You cannot copy content of this page

012 மறைத்தல்

மறைத்தல்

உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை உள்ளம்விட் டோ ரடி நீங்கா ஒருவனை1 உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்2 உள்ளம் அவனை உருவறி யாதே 1

இன்பப் பிறவி படைத்த இறைவனுந் துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்1 என்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை முன்பிற் கொளுவி முடிகுவ 2

இறையவன் மாதவன் இன்பம் படைத்த மறையவன் மூவரும் வந்துடன் கூடி இறையவன் செய்த இரும்பொறி யாக்கை மறையவன் வைத்த பரிசறி யாதே 3

காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச் சேண்படு பொய்கைச் செயலணை யாரே  4

தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம் அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானுஞ் சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும் இருளும் அறநின் றிருட்டறை யாமே  5

அரைக்கின் றருள்தரும் அங்கங்கள் ஓசை உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன் றொவ்வாப் பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க் கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.  6

ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை வெளிப்பட் டிறைஞ்சின்நும் வேட்சியு மாமே  7

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் சென்றங் கியங்கும்1 அரன்திரு மாலவன் மன்றது செய்யும் மலர்மிசை மேலயன் என்றிவ ராகி இசைந்திருந் தானே 8

ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்1 இருங்கரை மேலிருந் தின்புற நாடி வருங்கரை ஓரா வகையினிற் கங்கை அருங்கரை பேணில் அழுக்கற லாமே 9

மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும் உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா அண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே.  10

Scroll to Top