You cannot copy content of this page

009 மகளிர் இழிவு

மகளிர் இழிவு

இலைநல வாயினும் எட்டி பழுத்தால் குலைநல வாங்கனி கொண்டுண லாகா முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல் விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே.  1

மனைபுகு வார்கள் மனைவியை நாடில் சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும் கனவது போலக் கசிந்தெழும் இன்பம் நனவது போலவும் நாடவொண் ணாதே.  2

இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர் புயலுறும் புல்லின் புணர்ந்தவர் எய்தும் மயலுறும் வானவர் சார்விது என்பார் அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.  3

வையகத் தேமட வாரொடும் கூடியென் மெய்யகத் தோருளம் வைத்த விதியது கையகத் தேகரும் பாலையின் சாறுகொள் மெய்யகத் தேபெறு வேம்பது வாமே.  4

கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில் ஆழ நடுவர் அளப்புறு வார்களைத் தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில் பூழை நுழைந்தவர் போகின்ற வாறே.  5

Scroll to Top