You cannot copy content of this page

018 நடுவு நிலைமை

நடுவு நிலைமை

நடுவுநின் றார்க்கு அன்றி ஞானமும் இல்லை நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர் நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.  1

நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன் நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி நடுவுநின் றார்சிலர் ஞானிகள் ஆவோர் நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே.  2

நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவர் நடுவுநின் றார்சிலர் தேவரு மாவர் நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவர் நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.  3

தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே.  4

Scroll to Top