You cannot copy content of this page

Day: 24 February 2020

002 திருவடிப் பேறு

திருவடிப் பேறு இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே பசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச் சிவந்த குருவந்து சென்னிகை வைக்க உவந்த குருபதம் உள்ளத் துவந்ததே.  1 தாடந்த போதே தலைதந்த எம்மிறை வாள்தந்த ஞான வலியையுந் தந்திட்டு வீடந்த மின்றியே யாள்கென விட்டருட் பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே.  2 தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்னந்தி தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.  3 உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத் திரையற்ற …

002 திருவடிப் பேறு Read More »

001 சிவகுரு தரிசனம்

சிவகுரு தரிசனம் பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச் சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச் சத்தும் அசத்துஞ் சதசத்துங் காட்டலாற் சித்தம் இறையே சிவகுரு வாமே.  1 பாசத்தைக் கூட்டியே கட்டுப் பறித்திட்டு நேசித்த காயம் விடிவித்து நேர்நேரே கூசற்ற முத்தியிற் கூட்டலா நாட்டத்த தாசற்ற சற்குரு அம்பலமாமே.  2 சித்திகள் எட்டோடுந் திண்சிவ மாக்கிய சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச் சத்தியும்மந்திர சாதக போதமும் பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே.  3 எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய் நல்லார் உள்ளத்து மிக்கருள் …

001 சிவகுரு தரிசனம் Read More »

021 உட்சமயம்

உட்சமயம் இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம் அமைய வகுத்தவன் ஆதி புராணன் சமயங்க ளாறும்தன் றாளிணை நாட அமையங் குழல்கின்ற ஆதிப் பிரானே.  1 ஒன்றது பேரூர் வழியா றதற்குள என்றது போல இருமுச் சமயமும் நன்றிது தீதிது என்றுரை யாளர்கள் குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே.  2 சைவப் பெருமைத் தனிநா யகன்தன்னை உய்ய வுயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை மெய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய் வையத் தலைவனை வந்தடைந் துய்மினே.  3 சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற் பவனவன் வைத்த …

021 உட்சமயம் Read More »

019 நிராசாரம்

நிராசாரம் இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங் கமையறிந் தாருட் கலந்துநின் றானே.  1 பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர் நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர் ஏங்கி உலகில் இருந்தழு வாரே.  2 இருந்தழு வாரும் இயல்புகெ ட்டாரும் அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில் வருந்தா வகைசெய்து வானவர் கோனும் பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.  3 தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர் பாரறி வாளர் …

019 நிராசாரம் Read More »

018 புறச் சமய தூடணம்

புறச் சமய தூடணம் ஆயத்துள் நின்ற அறுசம யங்களுங் காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா மாயக் குழியில் விழுவர் மனைமக்கள் பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே.  1 உள்ளத்து ளேதான் கரந்தெங்கும் நின்றவன் வள்ளல் தலைவன் மலருறை மாதவன் பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படுங் கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.  2 உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க் குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க் குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.  3 ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர் …

018 புறச் சமய தூடணம் Read More »

017 சத்திநிபாதம்

சத்திநிபாதம் இருட்டறை மூலை யிருந்த கிழவி குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி மருட்டி யவனை மணம்புரிந் தாளே.  1 தீம்புல னான திசையது சிந்திக்கில் ஆம்புல னாயறிவார்க்கமு தாய்நிற்குந் தேம்புல னான தெளிவறி வார்கட்குக் கோம்புல னாடிய கொல்லையு மாமே.  2 இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி அருள்நீங்கா வண்ணமே யாதியருளும் மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப் பொருள்நீங்கா இன்பம் புலம்பயின் றானே.  3 இருள்சூ ழறையில் இருந்தது நாடிற் பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போன் …

017 சத்திநிபாதம் Read More »

016 சாயுச்சியம்

சாயுச்சியம் சைவஞ் சிவனுடன் சம்பந்த மாவது சைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல் சைவஞ் சிவந்தன்னைச் சாராமல் நீங்குதல் சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே.  1 சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல் சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதற் சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச் சாயுச் சியமனத் தானந்த சத்தியே.  2

015 சாரூபம்

சாரூபம் தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந் தங்குஞ்சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடா அங்கத் துடல்சித்தி சாதன ராகுவர் இங்கிவ ராக விழிவற்ற யோகமே.  1 சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே சயிலம தாகுஞ் சராசரம் போலப் பயிலுங் குருவின் பதிபுக்க போதே கயிலை இறைவன் கதிர்வடி வாமே.  2

014 சாமீபம்

சாமீபம் பாசம் பசுவான தாகும்இச் சாலோகம் பாச மருளான தாகும்இச் சாமீபம் பாசஞ் சிரமான தாகும்இச் சாரூபம் பாசங் கரைபதி சாயுச் சியமே.  1

013 சாலோகம்

சாலோகம் சாலோக மாதி சரியாதி யிற்பெறுஞ் சாலோகஞ் சாமீபந் தங்குஞ் சரியையால் மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம் பாலோகம் இல்லாப் பரனுரு வாமே.  1 சமயங் கிரியையிற் றன்மனங் கோயில் சமய மனுமுறை தானே விசேடஞ் சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ் சமயாபி டேகந் தானாஞ் சமாதியே.  2

012 தாச மார்க்கம்

தாச மார்க்கம் எளியனல் தீப மிடல்மலர் கொய்தல் அளிதின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல் பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி தளிதொழில் செய்வது தான்தாசமார்க்கமே.  1 அதுவிது வாதிப் பரமென் றகல்வர் இதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லை விதிவழி யேசென்று வேந்தனை நாடு மதுவிது நெஞ்சில் தணிக்கின்ற வாறே.  2 அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறு சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல் வந்திப்பன் வானவர் தேவனை நாடோறும் வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.  3 அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி உன்னுவர் உள்மகிழ்ந்துண்ணின் …

012 தாச மார்க்கம் Read More »

011 சற்புத்திர மார்க்கம்

சற்புத்திர மார்க்கம் மேவிய சற்புத்திர மார்க்க மெய்த்தொழில் தாவிப்ப தாஞ்சக மார்க்கம் சகத்தொழில் ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத் தேவியோ டொன்றல் சன்மார்க்கத் தெளிவதே.  1 பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல் ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை நேசித்திட் டன்னமும் நீசுத்தி செய்தன்மற் றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.  2 அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும் மறுகா நரையன்னந் தாமரை நீலங் குறுகா நறுமலர் கொய்வன கண்டுஞ் சிறுகால் அறநெறி சேரகி லாரே. 3 அருங்கரை யாவது அவ்வடி நீழற் பெருங்கரை …

011 சற்புத்திர மார்க்கம் Read More »

010 சகமார்க்கம்

சகமார்க்கம் சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது மன்மார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம் பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந் துன்மார்க்க ஞானத் துறுதியு மாமே.  1 மருவுந் துவாதச மார்க்கமில் லாதார் குருவுஞ் சிவனுஞ் சமயமுங் கூடார் வெருவுந் திருமகள் வீட்டில்லை யாகும் உருவுங் கிளையும் ஒருங்கிழப் பாரே.  2 யோகச் சமாதியின் உள்ளே யகலிடம் யோகச் சமாதியின் உள்ளே யுளரொளி யோகச் சமாதியின் உள்ளே யுளசத்தி யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே.  3 யோகமும் போகமும் யோகியர்க் காகுமால் யோகஞ் சிவரூபம் …

010 சகமார்க்கம் Read More »

009 சன்மார்க்கம்

சன்மார்க்கம் சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத் தோற்றங் களான சுருதிச் சுடர்கண்டு சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க் கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.  1 சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி நன்மார்க்கஞ் சேர்ந்துய்ய வையத்துள் ளார்க்கு வகுத்தவைத் தானே.  2 தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப் பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக் குருபத்தி செய்யுங் குவலயத் தோர்க்குத் தருமுத்திச் சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே.  3 தெளிவறி யாதார் சிவனை யறியார் தெளிவறி யாதார் …

009 சன்மார்க்கம் Read More »

008 ஞானம்

ஞானம் ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம் ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.  1 சத்தமுஞ் சத்த மனனும் தகுமனம் உய்த்த வுணர்வு முணர்த்தும் அகந்தையுஞ் சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையுஞ் சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே.  2 தன்பால் உலகுந் தனக்கரு காவதும் அன்பா லெனக்கரு ளாவது மாவன என்பார்கள் ஞானமும் எய்துஞ் சிவோகமும் பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே.  3 இருக்குஞ் சேம இடம்பிரமமாகும் வருக்கஞ் சராசர மாகும் …

008 ஞானம் Read More »

007 யோகம்

யோகம் நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித் தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச் சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக் குறியறி வாளர்க்குக் கூடலு மாமே.  1 ஊழிதோ றூழிஉணர்ந்தவர்க் கல்லது ஊழிதோ றூழி உணரவுந் தானொட்டான் ஆழி அமரும் அரியயன் என்றுளார் ஊழி முயன்றும் ஓருச்சியு ளானே.  2 பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற் சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு நாவி யணைந்த நடுதறி யாமே.  3 உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் கந்த மலரிற் கலக்கின்ற …

007 யோகம் Read More »

006 கிரியை

கிரியை பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண் டெத்திக்கி லவரில்லை என்பதின் அமலர்க் கொத்துத் திருவடி நீழல் சரணெனத் தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.  1 கானுறு கோடி கடிகமழ் சந்தனம் வானுறு மாமல ரிட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.  2 கோனக்கன் றாயே குரைகழல் ஏத்துமின் ஞானக்கன் றாகிய நடுவே யுழிதரும் வானக்கன் றாகிய வானவர் கைதொழு மானக்கன் றீசன் அருள்வள்ள மாமே.  3 இதுபணிந் தெண்டிசை மண்டிலம் எல்லாம் அதுபணி செய்கின் …

006 கிரியை Read More »

005 அசுத்த சைவம் சரியை

அசுத்த சைவம் சரியை நேர்ந்திடு மூல சரியை நெறியிதென் றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான் ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத் தோர்ந்திடுஞ் சுத்த சைவத் துயிரதே.  1 உயிர்க்குயி ராய்நிற்றல் ஒண்ஞான பூசை உயிர்க்கொளி நோக்கல் மகாயோக பூசை உயிர்ப்பெறு மாவா கனம்புறப் பூசை செயிற்கடை நேசஞ் சிவபூசை யாமே.  2 நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந் தேடித் திரிந்து சிவபெரு மான்என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.  3 பத்தர் சரிதை படுவோர் கிரியையோர் …

005 அசுத்த சைவம் சரியை Read More »

004 கடும் சுத்த சைவம்

கடும் சுத்த சைவம் வேடம் கடந்து விகிர்தன்தன் பால்மேவி ஆடம் பரமின்றி ஆசாபா சஞ்செற்றுப் பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச் சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே.  1 உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்து மடலான மாமாயை மற்றுள்ள நீவப் படலான கேவல பாசந் துடைத்துத் திடமாய்த் தனையுறல் சித்தாந்த மார்க்கமே.  2 சுத்தச் சிவனுரை தானத்தில் தோயாமல் முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம் அத்தகை யான்மா அரனை அடைந்தற்றாற் சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.  3 நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே …

004 கடும் சுத்த சைவம் Read More »

003 மார்க்க சைவம்

மார்க்க சைவம் பொன்னாற் சிவசாத னம்பூதி சாதனம் நன்மார்க்க சாதனம் மாஞான சாதனந் துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனஞ் சன்மார்க்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே.  1 கேடறு ஞானி கிளர்ஞான பூபதி பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின் ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன் பாடுறு சுத்தசை வப்பத்த நித்தனே.  2 ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன் வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மையொன் றாக முடிந்த வருஞ்சுத்த சைவமே.  3 சுத்தம் அசுத்தந் துரியங்கள் ஓரேழுஞ் சத்தும் …

003 மார்க்க சைவம் Read More »

002 அசுத்த சைவம்

அசுத்த சைவம் இணையார் திருவடி ஏத்துஞ் சீரங்கத் திணையார் இணைக்குழை யீரணை முத்திரை குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா தணைவாஞ் சரியை கிரியையி னார்க்கே.  1 காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த் தோதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன் சோதனை செய்து துவாதெச மார்க்கராய் ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே.  2 கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர் கண்டங்கள் ஒன்பதுங் கண்டாய் அரும்பொருள் கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங் கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.  3 ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன் மோன …

002 அசுத்த சைவம் Read More »

001 சுத்த சைவம்

சுத்த சைவம் ஊரும் உலகமும் ஓக்கப் படைக்கின்ற பேரறி வாளன் பெருமை குறித்திடின் மேருவும் மூவுல காளி யிலங்கெழுந் தாரணி நால்வகைச் சைவமு மாமே.  1 சத்தும் அசத்துஞ் சதசத்துந் தான்கண்டு சித்தும் அசித்துஞ் சேர்வுறா மேநீத்த சுத்தம் அசுத்தமுந் தோய்வுறா மேநின்ற நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே.  2 கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம் முற்பத ஞான முறைமுறை நண்ணியே சொற்பத மேவித் துரிசற்று மேலான தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.  3 வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்த நாதாந்தங் …

001 சுத்த சைவம் Read More »

013 நவாக்கரி சக்கரம்

நவாக்கரி சக்கரம் நவாக்கரி சக்கர நானுரை செய்யின் நவாக்கரி ஒன்று நவாக்கரி யாக நவாக்கரி எண்பத் தொருவகை யாக நவாக்கரி யக்கிலீ சௌமுத லீறே.  1 சௌமுதல் அவ்வவொடு ஹௌவுட னாங்கிரீம் கெளவு ளுமையுளுங் கலந்திரீம் சிரீமென் றொவ்வில் எழுங்கிலீ மந்திர பாதமாச் செவ்வுள் எழுந்து சிவாய நமவென்னே.  2 நவாக்கரி யாவது நானறி வித்தை நவாக்கரி யுள்ளெழும் நன்மைகள் எல்லாம் நவாக்கரி மந்திர நாவுளே ஓத நவாக்கரி சத்தி நலந்தருந் தானே.  3 நலந்தரு ஞானமுங் கல்வியும் எல்லாம் உரந்தரு …

013 நவாக்கரி சக்கரம் Read More »

Scroll to Top