்டுப் பிரதியில் காணப்பட்ட பாடல்கள் Read More »

024 உரை நூல்களில் காணப்பட்ட பாடல்கள்

உரை நூல்களில் காணப்பட்ட பாடல்கள் ஆறு சமய முதலாஞ் சமயங்கள்ஊற தெனவும் உணர்க உணர்பவர்வேற தறவுணர் வார் மெய்க் குருநந்திஆறி யமைபவர்க் கண்ணிக்குந் தானே. 1 உடலாங் குகையில் உணர்வாகும் பீடத்தடலார் சமாதி இதயத்த தாகநடமா டியகுகை நாடிய யோகிமிடையாகா வண்ணமே சாதிக்கு மெல்லவே. 2 நிற்றலிருத்தல் கிடத்தல் நடையோடல்பெற்ற வக்காலுந் திருவருள் பேராமல்சற்றியன் ஞானந்தந் தானந்தந் தங்கவேஉற்ற பிறப்பற் றொளிர் ஞான நிட்டையே. 3 நாயோட்டு மந்திரம் நான்மறை வேதம்நாயோட்டு மந்திரம் நாத னிருப்பிடம்நாயோட்டு மந்திரம் …

024 உரை நூல்களில் காணப்பட்ட பாடல்கள் Read More »

023 வாழ்த்து

வாழ்த்து வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம் வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள் வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே. 1 ஒன்பதாம் தந்திரம் முற்றிற்று.  

022 சர்வ வியாபி

சர்வ வியாபி ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓரொளி ஆயும் அறிவையும் மாயா உபாதியால் ஏய பரிய புரியும் தனதுஎய்தும் சாயும் தனது வியாபகம் தானே.  1 நான்அறிந்து அப்பொருள் நாடஇடம் இல்லை நான்அறிந்து அங்கே வழியுற விம்மிடும் ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் தான்அறிந்து எங்கும் தலைப்பட லாமே  2 கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து உடலிடை வாழ்வுகொண்டு உள்ளொளி நாடி உடலிடை வைகின்ற உள்ளுறு தேனைக் கடலின் மலிதிரைக் காணலும் ஆமே.  3 பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித் தெரிந்துட …

022 சர்வ வியாபி Read More »

021 தோத்திரம்

தோத்திரம் மாயனை நாடி மனநெடும் தேரேறிப் போயின நாடறி யாதே புலம்புவர் தேயமும் நாடும் திரிந்தெங்கள் செல்வனைக் காயம்மின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே.  1 மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல் இன்னிசை பாட இருந்தவர் ஆரெனில் முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப் பன்னினர் என்றே பாடறி வீரே.  2 முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றை எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை அத்தனைக் காணாது அரற்றுகின் றேனையோர் பித்தன் இவனென்று பேசுகின் றாரே.  3 புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி புகுந்துநின் றான்எங்கள் …

021 தோத்திரம் Read More »

020 அணைந்தோர் தன்மை

அணைந்தோர் தன்மை மலமில்லை மாசில்லை மானாபி மானம் குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே பலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே.  1 ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம் கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன் அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன் செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே.  2 ஆலைக் கரும்பும் அமுதும்அக் காரமும் சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப் பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொரு கோலப்பெண் ணாட்குக் குறை யொன்றும் இல்லையே.  3 ஆராலும் என்னை அமட்டஒண் …

020 அணைந்தோர் தன்மை Read More »

019 வரையுரை மாட்சி

வரையுரை மாட்சி தான்வரைவு அற்றபின் ஆரை வரைவது தான்அவ னானபின் ஆரை நினைவது காமனை வென்றகண்ணாரை உகப்பது தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே.  1 உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள் கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப் புரையற்று இருந்தான் புரிசடை யோனே.  2 மனமாயை மாயைஇம் மாயை மயக்கம் மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா தனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே.  3

018 மோன சமாதி

மோன சமாதி நின்றார் இருந்தார் கிடந்தார் எனஇல்லை சென்றார்தம் சித்தம் மோன சமாதியாம் மன்றுஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டு சென்றாங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே.  1 காட்டும் குறியும் கடந்த வக் காரணம் ஏட்டின் புறத்தில் எழுதிவைத்து என்பயன் கூட்டும் குருநந்தி கூட்டிடின் அல்லது ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே. 2 உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும் உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை உணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம் உணர்வுடை யார்கள் உணர்ந்து கண் டாரே.  3 மறப்பது வாய்நின்ற …

018 மோன சமாதி Read More »

017 சூனிய சம்பாஷணை

சூனிய சம்பாஷணை காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய் ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம் ஏய பெருமான்இருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.  1 தூறு படர்ந்து கிடந்தது தூநெறி மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே.  2 ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில் சாறுபடுவன நான்கு பனையுள ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை ஏறலுற் றேன்கடல் ஏழுங்கண் டேனே.  3 வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசணி …

017 சூனிய சம்பாஷணை Read More »

016 முத்தி பேதம், கரும நிருவாணம்

முத்தி பேதம், கரும நிருவாணம் ஓதிய முத்தியடைவே உயிர்பர பேத மில் அச்சிவம் எய்தும் துரியமோடு ஆதி சொரூபம் சொரூபத்த தாகவே ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே.  1 பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள் கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல் சுற்றற் றவர்சுற்றி நின்றஎன் சோதியைப் பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.  2

005 தூல பஞ்சாக்கரம்

தூல பஞ்சாக்கரம் ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும் ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும் ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின் ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே.  1 அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி உகார முதலாக ஓங்கி உதித்து மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந்து ஏறி நகார முதலாகும் நந்திதன் நாமமே.  2 அகராதி ஈரெண் கலந்த பரையும் உகராதி தன்சத்தி உள்ளொளி ஈசன் சிகராதி தான்சிவ வேதமே கோணம் நகராதி தான்மூலமந்திரம் நண்ணுமே.  3 வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி ஆய இலிங்கம் …

005 தூல பஞ்சாக்கரம் Read More »

015 சிவ சொரூப தரிசனம்

சிவ சொரூப தரிசனம் ஓதும் மயிர்க்கால் தோறும் அமு தூறிய பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம் ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலை வேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே.  1 உணர்வும் அவனே உயிரும் அவனே புணரும் அவனே புலவி அவனே இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.  2 துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரு முன்னி அவர்தம் குறையை முடித்திடும் மன்னிய கேள்வி மறையவன் மாதவன் சென்னியுள் நின்றதோர் தேற்றத்தன் ஆமே.  3 மின்னுற்ற சிந்தை விழித்தேன் …

015 சிவ சொரூப தரிசனம் Read More »

014 சிவ தரிசனம்

சிவ தரிசனம் சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும் சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச் சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே.  1 வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள் நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை ஆக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.  2 பரனாய்ப் பராபர னாகிஅப் பால்சென்று உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய் தரனாய்த் தனாதென வாறுஅறி வொண்ணா அரனாய் உலகில் அருள்புரிந் தானே.  3   

013 ஊழ்

ஊழ் செற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியிலென் மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென் வித்தக நந்தி விதிவழி யல்லது தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.  1 தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால் வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று நான்முன்னம் செய்ததே நன்னில மானதே.  2 ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப் பேறிட்டுஎன் உள்ளம் பிரியகி லாவே.  3 வான்நின்று இடிக்கில்என் மாகடல் பொங்கிலென் கான்நின்ற செந்தீக் …

013 ஊழ் Read More »

012 சொரூப உதயம்

சொரூப உதயம் பரம குரவன் பரம்எங்கு மாகித் திரமுற எங்கணும் சேர்ந்துஒழி வற்று நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம் அரிய துரியத்து அணைந்துநின் றானே.  1 குலைக்கின்ற நீரின் குவலய நீரும் அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாசம் நிலத்திடை வானிடை நீண்டகன் றானை வரைந்து வலம்செயு மாறுஅறி யேனே.  2 அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள் எங்குநின் றாரும் இறைவன் என்று ஏத்துவர் தங்கிநின் றான்தனிநாயகன் எம்இறை பொங்கிநின் றான்புவ னாபதி தானே.  3 சமயச் சுவடும் தனையறி யாமல் கமையற்ற …

012 சொரூப உதயம் Read More »

Scroll to Top