You cannot copy content of this page

016 வாரசரம்

வாரசரம்

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம் ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம் வள்ளிய பொன்னே வளரும் பிறையிடந் தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே  1

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றுந் தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில் ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே  2

செவ்வாய் வியாழஞ் சனிஞாயி றேஎன்னும் இவ்வா றறிகின்ற யோகி இறைவனே ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட் டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே  3

மாறி வருமிரு பான்மதி வெய்யவன் ஏறி இழியுந் இடைபிங் கலையிடை ஊறும் உயிர்நடு வேயுயி ருக்கிரந் தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே  4

உதித்து வலத்திடம் போகின்ற போது அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும் உதித்தது வேமிக வோடிடு மாகில் உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே 5

நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி இடுகின்ற வாறுசென் றின்பணி சேர முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே  6

ஆயும் பொருளும் அணிமலர் மேலது வாயு விதமும் பதினா றுளவலி போய மனத்தைப் பொருகின்ற வாதாரம் ஆயவு நாளு முகுர்த்தமு மாமே 7

Scroll to Top