You cannot copy content of this page

002 இயமம்

இயமம்

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ் செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல் கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே  1

கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன் நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம் இல்லான் இயமத் திடையில்நின் றானே  2

Scroll to Top