You cannot copy content of this page

Day: 25 February 2020

017 முத்திர பேதம்

முத்திர பேதம் நாலேழு மாறவே நண்ணிய முத்திரை பாலான மோன மொழியில் பதிவித்து மேலான நந்தி திருவடி மீதுய்யக் கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே.  1 துரியங்கள் மூன்றுஞ் சொருகிட னாகி அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி மருவிய சாம்பவி கேசரி உண்மை பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே.  2 சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம் ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரை ஓம்பயில் ஒங்கிய உண்மைய கேசரி நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரையே.  3 தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும் ஞானத்தின் …

017 முத்திர பேதம் Read More »

016 பிட்சா விதி

பிட்சா விதி விச்சுக் கலம் உண்டு வேலிச்செய் ஒன்றுண்டு உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது அச்சம்கெட்டு அச்செயல்1 அறுத்துண்ண மாட்டாதார் இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே. 1 பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில் பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப் பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப் பிச்சையது ஏற்றான் பிரமன்  2 பரந்துலகு ஏழும் படைத்த பிரானை இரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும் நிரந்தர மாக நினையும் அடியார் இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே.  3 வரஇருந் தான்வழி நின்றிடும் …

016 பிட்சா விதி Read More »

015 போசன விதி

போசன விதி எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு கட்ட அடிசில் அமுதென்று எதிர்கொள்வர் ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம் விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே.  1 அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர் உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்குப் பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து இச்சைவிட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே.  2

014 அடியார் பெருமை

அடியார் பெருமை திகைக்குரி யானொரு தேவனை நாடும் வகைக்குரி யானொரு வாது இருக்கில் பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும் அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே.  1 அவ்வுல கத்தே பிறந்துஅவ் உடலோடும் அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர் அவ்வுல கத்தே அரனடி கூடுவர் அவ்வுல கத்தே அருள்பெறு வாரே.  2 கொண்ட குறியும் குலவரை உச்சியும் அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும் எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்தினுள் உண்டெனில் நாம்இனி உய்ந்தொழிந் தோமே.  3 அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும் கொண்ட …

014 அடியார் பெருமை Read More »

013 மகேசுவர பூசை

மகேசுவர பூசை படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.  1 தண்டுஅறு சிந்தை தபோதனார் தாம்மகிழ்ந்து உண்டது மூன்று புவனமும் உண்டது கொண்டது மூன்று புவனமும் கொண்டதுஎன்று எண்திசை நந்தி எடுத்துரைத் தானே.  2 மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை ஆத்தனுக்கு ஈந்த அரும்பொரு ளானது மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும் தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே.  3 அகரம் ஆயிரம் …

013 மகேசுவர பூசை Read More »

012 குருபூசை

குருபூசை ஆகின்ற நந்தி அடித்தா மரைபற்றிப் போகின்றுபதேசம் பூசிக்கும் பூசையும் ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின்மேல் போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே.  1 கானுறு கோடி கடிகமழ் சந்தனம் வானுற மாமலர் இட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது தேனமர் புங்குழல் சேரஒண் ணாதே.  2 மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன் ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம் சேவடி சேரல் செயலறல் தானே.  3 உச்சியும் காலையும் மாலையும் ஈசனை நச்சுமின் நச்சி நமவென்று …

012 குருபூசை Read More »

011 சிவபூசை

சிவபூசை உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.  1 வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக் காட்டவும் நாம்இலம் காலையும் மாலையும் ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும் பாட்டவி காட்டுதும் பால்அவி யாகுமே.  2 பான்மொழி பாகன் பராபரன் தானாகும் ஆன சதாசிவன் தன்னைஆ வாகித்து மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு சீன்முகம் செய்யச் சிவனவன் ஆகுமே.  3 நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால் கனைகழல் ஈசனைக் …

011 சிவபூசை Read More »

010 அருள் ஒளி

அருள் ஒளி அருளில் தலைநின்று அறிந்துஅழுந் தாதார் அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார் அருளின் பெருமை அறியார் செறியார் அருளில் பிறந்திட்டு அறிந்துஅறி வாரே.  1 வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி ஆரா அமுதளித்து ஆனந்தி பேர்நந்தி பேரா யிரமுடைப் பெம்மான்பேர் ஒன்றினில் ஆரா அருட்கடல் ஆடுகென் றானே.  2 ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் கண்டேன் சிவன்பெரும் தன்மையைக் கூடிய வாறே குறியாக் குறிதந்தென் ஊடுநின் றான்அவன் தன்னருள் உற்றே.  3 உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும் பற்றிய …

010 அருள் ஒளி Read More »

009 திருவருள் வைப்பு

திருவருள் வைப்பு இருபத மாவது இரவும் பகலும் உருவது ஆவது உயிரும் உடலும் அருளது ஆவது அறமும் தவமும் பொருளது உள்நின்ற போகமது ஆமே.  1 காண்டற்கு அரியன் கருத்திலன் நந்தியும் தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும் வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம் ஈண்டிக் கிடந்தங்கு இருளறும் ஆமே.  2 குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும் வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும் செறிப்புறு சிந்தையைக் சிக்கென நாடில் அறிப்புறு காட்சி அமரரும் ஆமே.  3 தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள் பேர்ந்தறி …

009 திருவருள் வைப்பு Read More »

008 சம்பிரதாயம்

சம்பிரதாயம் உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கி கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே.  1 உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான வியவார் பரமும்பின் மேவும் பிராணன் செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே உயலார் குருபரன் உய்யக் கொண்டானே.  2 பச்சிம திக்கிலே வைத்தஆ சாரியன் நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள் உச்சிக்கும் கீழது உள்நாக்கு மேலது வைச்ச பதமிது வாய்திற வாதே.  3 பெட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவோனை ஒட்டடித்து உள்ளமர் …

008 சம்பிரதாயம் Read More »

007 சிவலிங்கம்

சிவலிங்கம் குரைக்கின்ற வாரிக் குவலய நீரும் பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும் நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை வரைத்து வலம்செயு மாறுஅறி யேனே.  1 வரைத்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப் புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே.  2 ஒன்றெனக் கண்டேயெம் ஈசன் ஒருவனை நன்றென்று அடியிணை நான்அவனைத்தொழ வென்றுஐம் புலனும் மிகக்கிடந்து இன்புற அன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே.  3 மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன் பலந்தரும் ஐம்முகன் …

007 சிவலிங்கம் Read More »

006 ஞானலிங்கம்

ஞானலிங்கம் உருவும் அருவும் உருவோடு அருவும் மருவு பரசிவன் மன்பல் உயிர்க்கும் குருவு மெனநிற்கும் கொள்கையன் ஆகும் தருவென நல்கும் சதாசிவன் தானே.  1 நாலான கீழது உருவம் நடுநிற்க மேலான நான்கும் அருவம் மிகுநாப்பண் நாலான ஒன்றும் அருவுரு நண்ணலால் பாலாம் இவையாம் பரசிவன் தானே.  2 தேவர் பிரானைத் திசைமுக நாதனை நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை ஏவர் பிரான்என்று இறைஞ்சுவர் அவ்வழி யாவர் பிரானடி அண்ணலும் ஆமே.  3 வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற ஆண்டொரு திங்களும் …

006 ஞானலிங்கம் Read More »

005 ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவன்)

ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவன்) அகார முதலாய் அனைத்துமாய் நிற்கும் உகார முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும் அகார உகாரம் இரண்டும் அறியில் அகார உகாரம் இலிங்கம தாமே.  1 ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும் மேதாதி நாதமும் மீதே விரிந்தன ஆதார விந்து அதிபீட நாதமே போதாஇ லிங்கப் புணர்ச்சிய தாமே.  2 சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம் சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம் சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம் சத்தி சிவமாகும் தாபரம் தானே. 3 தானேர் எழுகின்ற சோதியைக் காணலாம் வானேர் …

005 ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவன்) Read More »

004 சதாசிவ லிங்கம்

சதாசிவ லிங்கம் கூடிய பாதம் இரண்டும் படிமிசை பாடிய கையிரண்டு எட்டுப் பரந்தெழுந் தேடு முகம்ஐந்து செங்கையின் மூவைந்து நாடும் சதாசிவம் நல்லொளி முத்தே. 1 வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன் மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும் ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும் சாதா ரணமாம் சதாசிவந் தானே.  2 ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை ஆகின்ற சத்தியின் உள்ளே கதிரெழ ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின் ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே.  3 அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம் …

004 சதாசிவ லிங்கம் Read More »

003 பிண்டலிங்கம்

பிண்டலிங்கம் மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம் மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம் மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.  1 உலந்திலர் பின்னும் உளரென நிற்பீர் நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப் புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக வலந்தரு தேவரை வந்திசெய் யீரே.  2 கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும் வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர் தாயில்கொண் டாற்போல் தலைவன்என் உட்புக வாயில்கொண்டு ஈசனும் ஆளவந் தானே.  3 கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை வாயில்கொண் டான்அடி …

003 பிண்டலிங்கம் Read More »

002 அண்டலிங்கம் (உலக சிவன்)

அண்டலிங்கம் (உலக சிவன்) இலிங்கம தாவது யாரும் அறியார் இலிங்கம தாவது எண்டிசை எல்லாம் இலிங்கம் தாவது எண்ணெண் கலையும் இலிங்கம தாக எடுத்தது உலகே.  1 உலகில் எடுத்தது சத்தி முதலா உலகில் எடுத்தது சத்தி வடிவாய் உலகில் எடுத்தது சத்தி குணமாய் உலகில் எடுத்த சதாசிவன் தானே.  2 போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும் ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பாலாம் ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம் ஆகம அத்துவா ஆறும் சிவமே.  3 ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் ஈசனை …

002 அண்டலிங்கம் (உலக சிவன்) Read More »

001 ஆறு ஆதாரம்

ஆறு ஆதாரம் நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும் கோலிமேல் நின்ற குறிகள் பதினாறும் மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும் காலங்கண் டான்அடி காணலும் ஆமே.  1 ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின் மேதாதி நாதாந்த மீதாம் பராசக்தி போதா லயத்த விகாரந் தனிற்போத மேதாதி ஆதார மீதான உண்மையே.  2 மேல்என்றும் கீழ்என்று இரண்டறக் காணுங்கால் தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும் பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரங் கார்ஒன்று கற்பகம் ஆகிநின்றானே.  3 ஆதார சோதனை யால்நாடி சுத்திகள் …

001 ஆறு ஆதாரம் Read More »

014 பக்குவன்

பக்குவன் தொழுதறி வாளர் கருதிகண் ணாகப் பழுதறியாத பரம குருவை வழியறி வார்நல் வழியறி வாளர் அழிவறி வார்மற்றை யல்லா தவரே.  1 பதைதொழிந் தேன்பர மாவுனை நாடி யதைத்தொழிந் தேன்இனி யாரொடுங் கூடேன் சிதைத்தடி யேன்வினை சிந்தனை தீர உதைத்துடை யாயுகந் தாண்டரு ளாயே.  2 பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச் சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே.  3 கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக உள்ள பொருளுடல் ஆவி …

014 பக்குவன் Read More »

013 அபக்குவன்

அபக்குவன் குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக் குருடுங் குருடுங் குழிவிழு மாறே.  1 மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி நினைப்பின் அதனின் நிழலையுங் காணார் வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார் புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே.  2 ஏயெனில் என்னென மாட்டார் பிரசைகள் வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந் தாய்முலை யாவ தறியார் தமருளோர் ஊனிலை செய்யும் உருவிலி தானே.  3 வாயொன்று சொல்லி மனமொன்று சிந்தித்து நீயொன்று செய்யல் …

013 அபக்குவன் Read More »

012 சிவ வேடம்

சிவ வேடம் அருளால் அரனுக் கடிமைய தாகிப் பொருளாந் தனதுடற் பொற்பதி நாடி இருளான தின்றி யிருஞ்செயல் அற்றோர் தெருளாம் அடிமைச் சிவவேடத் தோரே.  1 உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா உடல்கழன் றால்வேடம் உடனே கழலும் உடலுயிர் உண்மையென் றோர்ந்துகொள்ளாதார் கடலில் அகல்பட்ட கட்டையொத் தாரே.  2 மயலற் றிருளற்று மாமன மற்றுக் கயலுற்ற கண்ணியர் கையிணக் கற்றுத் தயலற் றவரோடும் தாமே தாமாகிச் செயலற் றிருப்பார் சிவவேடத் தாரே.  3 ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின் வேடங்கொண் டென்செய்வீர் …

012 சிவ வேடம் Read More »

011 ஞான வேடம்

ஞான வேடம் ஞானமி லார்வேடம் பூண்டும் நரகத்தர் ஞானமுள்ளார்வேடம்இன்றெனில்நன்முத்தர் ஞானமுளதாக வேண்டுவோர் நக்கன்பால் ஞானமுள வேட நண்ணிநிற் பாரே.  1 புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை நன்ஞானத்தோர்வேடம் பூணார் அருள்நண்ணித் துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர் பின்ஞானத் தோரொன்றும் பேசுகில்லாரே.  2 சிவஞானி கட்குஞ் சிவயோகி கட்கும் அவமான சாதனம் ஆகாது தேரில் நவமா மவர்க்கது சாதன நான்கும் உவமான மில்பொருள் உள்ளுற லாமே.  3 சுத்தித் திரிவர் கழுவடி நாய்போற் கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள் ஒத்துப் பொறியும் உடலும் …

011 ஞான வேடம் Read More »

010 திருநீறு

திருநீறு நூலுஞ் சிகையும் உணரார்நின் மூடர்கள் நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரமுயிர் ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே.  1 கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே.  2 அரசுட னாலத்தி யாகும்அக் காரம் விரவுகனலில் வியனுரு மாறி நிரவயன் நின்மலன் தான்பெற்ற நீதர் உருவம் பிரம உயர்குலம் ஆமே.  3

009 தவவேடம்

தவவேடம் தவமிக் கவரே தலையான வேடர் அவமிக் கவரே யதிகொலை வேடர் அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந் தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே.  1 பூதி யணிவது சாதன மாதியிற் காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந் தீதில் சிவயோகி சாதனந் தேரிலே.  2 யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன் றாகத்து நீறணி யங்கக் கபாலஞ் சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.  3 காதணி குண்டலங் கண்டிகை நாதமும் ஊதுநற் சங்கும் …

009 தவவேடம் Read More »

Scroll to Top