You cannot copy content of this page

008 அவ வேடம்

அவ வேடம்

ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன் வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள் ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந் தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே.  1

ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும் மான நலங்கெடும் அப்புவி யாதலால் ஈனவர் வேடங் கழிப்பித்தல் 2

இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள்ள நன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்காம் என்ப இறைநாடி நாடோறும் நாட்டினின் மன்பதை செப்பஞ் செயின்வையம் வாழுமே.  3

இழிகுலத் தோர்வேடம் பூண்பர்மே லெய்த வழிகுலத் தோர்வேடம் பூண்பர்தே வாகப் பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார் கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.  4

பொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப் பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற் பொய்த்தவம்மெய்த்தவம் போகத்துட்போக்கியஞ் சத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே.  5

பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக மெய்வேடம் பூண்போர்மிகு பிச்சைகைக்கொள்வர் பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும் உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே.  6

Scroll to Top