You cannot copy content of this page

001 சுத்த சைவம்

சுத்த சைவம்

ஊரும் உலகமும் ஓக்கப் படைக்கின்ற பேரறி வாளன் பெருமை குறித்திடின் மேருவும் மூவுல காளி யிலங்கெழுந் தாரணி நால்வகைச் சைவமு மாமே.  1

சத்தும் அசத்துஞ் சதசத்துந் தான்கண்டு சித்தும் அசித்துஞ் சேர்வுறா மேநீத்த சுத்தம் அசுத்தமுந் தோய்வுறா மேநின்ற நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே.  2

கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம் முற்பத ஞான முறைமுறை நண்ணியே சொற்பத மேவித் துரிசற்று மேலான தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.  3

வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்த நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியர் பூதாந்த போதாந்த மாகப் புனஞ்செய்ய நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.  4

Scroll to Top