தாந்த்ரீக பரிகாரங்கள்
குளியல் மூலமே தோஷங்களை போக்குவது எப்படி தெரியுமா?
நாம் இந்த பிறவியில் படும் துன்பங்களுக்கு காரணம் நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷமே என்று ஜோதிடம் கூறுகிறது. நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களை போக்க நாம் முக்கியமாக வணங்கவேண்டியது நவகிரகங்களையே…
நாம் தினமும் குளிக்கும் நீரில் சிலவற்றை கலந்து குளிப்பதன் மூலமாக கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது…
வாருங்கள் இது குறித்து பார்ப்போம்…
சூரியனால் ஏற்படும் தோஷம் நீங்க:
சிகப்பு மலர்களையோ அல்லது குங்குமப்பூவையோ குளிக்கும் நீரில் சிறிதளவு போட்டு பின்பு நான்கைந்து குவளைகள் அந்த நீரில் குளித்துவிட்டு பின் வழக்கம் போல சாதாரண நீரில் குளிக்கலாம். இதனால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும்…
சந்திரனால் ஏற்படும் தோஷம் நீங்க:
அழகுக்காக பலர் தயிரை முகத்தில் பூசிக்கொள்வது வழக்கம். சந்திரனால் ஏற்படும் தோஷத்தை போக்கவும் இதை தான் செய்யவேண்டும். குளிப்பதற்கு முன்பு சிறிதளவு தயிர் எடுத்து அதை உடல் முழுக்க தடவி பின் குளித்துவந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
செவ்வாயால் ஏற்படும் தோஷம் நீங்க:
செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமணம் தடைபடுகிறது, திருமணத்திற்கு பிறகும் பல பிரச்சனைகள் வருகிறது என்று பலர் கவலைப்படுவதுண்டு. இதற்கு சிறந்த குளியல் பரிகாரம் என்னவென்றால், வில்வ கொட்டையை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நன்கு பொடி செய்து, குளிக்கும் நீரில் கலந்து அதில் ஒரு நான்கைந்து குவளைகள் குளித்துவிட்டு பின் வழக்கம் போல சாதாரண நீரில் குளிக்கலாம். இதனால் செவ்வாய் தோஷம் விலகும்…
புதனால் ஏற்படும் தோஷம் நீங்க:
புதன் தோஷம் நீங்க கங்கை நீரோ அல்லது கடல் நீரோ தேவை. சிறிதளவு மஞ்சள் கடுகு எடுத்துக்கொண்டு அதில் தேன் கலந்து பின் அதை சிறிதளவு கடல் நீரிலோ அல்லது கங்கை நீரிலோ கலந்து பின் அனைத்தையும் நாம் குளிக்கும் நீரில் கலக்க வேண்டும். பின் இந்த நீரில் குளிப்பதன் மூலம் புதனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்…
வியாழனால் ஏற்படும் தோஷம் நீங்க:
கருப்பு ஏலக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நன்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவருவதன் மூலம் வியாழனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்…
சுக்கிரன்…
சுக்கிர தோஷம் நீங்க, பச்சை ஏலக்காயை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்…
சனி…
சனி தோஷம் நீங்க, கருப்பு எள் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்…
ராகு…
ராகு தோஷம் நீங்க, நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய மகிஷாக்ஷியை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்…
கேது…
கேது தோஷம் நீங்க, அருகம்புல்லை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்…
27 நட்சத்திரக்காரர்களும்.அவர்களின் வெற்றிநாட்களும்
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றேஒன்றுதான். அதுதான் சம்பத்து தாரை.
சம்பத்துதாரை” என்னும் உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமானசம்பத்து நட்சத்திர நாளில் செய்யப்படும் அனைத்து காரியங்களும் 100சதவிகிதம் வெற்றியைத் தந்தே தீரும் என்பது சத்தியம்.
இதை எப்படி அறிந்துகொள்வது?
உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து தாரை நட்சத்திரங்கள் எவை என்பதைப் பார்ப்போம்.
அஸ்வினி:- இதற்கான சம்பத்து நட்சத்திரங்கள்
பரணி, பூரம், பூராடம்
பரணி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
கார்த்திகை, உத்திரம்,உத்திராடம்
கார்த்திகை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
ரோகிணி, அஸ்தம்,திருவோணம்
ரோகிணி:- இதன் சம்பத்து நட்சத்திரம்
மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம்
மிருகசீரிடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
திருவாதிரை, சுவாதி,சதயம்
திருவாதிரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி
புனர்பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூசம், அனுசம்,உத்திரட்டாதி
பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
ஆயில்யம்,கேட்டை,ரேவதி
ஆயில்யம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
மகம், மூலம்,அசுவினி
மகம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூரம்,பூராடம்,பரணி
பூரம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திரம், உத்திராடம்,கார்த்திகை
உத்திரம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அஸ்தம்,திருவோணம்,ரோகிணி
அஸ்தம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம்
சித்திரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சுவாதி,சதயம்,திருவாதிரை
சுவாதி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
விசாகம், பூரட்டாதி, புனர்பூசம்
விசாகம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அனுசம்,உத்திரட்டாதி, பூசம்
அனுசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
கேட்டை,ரேவதி,ஆயில்யம்
கேட்டை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
மூலம், அசுவினி,மகம்
மூலம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூராடம்,பரணி,பூரம்
பூராடம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திராடம், கார்த்திகை, உத்திரம்
உத்திராடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
திருவோணம், ரோகிணி,அஸ்தம்
திருவோணம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அவிட்டம்,மிருகசீரிடம்,சித்திரை
அவிட்டம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சதயம்,திருவாதிரை,சுவாதி
சதயம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூரட்டாதி, புணர்பூசம், விசாகம்
பூரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திரட்டாதி, பூசம், அனுசம்
உத்திரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
ரேவதி,ஆயில்யம்,கேட்டை
ரேவதி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அசுவினி,மகம்,மூலம்
இப்போது உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து நட்சத்திரங்களை அறிந்துகொண்டீர்கள் அல்லவா. உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து நட்சத்திரங்கள் எந்த நாளில் இருக்கிறதோ… அந்த நாளே உங்களுக்கு உகந்த பொன்னாள். தொட்டதெல்லாம் துலங்கும் என்பார்களே. இந்த நாட்களில் நீங்கள் எடுக்கும் எந்தக் காரியமும் ஜெயத்தில்தான் முடியும். ஜெயத்தையே தந்தருளும்.
இதைப் பயன்படுத்தி வெற்றியை உங்கள் வசப்படுத்துங்கள்.
இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன்.
நவகிரகங்களே அவரவர் நட்சத்திரங்களுக்கு சம்பத்து நட்சத்திரமான அடுத்தநட்சத்திரங்களில் தான் பிறந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்… சம்பத்து நட்சத்திரங்களின் மகத்துவத்தையும் மகோன்னதத்தையும்!
உதாரணமாக சூரியனின் நட்சத்திரங்களில் ஒன்று “உத்திரம்.” ஆனால் சூரியபகவான் ஜனித்த நட்சத்திரம் உத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமான “அஸ்தம்”நட்சத்திரத்தில்.
சந்திரன் தன் நட்சத்திரமான “ரோகிணிக்கு” அடுத்த நட்சத்திரமான “மிருகசீரிடம்”நட்சத்திரத்தில் பிறந்தவர்.
இப்படி கிரகங்களே “சம்பத்து நட்சத்திரங்களை” பயன்படுத்தி அழியாப் புகழுடன்இருக்கும் போது, நாமும் அதைப் பயன்படுத்தி வளமான வாழ்க்கையைஅமைத்துக்கொள்வோம். செழிப்பான இந்த வாழ்க்கையை சீரும்சிறப்புமாக்குவோம்!
தோஷம்நீங்கஏற்ற#வேண்டிய_தீபங்கள் !
- ராகு தோஷம் – 21 தீபங்கள்
- சனி தோஷம் – 9 தீபங்கள்
- குரு தோஷம் – 33 தீபங்கள்
- துர்க்கைக்கு – 9 தீபங்கள்
- ஈஸ்வரனுக்கு – 11 தீபங்கள்
- திருமண தோஷம் – 21 தீபங்கள்
- புத்திர தோஷம் – 51 தீபங்கள்
- சர்ப்ப தோஷம் – 48 தீபங்கள்
- காலசர்ப்ப தோஷம்- 21 தீபங்கள்
- களத்திர தோஷம் -108 தீபங்கள்
வலம்_வருதல்
- விநாயகர் – 1 அல்லது 3 முறை
- கதிரவன் (சூரியன்) – 2 முறை
- சிவபெருமான் – 3, 5, 7 முறை (ஒற்றைப்படை)
- முருகன் – 3 முறை
- தட்சினா மூர்த்தி – 3 முறை
- சோமாஸ் சுந்தர் – 3 முறை
- அம்பாள் – 4, 6, 8 முறை (இரட்டைப்படை)
- விஷ்ணு – 4 முறை
- இலக்குமி – 4 முறை
- அரசமரம் – 7 முறை
- அனுமான் – 11 அல்லது 16 முறை
- நவக்கிரகம் – நவகிரகங்கள் நம்மை சுற்றுகின்றன அதனால் நாம் அவர்களை சுற்ற தேவையில்லை
13 பிராத்தனை – 108 முறை
- மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது.
- அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி போன்ற நாட்களில் வில்வ இலை பறிக்கக்கூடாது. இதற்கு முந்தைய நாள் மாலையிலேயே இதைப் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.
… - கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.
- விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக்கூடாது.
- தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது.
- கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது. கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக்கூடாது.
வணங்கும்_விதி
பிரம்மா , விஷ்னு , சிவன் இம்மூவரை வணங்கும் போது , சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும்.
மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகூப்பி வணங்கினால் போதும்.
குருவை வணங்கும் போது , நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும்.
அரசரையும் , தகப்பனாரையும் வணங்கும் போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்கவேண்டும்.
தன்னுடைய தாயை வணங்கும் போது வயிற்றில் கைவைத்து வணங்க வேண்டும்.
மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.பூமியில் நெடுஞசாண் கிடையாக வணங்க வேண்டும். ஆனால் பெண்கள் , மாதா , பிதா , குரு , தெய்வம் மற்றும் கணவனை வணங்கும் போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்களுடைய ஸ்தனங்கள் பூமியில் படக்கூடாது.