You cannot copy content of this page

வீட்டுத் தோட்டம்

ரோஜா

ரோஜா செடிகளை நேர்த்தியாக பராமரித்தால் கொத்துக் கொத்தாய் பூக்கள் பூத்துக் குலுங்கும்.

ரோஜா மலரை விரும்பாத பெண்கள் எவருமே இல்லை எனலாம்.நமது மனம் கவர்ந்த இந்த ரோஜா மலர் வளர்ப்பதில் பலருக்கு ஆர்வமுள்ளது. ஆனால் அது பற்றிய வழிமுறைகள் பலருக்குத் தெரிவதில்லை.

இதோ உங்களுக்குச் சில டிப்ஸ்:

ரோஜா இன்று பல வண்ணங்களில் வளர்கின்றன. சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குவதை பார்த்திருக்கின்றோம்.

ரோஜா செடியின் வேர்ப் பகுதி இறுக்கமாக இல்லாமல் இலேசாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது. காற்றோட்டம் இருப்பது அவசியம்.

ரோஜா செடிகள் நன்கு நீரை உறிஞ்சும் மண்ணிலும், போதுமான சூரிய வெளிச்சத்திலும் வளரும்.

வீட்டில் காய்கறி, இலைக் கழிவுகள் என்பவற்றையே உரமாகப் பாவிக்கலாம்.

இவை தவிர கடலைப் புண்ணாக்கு, தண்ணீரில் ஊறவைத்து கரைத்து ஊற்றினால் பூக்கள் பெரிதாகப் பூக்கும் என்று கூறுவார்கள்.

அதே போன்று எறும்பு மற்றும் பூச்சித் தொல்லைகளைத் தவிர்க்க வேப்பம் புண்ணாக்கு (இதுவும் மருந்து கடைகளில் கேட்டு வாங்கலாம்) பெரிதும் உதவும் என்று கூறுவர்.

ரோஜா செடி செழிப்பாக வளர நீர்த் தேங்கி நிற்காமல் ஈரப்பதம் இருந்தாலே போதுமானது. ஆண்டுக்கு ஒரு முறை செடியின் மூன்றில் ஒரு பகுதியை வெட்டி விடலாம்.

ரோஜாத் தோட்டத்தில் காய்ந்த, நோயுற்ற பூச்சி தாக்கப்பட்ட கிளைகள் மற்றும் குறுக்காக வளர்ந்த கிளைகளையும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் குப்பைகள் சேருவது தடுக்கப்படும்.

எளிமையான முறை:

இதோ ரோஜா செடி எளிமையாக அதிகமான முறையில் நாடும் முறை.

நன்கு வளர்ந்த ரோஜா கிளையை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். ஒரு ஒரு அடி அளவுகளில் வெட்டி கொள்ளுங்கள்.

நீங்கள் வெட்டி வைத்த துண்டுகளில் ஒரு சில இலைகள் இருக்குமாறு வைத்துவிட்டு, மீதி இலைகளை நீக்கி விடவும்.

இந்த இலைகள் ஒளிசேர்கையை பார்த்துகொள்ளும். இந்த இலை இருந்தால், தலைகீழாக நடுவதையும் தவிர்க்க உதவுகிறது.

உருளை கிழங்கில் சிறிது ஓட்டை போட்டு கொள்ள வேண்டும், பின்னர் அந்த செடி துண்டுகளை சொருகவும்.இப்பொழுது நடுவதற்கு தயாராகிவிட்டது. உருளைக்கிழங்கு ஈரப்பதத்தை வைத்து கொள்ளும்.செடி காய்ந்து விடாமல் பார்த்து கொள்ளும். அதுவே உரமாக மாறவிடும்.

சிறிது பள்ளம் தோன்றி, தயாரான உருளைக்கிழங்கு வைத்து மணல் கொண்டு மூட வேண்டும்…பிறகு மண் போட்டு மேலே மூடவும்.

இரண்டு நாளுக்கு ஒரு தடவை சிறிது தண்ணீர் விடவும்.தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்ளவும். வெயிலும் அதிகமாக இல்லாதவாறு பார்த்து கொள்ளவும்.

இலைகள் துளிர்விட்டு வரும் வரை, மதிய நேரங்களில் சாக்கு பை கொண்டு,மூடி வைக்கலாம்.
அது ஒரு சில வாரங்களில் வளர தொடங்கி விடும். அந்த தொட்டி நன்கு வளர்ந்தவுடன் முதல் தொட்டியில் உள்ள கிளையை வெட்டி விடலாம்.

சில செடிகளில் பூக்கள் காய்ந்து விதை வரும். அதை தொட்டியில் மண் நிரப்பி போட்டாலும் நன்கு வளரும்.

பன்னீர் ரோஜா பூ

தொட்டிகளில் வளர்க்கலாம். பால்கனியில் வளர்க்கச் சிறந்த தேர்வு இது. பன்னீர் ரோஜாவைச் சாப்பிடும் பழக்கம் சிலருக்கு உண்டு. பன்னீர் ரோஜாக்கள் தற்போது வெளியில் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் அதில் அதிகப்படியான பூச்சிக்கொல்லிகள் தெளித்திருக்க வாய்ப்புகள் உள்ளன. அதனால், வீட்டில் வளர்ப்பது பெஸ்ட்.

பலன்கள்:

பன்னீர் ரோஜாவை, வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். சருமத்துக்கும் கூந்தலுக்கும் நன்மை செய்யும். வெந்நீரில் ரோஜா இதழ்களைப் போட்டுக் கொதிக்கவைக்கவும். ஆறிய பின், அந்த நீரைக்கொண்டு முகம் கழுவலாம். இதுவே, பன்னீர் (ரோஸ் வாட்டர்). சருமத்துக்கான சிறந்த டோனர்.

உரம்:
டீதூள், காய்கறி தோல், பழத்தோல், வெங்காயச் சருகு, முட்டை ஓடு இவற்றை நேரடியாக உரமாக பயன்படுத்தினால் பூஞ்சை ஏற்பட்டு செடி பட்டுப்போகும். எனவே அவற்றை மக்கட்செய்து உரமாக பயன்படுத்தலாம். செடியை சுற்றி மண்ணை கிளறிவிட்ட பின்பே உரம் இடவேண்டும். பின்னர் நன்றாக நீர் விடலாம்.

மண்புழு உரம் ரோஜாத் தோட்டத்தின் முக்கிய நண்பன். இது கோடை காலத்திலும் மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைக்கும்.

பிண்ணாக்கு ஊறவைத்து கரைத்து ஊற்றவும்.உங்கள் செடி அருமையாக பூத்து குலுங்கும்.

முக்கியமான விசயம் ரோஜா செடிகளில் பூக்கள் பூக்க அவற்றோடு நாம் பேசவேண்டும். செடிகளுக்கு ஆசையாய் முத்தமிட வேண்டும். கொத்துக் கொத்தாய் பூக்கள் பூக்கும்.

ரோஜா செடிக்கான உரஅளவு
முதல் உரமாக 60ம் நாள் கடலை புண்ணாக்கு போட வேண்டும்,பின்னர் 40 நாளைக்கு ஒரு முறை கடலை புண்ணாக்கு 200 கிராம் போட வேண்டும்.

பூச்சித்தாக்குதல்

வீட்டு தோட்டத்தில் வளர்க்க படும் ரோஜா செடியை அவ்வப்போது பூச்சி மற்றும் நோய் தாக்க வாய்ப்புண்டு.

10 கிராம் பெருங்காயத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது spray செய்தால் அது பூச்சி/நோய் தாக்குதலை தடுப்பதுடன் அழகான மலரை மலர வைக்கவும் உதவும்.

ரோஜா செடியின் இலைகளில் அடிப்பாகம், இலைக்காம்பு மற்றும் பூங்கொத்துகளில் வெள்ளை நிறப்படலம் போன்று காணப்படும். இந்நோய் தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து விடும். பூ மொட்டுகள் வளராமல் நின்றுவிடும்.

நாம் கொஞ்சம் சிரத்தை எடுத்துக் கொண்டால் போதும். நம் வீட்டுத் தோட்டத்திலும் சாடிகளிலும் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குவதை நாமும் ஆசைதீர பார்க்கலாம்.

செம்பருத்தி செடி

தோட்டத்தில் வருடம் முழுவதும் பூக்களைத் தரக்கூடியவாறான செடியை வைப்பதற்கு ஆசைப்பட்டால், அதற்கு செம்பருத்தி செடி சரியானதாக இருக்கும்.

சுமார் 40 வகையான செம்பருத்தி கன்றுகள் உள்ளன. ரோஜா செடிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

ரோஜாவை ஒரு குழந்தையை வளர்ப்பது போல வளர்க்கவேண்டும். பூ பூத்த இரண்டாம் நாள் கொட்டி விடும். பூச்சிகளும் எளிதாகத் தாக்கும்.

ஆனால், செம்பருத்தியில் இந்தப் பிரச்னை கிடையாது. எங்கு வேண்டுமானாலும் வளரும். ஒரு வாரம் வரைகூட செடியிலேயே உதிராமல் இருக்கும்.

ரோஜாவை மிஞ்சும் வகையில் அழகானப் பூக்கள் செம்பருத்தியில் உள்ளன.

செம்பருத்தி செடியை பராமரிப்பது என்பது மிகவும் ஈஸியானது. சில செம்பருத்தி பூக்கள் வடிவம் மற்றும் அளவுகளில் மாறுபட்டிருக்கும்.

குறிப்பாக இந்த செம்பருத்தி செடியில் உள்ள ஒரு தனித்துவம் என்னவென்றால், அந்த பூவானது செடியின் இலைகளை பல்வேறு காலங்களில் ஒரே மாதிரி வைத்திருக்கும்

உயரமாக வளரும் செம்பருத்தி செடிகள் வருடந்தோறும் பசுமையான இலைகளையும் அழகிய வண்ணங்களில் பூக்களையும் தரவல்லது.

பலன்கள்:

செம்பருத்திப் பூவில் இரும்புச்சத்துக்கள் மிக அதிகம். ஃப்ரெஷ்ஷான பூவாக அப்படியே எடுத்துக் கழுவிச் சாப்பிடலாம். மாதவிலக்குப் பிரச்னைகள் குணமாகும். ரத்தப்போக்கு சீராகும். இதயத்துக்கு மிகவும் நல்லது. இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பவர்கள், செம்பருத்திப் பூவைச் சாப்பிட்டுவர, நல்ல பலன்களைத் தரும்.

குழந்தைகளுக்கு, செம்பருத்தி பூவின் சாற்றை வெல்லத்தோடு கலந்து தந்தால் ஆரோக்கியம் மேம்படும்.

கனகாம்பரம்

இரகங்கள்:
சிகப்பு, ஆரஞ்சு மற்றும் டெல்லி கனகாம்பரம்.
மண் மற்றும் தட்பவெப்பநிலை :
நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்து வண்டல மண் மற்றும் செம்மண் ஏற்றது. கனகாம்பரம் செடிகள் ஓரளவு நிழலைத் தாங்கி வளரும்.

பருவம் :
ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். மழைக்காலத்தில் நடக்கூடாது.மழையில் பூக்கள் நனைந்தால் வீணாகிவிடும்.

இடைவெளி :
விதைக்காக பயிரிடுவதாக இருந்தால் 60 x 60 செ.மீ இடைவெளியை பின்பற்றவும். டெல்லி கனகாம்பரம் இரகத்திற்கு 60 x 40 செ.மீ.

நாற்றாங்கால் தயாரித்தல் :
தேவையான அளவுகளில் மேடைப்பாத்திகள் அல்லது குழித்தட்டில் அமைத்து அவ்றறில் ஒரு செ.மீ ஆழத்தில் விதைகளை விதைத்து, பின்னர் அவற்றை மணல் கொண்டு மூடிவிடவேண்டும். விதைகள் முளைக்கும் வரை தினமும் நீர்ப்பாய்ச்சவேண்டும். விதைகள் விதைத்த 60ம் நாளில் நடவுக்குத் தயாராகிவிடும்.

மஞ்சள் கனகம்புரதிற்கு விதைகள் கிடையாது.அதன் கிளைகளை உடைத்து பதியம் போட்டுதான் நடமுடியும்.

நடவு செய்தல் :
60 நாட்கள் ஆன நாற்றுக்களைப் பிடுங்கி 60 செ.மீ இடைவெளியில் தொட்டிகளில் நடவு செய்யவேண்டும்

நீர் நிர்வாகம்
ஏழு நாட்களுக்கு ஒரு முறை நீர்பாய்ச்சவேண்டும். நிலத்தில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நிலத்தில் ஈரத்தன்மை அதிகமாக இருந்தால் வேர் அழுகல் நோய் தோன்றக்கூடும். எனவே சீராக நீாப்பாய்ச்சவேண்டும்.

விதை சேர்த்தல்:
பூவை பறிக்காமல் இருந்தால், அதில் விதை வரும்.

சம்பங்கி
பாலியாந்தீஸ் டியூப்ரோஸா என்ற தாவரவியல் பெயர் கொண்ட சம்பங்கி மலர் சாகுபடி முறைகளை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

சம்பங்கி மலர் சாகுபடிக்கு ஏற்ற காலம் ஜூன், ஜூலை மாதங்கள் ஆகும்.மெக்சிகன் சிங்கிள், சிருங்கார், பிரஜ்வால், பியர்ள் டபுள், சுவாசினி, வைபவ் ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

விதை
இதன் விதைகள் கிழங்கு ரகத்தை சேர்ந்தது. 25 முதல் 30 கிராம் எடையுள்ள கிழங்குகள் நடவுக்கு ஏற்றவை.

வீரிய சம்பங்கி:
விதை கிழங்கு பெரியது. பூக்கள் பெரியது. பூ எடை அதிகம். பூ மொட்டு பெரியது. கிளைக்கும் தன்மை அதிகம். நீண்டநாள் சாகுபடி. மகசூல் அதிகம்.

நாட்டு சம்பங்கி:
விதை கிழங்கு சிறியது. பூக்கள் சிறியது. எடை குறைவு. பூ மொட்டு சிறியது. கிளைக்கும் தன்மை குறைவு. குறைவு நாட்கள். மகசூல் சுமார். பூக்களின் எண்ணிக்கை குறைவு. நோய் எதிர்ப்பு சக்தி குறைவு.

நடும் முறை
இது பார்ப்பதற்கு நாணல் மாதரி ஒரே குச்சி போன்று வளரக்கூடியது.

இதற்க்கு பெரிய தொட்டி எல்லாம் தேவை இல்லை. இரண்டு லிட்டர் வாட்டர் கேன் பாதியாக வெட்டி, அதில் மண்ணை நிரப்பி தயார் செய்தாலே போதும் இதற்க்கு தொட்டி சரியனதகிடும்.

ஒரு குத்திற்கு 6 கிழங்குகள் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்

இரண்டரை செ.மீ.ஆழத்தில் ஊன்ற வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் கிழங்கு ஊன்றுதல் நல்லது. கிழங்கு எடுத்து 30 நாள் கழித்து ஊன்ற வேண்டும்.

பயிர் இடைவெளி
2 குத்திற்கும் இடையே உள்ள பயிர் இடைவெளி 4 விரல்கடை

சம்மந்கியில் நீர் நிர்வாகம்
கரிசல் மண்ணாக இருந்தால் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செம்மண்ணாக இருந்தால் வாரம் 3 தண்ணீர் பாய்ச்ச வேண்டும்

இதற்க்கு நடுவிலே அரளி, சாமந்தி, போன்ற வெவேறு வண்ணங்களில் உங்கள் கற்பனையில் தொட்டிகளை வைக்கலாம்.

உரநிர்வாகம்
மாத்திற்கு ஒரு முறை ஆட்டு எரு, கடலை புண்ணாக்கு வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் தொடர்ந்து பூ வந்து கொண்டே இருக்கும்.

முக்கிய குறிப்பு

கிழங்கு நடுவதற்கு தேர்வு செய்யும்போது செடி நட்டு 4 வருடம் ஆன தாய் செடியில் இருந்துதான் கிழங்;கு தேர்வு செய்ய வேண்டும்.கிழங்கை நெருக்கி நட்டால் கோரை கட்டுப்படும்.

சாமந்தி(Yellow Marigold)

தோட்டத்திற்கு அழகு தருவதில் முதன்மையான பூச்செடி என்றால் அது சாமந்தி தான்.இந்த செடி நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.இந்த செடிக்கு போதுமான சூரிய வெளிச்சமும், தண்ணீரும் இருந்தால் நன்கு செழிப்பாக வளரும்.

நடவு முறை
இது நாற்று விட்டு நாடும் முறை சிறந்தது.

உங்கள் வீட்டில் காய்ந்த பூ இருந்தால் போதும்.இதன் விதைக்காக அலைய வேண்டாம்.

காய்ந்த பூவை பிரித்து ஒரு சின்ன தொட்டியில் போட்டு சிறிது மண்ணை போட்டு மூடி தண்ணீர் தெளிக்கவும். அல்லது குழித்தட்டு முறையில் தென்னை நார்க் கழிவை பயன்படுத்தி நாற்றுகள் தயாரித்து கொள்ளலாம்.

எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துகொள்ளவும்.. தண்ணீர் தேங்கி நிற்க கூடாது.சிலர், நாற்­று­களை வாங்­கியும் நடவு செய்­கின்­றனர். ஒரு­நாற்று, 2.60 பைசா­விற்கு விற்­பனை செய்­கின்­றனர்.

ஒரு வாரத்தில் முளைத்து வரும்.நடும்போது வேர்ப்பாகம் மடியாமல் நேராக மண்ணுக்குள் செல்லுமாறு வேர்ப்பாகம் அமைனத்தும் மறையும்படி நடுதல்வேண்டும்.

நாற்று நடவு செய்த பின், வாரம் ஒரு­முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.வெயில் நாட்­களில், செடி­களில் அரும்­புகள் அதி­க­மாக காணப்­படும்

நீர் நிர்வாகம்

நடுவதற்கு முன்னர் ஒரு தண்ணீர் நட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். பின்னர் ஒரு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி.

மண் மற்றும் தட்பவெப்பநிலை
வடிகால் வசதியுடன் மணல் கலந்த செம்மண் நிலம் ஏற்றதல்ல. மண்ணின் கார அமிலத்தன்மை சுமார் 6.0 முதல் 7.0 வரை இருக்கவேண்டும். நீர்த்தேக்கமுள்ள வடிகால் வசதி குறைந்த, கனமாக களிமண் சார்ந்த மண் வகைகள் சாமந்தி பயிருக்கு சாமந்தி ஒரு வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பயிராகும். செடிகள் நீண்ட இரவு மற்றும் குறுகிய பகல் கொண்ட பருவங்களில் பூக்கும்.

நடவு செய்த 40 நாட்களில் அரும்புகள் உருவாகி பூக்கள் உற்பத்தியாகக் கூடியது சாமந்தி பூ.

அந்திமல்லி:

மாலையில் பூக்கும் பூ.அதனால் அந்தி மல்லி என்று பெயர்பெற்றது.இந்த செடியின் பூக்கள் பார்க்க அழகாக இருக்கும்.சிறு வாசனை கொண்டது.

இது பிங்க், ஆரஞ்சு, மஞ்சள் , வெள்ளை என்று பல்வேறு வண்ணங்களில் பூக்கள் காணப்படும்….

மாடி தோட்டத்தில் வளர்க்க அருமையான செடி. வரிசையாக மஞ்சள் பிங்க் ஆரஞ்சு என்று நட்டு வளர்த்தல் அழகாக மாறிவிடும் உங்கள் தோட்டம்.நல்ல ஒருவித வாசனை கொடுக்க கூடிய பூ இது. அடர்ந்த வண்ணம் கொண்ட பூக்களை கொண்டது.

நடும் முறை:

இந்த செடி விதை போட்டு முளைக்க கூடியது. இதன் விதை மிளகு போன்று தோற்றம் உடையது. மிளகை விட கருமையாகவும்,சிறிது பெரிய அளவில் இருக்கும்.

அந்த விதைகளை நேரடியாகவே தொட்டிகளில் அல்லது தோட்டத்தில் மண்ணில் நடவேண்டியது. நாற்று விட வேண்டும் என்று அவசியம் இல்லை. (முன்பே கூறியிருப்பேன் கடுகை விட பெரிய விதைகள் நேரடியாக விதைக்கலாம் என்று)

ஒரு தொட்டிக்கு ஒரு விதை போதும். இந்த செடி நன்கு கிளை விரித்து படரக் கூடியது.ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச வேண்டும். வெயில் தாங்கி வளரக்கூடியது.

பால்சம்

இது பால்சம் பூ வகையை சேர்ந்தது.பார்க்க அழகாக இருக்கும்.

இந்த பூ பார்பதற்கு,ரோஜா பூ மாதரி இருக்கக்கூடியவை.இந்த பூ ரோஜா, பிங்க், ஊதாவண்ணங்களில் இருக்கிறது.

பலவித வண்ணங்களில் இருந்தாலும், நம்ம ஊர்களில் ரெட் கலர் மட்டுமே கிடைகிறது.

இதன் விதைகள் பார்பதற்கு கடுகு மாதரி இருக்கும்.படத்தில் இருக்கும் பூவை காட்டி கடைகளில் இதன் விதைகளை வாங்கிக் கொள்ளலாம்.

ஒவ்வொரு விதையும் தனித்து வளரக் கூடியவை.நேரடி விதைப்பு முறைகளில் விதைக்கலாம்.ஒரு அடிக்கு ஒரு அடி விட்டு நடலாம்.

இதற்க்கு சிறிது வெயில் இருந்தால் போதும்.நேரடி வெயிலில் வதங்கி விடும்.மதிய நேரத்தல் நிழல் வரும் இடத்தில் நடவு செய்தல் சிறந்தது.

இதற்க்கு தினம் தோறும் தண்ணீர் ஊற்றவேண்டும். தண்ணீர் போகும் இடத்தில் நட்டால் நன்றாக கிளை பரப்பி செடி வளரும் நண்பர்களே.

பல்வேறு வண்ணங்களில்,வரிசையாக நட்டால் அருமையாக இருக்கும்.கண்ணை கவரும்.

இதன் ஆயுட்காலம் பூ வைக்க ஆரம்பித்ததில் இருந்து இரண்டு மாதம் தான். இதன் பூவை பறிக்காமல் விட்டு விட்டால், அதில் விதை வரும்.அந்த விதைகளை பறிக்கும் சரியான நேரம் எது என்றால் உள்ளிருக்கும் விதை வெளியில் நன்றாக தெரியும்.அப்பொழுது பறித்து கொள்ளலாம்.இல்லை என்றால் நன்கு முற்றிய நிலையிலும், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போதும் வெடித்து சுற்றி சிதறிவிடும்.

டிசம்பர்

டிசம்பர் மாதம் பூப்பதுனால் என்னவோ இதற்கு டிசம்பர் பூ என்று பெயர் பெற்றது.இதன் உண்மையான பெயர் தெரியவில்லை.

டிசம்பர் பூக்கள் பல வண்ணங்களில் கிடைகிறது. பணிகாலங்களில் சிறு செடியில் கூட பூ பூக்கும். நான்கு வளர கூடியது. பூ இரண்டு அல்லது மூன்று மாதம் வரை தான் பூக்கும். பூ வைத்து முடித்த பின்பு செடியை காவத்து செய்து விடலாம்.இல்லை என்றால் செடி தான் வளர்ந்து விடும் காடு மாதரி.

ரகம்
வைலட், திக் ரோஸ், வெள்ளை,ராமர்.

பட்டம்
சித்திரை,வைகாசி

நடவு முறை
செடியை ஒடித்து நடலாம்.

பயிர் இடைவெளி
வரிசைக்கு வரிசை 7 அடி செடிக்கு செடி 2 அடி.

நீர் நிர்வாகம்
15 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும். பூக்கும் சமயத்தில் 10 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

உரநிர்வாகம்
செடி நட்ட 2 மாதத்திற்கு பின் மீன் அமிலம் செடிக்கு அருகில் இட்டு மண் மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

பச்சைப்புழு தாக்குதல்
பச்சைப்புழு தாக்குதலின் அறிகுறி,இப்புழு சிறிய அளவில் இருக்கும்.பூவின் காம்பில் இருந்து கொண்டு பூ வை சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்.

அரளி

அரளி அணைத்து மண்ணிலும் வளரக்கூடியது. நான்கு வறட்சி தாங்கி வளரக்கூடிய பூ வகை. இதை பதியம் போட்டு நடலாம். சிறு கிளையை ஒடித்து வைத்து நட்டால் கூட துளிர் விடும்.

இது பல்வேறு வகைகளில் கிடைகிறது.வெள்ளை,பிங்க்,சிவப்பு வண்ணங்களில் கிடைகிறது.

ரகம்.
செவ்வரளி, வெள்ளை அரளி.

பதியன் நடவு
ஒரு வரிசையில் குச்சிகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி இரண்டு நுனி பாகங்களை மண்ணில் புதையுமாறு நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். (மழை பெய்தால் அதிகம் தண்ணீர் தேவையில்லை).

செடியை வெட்டி விட்டும் இதன் வளர்ச்சியை கட்டுபடுத்தலாம்.பின்னர் பக்க கிளைகளும் வரும்.

கொடி அரும்பு

கிராமத்தில் வீட்டின் வாசலில் இந்த கொடியை பார்க்கலாம்.நன்கு மனம் வீசும் மலர்களை கொண்டது. பதியம் போட்டு நடலாம்.
அடியுரம்
ஆட்டு எரு ஒரு செடிக்கு 5 கிலோ அல்லது வண்டல் மண் 10 கிலோ போடலாம். அல்லது மண்புழு உரம் போட வேண்டும்.
நீர் நிர்வாகம்
15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். (மழை பெய்தால் அதிகம் தண்ணீர் தேவையில்லை).
உரநிர்வாகம்
முதல் உரமாக கடலை புண்ணாக்கை செடிக்கு அரை அடி தள்ளி போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
மேலுரம்
கடலைப்புண்ணாக்கு செடிக்கு அரை அடி தள்ளி இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
சுருட்டை நோய் தாக்குதல்;
சுருட்டை நோய் தாக்குதலின் அறிகுறி செடியின் இலை சுருண்டு செடி வெளுத்தும் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை
சல்பர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
வேர்அழுகல் தாக்குதல்
செடி நுனியில் இருந்து காய்ந்து வரும். அந்தச் செடியைப் பிடுங்கிப் பார்த்தால் வேர் அழுகி செடி பட்டுக் காணப்படும். வேர்பட்டை கையில் பிடித்தால் உருவினால் வந்துவிடும்
கட்டுப்படுத்தும் முறை
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி தண்ணீரில் கரைத்து வயலில் ஈரம் இருக்கும் வேர் பாகம் நனையும்படி ஊற்ற வேண்டும். ஒரு செடிக்கு 250 கிராம் வேப்பம் புண்ணாக்கு இட்டு கட்டுப்படுத்தலாம்.
அறுவடைத் தொழில்
தினமும் காலையில் நன்கு பருத்த பூக்களை பறிக்க வேண்டும்.

ஜாதிமல்லி

இந்த பூ கொடி வகையை சேர்ந்தது. நன்கு உயர்ந்த மனம் கொண்டது. மாலை வேளையில் அரும்புகளை பறிக்கலாம்.

நீர் நிர்வாகம்
15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். (மழை பெய்தால் அதிகம் தண்ணீர் தேவையில்லை)

மேலுரம்
கடலைப் புண்ணாக்கு தூளை செடியைச் சுற்றி போட்டு மண்ணால் மூடி நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு செடிக்கு 2 கிலோ மண்புழு உரத்துடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

அறுவடைத்தொழில் நுட்பம்

ஒரு வருடத்திற்கு பிறகு பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். தினமும் காலை 9 மணிக்குள் பூக்களை பறிக்க வேண்டும்.
கோழிகொண்டை
கோழிகொண்டை
பெயரிலேயே பூ வின் வடிவத்தை கொண்ட மலர். மாலை கட்ட பயன்படும். மாடி தோட்டத்தில் அழகுக்காக வளர்ப்பார்கள்.
விதை போட்டு செடி உருவாக்கலாம். இதன் விதை பூவின் நடுவில் இருக்கும்.

விதை உருவம், எள்ளு மாதரி சிறிய அளவில் கருமையுடன் பாளபல என்று இருக்கும்.
குழி தட்டில் நாற்று விட்டும் நடலாம்.

ரகம்
ரோஸ், டார்க் சிவப்பு.

பட்டம்
வருடம் முழுவதும் நடவு செய்யலாம்.

பயிர் இடைவெளி
வரிசைக்கு வரிசை 2 அடி செடிக்கு செடி ஒரு அடி

நீர் நிர்வாகம்
கரிசல்மண்ணாக இருந்தால் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செம்மண்ணாக இருந்தால் வாரம் 2 தண்ணீர் பாய்ச்ச வேண்டும்

அறுவடைத்தொழில்நுட்பம்
நாற்று செய்த 90ஆம் நாள் பூ பூக்க ஆரம்பிக்கும். வாரம் ஒரு முறை பூக்களை அறுவடை செய்ய வேண்டும்.

குண்டு மல்லி

மதுரைக்கு பெயர் போன மல்லி இனி உங்கள் வீட்டிலும் பூக்கும். உங்கள் முயற்சியால்

ரகம்
செடிமல்லி,கொடிமல்லி.

அடியுரம்
தொழு உரமாக 5 கிலோ, கடலைப்புண்ணாக்கு 250 கிராம், என்ற அளவில் கலந்து ஒரு குழிக்கு இடவேண்டும்.

நீர் நிர்வாகம்
10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். (மழை பெய்தால் அதிகம் தண்ணீர் தேவையில்லை)

உரநிர்வாகம்
கடலை புண்ணாக்கை செடிக்கு அரை அடி தள்ளி குழி எடுத்து உரம் வைத்து மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மேலுரமாக, கடலைப் புண்ணாக்கு 50 கிலோவும் போடவேண்டும். 2 மாதத்திற்கு ஒரு முறை போடவேண்டும். பெரிய செடியாக இருந்தால் 100 கிராம் கடலை புண்ணாக்கு, கலந்து செடியைச் சுற்றி சிறிது குழி வெட்டி போட்டு மண்ணால் மூடவேண்டும்.

முக்கிய குறிப்பு
வெயில் காலங்களில் பூ அறுவடை முடிந்தவுடன் செடியின் கிளைகளை வெட்டி கவாத்து செய்து, செடியின் கிளைகள் அனைத்தையும் ஒன்றாகக் கட்டி விட வேண்டும். பிறகு 20 நாள் கழித்து நீர்ப் பாய்ச்சி கட்டினை அவிழ்த்துவிட வேண்டும்

நந்தியாவட்டை

நந்தியாவட்டை ஒரு செடியினம்.இதன் இலைகள் எதிரடுக்கில் அமைந்துள்ள கரும்பச்சை நிறமாகும்.

இதன் பூக்கள் வெந்நிறமாக இருக்கும். மலர் பல அடுக்கு இதழ்களையுடைய இனமும் காணப்படுகின்றன.

பூசைக்கு உரிய மலர்களானதால் திருக்கோயில் நந்தவனங்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப் படுகின்றன. வளமான எல்லா இடங்களிலும் வளர்க்கூடியது.

இதன் பிறப்பிடம் வட இந்தியா. இதை மேற்கு ஆப்பிரிக்காவில் அழகுப் பூஞ்செடியாக வளர்க்கிறார்கள். இது 3 – 5 அடி உயரங்கூட வளரும்.

இது முக்கியமாக கண் நோயிக்கான மருந்தாகப் பயன் படும். இனப் பெருக்கம் விதைகள் மூலமும் கட்டிங் மூலமும் செய்யப்படுகின்றது.

சங்குப் பூ

சங்குப் பூ கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இதன் பூக்கள் பார்ப்பதற்கு சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ என்ப் பெயர் வந்தது.
இது கொடி வகையைச் சேர்ந்தது. இதன் பூக்கள் நீல நிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும்.இது கூட்டிலைகளையுடைய ஏறு கொடி. சங்குப்பூ கொடியாக வளரும். இயலுபுடையது.
அழகுக்காக வீடுகளிலும்வளர்க்கப் படுகின்றது. தட்டையான, அவரை போன்று காய்களையுடையது.ஒரு விதை போட்டல் போதும் நண்பர்களே. உங்கள் வேலி முழுவதும் பரவிடும். பிறகு காய்கள் காய்ந்து வெடித்து விதைகள் முளைக்கும்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும் நண்பர்களே.
வெள்ளை,நீளம் மாற்றி மாற்றி நட்டால் கண்ணை கவரும்.எப்போதும் இலைகள் பச்சை பசேல் என்று இருக்கும்.
மரத்தில் இந்த கொடியை ஏற்றி விட்டால்,அடர்த்தியாக பரவ கூடியது இதன் கொடிகள், பறவைகள் கூடு கட்ட சிறந்த இடமாக அமையும் நண்பர்களே. அதிலும் பழ மரம் என்றால் நல்ல வசதியாக இருக்கும் பறவைகளுக்கு.
பொதுவாக மருத்துவத்திற்கு வெண்ணிறப் பூவை உடைய வெண் காக்கட்டானே பயன்படுத்தப் படுகின்றது. இது சிறந்த மருத்துவப் பயன் உடையது.காக்கண விதைகள் நறு மணம் உடையதாகவும் புளிப்புச் சுவை கொண்டதாகவும் இருக்கும். இதன் குணம் சிறுநீர் பெருக்குதல், குடற் பூச்சிக் கொல்லுதல், தாது வெப்பு அகற்றுதல், பேதி, வாந்தி, தும்மல், உண்டாக்குதல்.

Scroll to Top