You cannot copy content of this page

001 அட்டாங்க யோகம்

அட்டாங்க யோகம்

உரைத்தன வற்கரி ஒன்று முடிய நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப் பிரச்சதம் எட்டும்முன் பேசியே நந்தி நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே 1

செய்த இயம நியமஞ் சமாதிசென் றுய்யப் பராசத்தி உத்தர பூருவ மெய்த கவச நியாசங்கள் முத்திரை எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே  2

அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத் தன்னெறி சென்று சமாதியி லேநின்மின் நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம் புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே 3

இயம நியமமே எண்ணிலா ஆதனம் நயமுறு பிராணாயாமம் பிரத்தி யாகாரஞ் சயமிகு தாரணை தியானஞ் சமாதி அயமுறும் அட்டாங்க மாவது மாமே 4

Scroll to Top