You cannot copy content of this page

003 செல்வம் நிலையாமை

செல்வம் நிலையாமை

அருளும் அரசனும் ஆனையும் தேரும் பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம் தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின் மருளும் பினையவன் மாதவ மன்றே.  1

இயக்குறு திங்கள் இருட்பிழம்பு ஒக்கும் துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா மயக்கற நாடுமின் வானவர் கோனைப் பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே.  2

தன்னது சாயை தனக்குத வாதுகண்டு என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள் உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.  3

ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும் கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும் ஓட்டித் துரந்திட்டு அதுவலி யார்கொளக் காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.  4

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின் ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக் கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே.  5

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல் அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே றாகச் சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே.  6

வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந் தாரும் அளவு ஏது எமக்கென்பர் ஒண்பொருள் மேவும் அதனை விரிவுசெய் வார்கட்குக் கூவும் துணையொன்று கூடலு மாமே.  7

வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின் காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.  8

உடம்போடு உயிரிடை விட்டோ டும் போது அடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும் விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர் சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.  9

Scroll to Top