You cannot copy content of this page

002 அசுத்த சைவம்

அசுத்த சைவம்

இணையார் திருவடி ஏத்துஞ் சீரங்கத் திணையார் இணைக்குழை யீரணை முத்திரை குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா தணைவாஞ் சரியை கிரியையி னார்க்கே.  1

காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த் தோதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன் சோதனை செய்து துவாதெச மார்க்கராய் ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே.  2

கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர் கண்டங்கள் ஒன்பதுங் கண்டாய் அரும்பொருள் கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங் கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.  3

ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன் மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும் ஏனை நிலமும் எழுதா மறையீறுங் கோனொடு தன்னையுங் காணுங் குணத்தனே.  4

Scroll to Top