You cannot copy content of this page

010 அட்டாங்க யோகப் பேறு

அட்டாங்க யோகப் பேறு

பதிக வகை: இயமம்

போதுகந் தேறும் புரிசடை யானடி யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர் ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு மாதுகந் தாடிடு மால்விடை யோனே  1   

பதிக வகை: நியமம்

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ் கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத் தெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே  2   

பதிக வகை: ஆதனம்

வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த் திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத் தருந்தண் முழவங் குழலும் இயம்ப இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே  3   

பதிக வகை: பிராணாயாமம்

செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக் கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல இன்பக் கலவி இருக்கலு மாமே  4   

பதிக வகை: பிரத்தியாகாரம்

சேருறு காலந் திசைநின்ற தேவர்கள் ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக் காருறு கண்டனை மெய்கண்ட வாறே  5   

பதிக வகை: தாரணை

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ் சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப் பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே  6   

பதிக வகை: தியானம்

தூங்க வல் லார்க்கும் துணையேழ் புவனமும் வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிடுந் தேங்க 3வல் லார்க்கும் திளைக்கும் அமுதமுந் தாங்கவல் லார்க்குந் தன்தன்னிட மாமே 7   

பதிக வகை: சமாதி

காரிய மான உபாதியைத் தாங்கடந் தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற ஆரிய காரண மாய தவத்திடைத் தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே  8

Scroll to Top