You cannot copy content of this page

022 குரு நிந்தை

குரு நிந்தை

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள் உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர் கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர் பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே.  1

ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர் ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் குஓர்உகம் வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே 2

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள் சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர் அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும் சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே 3

மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர் சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர் பிந்திச் சுணங்காய்ப் பிறந்தொரு நூறுரு வந்து புலையராய் மாய்வர்கள் மண்ணிலே.  4

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத் தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும் வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும் நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.  5

சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின் நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப் பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே.  6

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும் கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக் கைப்பிட்டுண் பான்போன்றுங் கன்மிஞானிக் கொப்பே.  7

Scroll to Top