You cannot copy content of this page

008 அடிமுடி தேடல்

அடிமுடி தேடல்

பிரமனும் மாலும் பிரானேநான் என்னப் பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க அரனடி தேடி அரற்றுகின் றாரே.  1

ஆனே ழுலகுற நின்றஎம் அண்ணலுந் தானே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும் வானே ழுலகுறும் மாமணி கண்டனை யானே அறிந்தேன் அவனாண்மை யாலே 2

ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ் சேணாய்வா னோரங்கித் திருவுரு வாய் அண்டத் தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந் தாண்முழு தண்டமு மாகிநின் றானே  3

நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன் அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது சென்றார் இருவர் திருமுடி மேற்செல நன்றாங் கழலடி நாடவொண் ணாதே.  4

சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர் மூவடி தாவென் றானும் முனிவரும் பாவடி யாலே பதஞ்செய் பிரமனுந் தாவடி யிட்டுத் தலைப்பெய்து மாறே  5

தானக் கமலத் திருந்த சதுமுகன் தானக் கருங் கடல் வாழித்1 தலைவனும் ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற தானப் பெரும்பொருள் தன்மைய தாமே 6

ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர் மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்னங்கண் டாலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங் கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே  7

வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள் ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர் ஆள்கொடுத் தின்பங் கொடுத்துக் கோளாகத்தன் தாள்கொடுத் தானடி சாரகி லாரே  8

ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு வாழி சதுமுகன் வந்து வெளிப்படும் வீழித் தலைநீர் விதித்தது காவெனும் ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே  9

Scroll to Top