You cannot copy content of this page

010 வயிரவச் சக்கரம்

வயிரவச் சக்கரம்

அறிந்த பிரதமையோ டாறு மறிஞ்சு அறிந்தவச் சத்தமி மேலிவை குற்றம் அறிந்தவை யொன்றுவிட் டொன்றுபத் தாக அறிந்த வலமது வாக நடவே.  1

நடந்த வயிரவன் சூல கபாலி கடந்த பகைவனைக் கண்ணது போக்கித் தொடர்ந்த வுயிரது வுண்ணும் பொழுது படர்ந்த வுடல்கொடு பந்தாட லாமே.  2

ஆமேவப் பூண்டரு ளாதி வயிரவன் ஆமே கபாலமுஞ் சூலமுங் கைகொண்டங் காமே தமருக பாசமுங் கையது வாமே சிரத்தொடு வாளது கையே.  3

கையவை யாருங் கருத்துற நோக்கிடு மெய்யது செம்மை விளங்கு வயிரவன் துய்யரு ளத்தில் துளங்குமெய் யுற்றதாய்ப் பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.  4

பூசனை செய்யப் பொருந்தியோ ராயிரம் பூசனை செய்ய மதுவுட னாடுமால் பூசனை சாந்து சவாது புழுகுநெய் பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.  5

வேண்டிய வாறு கலகமு மாயிடும் வேண்டிய ஆறிணுண் மெய்யது பெற்றபின் வேண்டிய வாறு வரும்வழி நீநட வேண்டிய வாறது வாகுங் கருத்தே.  6

Scroll to Top