You cannot copy content of this page

007 யோகம்

யோகம்

நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித் தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச் சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக் குறியறி வாளர்க்குக் கூடலு மாமே.  1

ஊழிதோ றூழிஉணர்ந்தவர்க் கல்லது ஊழிதோ றூழி உணரவுந் தானொட்டான் ஆழி அமரும் அரியயன் என்றுளார் ஊழி முயன்றும் ஓருச்சியு ளானே.  2

பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற் சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு நாவி யணைந்த நடுதறி யாமே.  3

உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச் சிந்தை யுறவே தெளிந்திருள் நீங்கினால் முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.  4

எழுத்தோடு பாடலும் எண்ணெண் கலையும் பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்கா வழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன் வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே.  5

விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ ராகும் விரும்பிநின் றேசெயின் மெய்யுரை யாகும் விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும் விரும்பிநின் றேசெயின் விண்ணவ னாகுமே.  6

பேணிற் பிறவா உலகருள் செய்திடுங் காணில் தனது கலவியு ளேநிற்கும் நாணில் நரக நெறிக்கே வழிசெயும் ஊனிற் சுடுமங்கி யுத்தமன் றானே.  7

ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர் எத்தனை யாயிரம் வீழ்ந்தனர் எண்ணிலி சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய் அத்த னிவனென்றே அன்புறு வார்களே.  8

யோகிக்கு யோகாதி மூன்றுள கொண்டுற்றோர் ஆகத் தருகிரி யாதி சரியையாந் தாகத்தை விட்ட சரியையொன் றாம்ஒன்றுள் ஆதித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே.  9

யோகச் சமயமே யோகம் பலவுன்னல் யோக விசேடமே அட்டாங்க யோகமாம் யோகநிர் வாணமே யுற்ற பரோதயம் யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே.  10

Scroll to Top